பல தவறான குடும்ப அழிப்பு சட்டங்கள் மூலம் கூட்டுக் குடும்பங்களை ஒழித்து வயதில் மூத்தவர்களை பொய் வரதட்சணை வழக்குகள் மூலம் வீட்டை விட்டே விரட்டியடித்துவிட்டார்கள்.
இப்போது குடும்பங்களில் அறிவுரை சொல்ல மூத்தவர்கள் யாரும் கிடையாது. அதனால் இளம்பெண்கள் தங்கள் இஷ்டப்படி நடந்து கொள்கிறார்கள். இது அவர்களின் தவறு கிடையாது. குடும்பங்களில் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் போனதுதான் காரணம்.
ஆனால், இதுபோன்ற திசைகெட்டு செல்லும் பெண்களை சரியாக தவறான பாதைக்கு அழைத்துச்செல்ல பெண்கள் நல வாரியமும், பெண்கள் அமைச்சகமும் புதுப் புது சட்டங்களை இயற்றி வருகிறார்கள். இவர்களது இப்போதைய புதிய சட்டப்படி பெண்கள் எப்படி வேண்டுமானாலும் ஆடை அணியலாம். அதனை விமர்சனம் செய்தால் “பாலியல் கொடுமை தடுப்பு சட்டத்தின்” கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
மகளை நல்வழிப்படுத்த முயற்சிக்கும் தந்தை மீது “குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின்” கீழ் வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பலாம். இவையெல்லாம் பெண்ணுரிமை என்கிறார்கள்.
இப்போது பிரதமர் காவல்துறையை பெண்களுக்கு புத்திமதி சொல்லச் சொல்கிறார். அவர்கள் என்ன புத்திமதி சொல்ல முடியும்? அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்று உலகத்திற்கு சொல்லிய இந்திய நாட்டில் குடும்பங்களை ஒழித்துவிட்டு காவல்துறை மூலம் பெண்களுக்கு புத்திமதி சொல்லச் சொல்கிறார்கள். நல்ல வேடிக்கை!!! இன்னும் நிறைய இருக்கிறது. ஒவ்வொன்றாக பார்க்கத்தானே போகிறோம்.
தினமலர் 27 டிசம்பர் 2012
புதுடில்லி: நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுத்திட போலீசார் தகுந்த பாதுகாப்பு வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் இளம் பெண்களுக்கு பொது இடங்களில் எப்படி நடந்து கொள்வது குறித்து சில அறிவுரைகளை வழங்கிட வேண்டும் என பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன் டில்லியில் ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனை கண்டித்து டில்லியில் முக்கிய பகுதிகளில் மாணவர்கள், மகளிர் அமைப்பினர் கடந்த 8 நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பெண்களுக்கு போலீசார் அறிவுரை வழங்க வேண்டும்
இந்நிலையில் ஐ.பி.எஸ். அந்தஸ்து பெற்ற அதிகாரிகள் குழுவினர் பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அவர்களிடம் உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாவது: போலீஸ் என்றால் பொதுமக்களிடையே தவறான கண்ணோட்டம் ஏற்படக்கூடாது. இதனை தவிர்க்க வேண்டும். போலீசாரின் பணி சட்டம் ,ஒழுங்கை பாதுகாப்பது தான். இதில் அவர்களுக்கு தலையாய பொறுப்பு உள்ளது. அதே நேரத்தில் மக்களின் அடிப்படை உரிமை மீறப்படக்கூடாது. மனித உரிமை பாதுகாக்க வேண்டும்.நாட்டில் உள்ள பல்வேறு சமூக குற்றங்களை தடுப்பதில் போலீசாரின் பங்கு முக்கியமானது. பாலியல் பலாத்கார சம்பவங்கள் உள்ளிட்ட சமூக குற்றங்கள் நடப்பது ஏன் என்பன குறித்து மனதத்துவ ரீதியில் கண்டறிய வேண்டும்.
இது போன்ற கொடூர செயல்கள் கொண்ட மனப்போக்கினை ஒழித்து கட்ட வேண்டியது அவசியம்.நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுத்திட போலீசார் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மேலும் பொது இடத்தில் பெண்கள் நடந்து கொள்ள வேண்டியது குறித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கியும், எது நல்லது? , எது கெட்டது? என்பதனை போலீசார் எடுத்து கூற வேண்டும். இந்த விஷயத்தில் பொதுமக்களுக்கு போலீசார் நல்ல ஆலோசகராக , நண்பனாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.
கொசுறு செய்தி:ஆந்திர மாநில காவல்துறை தலைவர் சொன்னது: பெண்கள் கற்பழிப்புக்கு காரணம் ஆண்களல்ல
1 comment:
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
Post a Comment