சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, December 23, 2012

கணவன்களைக் கொல்ல வசதியான நாடு இந்தியாவா!

கள்ளக்காதல், கணவனின் சொத்தை அபகரித்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் மனைவியருக்கு தடையாக இருக்கும் கணவர்களை கொல்வதற்கும், பொய் வரதட்சணை குற்ற வழக்கு மூலம் சிறையில் அடைப்பதற்கும் பல இந்திய சட்டங்கள் உதவுகின்றன என்பதை நன்கு தெரிந்துகொண்டு பல இந்திய மனைவியர் இந்த வழிமுறைகளை பல காலமாக பக்குவமாக செயல்படுத்தி வருகிறார்கள். 

இந்த ரகசியம் இப்போது உலகளவில் பரவி வேறு நாட்டு மனைவியரும் தங்களது கணவரைக் கொல்ல இந்தியாவிற்கு சுற்றுலா கிளம்பிவிட்டார்கள் போலிருக்கிறது.  சுவிஸ் நாட்டை சேர்ந்த ஒரு பெண் தனக்குத் தேவையில்லாத கணவனை இந்தியாவில் தூக்கியெறிந்துவிட்டு தனது சுகபோக வாழ்வை  சுவிஸ் நாட்டில் நடத்திக்கொண்டிருந்திருக்கிறார்.  இந்த உண்மைகளை தெரிந்துகொண்ட சுவிஸ் நாட்டு அரசாங்கம் அந்தப் பெண்ணுக்கு சிறைத்தண்டனை அளித்திருக்கிறது.

அது சுவிஸ் நாடு என்பதால் ஆண், பெண் என்ற பேதமின்றி நேர்மையாக தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.  இந்தியாவாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

கவனிக்கப்படவேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம்.  இந்திய அரசாங்கம் இந்த சம்பவம் பற்றி கவலைப்பட்டதாகவோ, எந்த நடவடிக்கையும் எடுத்ததாகவோ செய்தியில் குறிப்பிடப்படவில்லை.  மொத்தத்தில் கணவனைக் கொல்ல ஏற்ற நாடு இந்தியா என்று  எண்ண வைத்துவிட்டார்களே!

டில்லியில் கணவரை தனியாக தவிக்க விட்ட வங்கி அதிகாரிக்கு நான்கு ஆண்டு சிறை
 
டிசம்பர் 24,2012 தினமலர்

லண்டன்:மாற்று திறனாளியான கணவரை, டில்லியில் தனியாக தவிக்க விட்ட, சுவிட்சர்லாந்து வங்கி அதிகாரிக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது.சுவிட்சர்லாந்தின், ஜூரிச் நகரை சேர்ந்த, 65 வயதான வங்கி அதிகாரி, தனது, 74 வயது கணவரை, 2008ல், இந்தியாவுக்கு சுற்றுலா அழைத்து வந்தார்.

நடக்க முடியாத நிலையில், சக்கர நாற்காலி உதவியுடன் நடமாடும், அவரது கணவரை, டில்லியில் ஒரு வீட்டில் தங்க வைத்து விட்டு, இவர் சுவிட்சர்லாந்தில் சுகபோக வாழ்வு வாழ்ந்தார்.

போதிய ஆதரவில்லாத நிலையில், ஒன்பது மாதத்தில், அவரது கணவர் இறந்து விட்டார். இதையடுத்து, டில்லியிலேயே கணவரை அடக்கம் செய்து விட்டார் இந்த வங்கி அதிகாரி.இந்தியாவில், இந்த முதியவரை பராமரித்து வந்த ஊழியர் மூலம், இந்த விஷயம், சுவிஸ் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இது குறித்து அந்த பெண்ணிடம், போலீசார் விசாரித்தனர்.

"கணவருக்கு குளிர் ஒத்து கொள்ளாததால், மிதமான வெப்பம் கொண்ட டில்லியில் தங்க வைத்தேன்' என, கூறினார். ஆனால், கணவரை பராமரிக்க மாதம், ஐந்து லட்சம் ரூபாய் செலவிட்டதாக, கணக்கு காட்டிஉள்ளார்.

புதிய சூழலில், போதிய பராமரிப்பின்றி கணவரை இறக்க விட்ட காரணத்துக்காக, இந்த பெண் அதிகாரிக்கு கடந்த ஆண்டு, ஆறு மாதம், சிறை தண்டனை அளிக்கப்பட்டது.ஆனால், அரசு தரப்பு வழக்கறிஞர்கள், இவருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை அளிக்க கோரினர். இதையடுத்து, தற்போது, வங்கி அதிகாரிக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது.


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.