இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, November 24, 2012

வினை விதைக்கும் மருமகள்களுக்கு இது அறுவடைக்காலம்!

தன்னுடைய சுய லாபத்திற்காக வரதட்சணை தடுப்புச் சட்டங்களை தவறாகப் பயன்படுத்தி அப்பாவிக் கணவர்கள் மீதும், அவர்களுடைய குடும்பத்தார் மீதும் பொய் வழக்குகளை மருமகள்கள் தொடுக்கும் செயல் பல ஆண்டுகளாக இந்திய பாரம்பரியமாக நடந்துவருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 

பொதுவாக பெண்ணிற்கு மட்டும்தான் கற்பிருப்பதாக ஒரு மூடநம்பிக்கை இருந்துவருகிறது.  அதனால் ஒரு பெண்ணைப்  பற்றி தவறாகக் கூறுவது ஒரு கொடிய செயலாக கருதப்படுகிறது.  ஆனால் அதே சமயத்தில் ஒரு ஆணின் நடத்தையைப் பற்றி தவறாகக் கூறினால் அது அந்த ஆணின் நற்பெயரை கற்பழித்ததற்கு சமம் என்று ஒருவர்கூட நினைப்பதில்லை.  இதனை பல ஆண்டுகளாக நீதிமன்றங்களும் உணரவில்லை.  ஒரு மனைவி தனது கணவனின் நடத்தையை களங்கப்படுத்தி பொய் வழக்குகளை உருவாக்கி அவனின் வாழ்வை நாசப்படுத்துவது சர்வசாதாரணமாக இந்தியாவில் நடந்துவரும் செயல்.  இதற்கு நீதிமன்றங்கள் மலர்தூவி மருமகள்களுக்கு வாழ்த்துகூறிக்கொண்டிருக்கும்.

இப்போது அரிதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பைக் கூறி மனைவி தன் கணவன் மீது அவதூறாக வழக்குத் தொடர்வது கணவனை கொடுமைப்படுத்தியத்ற்கு சமம் என்று கூறி 24 ஆண்டுகள் நடந்த விவாகரத்து வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது.

இந்த வழக்கில் நாம் சந்தோஷப்படுவதா அல்லது வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. ஏனென்றால்... ... ...

1.  ஒரு அப்பாவிக் கணவன் தவறான மனைவியிடமிருந்து விடுபட இந்திய நீதிமன்றங்கள் அந்தக் கணவனை 24 ஆண்டுகள் அலைய வைத்திருக்கின்றன.

2.  ஒரு மனைவியை அவளது கணவன் தவறானவள் என்று கூறிவிட்டால் அவனை மனைவியை மனதளவில் கொடுமை செய்தததாகக்கூறி IPC498Aன் கீழ் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுத்துவிடுவார்கள்.  ஆனால் இந்த வழக்கில் மனைவி கணவனின் நடத்தையை கலங்கப்படுத்தி அவனது வாழ்வை சீரழித்ததற்கு ஒரு தண்டனையும் இல்லை.

3. 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவருக்கு நீதி கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால் என்ன? இழந்த காலங்கள் மீண்டும் வருமா?

இதுபோன்ற நீதித்துறையின் தாமதித்து  நீதி வழங்கும் முறை நீதி மறுக்கப்பட்டதற்கு சமம்.  இதனை நீதித்துறை வல்லுனர்கள்  Delayed Justice is Denied Justice  என்று சொல்வார்கள்.  இதுபோன்ற நீதிமறுக்கப்பட்ட சூழலில் பல கணவர்கள் மனம் நொந்து தவறான மனைவியை கொலை செய்து உடனடியாக தங்களுக்கான நீதியை பெற்றுக்கொள்கிறார்கள்.   அப்பாவிகளை கொலைகாரர்களாக மாற்றுவதில் இந்திய நீதித்துறையின் தாமதித்து நீதி வழங்கும் முறை முக்கிய பங்காற்றுகிறது. 

இந்த ஒரு கணவருக்கு 24 ஆண்டுகள் கழித்து நீதி கொடுக்கப்பட்டதாக கருதலாம்.  ஆனால் இதுபோன்று பல கணவர்கள் இன்னும் நீதி கிடைக்காமல் பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் அலைந்துகொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் மனம் நொந்து கொலைகாரர்களாக மாறாமல் இருந்தால் நல்லது.

  Saturday, November 24, 2012 One India Tamil

மதுரை: கணவர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறுவதும் ஒருவகையான மன ரீதியான கொடுமைதான் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்துள்ளார். இதனை காரணமாக வைத்து கணவர் விவாகரத்து மனு தாக்கல் செய்யலாம் என்றும் அந்த தீர்ப்பில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கே.அய்யனாருக்கு அவருடைய அக்காள் மகள் முனியம்மா உடன் 10.6.1988 ஆம் திருமணம் நடந்தது. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.
பின்னர், 4 ஆண்டுகளுக்கு பின் இருவரையும் உறவினர்கள் சமரசம் செய்து சேர்த்து வைத்துள்ளனர். அதன்பின்னர்  பிரசவத்துக்கு பெற்றோர் வீட்டுக்கு சென்ற முனியம்மாள் பின்னர் கணவன் வீட்டுக்கு வரவில்லை.

இதற்கிடையில் கணவன் அய்யனாருக்கு, முனியம்மாள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ‘வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாகவும் கணவர் மீது குற்றம் சுமத்தியிருந்தார்.

இதையடுத்து, தென்காசி சார்பு கோர்ட்டிலும், பின்னர் திருநெல்வேலி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டிலும் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு அய்யனார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டன. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அய்யனார் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

அதேபோல, தன் கணவர் விவாகரத்து வழங்க கூடாது என்றும் தன்னுடன் சேர்ந்து வாழ அவருக்கு அய்யனாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தென்காசி சார்பு நீதிமன்றத்தில் முனியம்மாள் மனு தாக்கல் செய்த மனு 17.7.2000 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து திருநெல்வேலி கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் முனியம்மாள் தாக்கல் செய்த அப்பீல் மனு ஏற்றுக் கொண்ட நீதிபதி மனைவியுடன் சேர்ந்து வாழ அய்யனாருக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவையும் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அய்யனார் அப்பீல் செய்தார்.

இந்த 2 இரண்டு அப்பீல் மனுக்களும், பின்னர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.விமலா பரபரப்பான தீர்ப்பினை அளித்தார். அந்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
அய்யனார், முனியம்மாள் தம்பதியினருக்கு திருமணமாகி 28 ஆண்டுகள் ஆகி விட்டன. அய்யனாரும், முனியம்மாளும் திருமணத்துக்கு முன்பே ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்தவர்கள். ஆனால், இருவரும் ஓர் ஆண்டு கூட ஒற்றுமையாக குடும்பம் நடத்தவில்லை. இரண்டு பேரும் மாறி மாறி வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அய்யனார் மீது முனியம்மாள் சுமத்திய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்று குறுக்கு விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பொய்யான குற்றச்சாட்டை கூறி கணவனின் ஒழுக்கத்தை முனியம்மாள் படுகொலை செய்து, தன்னுடைய திருமண வாழ்வுக்கு சாவு மணி அடித்துள்ளார்.

ஒரு பொய்யான குற்றச்சாட்டை கணவனுக்கு எதிராக மனைவி சுமத்தி வழக்கு தொடர்ந்தால், அது அந்த கணவனை மன ரீதியான கொடுமை செய்வதாக அர்த்தம் என்று உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது.

முனியம்மாள் விதைத்ததை அறுவடை செய்துள்ளார். இவர் கணவன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி செய்த தவறு, பிற பெண்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கும். எனவே இவரிடம் இருந்து விவாகரத்துக்கு கேட்டு அய்யனார் தாக்கல் செய்த மனு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கீழ் கோர்ட்டு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி விமலா தன்து தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.