சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, November 18, 2012

தாலி அறுக்க வரிசையில் காத்திருக்கும் தமிழக இளம் தம்பதிகள்

தவறான பெண்ணியக் கோட்பாடுகளால் பல காலமாக இந்தியாவில் குடும்பங்கள் மிகவும் ஆபத்தான அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றன என்று சமூகத்தின் மீது அக்கறையுள்ளவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

எரிகின்ற தீக்கு எண்ணைய் ஊற்றுவது போல பொய் வரதட்சணை வழக்குகள், அதற்குத் துணையாக பெண்கள் பாதுகாப்பு அல்லது பெண் சுதந்திரம் (Women Empowerment) என்ற பெயரில் பல அடுக்கடுக்கான ஒரு தலைபட்டசமான சட்டங்கள் அரசாங்கத்தால் சமுதாயத்தில் விஷம் போல பரவச்செய்து பெண்களை தவறிழைக்கத் தூண்டி இப்போது சமுதாயத்தின் சமநிலையை பாதிக்கும் அளவிற்கு நாட்டை சீர்குலைத்திருக்கிறது.

இதன் விளைவாக இப்போது திருமணம் செய்த கையோடு தேனிலவிற்கு செல்ல வேண்டிய பல இளம் தம்பதிகள்  தாலியை அறுத்து  திருமண பந்தத்தை முறித்துக்கொள்ள  நீதிமன்ற வளாகங்களில் காத்துக் கிடக்கிறார்கள்.  நீதிமன்றங்களும் அதனைச் சார்ந்தவர்களும் வழக்கம்போல வழக்கை விரைந்து முடிக்காமல் காலதாமதம் செய்து அந்த காலதாமதக் காலத்தில் குளிர் காய்ந்து கணவன் மனைவி இருவரிடமும் வழக்கு என்ற பெயரில் முடிந்த அளவிற்கு பணம் சம்பாதித்துவிடலாம் என்று ஆவலுடன் காத்துக்கிடக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரியும்.

திருமணம் முடிந்த கையோடு காம வேட்கையுடன் இருக்கும் பலர் நீதிமன்ற காலதாமதத்தை தாங்கமுடியாமல் கள்ளக்காதல், கூடிவாழ்தல்,  அடுத்தவளின் கணவனை அபகரித்தல், கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனின் தலையில் கல்லைப் போட்டுக் கொல்லுதல், கணவனின் குடும்பத்தார் மீது பொய் வரதட்சணை வழக்குப் போடுதல்,  குடும்ப வன்முறை சட்டத்தைப் பயன்படுத்தி கணவனின் சொத்துக்களை பிடுங்குதல் போன்ற செயல்களை சர்வசாதரணமான இந்திய சட்டங்களின் துணையோடும், காவல் மற்றும் நீதித்துறைகளின் துணையோடும் செய்துவருகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

இந்த சமுதாயக் குழப்பத்திற்கு நடுவே பிறக்கும் பல குழந்தைகள் இன்னும் சில ஆண்டுகளில் பெற்றோர் இல்லாத வழி தவறிய இளைய தலைமுறையை உருவாக்கி 2020ல் இந்தியாவை ஒளிரச் செய்யப்போகிறார்கள் என்பதை அனைவரும் கண்கொள்ளக் காட்சியாக காணப்போகிறோம்.

ஆண்டுக்கு 1500 விவாகரத்து வழக்குகள் "பெண்டிங்' :கூடுதல் குடும்ப கோர்ட் எப்போது? 

தினமலர் நவம்பர் 19, 2012

 மண வாழ்க்கையில் இணைந்த கணவன் மனைவியை சட்டப்படி பிரிப்பதும், மீண்டும் சேர்த்து வைப்பதும் குடும்ப கோர்ட்களில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளாக உள்ளன. ஆயிரக்காலத்து பயிர்களை, ஆர்வக் கோளாறு காரணமாக ஆறு மாதத்தில் அறுத்து எரியத் தயாராகி விட்டனர் இளம் வயது ஜோடிகள்.

தாலியுடன் இளம் பெண்களும், ஏக்கப் பார்வையில் ஆண்களும் அதிகமாக காத்துக்கிடக்கும் இடமாக குடும்ப கோர்ட் வளாகம் மாறி விட்டது. காலை முதல் மாலை வரை தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடிகளை இங்கு பார்க்கலாம். தொடர்ந்து "வாய்தா'வில் ஓடும் வழக்குகளின் விசாரணை எப்போது முடியும், விவாகரத்து எப்போது கிடைக்கும், புது வாழ்க்கையை எப்போது துவக்கலாம் என திக்குத் தெரியாமல் ஆண்டுக்கணக்கில் இவர்கள் காத்திருக்கின்றனர்.

விவாகரத்து வழக்குகள் நிலுவையில் இருக்கும் போதே, ஊராருக்கும், கோர்ட்டுக்கும் தெரியாமல், தாலி கட்டி சிலர் குடித்தனம் துவங்கி விட்டனர். இன்னும் சிலர், தாலி கட்டாமல் தனியாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு சிலர் முடிவு தெரியாமல் 10 ஆண்டுகளாகக் கூட கோர்ட்டுக்கு நடையாய் நடக்கின்றனர்.கோர்ட்களில் வழக்குகள் தேங்குவதற்கு, ஒரே ஆண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகளும், ஜீனாம்சம் கேட்பு வழக்குகளும் பதிவு செய்வதே இதற்கு காரணமாக உள்ளன.

வழக்குகள் அதிகமாவதால், வாய்தாவுக்கே கோர்ட்டில் நேரம் சரியாக உள்ளது. இதனால் வழக்குகளின் விசாரணை தேதிகள், ஆண்டுக்கு ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தளவுக்கு வழக்குகள் வரிசையாக வந்து கொண்டே இருக்கின்றன. கோவை குடும்ப நீதிமன்றத்தைப் பொறுத்த அளவில், ஒவ்வொரு ஆண்டும் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி விட்டன.கடந்த நான்கு ஆண்டுகளாக இது தொடர்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 1300க்கும் அதிகமான விவாகரத்து வழக்குகளும், 200க்கும் மேற்பட்ட ஜீவனாம்சம் கேட்பு வழக்குகளும் பதிவாகின.நடப்பு ஆண்டில், கடந்த 10 மாதங்களில் 1,225க்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகளும், 200க்கும் மேற்பட்ட ஜீவனாம்சம் கேட்பு வழக்குகளும் பதிவாகியுள்ளன.இப்படி ஒவ்வொரு ஆண்டும் விவாகரத்து வழக்குகள் அதிகரித்திருப்பது சமூகத்தில் ஒரு இக்கட்டான சூழலை உருவாக்கி உள்ளது.குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற மன உளைச்சலில்,குடும்ப பெரியவர்கள் சங்கடத்தில் ஆழ்ந்துள்ளனர்.

விவாகரத்து மற்றும் சேர்ந்து வாழக் கோரும் வழக்குகள் குடும்ப கோர்ட் மட்டுமல்லாது, கோவை சட்ட மையத்திலும் நடக்கிறது. இங்கு ஒரு நாளைக்கு 5 முதல் 7 வழக்குகள் இருதரப்பு சம்மதத்துடன் விசாரிக்கப்படுகின்றன. இவ்வழக்குகள் அனைத்தும் குடும்ப கோர்ட்டில் இருந்து பெறப்பட்டவையாகும்.தொடர்ந்து அதிகரித்து வரும் வழக்குகளால், விரைந்து வழக்குகளை விசாரிக்கமுடியாமல் கோவை குடும்ப நீதிமன்றம் திணறுகிறது. இதனால் வழக்குகள் முடிய தாமதமாகின்றன. இதை தவிர்க்க, கூடுதலாக ஒரு கோர்ட் துவக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

சமீபத்தில் ஐகோர்ட் இதற்கான அனுமதி வழங்கியும், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், கோர்ட் கட்டடம் கட்ட இடம் இல்லாததால் நின்று போனது. ஏற்கனவே 2001க்கு முன், கோர்ட்கள் செயல்பட்ட குதிரை வண்டி கோர்ட் வளாகம் தற்போது உபயோகத்தில் இல்லாமல் இருக்கிறது.இந்த வளாகத்தில் நீதிபதிகளுக்கான குடியிருப்பு கட்ட பல ஆண்டுகளாக திட்டம் இருந்த போதிலும், ஒரு பகுதியில் புதிய நீதிமன்றங்கள் அமைக்கலாம் என்ற முடிவும் ஏற்பட்டுள்ளதால், குதிரை வண்டி கோர்ட் வளாகத்தில் புதிய நீதிமன்றம் அமைக்க வேண்டும் என,கோவை வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் சென்னை ஐகோர்ட்டுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.