சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, November 04, 2012

கணவனிடம் மனைவி உறவு கொள்ள உதவும் காவல்துறை!

இந்திய சட்டங்கள் எப்படியெல்லாம் பெண்களுக்கு உதவுகின்றன என்று செய்தியைப் பார்த்தால் மிகவும் வியப்பாக இருக்கிறது.  எத்தனை வகையான பாதுகாப்பு சட்டங்கள்!

"வரதட்சணை" என்ற மசாலா தடவாமல் எந்த வழக்கையும் காவல் நிலையத்தில் பதிவு செய்யமாட்டார்கள். 

10 ஆண்டுகளுக்கு முன் கணவனுக்கு வயது 28, மனைவிக்கு வயது 20.  இளமை துள்ளும் வயதில் பஞ்சும் நெருப்பும் பத்திக்கொள்ளவில்லை.  என்ன ஒரு ஆச்சரியமான வழக்கு! காமதேவனுக்கு மட்டும்தான் இந்த வழக்கின் உண்மை தெரியும்!!!  செய்தித்தாள் கூசாமல் விளக்கு பிடித்து இதை ஒரு செய்தியாக வெளியிட்டுவிட்டது.

மனைவியிடம் "உறவு'' வைக்காத கணவர் கைது

நவம்பர் 05,2012  தினமலர்

ஓசூர்:சூளகிரி அருகே, 10 ஆண்டாக மனைவியிடம் தாம்பத்திய உறவு வைக்காமல் கொடுமை செய்த கணவரை, போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அழகுபாவியை சேர்ந்தவர் விவசாயி சங்கர், 38. இவரது மனைவி பாரதி, 30. இருவருக்கும், 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, பாரதியின் பெற்றோர், ஐந்து சவரன் நகை, ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையாகக் கொடுத்தனர். ஆனால், சங்கருக்கு மனைவி பாரதியை பிடிக்கவில்லை.

திருமணமாகி, இதுவரை அவருடன் ஒருநாள் கூட, சங்கர் தாம்பத்திய உறவு வைக்கவில்லை. மேலும், வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததை கண்டித்த சங்கரை, பாரதி கண்டித்துள்ளார். அதனால், அவரது பெற்றோர் வீட்டிற்கு துரத்தி விட்டுள்ளார்.  இது குறித்து பாரதி, ஓசூர் மகளிர் டவுன் போலீசில் புகார் செய்தார். புகாரில், "கணவர் சங்கர், தன்னுடன் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளவில்லை. அதை தட்டிக் கேட்டதால், தன்னை கொடுமை செய்து, பெற்றோர் வீட்டிற்கு துரத்தி விட்டார்'' என கூறியிருந்தார். இன்ஸ்பெக்டர் சித்ரா தேவி விசாரித்து, சங்கரை கைது செய்தார்.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.