சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, September 28, 2012

சிங்கப்பூர் அரசாங்கம் இந்தியாவிற்கு பூசிய கரி! (தன்வினை தன்னைச் சுடும்)

உயர் கல்வி கற்று நல்ல பணியிலும் அந்தஸ்திலும் இருக்கும் இளைஞர்கள் இந்தியாவில் திருமணம் செய்துகொண்டார்கள் என்ற காரணத்தை வைத்து அவர்கள் மீது  பொய் வரதட்சணை வழக்குப் போட்டு அவர்களை குடும்பத்தோடு கைது செய்து மிரட்டி பணம் பறிக்கும் தொழில் இந்தியாவில் பல ஆண்டுகளாக அமோகமாக நடந்துகொண்டிருக்கிறது என்பது உலகத்தினர் அறிந்த உண்மை.

பொய் வரதட்சணை வழக்குகளை உருவாக்கி பணம் பறிக்கும் சதிவேலைகளில் ஈடுபடும் பெண்களுக்கு  “பெண்கள் பாதுகாப்பு” என்ற பெயரில் காவல்துறை,  நீதித்துறை, அரசாங்க நிர்வாகம் பல வழிகளில் உதவி வருகிறது என்று இந்திய பொய் வரதட்சணை வழக்குகள்  என்ற  இந்த இணைய தளங்களில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


இதுபோன்ற சூழலில் வெளிநாடு வாழ் இளைஞர்களை திருமணம் செய்யும் இந்திய இளம் பெண்கள் பெரும் தொகை தேவைப்பட்டாலோ அல்லது பழைய காதலனுடன் உல்லாச வாழ்க்கையை தொடர நினைத்தாலோ  உடனடியாக இந்தியாவிற்கு தனது குழந்தையுடன் ஓடிவந்து வெளிநாட்டில் இருக்கும் கணவன் மீதும், இந்தியாவில் இருக்கும் கணவனின் குடும்ப உறுப்பினர்கள் அனைவர்மீதும் பொய் வரதட்சணை வழக்கு பதிவு செய்து காவல்துறையின் உதவியுடன் “பிளாக் மெயில்” செய்து வருகிறார்கள் என்பதும் உலகறிந்த உண்மை.

இதன்விளைவாக பல அப்பாவி இந்திய இளைஞர்கள் தங்களது குழந்தையைக் காணமுடியாமல் பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியே அவர்கள் தங்களது குழந்தையைக் காண இந்தியாவிற்கு வந்தால் பொய் வரதட்சணை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்து பணம் பறிக்க ஒரு பெரிய கூட்டமே சுற்றிக்கொண்டிருக்கிறது.

இந்திய அரசாங்கமோ, காவல்துறையோ, நீதிமன்றங்களோ தந்தையரை ஒரு உயிருள்ள மனிதனாகவே கருதுவதில்லை.  தந்தைக்கும் பாசமுண்டு என்பதை ஏற்க மறுத்து குழந்தையையும், தந்தையும் பிரித்து இப்போது இந்தியாவில் பல குழந்தைகளை “தகப்பன்” இல்லாத குழந்தைகளாக மாற்றிவிட்டார்கள்.   தகப்பன் இல்லாத குழந்தைகளின் தாக்கம் சமுதாயத்தில் எப்படி இருக்கப்போகிறது என்பதை இன்னும் 10 - 20 ஆண்டுகளில் அனைவரும் காணப்போகிறோம்.

வெளிநாடுகளில் இருக்கும் தந்தையரிடமிருந்து பிரிக்கப்பட்ட பல குழந்தைகள் இந்தியாவில் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.  குழந்தைகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தில் (Hague Child Abduction Convention) கையெழுத்திடாமல் ஒதுங்கியிருந்து இந்திய தந்தையர்களை புறக்கணித்துவந்த இந்திய சட்டம் இப்போது  இந்தியாவில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு வெளிநாட்டில் தந்தையுடன் இருக்கும் குழந்தையை பெற்றுத்தர முயற்சிசெய்து  தனது முகத்தில் கரிபூசிக்கொண்டது என்று பின்வரும் செய்தி சொல்கிறது! இதற்குப் பெயர்தான் “தன்வினை தன்னைச் சுடும்” என்பதோ!!


மதுரை: போலி ஆவணங்கள் மூலம் பட்டுக்கோட்டை பெண் டாக்டரின் குழந்தையை, சிங்கப்பூருக்கு கணவர் கடத்திய வழக்கில், "சர்வதேச குழந்தைகள் கடத்தல் சம்பந்தமான ஒப்பந்தத்தில், இந்தியா கையெழுத்திடவில்லை. இதனால், உதவி செய்ய முடியாது என சிங்கப்பூர் அரசு தெரிவித்துவிட்டது,' என மத்திய அரசு, மதுரை ஐகோர்ட் கிளையில் பதில் மனு தாக்கல் செய்தது.

பட்டுக்கோட்டை வளவன்புரம் பல் டாக்டர் அன்புக்கரசி தாக்கல் செய்த மனு: எனக்கும், கணவர் மனோகரனுக்கும், 2009 ல் திருமணம் நடந்தது. கணவருடன் சிங்கப்பூர் சென்றேன். அங்கு, மாமியார் கொடுமைப்படுத்தினார். 2010 ஜூலை 8 ல் எனக்கு பட்டுக்கோட்டையில் ஆண் குழந்தை பிறந்தது. சொந்த ஊரில் இருந்த அவரது தாயிடம் காண்பித்து வருவதாகக்கூறி, 2011 மே 30 ல், 11 மாத குழந்தையை மனோகரன் சிங்கப்பூர் கொண்டு சென்றுவிட்டார். குழந்தையை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஏற்கவே மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள்: மனுதாரரின் கணவர், சென்னை தலைமை "இமிக்கிரேஷன்' அதிகாரியிடம், போலி ஆவணங்களை சமர்ப்பித்து குழந்தையை சிங்கப்பூர் கொண்டு சென்றுள் ளார். சிங்கப்பூர் கோர்ட் எத்தகைய உத்தரவிட்டாலும், மைனர் குழந்தையை தாயிடம்தான் ஒப்படைக்க வேண்டும். தந்தையுடன், குழந்தை யை வெளியுறவுத்துறை செயலாளர் ஆஜர்படுத்த வேண்டும், என்றனர். மனு நேற்று நீதிபதிகள் கே.சுகுணா, ஆர்.மாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் கருணாநிதி ஆஜரானார்.

வெளியுறவுத்துறை செயலாளர் சார்பில், மதுரை பாஸ்போர்ட் அலுவலர் சுந்தரராமன் பதில் மனு: சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சக உதவியை நாடினோம். சர்வதேச குழந்தைகள் கடத்தல் சம்பந்தமான ஒப்பந்தத்தில், இந்தியா கையெழுத்திடவில்லை. இதனால், இவ்வழக்கில் உதவி செய்ய முடியாது என சிங்கப்பூர் அரசு தெரிவித்துவிட்டது. சிங்கப்பூரில் இந்திய தூதரகம் மூலம், அங்கு வக்கீலை நியமித்து மனுதாரருக்கு உதவி செய்யலாம் என, அந்நாட்டு மத்திய ஆணையம் தெரிவித்துள்ளது. ஐகோர்ட் கிளை உத்தரவை, சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பினோம். எங்களால் குழந்தையை, இந்தியா கொண்டுவர முடியவில்லை. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
=====
(இந்த பதிவிற்கு தொடர்புடைய சுவையான மற்றொரு செய்தி: பொய் வரதட்சணை வழக்குப்போடும் இளம் மனைவிகளை அனுபவிப்பது யார் தெரியுமா?)

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.