ஆனால் ஒரு பெண் திருமண பந்தத்திலிருந்து விடுபட நினைத்தால் எந்தவித சட்ட நடைமுறையையும் பின்பற்ற வேண்டியதில்லை. இந்து திருமண முறைப்படி நடந்த திருமணத்தில் கட்டிய தாலியை கழற்றி கணவனிடம் கொடுத்துவிட்டால் போதும். எந்த சட்ட நடைமுறையையும் பின்பற்ற வேண்டியதில்லை. இதற்கு காவல்துறை நன்கு ஒத்துழைப்புக் கொடுக்கும் என்று இன்றைய செய்தியில் அறிந்துகொள்ளலாம்.
காவல்நிலையத்திலேயே திருமணத்தை முறித்துக்கொள்ளும் வசதியிருக்கிறதென்றால் இந்து திருமண சட்டங்கள் எதற்கு? நீதிமன்றங்கள் எதற்கு?
கணவனை உதறிவிட்டு காதலனுடன் நடையைக் கட்டிய புதுப்பெண் ..சென்னையில் பரபரப்பு!
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2012 One India
சென்னை: சென்னையில் திருமணமான ஒரு மாதத்தில் கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனுடன் புதுப்பெண் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் சதீஷ் (25). இவருக்கும், உறவுப்பெண் சங்கீதாவுக்கும், கடந்த 1 மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் சங்கீதா புரசைவாக்கத்தில் உள்ள செல்போன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார். வேலைக்கு சென்ற அவரை திடீரென்று காணவில்லை. இது குறித்து அயனாவரம் போலீஸ் நிலையத்தில் சதீஷ் புகார் அளித்தார்.
வழக்குப் பதிவு செய்த போலீசார் சங்கீதா தேடிவந்தனர். அப்போது சங்கீதா தன்னுடன் வேலை பார்த்த வாலிபர் ஒருவருடன், ஓடிப்போய் மதுரையில் தங்கி இருப்பதாக தெரியவந்தது.
காதலர்கள் போலீசில் சரண்
இதனிடையே சங்கீதா, தனது புது காதலருடன் அயனாவரம் போலீஸ் நிலையத்தில் ஞாயிறன்று சரண் அடைந்தார். அப்போது சங்கீதா, நான் எனது கணவரை விரும்பி திருமணம் செய்யவில்லை. திருமணத்துக்கு முன்பே என்னுடன் வேலை பார்த்தவரை நான் காதலித்து வந்தேன். எனது காதல் விவகாரத்தை எனது கணவரிடம் சொல்லி விட்டேன். காதல் விவகாரத்தை தெரிந்து கொண்டு, அவர் என்னை வற்புறுத்தி திருமணம் செய்து கொண்டார் என்று போலீசில் தெரிவித்தார்.
மனதை ஒருவருக்கும், உடலை ஒருவருக்கும் பங்கு போட நான் விரும்பவில்லை. மேலும் எத்தனை நாள்தான் போலி வாழ்க்கை வாழ முடியும். அதனால் இதற்கு ஒரு முடிவு கட்ட எனது காதலருடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன் என்றும் கூறினார். இதனையடுத்து சதீஸ் கட்டிய தாலியையும் கழற்றிக் கொடுத்துவிட்டார்.
எங்கிருந்தாலும் வாழ்க
சங்கீதா கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைதான் என்றும், அவள் சந்தோஷமாக வாழ வழி விடுகிறேன் என்றும், அவள் மீதும், அவளது காதலன் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்றும், அவர்கள் சந்தோஷமாக வாழட்டும் என்றும், சதீஷ் பெருந்தன்மையோடு போலீசாரிடம் கூறி விட்டார். மனைவி சங்கீதா எங்கிருந்தாலும் வாழ்க, என்று கண்கலங்கியபடி வாழ்த்தி விட்டு, எழுதியும் கொடுத்து விட்டு போய் விட்டார்.
திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் ஒருவர் கணவனை விட்டுவிட்டு காதலனுடன் சென்ற சம்பவம் அயனாவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment