சிதம்பரம் குடும்பத்தினர் ஆக்கிரமித்திருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு
செப்டம்பர் 26,2012 தினமலர்
திருப்போரூர்: மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் குடும்பத்தினர் ஆக்கிரமித்திருந்த, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், முட்டுக்காடு அருகே, கரிக்காட்டு குப்பத்தில், மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் பெயரில் ,10 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்துடன், 4,413 சதுர அடி, அரசு புறம்போக்கு நிலத்தை சேர்த்து, சுற்றுச்சுவர் எழுப்பினர். இது குறித்து, கரிக்காட்டு குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்தனர். அதை அடுத்து, செங்கல்பட்டு தாசில்தார் இளங்கோ தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள், நேற்று காலை அங்கு சென்றனர். ஜே.சி.பி., இயந்திரம் உதவியுடன் சுற்றுச்சுவரை அகற்றி, அரசு நிலத்தை மீட்டனர். இந்நிலத்தின் மதிப்பு, 50 லட்சம் ரூபாய். சிதம்பரம் குடும்பத்தினரிடமிருந்து, அரசு நிலம் மீட்கப்பட்டது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த3ம்தேதி, கரிக்காட்டு குப்பத்தை சேர்ந்த மீனவர்கள், 100க்கும் மேற்பட்டோர் எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் , நில அபகரிப்பில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்திக் சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
========================================
புதுடில்லி: முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் தனக்கு கிடைத்த பரிசு பொருள்களை வரும் ஜனவரி 13-ம் தேதிக்குள் ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைக்க வேண்டுமென தகவல் அறியும் சட்ட ஆர்வலர் சுபாஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியாக பிரதீபா பாட்டில் தான் பதவி வகித்த காலத்தில் தனக்கு கிடைத்த பரிசு பொருள்களை ஓய்வு பெற்ற பின்னர் தற்போது வசித்து வரும் அமரவாதிக்கு எடுத்து சென்றார். இவ்விவகாரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளிப்பட்டது. இது குறித்த விவரம் வெளியே தெரிந்த நிலையில் பிரதீபா பாட்டில் கொண்டு சென்ற பரிசு பொருள்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என ஜனாதிபதி மாளி்கை கேட்டுக்கொண்டுள்ளது. பரிசு பொருளை பிரதீபா கொண்டு செல்ல அனுமதித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுபாஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். முன்னதாக அப்துல் கலாம் தான்பதவி வகித்த காலத்தில் தனக்கு கிடைத்த பரிசு பொருள்களை தன்னுடன் எடுத்து சென்றார். ஆனால் அவை அனைத்தும் பயனுள்ள ஆராய்ச்சிக்காகவே பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியாக பதவிகித்த காலத்தில் பிரதீபா பாட்டில் வெளிநாட்டு பயணம் செய்வதில் அதிகளவில் அரசு பணத்தை செலவிட்டது,மற்றும் ஓய்வு பெற்ற பின்னர் வசிப்பதற்காக கட்டப்ப்டட வீட்டிற்கு அரசுப்பணத்தை செலவிட்டது உட்பட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்குது.
No comments:
Post a Comment