இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, September 28, 2012

சிங்கப்பூர் அரசாங்கம் இந்தியாவிற்கு பூசிய கரி! (தன்வினை தன்னைச் சுடும்)

உயர் கல்வி கற்று நல்ல பணியிலும் அந்தஸ்திலும் இருக்கும் இளைஞர்கள் இந்தியாவில் திருமணம் செய்துகொண்டார்கள் என்ற காரணத்தை வைத்து அவர்கள் மீது  பொய் வரதட்சணை வழக்குப் போட்டு அவர்களை குடும்பத்தோடு கைது செய்து மிரட்டி பணம் பறிக்கும் தொழில் இந்தியாவில் பல ஆண்டுகளாக அமோகமாக நடந்துகொண்டிருக்கிறது என்பது உலகத்தினர் அறிந்த உண்மை.

பொய் வரதட்சணை வழக்குகளை உருவாக்கி பணம் பறிக்கும் சதிவேலைகளில் ஈடுபடும் பெண்களுக்கு  “பெண்கள் பாதுகாப்பு” என்ற பெயரில் காவல்துறை,  நீதித்துறை, அரசாங்க நிர்வாகம் பல வழிகளில் உதவி வருகிறது என்று இந்திய பொய் வரதட்சணை வழக்குகள்  என்ற  இந்த இணைய தளங்களில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


இதுபோன்ற சூழலில் வெளிநாடு வாழ் இளைஞர்களை திருமணம் செய்யும் இந்திய இளம் பெண்கள் பெரும் தொகை தேவைப்பட்டாலோ அல்லது பழைய காதலனுடன் உல்லாச வாழ்க்கையை தொடர நினைத்தாலோ  உடனடியாக இந்தியாவிற்கு தனது குழந்தையுடன் ஓடிவந்து வெளிநாட்டில் இருக்கும் கணவன் மீதும், இந்தியாவில் இருக்கும் கணவனின் குடும்ப உறுப்பினர்கள் அனைவர்மீதும் பொய் வரதட்சணை வழக்கு பதிவு செய்து காவல்துறையின் உதவியுடன் “பிளாக் மெயில்” செய்து வருகிறார்கள் என்பதும் உலகறிந்த உண்மை.

இதன்விளைவாக பல அப்பாவி இந்திய இளைஞர்கள் தங்களது குழந்தையைக் காணமுடியாமல் பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியே அவர்கள் தங்களது குழந்தையைக் காண இந்தியாவிற்கு வந்தால் பொய் வரதட்சணை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்து பணம் பறிக்க ஒரு பெரிய கூட்டமே சுற்றிக்கொண்டிருக்கிறது.

இந்திய அரசாங்கமோ, காவல்துறையோ, நீதிமன்றங்களோ தந்தையரை ஒரு உயிருள்ள மனிதனாகவே கருதுவதில்லை.  தந்தைக்கும் பாசமுண்டு என்பதை ஏற்க மறுத்து குழந்தையையும், தந்தையும் பிரித்து இப்போது இந்தியாவில் பல குழந்தைகளை “தகப்பன்” இல்லாத குழந்தைகளாக மாற்றிவிட்டார்கள்.   தகப்பன் இல்லாத குழந்தைகளின் தாக்கம் சமுதாயத்தில் எப்படி இருக்கப்போகிறது என்பதை இன்னும் 10 - 20 ஆண்டுகளில் அனைவரும் காணப்போகிறோம்.

வெளிநாடுகளில் இருக்கும் தந்தையரிடமிருந்து பிரிக்கப்பட்ட பல குழந்தைகள் இந்தியாவில் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.  குழந்தைகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தில் (Hague Child Abduction Convention) கையெழுத்திடாமல் ஒதுங்கியிருந்து இந்திய தந்தையர்களை புறக்கணித்துவந்த இந்திய சட்டம் இப்போது  இந்தியாவில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு வெளிநாட்டில் தந்தையுடன் இருக்கும் குழந்தையை பெற்றுத்தர முயற்சிசெய்து  தனது முகத்தில் கரிபூசிக்கொண்டது என்று பின்வரும் செய்தி சொல்கிறது! இதற்குப் பெயர்தான் “தன்வினை தன்னைச் சுடும்” என்பதோ!!


மதுரை: போலி ஆவணங்கள் மூலம் பட்டுக்கோட்டை பெண் டாக்டரின் குழந்தையை, சிங்கப்பூருக்கு கணவர் கடத்திய வழக்கில், "சர்வதேச குழந்தைகள் கடத்தல் சம்பந்தமான ஒப்பந்தத்தில், இந்தியா கையெழுத்திடவில்லை. இதனால், உதவி செய்ய முடியாது என சிங்கப்பூர் அரசு தெரிவித்துவிட்டது,' என மத்திய அரசு, மதுரை ஐகோர்ட் கிளையில் பதில் மனு தாக்கல் செய்தது.

பட்டுக்கோட்டை வளவன்புரம் பல் டாக்டர் அன்புக்கரசி தாக்கல் செய்த மனு: எனக்கும், கணவர் மனோகரனுக்கும், 2009 ல் திருமணம் நடந்தது. கணவருடன் சிங்கப்பூர் சென்றேன். அங்கு, மாமியார் கொடுமைப்படுத்தினார். 2010 ஜூலை 8 ல் எனக்கு பட்டுக்கோட்டையில் ஆண் குழந்தை பிறந்தது. சொந்த ஊரில் இருந்த அவரது தாயிடம் காண்பித்து வருவதாகக்கூறி, 2011 மே 30 ல், 11 மாத குழந்தையை மனோகரன் சிங்கப்பூர் கொண்டு சென்றுவிட்டார். குழந்தையை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஏற்கவே மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள்: மனுதாரரின் கணவர், சென்னை தலைமை "இமிக்கிரேஷன்' அதிகாரியிடம், போலி ஆவணங்களை சமர்ப்பித்து குழந்தையை சிங்கப்பூர் கொண்டு சென்றுள் ளார். சிங்கப்பூர் கோர்ட் எத்தகைய உத்தரவிட்டாலும், மைனர் குழந்தையை தாயிடம்தான் ஒப்படைக்க வேண்டும். தந்தையுடன், குழந்தை யை வெளியுறவுத்துறை செயலாளர் ஆஜர்படுத்த வேண்டும், என்றனர். மனு நேற்று நீதிபதிகள் கே.சுகுணா, ஆர்.மாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் கருணாநிதி ஆஜரானார்.

வெளியுறவுத்துறை செயலாளர் சார்பில், மதுரை பாஸ்போர்ட் அலுவலர் சுந்தரராமன் பதில் மனு: சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சக உதவியை நாடினோம். சர்வதேச குழந்தைகள் கடத்தல் சம்பந்தமான ஒப்பந்தத்தில், இந்தியா கையெழுத்திடவில்லை. இதனால், இவ்வழக்கில் உதவி செய்ய முடியாது என சிங்கப்பூர் அரசு தெரிவித்துவிட்டது. சிங்கப்பூரில் இந்திய தூதரகம் மூலம், அங்கு வக்கீலை நியமித்து மனுதாரருக்கு உதவி செய்யலாம் என, அந்நாட்டு மத்திய ஆணையம் தெரிவித்துள்ளது. ஐகோர்ட் கிளை உத்தரவை, சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பினோம். எங்களால் குழந்தையை, இந்தியா கொண்டுவர முடியவில்லை. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
=====
(இந்த பதிவிற்கு தொடர்புடைய சுவையான மற்றொரு செய்தி: பொய் வரதட்சணை வழக்குப்போடும் இளம் மனைவிகளை அனுபவிப்பது யார் தெரியுமா?)

Wednesday, September 26, 2012

இரண்டு பெண்கள் செய்தது என்ன?

பெருங்குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் செய்தது என்ன? செய்தியைப் படித்துப் பாருங்கள்.

சிதம்பரம் குடும்பத்தினர் ஆக்கிரமித்திருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு
 
செப்டம்பர் 26,2012 தினமலர்


திருப்போரூர்: மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் குடும்பத்தினர் ஆக்கிரமித்திருந்த, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், முட்டுக்காடு அருகே, கரிக்காட்டு குப்பத்தில், மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் பெயரில் ,10 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்துடன், 4,413 சதுர அடி, அரசு புறம்போக்கு நிலத்தை சேர்த்து, சுற்றுச்சுவர் எழுப்பினர். இது குறித்து, கரிக்காட்டு குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்தனர். அதை அடுத்து, செங்கல்பட்டு தாசில்தார் இளங்கோ தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள், நேற்று காலை அங்கு சென்றனர். ஜே.சி.பி., இயந்திரம் உதவியுடன் சுற்றுச்சுவரை அகற்றி, அரசு நிலத்தை மீட்டனர். இந்நிலத்தின் மதிப்பு, 50 லட்சம் ரூபாய். சிதம்பரம் குடும்பத்தினரிடமிருந்து, அரசு நிலம் மீட்கப்பட்டது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த3ம்தேதி, கரிக்காட்டு குப்பத்தை சேர்ந்த மீனவர்கள், 100க்கும் மேற்பட்டோர் எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் , நில அபகரிப்பில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்திக் சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

========================================

 
புதுடில்லி: முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் தனக்கு கிடைத்த பரிசு பொருள்‌களை வரும் ஜனவரி 13-ம் தேதிக்குள் ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைக்க வேண்டுமென தகவல் அறியும் சட்ட ஆர்வலர் சுபாஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியாக பிரதீபா பாட்டில் தான் பதவி வகித்த காலத்தில் தனக்கு கிடைத்த பரிசு பொருள்களை ஓய்வு பெற்ற பின்னர் தற்போது வசித்து வரும் அமரவாதிக்கு ‌‌எடுத்து சென்றார். இவ்விவகாரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளிப்பட்டது. இது குறித்த விவரம் வெளியே தெரிந்த நிலையில் பிரதீபா பாட்டில் கொண்டு சென்ற பரிசு பொருள்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என ஜனாதிபதி மாளி்கை ‌கேட்டுக்கொண்டுள்ளது. பரிசு பொருளை பிரதீபா ‌கொண்டு செல்ல அனுமதித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை மேற்‌‌கொள்ள வேண்டும் என சுபாஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். முன்னதாக அப்துல் கலாம் தான்பதவி வகித்த காலத்தில் தனக்கு கிடைத்த பரிசு பொருள்களை தன்னுடன் ‌எடுத்து சென்றார். ஆனால் அவை அனைத்தும் பயனுள்ள ஆராய்ச்சிக்காகவே பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியாக பதவிகித்த காலத்தில் பிரதீபா பாட்டில் வெளிநாட்டு பயணம் செய்வதில் அதிகளவில் அரசு பணத்தை செலவிட்டது,மற்றும் ஓய்வு ‌பெற்ற பின்னர் வசிப்பதற்காக கட்டப்ப்டட வீட்டிற்கு அரசுப்பணத்தை செலவிட்டது உட்பட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்குது.



Saturday, September 22, 2012

மேலைநாட்டு கலாச்சாரம் இந்தியாவை அழித்துவிட்டதா!

நேற்று நடந்த பெண் வக்கீல்களின் மாநாட்டில் மேலை நாட்டு கலாச்சார மோகத்தில் இந்தியர்கள் தங்களது காலாச்சாரத்தை மறந்து அழிவுப் பாதையில் செல்கிறார்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பேசியிருக்கிறார்கள்.  அது உண்மையா என்று தெரியவில்லை.  ஆனால் சமீபத்தில் இளம் பெண் ஒருவர் அஸாம் மாநிலத்தில் “பப்புக்கு” சென்று பிறந்த நாள் கொண்டாட்ட களியாட்டங்களில் குதூகலிக்கச் சென்றபோது ஆண் நண்பர்களுடன் நடந்த தகராறுக்கு மத்தி மந்திரி சிதம்பரம் முதல் தேசிய பெண்கள் ஆணையம் வரை கண்டனம் தெரிவித்தார்கள்.  இது இந்திய கலாச்சாரத்தின் எந்தப் பக்கம் என்று தெரியவில்லை!

நீதிபதிகள் நாட்டின் கலாச்சாரத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள்.  ஆட்சியாளர்கள் மக்கள் எக்கேடாவது கெட்டுப் போகட்டும். பல குடிகளை கெடுத்து தன்னை வளமாக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்தியாவிற்கு பொருந்தாத பல தவறான  சட்டங்களை இயற்றி வருகிறார்கள் என்று சமீபத்தில் வந்த பல செய்திகள் மூலம் அறிந்து கொள்ளலாம். 

இப்படி கலாச்சாரத்தைப் பற்றி கவலைப்படுபவர்கள் பொய் வரதட்சணை வழக்குகள் மூலம் நீதிமன்றங்களை தவறாகப் பயன்படுத்தி குடும்பங்களை சிதைக்கும் பெண்களுக்கு தண்டனை கொடுத்திருக்கிறார்களா? அல்லது பொய் வரதட்சணை வழக்கு மூலம் குடும்பங்களை சிதைக்கும் காவல் அதிகாரிகள் எத்தனை பேருக்கு தண்டனை அளித்திருப்பார்கள்?   தெரியவில்லை.

குடும்பப் பிரச்சனைகளில் பொய் வழக்கு மூலம் பழிவாங்கத் துடிக்கும் இளம்பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இந்திய நீதிமன்றங்கள் எப்படி தீர்ப்பு எழுதுகின்றன என்று நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள். படிப்பது ராமாயணம், இடிப்பது ராமன் கோயில் என்ற பழமொழி நினைவிற்கு வரும்!
 

கோவை: மேற்கத்திய கலாசாரம் சீரழிக்கிறது என்று, பெண் வக்கீல்களின் முதல் மாநில மாநாட்டில், கருத்து தெரிவிக்கப்பட்டது.

கோவை பெண் வக்கீல்கள் சங்கம், தமிழ்நாடு மகளிர் வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு ஆகியன சார்பில்,"முதல் மாநில மாநாடு,' கோவையில், நேற்று நடந்தது. கோவையில், ஐ.எம்.ஏ.,ஹாலில் நடந்த மாநாட்டுக்கு, தமிழ்நாடு பெண் வக்கீல்கள் சங்க கூட்டமைப்புத் தலைவர் சாந்தகுமாரி, தலைமை தாங்கினார்.

வாதம் தான் பலம்: சிறப்பு அழைப்பாளர் ஐகோர்ட் நீதிபதி விமலா பேசியதாவது: நீதிமன்றங்களில், பெண்களுக்கே உரித்த போராட்ட குணம், ஒரு சில வக்கீல்களிடம் பார்க்க முடிகிறது. இதனால், அவர்களுக்கு, தங்களது வழக்குகளில் வெற்றி பெற வேண்டும் என்ற, எண்ணம் ஏற்படுகிறது. தற்போது, மேலை நாடுகளில், வழக்குளை வீட்டில் இருந்தே தாக்கல் செய்வது, பதில் தெரிவிப்பது, வாதிடுவது ஆகிய நடைமுறைகள், வீடியோ கான்பரன்சிங் மூலம் நடக்கின்றன. வெளியில் செல்ல பயந்த பெண்கள், வேலையில் இருப்பவர்கள், இம்முறையை பயன்படுத்த, உரிமை அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் அமலுக்கு வந்துள்ள இம்முறை, நம் நாட்டுக்கு வர, வெகு தூரமில்லை. பெண்கள் வீட்டில் இருந்தபடியே, சாதிக்கலாம்; சாதிக்க முடியும். மேலை நாட்டு கலாசாரத்தை பின்பற்றுவதில், ஆர்வம் காட்டி வருகிறோம். அதே சமயம்,மேல்நாட்டவர்கள் நம்நாட்டுக்கு வந்து, நம்மிடையே உள்ள நல்லொழுக்கத்தை கற்றுக் கொண்டு, அவர்களின் வாழ்க்கையை, தற்சமயம் வளமாக்கி கொண்டுள்ளனர். ஆனால், நாம் மேல்நாட்டு கலாசாரத்தை பின்பற்றி, சீரழிந்து கொண்டுள்ளோம். இதை தடுக்க வேண்டும். அறியாமை, கிராமங்களில் அதிகம் காணப்படுகிறது; நகரங்களில், வெகுவாக குறைந்துள்ளது. வாதம் தான், வழக்குகளை வெற்றிக்கு இட்டுச் செல்லும். எனவே, வழக்குகளை புரிந்து கொண்டு, வாதிட்டு வெற்றி பெற வேண்டும், என்றார்.

ஐகோர்ட் நீதிபதி ஜோதிமணி பேசும்போது,"வக்கீல் தொழிலில், வெற்றி பெறுவது அவரவர் மனத்தின்மையை பொருத்தது. வழக்கில் சொல்லப்பட்டிருப்பதை, நன்றாக புரிந்து கொண்டு,வாதிட வேண்டும். வாதம், வழக்கில் மிக முக்கியமான பகுதி; இதில், நம் திறமையை காட்டினால் நிச்சயம் வெற்றி பெறலாம். வேகமாக பரவிவரும் மேற்கத்திய கலாசாரம், கடவுள் நம்பிக்கையை குறைக்கிறது. இதனால், நம்மால் எதிலும் நிலைத்து நிற்க முடிவதில்லை,' என்றார்.

அகில இந்தியா பெண் வக்கீல்கள் சங்கத் தலைவர் ஆமீ யாஜ்னிக், ஐகோர்ட் சீனியர் பெண் வக்கீல் ஹேமா சம்பத், கோவை பார்கவுன்சில் தலைவர் நந்தகுமார், பெண்களுக்கான மாநில கமிஷன் சேர்மன் சரஸ்வதி ரங்கசாமி, மாவட்ட நீதிபதி ஆதிநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். தமிழ்நாடு பெண் வக்கீல்கள் சங்க கூட்டமைப்பின் செயலாளர் நிஷாபானு நன்றி கூறினார். கோவை மகளிர் வக்கீல்கள் சங்கத் தலைவர் தேன்மொழி வரவேற்றார். பிற்பகலில், "மீடியேசனில் பெண் வக்கீல்கள்' என்ற தலைப்பில், சென்னை ஐகோர்ட் வக்கீல் உமா ராமநாதன், பாரத் சக்கரவர்த்தி ஆகியோரும், "குழந்தைகளின் உரிமைகள்' பற்றி, நீதிபதி அலமேலு நடராஜன், குழந்தைகள் நல கமிட்டியின் முன்னாள் தலைவர் மனோரமா, சி.பி.ஐ.,சிறப்பு அரசு வக்கீல் கீதா ராமசேஷன் ஆகியோரும் பேசினர்.

Sunday, September 02, 2012

குழந்தைகளை கொல்லும் புதிய இந்திய காதல் கலாச்சாரம்

இந்தியாவில் சமீப காலமாக காதலுக்காக கூலிப்படை வைத்து கணவனை கொல்வது, கள்ளக் காதலனுடன் சேர்ந்துகொண்டு திட்டம் தீட்டி கணவனை கொல்வது, கள்ளக் காதலுக்கு இடையூறாக இருக்கும் வயதான மாமனார், மாமியார், குழந்தைகள் போன்றவர்களை ஈவு இரக்கமின்றி கொல்வது போன்ற கொடூர செயல்களில் பல இளம் பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தினமும் வரும் செய்திகள் மூலம் அறியலாம்.

இதுபோன்ற காதலில் ஈடுபடும் பெண்கள் ஏன் இப்படிக் கொல்கிறார்கள் என்று யோசித்தால் இந்திய பெண்கள் பாதுகாப்பு சட்டத்தைப் பற்றிய போதிய விழிப்புணர்ச்சி இல்லாததால்தான் இவர்கள் தங்களது காதலை மறைக்க இந்த கொடூரமான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிகிறது.

இந்திய கள்ளக்காதல் சட்டப்படி மனைவி கள்ளக்காதலில் ஈடுபடுவதை கணவன் கையும் கலவுமாக பிடித்தாலும் மனைவியை சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டிக்க முடியாது என்ற இந்திய பெண்கள் பாதுகாப்பு சட்டம் பற்றி பல அப்பாவி இளம் பெண்களுக்கு போதிய விழிப்புணர்ச்சி இல்லை.

IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

அதுபோலவே தனது கள்ளக்காதலை கண்டுபிடித்துவிடும் கணவன் மற்றும் அவனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீது பொய் வரதட்சணைக் கொடுமை வழக்குத் தொடர்ந்தால் கணவனையும் அவனது குடும்பத்தையும் எளிதாக சிறையில் அடைத்துவிடலாம். இதுதான் பலகாலமாக படித்த பெண்கள் பயன்படுத்தி வரும் நடைமுறை. இந்த வழக்கம் பற்றி இன்னும் பல இளம் பெண்களுக்கு சரியான விழிப்புணர்ச்சி இல்லை!

மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்டால் கணவனால் அந்த மனைவி மீது எந்த வித குற்றவழக்கையும் தொடரமுடியாது. ஆனால் விவாகரத்து கோரலாம். அதற்கும் கணவன்தான் அனைத்துவித ஆதாரங்களையும் திரட்டி நீதிமன்றத்தில் மனைவியின் கள்ளக்காதலை நிரூபிக்க வேண்டும். நீதிமன்றங்களில் பொதுவாக கணவன் தரப்பு வாதத்தை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் கணவன் நடமாடும் நடைபிணமாக வாழவேண்டியதுதான். வேறு வழியே இல்லை என்று இந்த வீடியோவை முழுதுமாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.



ஆனால் கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவி கணவன் மீதும், அவனது குடும்பத்தார் மீதும் பொய்யான வரதட்சணைக் கொடுமை வழக்குத் தொடர்ந்தால் நீதிமன்றத்தில் கணவனும் அவனது குடும்பத்தாரும்தான் தாங்கள் எந்தவித வரதட்சணைக் கொடுமையும் செய்யவில்லை, தாங்கள் நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ள வேண்டும். இந்த சட்டம் பல பெண்களுக்கு கள்ளக் காதலை வளர்த்துக் கொள்ள மிகவும் சாதகமாக இருந்து வருகிறது என்று உலகத்திற்கு தெரியும்!

THE DOWRY PROHIBITION ACT, 1961

(Act No. 28 of 1961)

8-A. Burden of proof in certain cases.- Where any person is prosecuted for taking or abetting the taking of any dowry under Sec. 3, or the demanding of dowry under Sec.4, the burden of proving that he had not committed an offence under those sections shall be on him.
இப்படி இந்திய சட்டம் அழகாக இளம் மனைவியர் தங்கள் காதலை வளர்த்துக்கொள்ள பாதுகாப்பு அளிக்கும்போது எதற்காக இந்த இளம் மனைவியர் கணவனையும், குழந்தைகளையும் கொன்று தங்கள் காதலை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று யோசித்தால் அதற்குப்பின்னால் இந்த அப்பாவிப் பெண்களின் அறியாமைதான் காரணம் என்று தெரிகிறது. அதனால் போலியான பெண்ணியவாதிகள் இதுபோன்ற சட்ட விழிப்புணர்வை இளம் பெண்களுக்கு ஏற்படுத்தி குறைந்தபட்சம் குழந்தைகளின் உயிரையாவது காப்பாற்ற முயற்சி செய்யலாம்.


ஓசூர் : கள்ளக்காதல் விவகாரத்தில், அண்ணியும், அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து, பள்ளி மாணவனை வெட்டி படுகொலை செய்தது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

தர்மபுரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த கொத்தூரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி திம்மராயப்பா. இவரின் கடைசி மகன் சதீஷ்,7; இரண்டாம் வகுப்பு மாணவன். நேற்று முன்தினம் மாலை, பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாட சென்றான். அதன்பின், வீடு திரும்பவில்லை. இரவு, 9.00 மணியளவில், திம்மராயப்பா வீட்டிற்கு பின்புறம், விவசாய தோட்டத்தில் கிடந்த சாக்கு மூட்டையில், சிறுவன் சதீஷ், வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், பிணமாக கிடந்தான்.

உத்தனப்பள்ளி போலீசார், சிறுவன் உடலை கைப்பற்றி விசாரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய், கொலையான சிறுவனின் அண்ணன் சங்கர் வீட்டிற்கு அருகே போய் நின்றது.

இதனால், போலீசார், சிறுவனின் அண்ணி கலாவை விசாரித்தனர். விசாரணையில், முன்னுக்கு பின் முரணான தகவலை அவர் தெரிவித்ததால், அவர் மீது சந்தேகம் எழுந்தது. தொடர் விசாரணையில், கொலை சம்பவத்திற்கான முடிச்சு அவிழ்ந்தது.

போலீஸ் விசாரணையில் தெரியவந்த தகவல்: சதீஷின் அண்ணன் சங்கரின் மனைவி கலாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த புட்டப்பாவுக்கும், கள்ளக்காதல் இருந்துள்ளது. இருவரும், அவ்வப்போது தனிமையில் சந்தித்து, உல்லாசமாக இருந்துள்ளனர். நேற்று முன்தினம், கலா வீட்டில், புட்டப்பா இருந்த போது, சதீஷ் அவர்களை பார்த்து விட்டான். இது பற்றி, அண்ணணிடம் கூறுவேன் என்று, சதீஷ் கூறியதால், ஆத்திரமடைந்த புட்டப்பாவும், கலாவும் சேர்ந்து, சிறுவனை அரிவாளால் வெட்டி, கொலை செய்தனர்.

கொலையை மறைக்க, சதீஷ் உடலை சாக்கு மூட்டையில் கட்டி, அருகேயுள்ள விவசாய தோட்டத்தில் வீசியுள்ளனர். அதன்பின் கலா, குடும்பத்தினருடன் சேர்ந்து, தேடுவது போல் நாடகமாடியுள்ளார் என்பது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கலாவையும், புட்டப்பாவையும் போலீசார் கைது செய்தனர்.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.