இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, February 28, 2010

கற்பிழப்பா அல்லது கற்பழிப்பா?

பிப்ரவரி 28,2010

புதுடில்லி:திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு குறித்து தேசிய அளவில் நடத்தப்பட்ட சர்வேயில் வியப்பான விஷயம் தெரியவந்துள்ளது; இந்த விஷயத்தில், நகர மக்களை, கிராம ஜோடிகள் மிஞ்சி வருகின்றன என்பது தான் அந்த தகவல். இந்தியாவில், 15 வயதில் இருந்து 24 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்கள், 15 வயதை அடையும் முன்னரே உடலுறவில் ஈடுபடுகின்றனர் என்று சர்வே தெரிவிக்கிறது.மத்திய சுகாதார அமைச்சகம் திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் குறித்த சர்வேயை எடுக்க ஆந்திரா, பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகிய ஆறு மாநிலங்களை தேர்ந்தெடுத்தது; 15 சதவீத இளைஞர்களிடமும், 4 சதவீத இளம் பெண்களிடமும் இந்த சர்வே எடுக்கப்பட்டது.

சர்வேயில் தெரியவந்துள்ள தகவல்கள்: திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத ஆண், பெண்கள் வகையில் மொத் தம் 51 ஆயிரம் பேர்களிடம் சர்வே எடுக்கப்பட்டது.பெண்களை ஆண்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில், 24 சதவீத இளம் பெண்கள், 15 வயதை அடையும் முன்னரே உடலுறவு கொண்டுள்ளனர். ஆனால், இளைஞர்கள் வகையில் 9 சதவீதம் பேர் தான் திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துள்ளனர்.திருமணத்துக்கு முன் உடலுறவு கொள்வது இந்தியாவில் பரவலாக இருந்து வருகிறது. டில்லியில் உள்ள மக்கள் தொகை கவுன்சிலும், மும்பையில் உள்ள பன்னாட்டு மக்கள் தொகை விஞ்ஞான பயிற்சி மையமும் சேர்ந்து நடத்திய விரிவான கணக்கெடுப்பில் இந்தியாவில் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் தான் இளம் வயதினர் திருமணத்திற்கு முன் அதிகமாக செக்ஸ் வைத்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.

இளைஞர்களில், திருமணத்துக்கு முன், நகர்ப்பகுதியில் 17 சதவீதம் பேரும், கிராமப்பகுதியில் 29 சதவீதம் பேரும் உடலுறவில் ஈடுபடுகின்றனர். அதே சமயம் இளம்பெண்களில் கிராமப்பகுதியில் 46 சதவீதமும், நகர்ப்பகுதியில் 31 சதவீதம் பேரும், திருமணத்துக்கு முன்னதாகவே உடலுறவு கொள்கின்றனர். நகர்ப்புறத்தில் ஒரு சதவீதமும், கிராமப்புறத்தில் 6 சதவீத இளைஞர்களும் 18 வயதை அடையும் முன்னர் செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர். 26 சதவீத இளைஞர்களும், 46 சதவீத இளம்பெண்களும், 15 வயதை அடையும் முன்னர் தங்களுடைய காதலருடன் செக்சில் ஈடுபட்டு அதிக நேரத்தை செலவழிக்கின்றனர்.பெரும்பாலானவர்களின் செக்ஸ் உறவுகள் மிகவும் அபாயகரமாக உள்ளது. அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு கொள்கின்றனர். 25 சதவீத இளைஞர்களும், 21 சதவீத இளம் பெண்களும் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு கொள்கின்றனர்; உறவின் போது காண்டம் பயன்படுத்துவது குறைந்த அளவே இருந்து வருகிறது. ஆண்களில் 13 சதவீதத்தினரும், பெண்களில் மூன்று சதவீதத்தினரும் காண்டம் பயன்படுத்துகின்றனர்.

இந்த ஆறு மாநிலங்களை பொறுத்தவரையில் உடலுறவுகள் பரவலாக பாதுகாப்பற்ற முறையில் தான் நடக்கின்றன. இந்த வித்தியாசம் மாநிலங்களிடையே மாறுபடுகின்றன. ராஜஸ்தான் தவிர மற்ற ஐந்து மாநிலங்களில் இளைஞர்கள் 32 சதவீதம் பேர் ஒன்றுக்கு மேற்பட் டோருடன் உறவு கொள் கின்றனர். ராஜஸ்தானில் 14 சதவீதமே நடக்கிறது.இவ்வாறு சர்வேயில் தெரியவந்துள்ளது.

==============

அப்பாவித்தனமாக (?) கற்பிழக்கும் இந்த இளமங்கைகளை பாதுகாக்கத்தான் அரசாங்கம் பல பாதுகாப்பு சட்டங்களை தந்திருக்கிறது. இவர்கள்தான் பிற்காலத்தில் இந்த சட்டங்களை நன்கு திறமையாக பயன்படுத்திக்கொள்ளும் வழியை தெரிந்துவைத்துக்கொண்டு தக்க சமயம் பார்த்து அப்பாவிகள் மீது கற்பழிப்புப் புகார் கொடுத்தல், அப்பாவி கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது பொய் வரதட்சணைப் புகார் கொடுத்தல் போன்ற புனிதப் பணிகளில் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொள்கிறார்கள்.
இதுபோன்ற பெண்களுக்கு பொய்வழக்குகள் போடுவது மிகவும் எளிதான செயல். கற்பிப்பு என்ற சொல்லில் எப்படி எழுத்தில் ஒரு சிறு மாற்றம் செய்தால் கற்ழிப்பு என்று மாறுகிறதோ அது போல தன்னுடைய தவறை மறைக்க அடுத்தவர் மீது பழியை மாற்றிப் போடுவது மிகவும் எளிதான செயல்.
இதை செய்யக்கூடாது என்று யாராவது சொன்னால் கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களுக்கு கொடுமை செய்யப்படுவதாக பெண்கள் வாரியம் கோபித்துக்கொள்ளும். நமக்கேன் வம்பு. வாழ்க பெண்கள் வாரியம் போற்றும் கலாச்சாரமும் பண்பாடும்!







No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.