இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, February 09, 2010

முதியோர்களின் வாழ்க்கை மருமகள்களின் கையில்

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளை தண்டிக்க அரசு முடிவு செய்திருப்பதாக இன்று செய்தித்தாளில் செய்தி வந்துள்ளது. நாடு எப்படிப்பட்ட கொடுமையான நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது. பெற்றவர்களைக் கூட பிள்ளைகள் கவனிக்காமல் போய்விட்டார்கள்.

சில பிள்ளைகளுக்கு உண்மையாகவே பெற்றோர் மீது பாசமில்லாமல் போயிருக்கலாம். ஆனால் பெரும்பாலான பிள்ளைகள் தங்களுக்குத் திருமணமானவுடன் மனைவியின் கட்டளைக்கு அடிபணிந்து பெற்றோரை வீட்டை விட்டு விரட்டும் அவல நிலையில் அடிபணிந்து கிடக்கிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் அரசாங்கம் மருமகள்களுக்கு மட்டும் கொடுத்துள்ள சிறப்பான தவறான சட்டங்கள். ஆம். வயதான பெற்றோரை பராமரிக்கும் ஆண்களுக்கும், பெற்றோர்களுக்கு பணஉதவி செய்யும் ஆண்களுக்கும் அவர்களது மனைவியரால் வரதட்சணை சட்ட மிரட்டல் விடப்பட்டு அந்த உதவிகள் நிறுத்தப்படுகிறது. இந்த கட்டளைகளுக்கு கட்டுப்படாமல் பணஉதவி செய்யும் ஆண்கள் அவர்களது வயதான பெற்றோர்களுடன் சேர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைசெய்ததாக மருமகள்களால் பொய்வழக்குப் போடப்பட்டு சிறையில் தள்ளப்படுகிறார்கள்.

அதனால் இந்தியாவில் வயதான பெற்றோர்கள் தங்களது மகன்களால் புறக்கணிக்கப்படவேண்டும் அல்லது மகனின் ஆதரவு கிடைத்தால் மருமகளால் பொய்வழக்குப் போடப்பட்டு சிறையில் அடைக்கப்படவேண்டும். இந்த இரண்டு வழிகளைத் தவிர வேறு எந்த ஒரு வழியும் இல்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

"தாய்க்குப் பின் தாரம்" என்றால் ஒரு குடும்பத்தில் திருமணமாகி வரும் தாரம் வயதானதாயின் இடத்திலிருந்து ஒரு தாய் போல குடும்பத்தை கவனித்து குடும்பத்திலுள்ள வயதான பெற்றோர்களை ஆதரித்து அன்பாக நடக்கவேண்டும். தனது கணவர் ஒழுங்காக தனது பெற்றோரை பராமரிக்கத் தவறினாலும் குடும்பத்தின் தலைவியாக தாயாக இருந்து கணவனுக்குத் தகுந்த அறிவுரை கூறி வயதானவர்களை கவனிக்கவேண்டும், கணவனின் குடும்பத்தை வழிநடத்தவேண்டும். அதனால் தான் எப்போதும் திருமணமானவுடன் கணவன் மனைவியின் வீட்டிற்கு சென்று வாழாமல், பெண்கள் எப்போதும் கணவனின் வீட்டிற்கு சென்று வாழ்வது மரபாக்கப்பட்டது. இது பெண்மையையும் மனைவி என்ற உறவையும் கவுரவப்படுத்தி சமுதாயத்தில் கொடுக்கப்படும் மரியாதை.

இப்போது இதுபோல் எத்தனை மருமகள்கள் இருக்கிறார்கள்? இந்த கலாச்சார நிலை மாறி பெற்றவர்களைக் காப்பாற்றுவதற்குக் கூட நாட்டில் சட்டம் தேவைப்படும் அவலநிலையை ஏற்படுத்திவிட்டார்கள் போலி பெண்ணடிமைவாதிகள்.

காளான்கள் போல முளைத்திருக்கும் பெண்கள் உரிமைவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சதிகாரக் கூட்டம் இதை பெண்ணடிமைத்தனம் என்று பெயர் சூட்டி மனைவிக்கு சமுதாயத்தில் உள்ள மரியாதையை அழித்து குடும்பத்தின் வழிகாட்டியாக இருக்க வேண்டிய மருமகளை குழி பறிக்கும் ஓநாயாக மாற்றி முதியவர்களை தெருவில் அலையவிட்டு குடும்பங்களை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். இது தெரியாத அப்பாவி மருமகள்கள் தானும் அழிந்து பல குடும்பங்களையும் அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும் மேலும் தவறான பல மருமகள் சார்பு சட்டங்களைப் போடுவதை விட உறவுகளுக்கிடையே அன்பை வளர்க்க முயற்சி செய்யவேண்டும். ஆனால் இந்திய நாட்டில் இதுவரை குடும்பங்களை அழிக்கத்தான் பல சட்டங்களை இயற்றியிருக்கிறார்கள். அந்த சட்டங்களால் ஏற்பட்ட மற்றொரு அவலநிலை தான் இன்று பெற்றவர்களைக் காப்பாற்ற மற்றொரு சட்டம் இயற்றும் இழிநிலை. விலங்கினத்தை விட மோசமாக மனிதர்களை இழிபிறவிகளாக மாற்றிக்கொண்டிருக்கும் மனித சட்டங்கள் தான் IPC498A, Domestic Violence Act போன்ற சட்டங்கள்.

பெற்ற தாய் தந்தையை கண்ணீர் சிந்தவைக்கும் நாடு என்றுமே உருப்படாமல்தான் போகும்.

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு அரசு 'செக்!'
தினமலர் பிப்ரவரி 10,2010


விருதுநகர்:பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு அரசு "செக்' வைத்துள்ளது. சமூக நல அலுவலரிடம் முறையிட்டால், ஜீவனாம்சம் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பெற்றோர் முதியோர் பராமரிப்பு சட்டம்: 60 வயதான முதியவர்களை பிள்ளைகள் பராமரிப்பு செய்து கவனிக்க வேண்டும். இதற்காக, மத்திய அரசு 2007ம் ஆண்டு பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நல வாழ்வு சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், இது உடனடியாக செயல்படுத்தப்படவில்லை. தற்போது, தமிழக அரசு இந்த சட்டத்திற்கான செயல் வடிவம் தயாரித்துள்ளது. இதற்காக, கலெக்டரை தலைவராக கொண்டு மாவட்ட அளவில் குழு அமைக்கப்படவுள்ளது. இவர்களை கண்காணிக்க, மாநில அளவில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

சட்டம் என்ன சொல்கிறது:
60 வயது நிரம்பியவர், தனது சம்பாத்தியத்தில், தேடி வைத்துள்ள சொத்துக்களால், தன்னை பராமரிக்க முடியாத நிலையில் இருக்கும் போது, ஜீவனாம்சம் பெற தகுதியுடையவராகிறார். 18 வயது நிரம்பிய தனது மகன், மகள் அல்லது உறவினர் ஆகியோரிடம் ஜீவனாம்சம் கேட்கலாம். முதியவர் இறந்த பின், அவரது சொத்துக்கு யார், யார் வாரிசாக வருகிறார்களோ அவர்கள் அடையும் சொத்து விகிதப்படி, அனைவரும் ஜீவனாம்ச தொகையை கொடுக்க வேண்டும். ஒரு முதியவருக்கு குழந்தைகள் இல்லை என்றால், அடுத்தபடியாக அவரது சொத்துக்கு வாரிசாக வரும் உறவினர்கள், நல்ல நிலையில் இருந்து சொத்துக்களை பெறாவிட்டாலும், ஜீவனாம்சம் வழங்க வேண்டும். ஜீவனாம்சம் தர மறுப்பவர்களுக்கு, சட்டப்படி ஐயாயிரம் ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறைத்தண்டனை வழங்க முடியும். அதிக பட்சமாக, முதியவர் ஒருவருக்கு, மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை ஜீவனாம்சம் பெற முடியும்.

சமூக அலுவலர்கள் நியமனம்:
பெற்றோர், முதியோர் பராமரிப்பு நல வாழ்வு சட்டத்தின் பராமரிப்பு அலுவலராகவும், செம்மைபடுத்தும் அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த கலெக்டர் அலுவலகங்களில் சமூக நல அலுவலகத்தில் இச்சட்டத்தின் படி, ஜீவனாம்சம் பெற விண்ணப்பிக்கலாம். அதுதவிர, முதியவர் சார்பாக தொண்டு நிறுவனங்கள், முதியோர் இல்லங்கள் மனு கொடுக்கலாம்.

நடவடிக்கை:
மனுவை பெறும் சமூக நல அலுவலர்கள் முதியோர்களின் வாரிசுகளை அழைத்து, பெற்றோரை பராமரிப்பு செய்ய கவுன்சிலிங் நடத்துவர். இதில், பிள்ளைகள் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டால், ஜீவனாம்சம் பெற சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான குழுவும் அமைக்கப்பட உள்ளது. இதில், கலெக்டர் தலைவராகவும், சமூகநல அலுவலர், ஆர்.டி.ஓ.,தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உறுப்பினர்களாகவும் இருப்பர். இந்த குழு, பெற்றோர், முதியோர் நல வாழ்வு சட்டம் அமல்படுத்துவதை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவர்.

தென் மாநிலங்கள் ஆர்வம்:
மத்திய அரசின் இந்த சட்டத்தை, தென் மாநிலங்கள் மட்டுமே ஆர்வம் காட்டி செயல்படுத்த முன் வந்துள்ளன. கர்நாடக மாநிலத்தில், இந்த சட்டம் அமலுக்கு வந்துள் ளது. தற்போது, தமிழ்நாடு, கேர ளா, ஆந்திர மாநிலங்கள் இந்த சட்டத்தை செயல்படுத்த முன் வந்துள்ளன.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.