நாமக்கல் : தன் குழந்தைகள் மீது கணவர் பாசத்தை காட்டாததால் ஆத்திரமடைந்த இரண்டாவது மனைவி, முதல் மனைவிக்கு பிறந்த ஒரு குழந்தை, தத்தெடுத்த குழந்தை என இரு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். இது தொடர்பாக, நாமக்கல் போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர். நாமக்கல் எஸ்.பி.எம்., பங்களாவில் வசித்து வருபவர் நேரு (43); தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். அவருக்கும், சரஸ்வதி என்பவருக்கும் 23 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
திருமணமாகி 15 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், திருச்சியில் உள்ள அனாதை இல்லத்தில் இருந்து சக்திவேல் (8) என்ற ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். இந்நிலையில், சரஸ்வதிக்கு ஷாலினி என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில ஆண்டில் சரஸ்வதி இறந்தார். அதை தொடர்ந்து, நான்கு ஆண்டுகளுக்கு முன், திருச்சி மாவட்டம் எம்.களத்தூரை சேர்ந்த அமலா (23) என்ற பெண்ணை, நேரு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ராகவி (3), கவின் (2) என இரண்டு குழந்தைகள் பிறந்தன.
கணவர் நேரு தனது முதல் மனைவியின் குழந்தையிடமும், தத்தெடுத்த மகனிடமும் அதிக அளவில் பாசம் வைத்திருந்தார். மேலும், அவர்கள் பெயரில் கணிசமான அளவு பணமும் டிபாசிட் செய்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த அமலா, "குழந்தைகளை கொன்று விட்டால் தனது கணவர் தனது குழந்தைகளிடம் பாசம் காட்டுவார்' என எண்ணி அதை செயல்படுத்த முடிவு செய்தார்.
நேற்று அதிகாலை 4 மணிக்கு நேரு வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சக்திவேல், ஷாலினி ஆகியோரை ஒன்றன்பின் ஒன்றாக, வீட்டுக்குள் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து அமலா கொலை செய்தார். "யாருக்கும் தன்மேல் சந்தேகம் வரக்கூடாது' என்பதற்காக தனது குழந்தை கவினை தூக்கிக்கொண்டு மருத்துவமனை செல்வதாக கூறிச் சென்றுவிட்டார்.
காலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்த அமலா, வீட்டுக்குள் இருக்கும் தண்ணீர் தொட்டியில் குழந்தை இறந்து கிடப்பதாக தனது கணவர் நேருவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதற்குள் செய்தி பரவியதை அடுத்து அக்கம் பக்கத்தில் கூட்டம் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த தாசில்தார் குப்புசாமி, எஸ்.ஐ.,க்கள் சுப்ரமணி, லதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அமலா முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவர் மீது சந்தேகம் எழுந்தது.
அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் மேற்கண்ட உண்மை வெளியானது. அதை தொடர்ந்து அமலாவை, போலீசார் கைது செய்தனர். சித்தி, இரண்டு குழந்தைகளை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
===============================
இதுபோன்ற பெண்களுக்குத்தான் பெண்கள் நலத்துறையும் பெண்கள் சங்கங்களும் பெண்ணுரிமை என்ற பெயரில் புதிய சட்டங்களை இயற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
பெண்மையும் தாய்மையும் இல்லாத உயிரினங்களுக்கு எதற்கு சட்டங்களில் சிறப்புரிமை?
தண்ணீரில் மூழ்கடித்து குழந்தைகளைக் கொன்றது மனிதத் தாய்,
தண்ணீரில் மூழ்காமல் குழந்தைகளைக் காப்பாற்றும் இந்த அற்புதத்தாய் !
தண்ணீரில் மூழ்காமல் குழந்தைகளைக் காப்பாற்றும் இந்த அற்புதத்தாய் !
தாய்மைக்கு அர்த்தம் இனி விலங்கினங்களில் மட்டும் தான் காணமுடியும்! ஏனென்றால் அவைகளின் சமுதாயத்தில் தான் கொடூரமான ஒருதலைபட்டசமான சட்டங்கள் என்னும் குடும்ப அழிப்பு முறை கிடையாது. பெண்ணுரிமை என்று பேசி குடும்பங்களை அழிக்கும் சதிகாரக் கூட்டமும் கிடையாது.
No comments:
Post a Comment