புதுடில்லி : பார்லிமென்ட் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வழி செய்யும் மசோதா, அடுத்த வாரம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்படும் என, மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
ஐயோ பாவம் இந்தியப் பெண்கள். 33% இடஒதுக்கீடு கொடுத்தால் தான் அவர்களால் முன்னேறமுடியும் என்ற இழிநிலையில் இத்தனை ஆண்டுகள் இந்த சுதந்திரநாட்டில் அரசியல்வாதிகள் பெண்களின் நிலையை தாழ்த்திவைத்திருக்கின்றனர். இனி அரசியல்வாதிகளின் சாதிப்பட்டியலில் பெண்கள் என்ற ஒரு புதிய தாழ்த்தப்பட்ட சாதியையும் பார்க்கலாம்!
இதுவரை சாதியின் பெயரால் இந்திய சகோதர சகோதரிகளை பிரித்துவைத்து சூழ்ச்சி செய்து வந்த கூட்டம் இப்போது பாலினத்தை வைத்து பிரிவினை செய்து மனிதசமுதாயத்தையே பாழ்படுத்தப்போகிறது. இடஒதுக்கீடு செய்தால் தான் இனி பெண்கள் முன்னேற முடியும் என்றால் இத்தனை ஆண்டுகள் பெண்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்தது யார்? இந்த இடஒதுக்கீட்டால் எத்தனை கிராமப்புற பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படப்போகிறது? யார் இதில் லாபம் அடையப்போகிறார்கள் என்று பொறுத்திருந்து பாருங்கள்.
பசித்தவருக்கு ஒரு வேளைக்கு மட்டும் உணவை பிச்சையாக் கொடுப்பதை விட அவரின் வாழ்க்கை முழுதும் சுயமாக தனக்குத் தேவையான உணவைத் தானே தேடிக்கொள்ளும் வழியை காட்டுவது தான் புத்திசாலித்தனம். ஊழல் இல்லாத அரசாங்கம் இருந்தால் ஆண் பெண் என்ற பேதமில்லாமல் திறமையிருக்கும் எவரும் எத்துறையிலும் சாதனை புரியலாம் அல்லவா? ஒதுக்கீடு என்ற பேச்சிற்கே இடமில்லையே.
அரசியலில் நுழைந்து வியாபாரத்தை ஆரம்பிக்கப்போகும் அபலைப் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொடுக்கும்போது கீழுள்ள செய்தியில் உள்ளது போன்ற சுயதொழில் செய்து முன்னேறத்துடிக்கும் அப்பாவிப் பெண்களுக்கும் 50% இடஒதுக்கீடு கொடுத்தால் நாட்டிற்கு நல்லது.
கொடைக்கானலில் சுயஉதவிக்குழு நடத்திரூ.23 லட்சம் மோசடி செய்த பெண் கைது
தினமலர் பிப்ரவரி 27,2010
திண்டுக்கல்:கொடைக்கானலில் சுயஉதவிக்குழு நடத்தி 23 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக பெண் ஒருவரை, போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஏழு பேரை தேடி வருகின்றனர்.கொடைக்கானலில் கீழ் பூமி பிரமபுத்திர பெண்கள் இணைப்பு குழுவின் கீழ், 237 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றன. இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக செம்பகனூர் மரிய ஜெயா இருந்துள்ளார். இவர், உறுப்பினர்களுக்கு தேவையான வங்கிக் கடன்களை பெற்றுத் தருவதும், இந்த பணத்தை வசூல் செய்து வங்கியில் கட்டுவதாக கூறி கிராம பெண்களிடம் பல லட்சம் ரூபாய் பெற்று கையாடல் செய்து தலைமறைவானார்.
இவருக்கு உதவியாக விமலாராணி, தனபாக்கியம், ஆரோக்கிய செல்வி, லாரன்ஸ் செல்வி, மெர்சி, ஜாகீர்லூர்துராஜ் ஆகியோர் செயல்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட பெண்கள், கடந்த வாரம் கொடைக்கானல் செம்பகனூர் சுயஉதவிக்குழு அலுவலகம் அருகே நடந்து சென்ற இந்த குழுவை சேர்ந்த மெர்சி என்ற பெண்ணை கேட்டில் கட்டி வைத்து, மறியல் செய்தனர். போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து இவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த குழுவில் பணியாற்றிய கொடைக்கானல் லேக் ரோட்டை சேர்ந்த லாரன்ஸ் செல்வி(43)யை கைது செய்து, திண்டுக்கல் ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உமாராணி உத்தரவிட்டார்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:சுயஉதவிக்குழு நடத்தி கிராம மக்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு வங்கியில் கட்டாமல் ஏமாற்றியுள்ளனர். 23 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதில் இன்னும் ஏழு பேர் தலைமறைவாகினர். இவர்களை தேடி வருகிறோம், என்றனர்.
தினமலர் பிப்ரவரி 27,2010
சென்னை:போலி பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியாக வலம் வந்த சாருலதாவுக்கு பல்வேறு வகையிலும் உதவிக் கமிஷனர் ஒருவர் உடந்தையாக இருந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதற்கான ஆதாரங்களும் சிக்கியுள்ளதால் உதவி கமிஷனர் விரைவில் கைதாவார் என கூறப்படுகிறது.சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாருலதா (36). இவர், மிடுக்கான உடையில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக சென்னை முழுவதும் வலம் வந்தார்.
போலீசில் வேலை வாங்கித் தருவதாக பலரிடமும் வசூல் வேட்டை நடத்தினார். அடுத்தடுத்து வந்த பல்வேறு புகார்களைத் தொடர்ந்து வண்ணாரப்பேட்டை போலீசார் பத்து நாட்களுக்கு முன் சாருலதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.அவரின் மோசடி பற்றியும், அவருக்கு போலீஸ் அதிகாரிகள் உடந்தையாக இருந்தனரா என்ற விவரங்கள் குறித்தும் மேல் விசாரணை செய்வதற்காக சாருலதாவை போலீசார் மூன்று நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை நடத்தி முடித்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சாருலதாவை நீதிமன்றக் காவலில் வைத்தனர்.
விசாரணையின்போது, தனக்கு உதவியாக இருந்த போலீஸ் அதிகாரிகள் யார், யார், தனக்கு அவர்களுடன் நெருக்கம் ஏற்பட்டது எப்படி என்பது பற்றிய விவரங்களை சாருலதா தெரிவித்தார். விசாரணை அனைத்தையும் போலீசார் வீடியோவில் பதிவு செய்து ஆவணப்படுத்தியுள்ளனர். சென்னையில் உள்ள போலீஸ் உதவிக் கமிஷனர் ஒருவரது குடும்பத்தில் ஒருவர் போல் சாருலதா பழகி வந்தது தெரியவந்துள்ளது.அந்த உதவிக் கமிஷனர், செக் மூலம் 1.31 லட்சம் ரூபாயை சாருலதாவுக்கு கொடுத்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. உதவி கமிஷனரின் மகள் திருமணத்திற்கு 15 சவரன் நகைகள், வாஷிங் மெஷின், இரண்டு தேக்கு கட்டில்களையும் சாருலதா வாங்கிக் கொடுத்துள்ளார். திருமண வீட்டில் பட்டுப் புடவையுடன் சாருலதா வலம் வந்துள்ளார்.மேலும், சென்னையில் போலீசுக்கு ஆள் எடுக்கும் மையத்தில், உதவி கமிஷனர் முக்கிய பொறுப்பில் இருந்ததாகவும், அவருடன் போலீஸ் உடையிலேயே சாருலதா சுற்றி வந்தார். அப்போதுதான் போலீஸ் வேலை வாங்கித் தருவதாக பலரிடமும் வசூல் நடத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் போலீஸ்காரர், ஜீப் டிரைவர் என பலருக்கும் சாருலதாவுக்கு பல்வேறு வகையில் உதவியுள்ளனர்.சாருலதாவின் மோசடிக்கு பல்வேறு வகையிலும் உதவி கமிஷனர் உடந்தையாக இருந்துள்ளது விசாரணையில் உறுதி படுத்தப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளதால், உதவி கமிஷனர் விரைவில் கைது செய்யப்படுவார் என்ற தகவல் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment