இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, May 31, 2013

பள்ளித் தேர்வில் தோல்வியடைந்தால் தற்கொலையா? தேசியத் தலைவர்கள் காட்டும் வழிமுறை என்ன?

மற்ற நாடுகளில் இல்லாத அதிசயமான கல்விமுறை இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறது.  தேர்வு என்பதை ஏதோ யுத்தகளம் போல உருமாற்றி வெளியே துப்பாக்கி ஏந்திய போலிஸ் காவல், பறக்கும் படை என்று அறிவு வளர்ச்சிக்கான கல்வியை ராணுவ யுத்தம் போல மாணவர்களின் மனதில் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்திவிட்டார்கள்.  இதனால் பல மாணவர்களுக்கு கல்வி கற்று வாழ்க்கைக்குத் தேவையான அறிவை பெற வேண்டும் என்ற எண்ணத்தை விட போரில் (தேர்வில்) தோற்றுவிடக்கூடாது என்ற அச்சமான மனநிலைதான் உருவாகியிருக்கிறது.

தேர்வு முடிவுகள் வெளியானதும்  தோல்வியடைந்த மாணவர்கள் அவமானத்தாலோ அல்லது பெற்றோருக்கு பயந்தோ தற்கொலை  செய்து கொள்வதும்,  வீட்டை விட்டு ஓடிப்போவதும் சமீப ஆண்டுகளில் அதிகரித்து இருக்கிறது. சாதாரண பள்ளித் தேர்வில் தோல்வியடைந்தால் இதுதான் கடைசி வழியா?  மாணவர்கள் நமது தேசியத் தலைவர்களின் பாதையை பின்பற்றத் தவறுவதால் இதுபோன்ற துயரங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

பிரதமர் இதுவரை நேரடியாக மக்களை சந்தித்து தேர்தல் என்னும் தேர்வில் வெற்றி பெற்றா இன்று இந்தப் பதவியில் இருக்கிறார்? உயர் பதவியை அடைவதற்கும், மக்களின் தலைவராக இருப்பதற்கும் தேர்வோ, தேர்தலோ அவசியம் இல்லை அப்படியே அவசியம் என்றால் அதற்கான வழிமுறைகளில் உள்ள ஓட்டைகளின் மூலமும் வாழ்வில் வெற்றி பெறலாம் என்றல்லவா பிரதமரின் பதவி நல்ல வழிகாட்டியிருக்கிறது.  இதையெல்லாம் மாணவர்கள் கவனிக்கத் தவறிவிட்டார்கள்.  நாட்டை ஆளும் பதவிக்கே மாற்றுவழி இருக்கிறதென்றால்  சாதாரண பள்ளித் தேர்வில் தோல்வியடைந்தால் வாழ்வில் வெற்றிபெற வேறு எத்தனையோ நேர்வழிகள் இருக்கின்றன என்பதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

 (படம்: தினமலர் 31 மே 2013)

புதுடில்லி: பிளஸ் 2 தேர்வில், மகள் தோல்வி அடைந்ததால், தாய், தந்தை உட்பட, குடும்ப உறுப்பினர்கள், நான்கு பேர் விஷம் குடித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர்களில், மூன்று பேர் பலியாயினர்; ஒருவர் உயிர் பிழைத்தார்.

டில்லியை சேர்ந்தவர், பிரதீப் குமார். இவரின் மகள், பிரியங்கா, பிளஸ் 2 தேர்வில், தோல்வி அடைந்தார். இதனால், ஆத்திரமடைந்த பிரதீப், மகள் பிரியங்காவையும், மனைவி, கமலேஷையும் வெகுவாக கடிந்து கொண்டார்.

மனமுடைந்த தாய், மகள் இருவரும் விஷம் குடித்தனர். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை எதிர் நோக்கியுள்ள, பிரியங்காவின் சகோதரன், நீரஜ்ஜும், தானும் தேர்வில் தோல்வியுற்றால், தந்தையின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என, பயந்தான். அதனால், அவனும் விஷம் குடித்தான்.

இவர்கள் அனைவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபரம் அக்கம் பக்கத்தினரின் மூலம், பிரதீப்புக்கு தெரிய வந்தது. மருத்துவமனைக்கு சென்ற பிரதீப்பும், அங்கு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். எனினும், அவர் உயிர் பிழைத்தார். மற்ற மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Sunday, May 19, 2013

விலங்கினத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதுண்டா?


பெற்ற குழந்தையை இப்படி கொடூரமாகக் கொல்லும் வித்தியாசமான வழக்கம் இந்த இனத்தில் மட்டும்தான் இருக்கிறது. 
மே 20,2013 தினமலர்

திருவண்ணாமலை: குடும்ப தகராறு காரணமாக, குழந்தையை காலால் மிதித்து, கொலை செய்ய முயன்றதுடன், மற்றொரு குழந்தையை சுவரில் அடித்து மோதிய தாய், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றது, தோல்வியில் முடிந்தது. திருவண்ணாமலை அடுத்த, வேல் நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை, 35. இவரது மனைவி சிவசங்கரி, 30. இவர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு, ஹரிணி, 4, லத்திகா, 3, என்ற பெண் குழந்தைகள் உண்டு.

கணவன், மனைவி இடையே, கடந்த சில மாதங்களாக, குடும்ப தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கரி, லத்திகாவின் கழுத்தில், காலால் மிதித்தார், லத்திகா பரிதாப அலறலுடன் இறந்தது. ஹரிணியை, சுவரில் ஓங்கி அடித்து விட்டு, பரபரப்பாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியில் உள்ளோர், ஏழுமலையின் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கு, உயிருக்கு போராடி கொண்டிருந்த ஹரிணியையும், சிவசங்கரியையும் மீட்டு, வேலூர், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து, திருவண்ணாமலை நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Wednesday, May 08, 2013

நவதுவாரங்களை மூடிக்கொள்ளுங்கள்!!!

ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் ‘உள்ளே’ இருப்பதற்கும், கிராமத்தில் ஒடும் பஸ்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.,ஆனால் இந்த பஸ்கள்தான் காரணம் என்பது போல, பல பஸ்கள் எரிக்கப்பட்டுவிட்டன.,விளைவு பகலில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன.,மாலை 6 மணிக்கு மேல் மறுநாள் காலை 6 மணி வரை அரசாங்க பஸ்கள் எதுவும் இயக்கப்படுவது இல்லை.அமைச்சர்கள்,அதிகாரிகள்,நகரவாசிகள் யாருக்கும் இந்த பஸ்களின் அருமை தெரியாததால், அவர்கள் தத்தம் வேலையை பார்த்துக்கொண்டு உள்ளனர்.,ஆனால் கிராமத்து மக்களின் மிகப்பெரிய தொடர்பு இந்த அரசு பஸ்கள்தான்.,இதனால் அந்த பகுதி மக்கள் பலரின் அன்றாட பிழைப்பு கேள்விக்குறியாகி இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்...எதையும் தாங்கும் கிராமத்து மக்கள் பாவம் இதையும் தாங்கிக்கொண்டு இருக்கின்றனர்.  - (தினமலர் 9 மே 2013)
=========
அவசியமில்லாதபோது இரவில் பெண்கள் தனியாக வெளியே செல்வது ஆபத்து என்று கூறியபோது நாடே ஒன்று திரண்டு உரிமையை பறிக்கிறார்கள் என்று எதிர்ப்புக் குரல் கொடுத்தார்கள். 

இப்போது சுதந்திர இந்தியாவில் ஆண், பெண், சிறுவர், சிறுமியர் என்ற பாகுபாடு இல்லாமல் யாரும் ஆறு மணிக்கு மேல் வெளியே செல்லவோ, பயணம் செய்யவோ முடியாது என்ற நிலை.  இது சுதந்திர இந்தியாதானா?   இதுபோன்ற வன்முறைகளும், இழி நிலையும் பல ஆண்டுகளாக மாற்றமில்லாமல் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. சுயநல தீவிரவாதிகளால் நடத்தப்படும் இதுபோன்ற வன்முறைகளில் இதுவரை பல கோடி அப்பாவி மக்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இதற்கு எதிராக ஒருவரும் வாயை திறக்காமல் நவ துவாரங்களையும் மூடிக்கொண்டு இருக்கிறார்களே!!!!

குடிமக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் இந்த செயலை நீதிமன்றங்கள் வாய்மூடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன.  இதுபோன்ற சம்பவங்களை உயர்நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ தானாக முன்வந்து (Suo Moto) வழக்காக ஏற்று மக்களின் உரிமையை நிலைநாட்ட தவறுவது ஏன்?

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.