இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, May 19, 2013

விலங்கினத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதுண்டா?


பெற்ற குழந்தையை இப்படி கொடூரமாகக் கொல்லும் வித்தியாசமான வழக்கம் இந்த இனத்தில் மட்டும்தான் இருக்கிறது. 
மே 20,2013 தினமலர்

திருவண்ணாமலை: குடும்ப தகராறு காரணமாக, குழந்தையை காலால் மிதித்து, கொலை செய்ய முயன்றதுடன், மற்றொரு குழந்தையை சுவரில் அடித்து மோதிய தாய், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றது, தோல்வியில் முடிந்தது. திருவண்ணாமலை அடுத்த, வேல் நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை, 35. இவரது மனைவி சிவசங்கரி, 30. இவர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு, ஹரிணி, 4, லத்திகா, 3, என்ற பெண் குழந்தைகள் உண்டு.

கணவன், மனைவி இடையே, கடந்த சில மாதங்களாக, குடும்ப தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கரி, லத்திகாவின் கழுத்தில், காலால் மிதித்தார், லத்திகா பரிதாப அலறலுடன் இறந்தது. ஹரிணியை, சுவரில் ஓங்கி அடித்து விட்டு, பரபரப்பாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியில் உள்ளோர், ஏழுமலையின் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கு, உயிருக்கு போராடி கொண்டிருந்த ஹரிணியையும், சிவசங்கரியையும் மீட்டு, வேலூர், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து, திருவண்ணாமலை நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.


1 comment:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சில வகை ஆண் விலங்குகளில் குட்டிகளைக் கொல்லும் வழக்கம் உண்டு. சிங்கம்,கரடி, நீர்யானை.
குறிப்பாக ஆண் குட்டியையே கொல்லும்.
ஆனால் எந்த விலங்கினத்தின் தாயும்
அன்புக்கும்,அரவணைப்புக்கும்,பாதுகாப்புக்கும் மனிதருக்குச் சளைத்தவையல்ல!
ஒரு படி மேலே என்பேன்.
இத் தாய் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம்.
இந்த தாய்ப் பறவையின்,புத்திசாலித் தனத்தையும், அன்பையும் பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=z4O7ikhKa_4

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.