இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, May 08, 2013

நவதுவாரங்களை மூடிக்கொள்ளுங்கள்!!!

ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் ‘உள்ளே’ இருப்பதற்கும், கிராமத்தில் ஒடும் பஸ்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.,ஆனால் இந்த பஸ்கள்தான் காரணம் என்பது போல, பல பஸ்கள் எரிக்கப்பட்டுவிட்டன.,விளைவு பகலில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன.,மாலை 6 மணிக்கு மேல் மறுநாள் காலை 6 மணி வரை அரசாங்க பஸ்கள் எதுவும் இயக்கப்படுவது இல்லை.அமைச்சர்கள்,அதிகாரிகள்,நகரவாசிகள் யாருக்கும் இந்த பஸ்களின் அருமை தெரியாததால், அவர்கள் தத்தம் வேலையை பார்த்துக்கொண்டு உள்ளனர்.,ஆனால் கிராமத்து மக்களின் மிகப்பெரிய தொடர்பு இந்த அரசு பஸ்கள்தான்.,இதனால் அந்த பகுதி மக்கள் பலரின் அன்றாட பிழைப்பு கேள்விக்குறியாகி இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்...எதையும் தாங்கும் கிராமத்து மக்கள் பாவம் இதையும் தாங்கிக்கொண்டு இருக்கின்றனர்.  - (தினமலர் 9 மே 2013)
=========
அவசியமில்லாதபோது இரவில் பெண்கள் தனியாக வெளியே செல்வது ஆபத்து என்று கூறியபோது நாடே ஒன்று திரண்டு உரிமையை பறிக்கிறார்கள் என்று எதிர்ப்புக் குரல் கொடுத்தார்கள். 

இப்போது சுதந்திர இந்தியாவில் ஆண், பெண், சிறுவர், சிறுமியர் என்ற பாகுபாடு இல்லாமல் யாரும் ஆறு மணிக்கு மேல் வெளியே செல்லவோ, பயணம் செய்யவோ முடியாது என்ற நிலை.  இது சுதந்திர இந்தியாதானா?   இதுபோன்ற வன்முறைகளும், இழி நிலையும் பல ஆண்டுகளாக மாற்றமில்லாமல் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. சுயநல தீவிரவாதிகளால் நடத்தப்படும் இதுபோன்ற வன்முறைகளில் இதுவரை பல கோடி அப்பாவி மக்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இதற்கு எதிராக ஒருவரும் வாயை திறக்காமல் நவ துவாரங்களையும் மூடிக்கொண்டு இருக்கிறார்களே!!!!

குடிமக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் இந்த செயலை நீதிமன்றங்கள் வாய்மூடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன.  இதுபோன்ற சம்பவங்களை உயர்நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ தானாக முன்வந்து (Suo Moto) வழக்காக ஏற்று மக்களின் உரிமையை நிலைநாட்ட தவறுவது ஏன்?

1 comment:

ப.கந்தசாமி said...

எல்லோரும் நபும்சகர்கள்.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.