மற்ற நாடுகளில் இல்லாத அதிசயமான கல்விமுறை இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறது. தேர்வு என்பதை ஏதோ யுத்தகளம் போல உருமாற்றி வெளியே துப்பாக்கி ஏந்திய போலிஸ் காவல், பறக்கும் படை என்று அறிவு வளர்ச்சிக்கான கல்வியை ராணுவ யுத்தம் போல மாணவர்களின் மனதில் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்திவிட்டார்கள். இதனால் பல மாணவர்களுக்கு கல்வி கற்று வாழ்க்கைக்குத் தேவையான அறிவை பெற வேண்டும் என்ற எண்ணத்தை விட போரில் (தேர்வில்) தோற்றுவிடக்கூடாது என்ற அச்சமான மனநிலைதான் உருவாகியிருக்கிறது.
தேர்வு முடிவுகள் வெளியானதும் தோல்வியடைந்த மாணவர்கள் அவமானத்தாலோ அல்லது பெற்றோருக்கு பயந்தோ தற்கொலை செய்து கொள்வதும், வீட்டை விட்டு ஓடிப்போவதும் சமீப ஆண்டுகளில் அதிகரித்து இருக்கிறது. சாதாரண பள்ளித் தேர்வில் தோல்வியடைந்தால் இதுதான் கடைசி வழியா? மாணவர்கள் நமது தேசியத் தலைவர்களின் பாதையை பின்பற்றத் தவறுவதால் இதுபோன்ற துயரங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
பிரதமர் இதுவரை நேரடியாக மக்களை சந்தித்து தேர்தல் என்னும் தேர்வில் வெற்றி பெற்றா இன்று இந்தப் பதவியில் இருக்கிறார்? உயர் பதவியை அடைவதற்கும், மக்களின் தலைவராக இருப்பதற்கும் தேர்வோ, தேர்தலோ அவசியம் இல்லை அப்படியே அவசியம் என்றால் அதற்கான வழிமுறைகளில் உள்ள ஓட்டைகளின் மூலமும் வாழ்வில் வெற்றி பெறலாம் என்றல்லவா பிரதமரின் பதவி நல்ல வழிகாட்டியிருக்கிறது. இதையெல்லாம் மாணவர்கள் கவனிக்கத் தவறிவிட்டார்கள். நாட்டை ஆளும் பதவிக்கே மாற்றுவழி இருக்கிறதென்றால் சாதாரண பள்ளித் தேர்வில் தோல்வியடைந்தால் வாழ்வில் வெற்றிபெற வேறு எத்தனையோ நேர்வழிகள் இருக்கின்றன என்பதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

(படம்: தினமலர் 31 மே 2013)
புதுடில்லி: பிளஸ் 2 தேர்வில், மகள் தோல்வி அடைந்ததால், தாய், தந்தை உட்பட, குடும்ப உறுப்பினர்கள், நான்கு பேர் விஷம் குடித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர்களில், மூன்று பேர் பலியாயினர்; ஒருவர் உயிர் பிழைத்தார்.
டில்லியை சேர்ந்தவர், பிரதீப் குமார். இவரின் மகள், பிரியங்கா, பிளஸ் 2 தேர்வில், தோல்வி அடைந்தார். இதனால், ஆத்திரமடைந்த பிரதீப், மகள் பிரியங்காவையும், மனைவி, கமலேஷையும் வெகுவாக கடிந்து கொண்டார்.
மனமுடைந்த தாய், மகள் இருவரும் விஷம் குடித்தனர். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை எதிர் நோக்கியுள்ள, பிரியங்காவின் சகோதரன், நீரஜ்ஜும், தானும் தேர்வில் தோல்வியுற்றால், தந்தையின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என, பயந்தான். அதனால், அவனும் விஷம் குடித்தான்.
இவர்கள் அனைவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபரம் அக்கம் பக்கத்தினரின் மூலம், பிரதீப்புக்கு தெரிய வந்தது. மருத்துவமனைக்கு சென்ற பிரதீப்பும், அங்கு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். எனினும், அவர் உயிர் பிழைத்தார். மற்ற மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
No comments:
Post a Comment