இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, October 23, 2012

பெண்கள் மாறிவிட்டார்கள்!! இந்திய சட்டங்கள் மட்டும் மாறவில்லை!!!

இந்தியாவைப் பொறுத்தவரை இளம் பெண் சொல்வது அனைத்தும் உண்மை, பெண் என்பவள் தாய்மையை போற்றுபவள் அதனால் அவளுக்கு எல்லாவிதங்களிலும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற மனப்பான்மை பல ஆண்டுகளாக இருந்துவருகிறது. 

காலப்போக்கில் பெண்களின் குணங்கள் மாறிவிட்டன.  ஆனால் பெண்கள் மீதான கனிவான மனப்பான்மை குருட்டுத்தனமாக மாறிவிட்டது.  அதன்விளைவாக பெண்களுக்கு பாதுகாப்பு தருகிறோம் என்ற பெயரில் பல குருட்டுத்தனமான ஒருதலைபட்சமான சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.  இந்த சட்டங்கள் அனைத்தும் காலப்போக்கில் பெண்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் கொள்ளாமல் பெண் சொல்வது அனைத்தும் உண்மை, ஆண் என்பவன் எப்போதும் குற்றவாளி என்ற தவறான கண்ணோட்டத்திலேயே இயற்றப்பட்டிருக்கிறது.

உதாரணமாக வரதட்சணை தடுப்பு சட்டப்படி பெண் சொல்வது மட்டுமே உண்மை, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டப்படி பெண் என்பவள் பாதிக்கப்படும் அப்பாவி என்றும் ஆண் என்பவன் பெண்ணை தாக்கும் காட்டுடைமிராண்டி என்றும் மறைமுகமாக கூறப்பட்டிருக்கிறது.  இதெல்லாம் இன்றைய காலகட்டத்தில் எந்த அளவிற்கு உண்மை என்று அனைவருக்கும் தெரியும்.  ஆனால் சட்ட மேதைகள் கண்மூடித்தனமாக இருப்பதால் பல இளம்பெண்கள் இந்த சட்டங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திவருகிறார்கள்.

தாய்மையால்தான் பெண்ணுக்கு பெருமை.  அது இல்லையென்றால் அது பேய்க்குச் சமம்.  அதுபோலவே தாய்மை என்பது பெண்ணிடம் மட்டும்தான் இருக்கும் குணம் என்று ஒரு ஒரு முட்டாள்தனமான கருத்து சமுதாயத்தில் நிலவிவருகிறது.  ஆண்களிடமும் தாய்மை குணம் இருக்கிறது என்பதை பின்வரும் அடுத்த செய்தி காட்டுகிறது.
அக்டோபர் 08,2012  தினமலர்

ஆதம்பாக்கம் : குழந்தைகளை தவிக்கவிட்டு, கள்ளக் காதலனுடன் சென்ற பெண்ணை, நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர் படுத்துகின்றனர்.ஆதம்பாக்கம், குமாரபுரம் தெருவைச் சேர்ந்தவர் முகம்மது இஸ்மாயில்,37, விளம்பர நிறுவன உரிமையாளர். இவரது மனைவி பாத்திமாபானு,29. இரு குழந்தைகள் உள்ளன. குடும்பத்துடன், ஒன்றரை வருடத்திற்கு முன், ராயபுரம் பகுதியில் தற்காலிகமாகக் குடியிருந்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஐசக்,27, என்பவருடன், பாத்திமாபானுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன், ஆதம்பாக்கத்தில் புது வீடு கட்டி முகம்மது இஸ்மாயில் குடும்பத்துடன் குடியேறினார். அப்போதும் பாத்திமாபானு, ஐசக் உடனான உறவு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி, முகம்மது இஸ்மாயில் மனைவியைக் காணவில்லை என, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார், பாத்திமாபானுவை அழைத்து, சமாதானம் பேசி கணவருடன் அனுப்பி வைத்தனர். இரு குழந்தைகளும் தாயைக் கட்டிப்பிடித்து, "எங்களை விட்டு போகாதம்மா, நீதான் எங்களுக்கு வேணும், நீ இல்லை என்றால் நாங்கள் அனாதையாகி விடுவோம்' என, காலில் விழுந்து கதறி அழுதுள்ளனர். எந்தவிதச் சலனமும் அடையாமல், மீண்டும் கள்ளக் காதலனுடன் சென்று விட்டார்.இந்த நிலையில், முகம்மது இஸ்மாயில் மனைவியைக் காணவில்லை, கண்டுபிடித்துத் தரவேண்டுமென, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். போலீசார் பாத்திமாபானுவை கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில், மகளிர் காப்பகத்தில் சேர்த்தனர். இந்த வழக்கு, இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. பாத்திமாபானுவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர். அப்போது, யாருடன் சேர்ந்து வாழ்வார் என்பதை நீதிமன்றத்தில் முடிவு செய்வார்.


(தினமலர் 23/10/2/12)

This rickshaw puller has a child strapped to his chest

October 20, 2012 NDTV

Bharatpur: It's an unusual sight on the streets of Bharatpur in Rajasthan - a rickshaw puller goes to earn his daily wage with his small newborn daughter strapped to his chest.

A month ago, rickshaw puller Babloo's wife died after childbirth due to anaemia. It left Babloo all alone with a small infant to take care for. With no close relatives on hand, Babloo decided to take his small daughter with him to work.

"She was born on September 15. Five days later her mother died. Since then I have been taking care of her all by myself. I can't leave her at home because nobody is there to take care of her, so I've been taking her with me to work every day," said Babloo.

"When she grows up, I will send her to school. I don't want her to grow up on the streets. I want proper upbringing for her," said the ambitious father.

However, being out in the open has taken its toll on the infant. The little baby is ill and has been in a government hospital in Bharatpur for two days now.

But for a state like Rajasthan, which has among the lowest sex ratios in the country and incidents of families abandoning baby girls is high, Babloo is indeed a shining example of paternal love.

NDTV is organising bank account details for this family and will post relevant information soon for anyone who wants to assist.

Saturday, October 20, 2012

தரமற்ற நீதிமன்றங்களால் தவறாகப் பயன்படுத்தப்படும் பெண்களுக்கு எதிரான பாலியல்கொடுமை தடுப்புச் சட்டங்கள்!


பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க குழு அமைக்கவேண்டும் என்று மற்ற துறைகளுக்கு உத்தரவு போட்டிருக்கும் உச்ச நீதிமன்றம்  (பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தடுக்க குழு : சுப்ரீம் கோர்ட், அக்டோபர் 19,2012 தினமலர்) தனது நீதித்துறையில் டில்லி மாவட்ட நீதிமன்றத்தில் பணி புரிந்த இளம் பெண் தனது குறுக்கு சட்ட அறிவு, நீதிமன்றங்களின் செயல்பாடற்ற தன்மை (Inefficiency)  இவற்றை நன்றாகத் தெரிந்துகொண்டு தனது கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த திருமணமான கள்ளக்காதலனின் மனைவி மற்றும் அவரது சகோதரர் மீது கூலிப்படையுடன் சேர்ந்து தன்னை கட்டிவைத்து மாதக்கணக்கில் கற்பழித்ததாக பொய்யான கற்பழிப்பு வழக்கு போட்டு கடைசியில் அது பொய்யான வழக்கு என்றும் வழக்கு உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக கற்பனையாக இரண்டு ஆண்களின் பெயரையும் வழக்கில் சேர்த்து காவல்துறையையும், நீதிமன்றத்தையும் ஏமாற்றியிருக்கிறார் என்று நீதிபதி கண்டுபிடித்துவிட்டார்.
ஒரு இளம் பெண் கொடுத்த இந்த பொய்யான கற்பழிப்பு வழக்கில் சிக்கி பாதிக்கப்பட்டிருப்பது இரண்டு பெண்கள், ஒரு ஆண், இரண்டு கற்பனையாக ஜோடிக்கப்பட்ட ஆண்கள்! இவர்களுக்கு நீதி வழங்கப்போவது யார்?
IN THE COURT OF SH. RAKESH TEWARI ASJVI
ROHINI COURTS, DELHI
SC NO.271/10
FIR NO. 895/05
U/S 365/366/342/376(2) IPC
PS Sultan Puri
State
Vs.
1. Ritu @ Gudia w/o Ram Niwas
2. Kishan Pal (discharged vide order dated 08.01.2007)
3. Ram Niwas (Proclaimed Offender)
4. Balvinder (Proclaimed Offender) - கற்பனையாக ஜோடிக்கப்பட்ட ஆண்
5. Munna (Proclaimed Offender) - கற்பனையாக ஜோடிக்கப்பட்ட ஆண்
Date when committed to the court of Sessions :28.09.2006
Judgment pronounced on :12.07.2012

JUDGMENT:
34. I am conscious of the doctrine of judicial restraint which commands me not to pass such comments which may not be part of the “lis” and at the same time, I am also conscious of the law that nobody has got a right to commit a rape upon a woman even of easy virtue but the theory of rape against the present prosecutrix has been already discarded by me, as discussed above, but despite all restraints at my command, my judicial conscience pricks me that I would be failing in my duty if I do not point out that present prosecutrix, admittedly working in District Courts has no fear or by virtue of her said job her fear has gone out of her mind towards the law and she can play with the law and legal procedures as a master juggler and she can go to any extent by levelling allegations against anyone as I have already held that she has no regard even for the human relations, as discussed above, and in this sense, such kind of alleged victims of rape are potentially dangerous to the society in the sense that from tomorrow onwards the general public as well as the courts will start disbelieving the version given by even the real victims of rape and in the second sense, as she has become fearless, she can level allegations against her colleagues with whom she is working or against any other person of the society with whom she will be having a clash of interest. I have no hesitation in drawing an inference that she is a cold blooded thinker whereby she can implicate any person, having inadvertence towards the consequences and at the same time, she has no repentance over her said false allegations. These comments have been passed with a hope that the said prosecutrix would reform herself in future and it is in this background that I am thinking it inexpedient in the circumstances not to lodge a report against her for the criminal offences she has committed before this court during her said deposition u/s 340 Cr.PC and not reporting the matter to her department for her departmental action because prevention is always better than cure and for further humanitarian reason that she got her job on compassionate ground after her father was murdered.

இந்த தீர்ப்பு தொடர்பாக செய்தித்தாளில் வந்துள்ள செய்தி....பலாத்காரம் செய்ததாக பொய் புகார் கூறும் பெண்கள்:சமூகத்திற்கு ஆபத்தானவர்கள்,தினமலர் 17 ஜூலை 2012
=====

 ஆனால் வழக்கின் முடிவில் நடந்தது என்ன?  காவல்துறையையும், நீதித்துறையையும் முட்டாளாக்கி அப்பாவிகள் மீது அபாண்டமான கற்பழிப்பு வழக்கு சுமத்திய பெண்ணை ஆண் நீதிபதி வழக்கம்போல் “இளம்பெண்” என்று கடைக்கண் பார்வையில் கருணை காட்டி எந்தவித தண்டனையும் கொடுக்காமல் எச்சரிக்கை செய்து விடுவித்துவிட்டார்.  மேலும் இப்படி ஒரு அபாண்டமான குற்றத்தை சுமத்தும் இந்த தரங்கெட்ட இளம் பெண்ணை எந்தவித துறை ரீதியான நடவடிக்கைக்கும் உட்படுத்தாமல் தொடர்ந்து நீதிமன்றத்தில் பணியாற்றவும் உதவி செய்திருக்கிறார்.   இப்படி தரங்கெட்டத்தனமாக நீதிமன்றங்கள் வழக்கை நடத்தினால் பெண்களுக்கு எதிராக பாலியல் கொடுமைகளை தடுக்க உருவாகும் சட்டங்கள் எந்த நோக்கத்திற்கு பயன்படுத்தப்படும் என்று  இந்த வீடியோவில் பாருங்கள்.



அக்டோபர் 19,2012 தினமலர்



புதுடில்லி:பணிபுரியும் இடங்களில், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளை தடுப்பதற்கு, ஒரு குழுவை அமைக்கும்படி, இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., உட்பட, சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேத்தா ஷா என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு:

பணிபுரியும் இடங்களில், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளை தடுப்பது தொடர்பாக, 1997ல் நடந்த விசாகா வழக்கில், சுப்ரீம் கோர்ட், முக்கிய உத்தரவை பிறப்பித்திருந்தது. இதற்காக, வழிகாட்டும் குறிப்புகள் உருவாக்கப்பட்டன.

இதன்படி, பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும், பாலியல் கொடுமைகளைத் தடுக்க வேண்டிய பொறுப்பு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது உயரதிகாரியைச் சார்ந்தது.பாலியல் கொடுமைகளைத் தடுக்க வகை செய்யும் விதிமுறைகள், அறிவிப்பாக வெளியிடப்பட வேண்டும்.இது தொடர்பான, சுற்றறிக்கையும் வெளியிடப்பட வேண்டும். குற்றத்தில் ஈடுபட்டவர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், இந்த விதிமுறைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் மட்டுமே பின்பற்றப் படுகின்றன.எனவே, தனியார் உள்ளிட்ட, அனைத்து நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களும், இந்த விதிமுறைகளை பின்பற்றும்படி செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பணிபுரியும் இடங்களில், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளை தடுப்பது குறித்து, சம்பந்தப்பட்ட துறை தொடர்பான ஒழுங்குமுறை அமைப்புகளால், குழு அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக, மருத்துவத் துறையை பொறுத்தவரை, அத்துறையின் ஒழுங்குமுறை அமைப்பான, எம்.சி.ஐ., இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Tuesday, October 16, 2012

திருமண பந்தத்தை ரத்து செய்ய இனி நீதிமன்றத்திற்கு செல்லவேண்டாம்!

 இந்தியாவில் இந்து மத முறைப்படி நடந்த திருமணத்திலிருந்து பிரிந்து செல்ல இந்து திருமண சட்டத்தில் கூறியுள்ள ஏதாவது ஒரு வழிமுறையைப் பின்பற்றி நீதிமன்றத்தில் விண்ணப்பித்து பல ஆண்டுகள் அலைந்து திரிந்து பிறகு நீதிமன்றம் முடிவு செய்தால்தான் விவாகரத்து பெறமுடியும்.  இது ஒத்துவராத திருமணபந்தத்திலிருந்து விடுபட நினைக்கும் அப்பாவி கணவன்களுக்கு  “சட்ட நடைமுறை” என்ற பெயரில் நடந்துகொண்டிருக்கும் அவலம்.  

ஆனால் ஒரு பெண் திருமண பந்தத்திலிருந்து விடுபட நினைத்தால் எந்தவித சட்ட நடைமுறையையும் பின்பற்ற வேண்டியதில்லை. இந்து திருமண முறைப்படி நடந்த திருமணத்தில் கட்டிய தாலியை கழற்றி கணவனிடம் கொடுத்துவிட்டால் போதும்.  எந்த சட்ட நடைமுறையையும் பின்பற்ற வேண்டியதில்லை.  இதற்கு காவல்துறை நன்கு ஒத்துழைப்புக் கொடுக்கும் என்று இன்றைய செய்தியில் அறிந்துகொள்ளலாம்.

காவல்நிலையத்திலேயே திருமணத்தை முறித்துக்கொள்ளும் வசதியிருக்கிறதென்றால் இந்து திருமண சட்டங்கள் எதற்கு? நீதிமன்றங்கள் எதற்கு?

கணவனை உதறிவிட்டு காதலனுடன் நடையைக் கட்டிய புதுப்பெண் ..சென்னையில் பரபரப்பு! 

செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2012 One India


சென்னை: சென்னையில் திருமணமான ஒரு மாதத்தில் கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனுடன் புதுப்பெண் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் சதீஷ் (25). இவருக்கும், உறவுப்பெண் சங்கீதாவுக்கும், கடந்த 1 மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் சங்கீதா புரசைவாக்கத்தில் உள்ள செல்போன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார். வேலைக்கு சென்ற அவரை திடீரென்று காணவில்லை. இது குறித்து அயனாவரம் போலீஸ் நிலையத்தில் சதீஷ் புகார் அளித்தார்.

வழக்குப் பதிவு செய்த போலீசார் சங்கீதா தேடிவந்தனர். அப்போது சங்கீதா தன்னுடன் வேலை பார்த்த வாலிபர் ஒருவருடன், ஓடிப்போய் மதுரையில் தங்கி இருப்பதாக தெரியவந்தது.

காதலர்கள் போலீசில் சரண்

இதனிடையே சங்கீதா, தனது புது காதலருடன் அயனாவரம் போலீஸ் நிலையத்தில் ஞாயிறன்று சரண் அடைந்தார். அப்போது சங்கீதா, நான் எனது கணவரை விரும்பி திருமணம் செய்யவில்லை. திருமணத்துக்கு முன்பே என்னுடன் வேலை பார்த்தவரை நான் காதலித்து வந்தேன். எனது காதல் விவகாரத்தை எனது கணவரிடம் சொல்லி விட்டேன். காதல் விவகாரத்தை தெரிந்து கொண்டு, அவர் என்னை வற்புறுத்தி திருமணம் செய்து கொண்டார் என்று போலீசில் தெரிவித்தார்.

மனதை ஒருவருக்கும், உடலை ஒருவருக்கும் பங்கு போட நான் விரும்பவில்லை. மேலும் எத்தனை நாள்தான் போலி வாழ்க்கை வாழ முடியும். அதனால் இதற்கு ஒரு முடிவு கட்ட எனது காதலருடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன் என்றும் கூறினார். இதனையடுத்து சதீஸ் கட்டிய தாலியையும் கழற்றிக் கொடுத்துவிட்டார்.

எங்கிருந்தாலும் வாழ்க

சங்கீதா கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைதான் என்றும், அவள் சந்தோஷமாக வாழ வழி விடுகிறேன் என்றும், அவள் மீதும், அவளது காதலன் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்றும், அவர்கள் சந்தோஷமாக வாழட்டும் என்றும், சதீஷ் பெருந்தன்மையோடு போலீசாரிடம் கூறி விட்டார். மனைவி சங்கீதா எங்கிருந்தாலும் வாழ்க, என்று கண்கலங்கியபடி வாழ்த்தி விட்டு, எழுதியும் கொடுத்து விட்டு போய் விட்டார்.
திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் ஒருவர் கணவனை விட்டுவிட்டு காதலனுடன் சென்ற சம்பவம் அயனாவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.