இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, August 10, 2012

தவறான வாழ்க்கை முறையில் செல்லும் தமிழக மருமகள்கள்!

இதையெல்லாம் இப்ப வருஷா வருஷம் விழா கொண்டாடி சொல்ல வேண்டியிருக்கிறது. பொறுப்பற்ற விஷயமாவிட்டது தாய்மை! இளம் மருமகள்கள் பொய் வரதட்சணை வழக்குப் போடுவதில் காட்டும் ஆர்வத்தை தங்களது குழந்தையை வளர்ப்பதில் காட்டுவதில்லை போலிருக்கிறது!

குழந்தைகளுக்கு முழுமையான தாய்ப்பால் ஊட்டுவதில் பின்தங்கிய நிலையில் தமிழகம்

ஆகஸ்ட் 11,2012 தினமலர்
சென்னை: குழந்தைகள் பிறந்து முதல் ஆறு மாதத்திற்கு, முழுமையாக தாய்ப்பால் ஊட்டுவதில், இந்தியளவில் தமிழகம், 20வது இடத்தில் உள்ளது என, ஒரு புள்ளி விவரம் அதிர்ச்சி தெரிவிக்கிறது.

குழந்தைகள் பிறந்து, முதல் ஆறு மாதத்திற்கு, அவர்களுக்கு தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும் என, மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். இதனால், கர்ப்பமடைவதற்கு முன் இருந்த மாதிரியே, வயிறு சுருங்குவது, மார்பகப் புற்றுநோய், கர்ப்பப் பை வாய் புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவது, அடுத்த கர்ப்பத்திற்கான கால இடைவெளி நீட்டிக்கப்படுவது என, தாய்க்கு பல நன்மைகள் உள்ளன. இதுபோல், நோய் தொற்றுகளை தடுத்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, தாயுடனான பிணைப்பைக் கூட்டுவது, மன வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சியை அதிகரிப்பது என, குழந்தைக்கு பல நன்மைகள் உள்ளன.ஆனால், குழந்தைகள் பிறந்து முதல் ஆறு மாதத்திற்கு, அவர்களுக்கு, முழுமையாக தாய்ப்பால் ஊட்டுவதில், இந்தியளவில் தமிழகம், 20வது இடத்தில் உள்ளது என, ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இதுகுறித்து, எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனை இயக்குனர் ஜெயா கூறியதாவது:இந்தியளவில், முதல் ஆறு மாதம், முழுமையாக தாய்ப்பால் ஊட்டும் விகிதம், தமிழகத்தில், 33.3 சதவீதமாக தான் உள்ளது. இது, தமிழகத்தில், பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம், ஒரு மாதத்தில், 1,000க்கு 18; இளம் குழந்தைகள் இறப்பு விகிதம், ஒரு ஆண்டிற்கு, 24 ஆகவும் இருப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது.இந்தியாவில் இந்த இறப்பு விகிதங்கள், முறையே, 39 மற்றும், 57ஆக உள்ளன.

பல மாதங்கள் தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்தால், தங்கள் அழகு கெட்டு விடும் என்ற, பெண்களின் பொதுவான மனநிலையே, அவர்கள் குழந்தைகளுக்கு சரிவர தாய்ப்பால் கொடுக்காததற்கு முக்கிய காரணம். இதுகுறித்து, இளம் தாய்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, எங்கள் மருத்துவமனையில் ஒரு வாரம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
=======
முதல் கணவன் மூலம் பிறந்த தனது குழந்தைக்கு இரண்டாவது கணவனை தந்தை என தந்தையின் பெயரை மாற்றக்கோரிய மனைவியின் வழக்கு தள்ளுபடி
ஆகஸ்ட் 11,2012 தினமலர்

மதுரை:தாய் இரண்டாவதாக வேறொருவரை திருமணம் செய்து கொண்டதால், குழந்தைக்கு தந்தையின் பெயரை (இன்ஷியல்) மாற்றக்கோரி தாக்கலான வழக்கை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.

காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரேவதி. இவருக்கும் உறவினர் வெங்கடேஷனுக்கும் 2003 ல், திருமணம் நடந்தது. ரேவதிக்கு 2005 ல் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அதற்கு பிரதீப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என பெயரிட்டனர். வெங்கடேஷன், ரேவதி 2009 ல் விவகாரத்து பெற்றனர்.

புதுச்சேரியை சேர்ந்த பாலாஜியை, ரேவதி இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். பிரதீப் பெயருக்கு முன்னெழுத்தாக (இன்ஷியல்) தனது பெயரை அவரது பிறப்பு சான்றிதழில் சேர்க்க வேண்டும் என, புதுச்சேரி பிறப்பு, இறப்பு பதிவு அதிகாரியிடம் பாலாஜி விண்ணப்பித்தார்.
அவர், "இதில் தான் முடிவெடுக்க முடியாது. கோர்ட் மூலம் பரிகாரம் தேடிக்கொள்ளலாம்' என, 2012 மார்ச் 1 ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஐகோர்ட்டில் பாலாஜி மனுதாக்கல் செய்தார். மனு நீதிபதி ஆர்.சுதாகர் முன் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி: குழந்தை பிறந்த 6 ஆண்டுகளுக்கு பின், அதை தனது குழந்தை என மனுதாரர் உரிமை கொண்டாடுகிறார். மனுதாரர் தான் குழந்தைக்கு தந்தை என, குழந்தையின் தாயும் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதைக்கொண்டு, குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் மனுதாரரின் பெயரை தந்தையாக குறிப்பிட உத்தரவிட வேண்டும் என்பதை ஏற்க முடியாது. இதனால், பிறப்புச் சான்றிதழின் புனிதம் கெட்டுவிடும்.

ஐ.நா.,வின் குழந்தைகள் உரிமை சாசனத்தை இந்தியா ஏற்றுள்ளது. குழந்தையின் அடையாளம், பெயரை பாதுகாப்பதில் யாரும் சட்டவிரோதமாக தலையிடக்கூடாது என, கூறப்பட்டுள்ளது. தாய், எவ்வித சட்டப்பூர்வ ஆவணங்கள் ஏதுமின்றி, மனுதாரர் தான் தன் மகனுக்கு தந்தை, என கூறுவதை ஏற்க முடியாது. இது மகனின் பிறப்பையே சந்தேகப்படுத்தும். குழந்தையின் வாழ்நாள் முழுவதும் மாறாத வடுவை ஏற்படுத்தும். தாயின் நடத்தை, வாழ்ந்த சூழ்நிலையை வெளிப்படுத்தும். பிறப்பு, இறப்புச் சட்டப்படி, குழந்தையின் பிறப்பை மோசடியாக பதிவு செய்திருந்தால், திருத்தம் கொண்டு வரலாம். இது அப்படியல்ல. பிறப்பு, இறப்பு பதிவு அதிகாரியின் உத்தரவு சரியானதே. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என உத்தரவிட்டார்.


1 comment:

கோவி said...

வருத்தமே..

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.