இரண்டு மாதக்குழந்தையை குற்றவாளியாக பதிவு செய்து, ஜhமின் கொடுத்து நீதித்துறை தன்னை கவுரவப்படுத்திக் கொண்டிருக்கிறது. என்ன கொடுமை!!!! இது தான் நாட்டில் நடக்கும் சட்ட வியாபாரம். அப்பாவிகளுக்கு நீதி கிடைக்குமா?
பச்சிளம் குழந்தையை இங்கே காணுங்கள்:
http://ibnlive.in.com/videos/95365/stepmom-names-twomonthold-in-dowry-fir.html
Dinamalar News: June 24, 2009
மும்பை:மும்பையில் வரதட்சணை கொடுமை வழக்கில் சேர்க்கப்பட்ட இரண்டு மாத பெண் குழந்தைக்கு, செஷன்ஸ் கோர்ட் முன்ஜாமீன் வழங்கியது. அந்தக் குழந்தை, ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும், 10 ஆயிரம் ரூபாய்க்கான உத்தரவாதத்தைத் தர வேண்டும் என, தெரிவிக்கப் பட்டுள்ளது. வரதட்சணை கொடுமை வழக்கில் இரண்டு மாத பெண் குழந்தை சேர்க்கப்பட்ட விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.மும்பையைச் சேர்ந்தவர் சம்சுதீன் கான். இவரின் முதல் மனைவி ஷகிலா. முஸ்லிம் சட்டப்படி அவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்து விட்டார். அதன்பின் ரேஷ்மா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு, ஜோயா என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 14ம் தேதி சம்சுதீன் கான், அவரின் இரண்டாவது மனைவி ரேஷ்மா, சம்சுதீனின் தாயார், சகோதரி மற்றும் இரண்டு மாத குழந்தை ஜோயா உட்பட, மொத்தம் எட்டுப் பேருக்கு எதிராக ஷகிலா வரதட்சணை கொடுமை புகார் ஒன்றைக் கொடுத்தார். மும்பையின் புறநகர் பகுதியான குர்லாவில் உள்ள நேரு நகர் போலீஸ் நிலையத்தில் இந்த புகாரை அளித்தார்.உடன், குழந்தை ஜோயா உட்பட எட்டு பேரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் விசாரித்தனர். பின்னர் குழந்தை ஜோயாவை தவிர்த்து மற்றவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தனர். இருப்பினும், ஷகிலா கொடுத்த புகாரில் குழந்தையின் பெயர் இருந்தது.அதனால், மற்றவர்களுக்கு முன்ஜாமீன் பெறும் போது, குழந்தைக்கும் பெற வேண்டும் என, வக்கீல் தெரிவித்தார். இதையடுத்து, ஜோயா உட்பட எட்டு பேர் சார்பில் முன்ஜாமீன் கேட்டு மும்பை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.நீதிபதி சர்தேசாய் முன் மனு விசாரணைக்கு வந்த போது, இரண்டு மாத குழந்தை ஜோயாவுடன் அவரின் தாயாரும், மற்றவர்களும் ஆஜராகினர். ஜோயா உட்பட ஏழு பேருக்கு மட்டும் முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
சும்சுதீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால், அவரின் சார்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டு, அது இன்று விசாரணைக்கு வருகிறது.ஜோயா குடும்பத்தினரின் வக்கீல் அனில் போலே இதுபற்றி கூறுகையில், "முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில், குழந்தை ஜோயாவின் பெயர் மற்றும் வயதை குறிப் பிட்டிருந்தேன். ஆனால், போலீசாரோ, அரசு தரப்பு வக்கீலோ அதை கவனத்தில் கொள்ளவில்லை' என்றார்.வரதட்சணை கொடுமை வழக்கில் இரண்டு மாத குழந்தையின் பெயர் சேர்க்கப்பட்ட விவகாரம் மும்பையில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.