கள்ளக் காதலுக்காக கணவனை கொன்ற கர்ப்பிணி மனைவி
Dinamalar News: June 15,2009
திருமணம் முடிந்து பத்து மாதங்களே ஆன நிலையில், கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த கர்ப்பிணி மனைவியை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே விளத்தூரை சேர்ந்த கோவிந்தராஜ்(35). இவருக்கும் அபிராமம் அருகே உடையநாதபுரத்தை சேர்ந்த பானுமதி(25) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. பானுமதி தற்போது ஆறு மாதம் கர்ப்பமாக உள்ளார்.
அபிராமம் அருகே வடக்கூரை சேர்ந்த மூளிமுருகன்(35) என்பவருக்கும், பானுமதிக்கும் திருமணத்திற்கு முன்பே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. திருமணத்திற்கு பின் அடிக்கடி தமது ஊருக்கும் வரும் பானுமதி, மூளிமுருகனை சந்தித்து வந்துள்ளார். கடந்த 7ம் தேதி உடையநாதபுரத்தில் உறவினர் நிகழ்ச்சிக்காக பானுமதியும், கணவர் கோவிந்தராஜூம் வந்தனர். அதன் பின் கோவிந்தராஜ் வீடு திரும்பவில்லை. கடந்த 9ம் தேதி பிச்சானேந்தல் கண்மாயில் சந்தேகமான முறையில் கோவிந்தராஜ் பிணமாக கிடந்தார். பானுமதி மீது சந்தேகித்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் "கள்ளகாதலன் சந்திப்பிற்கு கணவர் கோவிந்தராஜ் இடையூறாக இருந்ததால், நிகழ்ச்சிக்கு வரும் போது பிச்சானேந்தல் கண்மாயில் கள்ளகாதலன் மூளிமுருகனுடன் சேர்ந்து கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்தோம்' என, பானுமதி ஒப்புக்கொண்டார். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
-------------------------------------------------------------------------------------
இதுவே நவநாகரீக நகரத்து மங்கையாக இருந்திருந்தால் கணவன் மீது பொய் வரதட்சணை வழக்கு போட்டு கணவனை நடமாடும் பிணமாக்கி அவனது குடும்பத்தை சீரழித்து தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்திருப்பாள். செய்தியிலுள்ள இந்தப் பெணணுக்கு இந்திய "சட்டத்தைப்பற்றி விழிப்புணர்ச்சி இல்லாததால்" பாவம் கணவனை கொலை செய்துவிட்டு மாட்டிக் கொண்டுவிட்டாள்.
திருக்கோவிலூர் மணிவண்ணன் எடுத்த சரியான திருமண முடிவு, உங்களால் முடியுமா?
-
[image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா?]இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான
சட்டங்களால் தினமும் இலட்சக் கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல
அப்பாவி க...
10 years ago
No comments:
Post a Comment