பிரபல பெண் தொழிலதிபருக்கு ஜாமீன்
Dinamalar News: June 10, 2009
மும்பையைச் சேர்ந்த பிரபல பெண் தொழிலதிபர் ஷீத்தல் மபத்லால். இவரின் குடும்பத்தினர் தான், மபத்லால் குரூப் நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றனர். கடந்த 12ம் தேதி லண்டனிலிருந்து மும்பை வந்த ஷீத்தல், சுங்க இலாகா அதிகாரிகளின் சோதனைக்கு ஆட்படாமல், விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்டார். ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க மற்றும் வைர நகைகளைக் கொண்டுவந்த அவர், அவற்றுக்கான வரியைச் செலுத்தாமல் தப்பிக்க முற்பட்டதாக, இந்திய சுங்கச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரின் சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஷீத்தலின் சார்பில் ஆஜரான வக்கீல், "என் கட்சிக்காரருக்கு எதிராக வேறு எந்த வழக்கும் இல்லை. சட்ட விதிகளை மீறியிருந்தால், அதற்கான வரியைச் செலுத்தவும் தயாராக உள்ளார்' என்றார். உடன், ஐந்து லட்சம் ரூபாய் ஜாமீனில் அவரை விடுவிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
மபத்லால் குடும்ப வாரிசான அதுல்யாவை மணக்கும் முன், ஷீத்தல் மாடல் அழகியாகவும், சமூக ஆர்வலராகவும் இருந்தார்.
திருக்கோவிலூர் மணிவண்ணன் எடுத்த சரியான திருமண முடிவு, உங்களால் முடியுமா?
-
[image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா?]இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான
சட்டங்களால் தினமும் இலட்சக் கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல
அப்பாவி க...
10 years ago
No comments:
Post a Comment