இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, October 27, 2014

பெண்ணின் திருமண வயது 36!!!! விவாகரத்து கேட்ட கணவருக்கு அல்வா கொடுத்த நீதிமன்றம்

இந்தியாவில்  வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் தவறான குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள பல மருமகள்களால் பரவலாக நாடு முழுதும் பயன்படுத்துப்பட்டு வருகிறது என்று அனைவருக்கும் தெரியும்.  பின்வரும் செய்தியில் மனைவி  தனிக்குடுத்தனம் போகவேண்டும் என்று கணவனை வற்புறுத்தியதால் கணவா் விவாகரத்து கேட்டிருக்கிறாா்.  ஆனால் மனைவியோ  கணவா் வீட்டாா் வரதட்சணை கேட்டதால் போலிஸிடம் சென்று கணவனை கவனித்து அறிவுரை  கூறுமாறு கூறியதாக சொல்லியிருக்கிறாா்.  மேலும் தனக்கு வயது 36 இனிமேல் விவாகரத்து  செய்து அடுத்து  புது வாழ்க்கையை தொடங்குவது என்பது கடினமான காரியம் அதனால் விவாகரத்து கொடுக்கக்கூடாது என்று  கேட்டிருக்கிறாா்.  அவரது சொல்லை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம் வழக்கம்போல கணவனை  அழைத்து அட்வைஸ் (அல்வா) கொடுத்து அனுப்பியிருக்கிறது.

இந்த செய்தியில் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல் என்னவென்றால் சமீபத்தில் பெண்ணின் திருமண  வயதை நிா்ணயிப்பது பற்றி விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.  அந்த விவாதத்தில் பெண்ணின் திருமண‌ வயதை 21 ஆக உயா்த்தினால் பெண் மனப்பக்குவம் அடைந்து  மண வாழ்க்கை  சரியாக இருக்கும் என்று கருதுகிறாா்கள்.  ஆனால்  பின்வரும் செய்தியை பாா்த்தால்   பெண்ணின் திருமண வயதை 35ற்குமேல் உயா்த்தினால் மணவாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டாலும் இதற்குப்பிறகு விவாகரத்து செய்து புது வாழ்க்கையை எப்படி தொடங்குவது என்று நீதிமன்றமே முடிவு செய்து பல தம்பதிகளுக்கு விவாகரத்து வழங்காமல் பல குடும்பங்களை சிதையாமல் பாதுகாக்கும்.  அதனால் இந்தியாவில் பெண்ணுக்கு சரியான திருமண வயது 35 என்று நிா்ணயிக்கலாம்.
அக்டோபர் 28,2014   தினமலா்

பெங்களூரு : திருமணமான மூன்றே மாதங்களில், தம்பதிகளுக்குள் ஒத்துப்போகவில்லை என்று கூறி, விவாகரத்து கேட்ட கணவருக்கு, அறிவுரை கூறிய கர்நாடக உயர் நீதிமன்றம்,
விவாகரத்து வழங்க மறுத்தது.

கருத்து வேறுபாடு : தும்கூர் மாவட்டத்தை சேர்ந்த கிரிஷ், கீதா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோருக்கு, கடந்த 2009ல் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த 12 நாட்களிலேயே, கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், கீதா பிறந்த வீட்டுக்கு சென்று விட்டார். அவரை மீண்டும் அழைத்துவர, கணவர் முயற்சிக்கவில்லை. மாறாக, 3 மாதங்களுக்கு பின்னர், விவாகரத்து கேட்டு, குடும்ப நல நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.
மனுவில், தங்களுக்கு திருமணமாகி, மூன்றே நாளில் தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென்று, மனைவி பிடிவாதம் பிடித்தார்; என் பெற்றோருடன், தேவையின்றி சண்டை போட்டார். எங்கள் மீது போலீசாரிடம் பொய்யான புகார் செய்துள்ளார். எனவே, அவருடன் என்னால் வாழ முடியாது என, குறிப்பிட்டிருந்தார். ஆனால், கணவரின் குற்றச்சாட்டை, கீதா மறுத்துள்ளார். கணவர் வீட்டார், 5 லட்சம் ரூபாய் வரதட்சணை வாங்கி வரும்படி தொந்தரவு செய்து தாக்கினர். இதுகுறித்து போலீசாரிடம், எந்த புகாரும் செய்யவில்லை. கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். அவருக்கு அறிவுரை கூறும்படி, போலீசாரிடம் முறையிட்டேன். இதையடுத்து, அவர்கள், என் கணவரை அழைத்து அறிவுரை கூறினர். 15 நாட்களில், அழைத்து செல்வதாக போலீசாரிடம் கணவர் கூறினார்.

கால அவகாசம் : ஆனால், அவ்வாறு செய்யவில்லை. எனக்கு, தற்போது 36 வயது. கணவருக்கு 42 வயது. இது விவகாரத்து பெற, உகந்த வயதல்ல என்றார். இவரது வாதத்தை ஏற்று கொண்ட குடும்பநல நீதிமன்றம், விவகாரத்து வழங்க மறுத்தது. இதை எதிர்த்து கிரிஷ், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. எந்த பெண்ணாக இருந்தாலும், தன் பிறந்த வீட்டை விட்டு விட்டு, கணவர் வீட்டுக்கு வரும் போது, அங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தவாறு, மாற்றி கொள்ள சிறிது அவகாசம் தேவைப்படும். ஆரம்பத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ள, இத்தகைய கால அவகாசம் அவசியம். வெறும், 12 நாட்களில், கணவர் வீட்டாருடன் ஒன்றிப்போவது சாத்தியமில்லை. இவ்வழக்கில் கணவர் கிரிஷ், மனைவி கீதாவுக்கு புதிய சூழ்நிலையில் ஒன்றி போக வாய்ப்பளிக்கவில்லை. பிறந்த வீட்டுக்கு சென்ற மனைவியை அழைத்து வர முயற்சிக்கவில்லை. ஆனால், கீதாவோ, கணவர் வீட்டுக்கு செல்ல, ஆர்வமாக உள்ளார். இதற்கான, முயற்சிகளும் செய்துள்ளார் என்பது, அவர் கிரிஷூக்கு அனுப்பிய செய்திகளின் மூலம் உறுதியாகிறது.

ஓராண்டு... : அது மட்டுமல்ல, திருமணமாகி, வெறும் மூன்றே மாதத்தில் விவகாரத்து கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருமணமாகி ஓராண்டு ஒன்றாக வசித்த பின்னரே, விவாகரத்துக்காக மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறையும் மீறப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வழக்கில், குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பு சரிதான். இவ்வாறு, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



Thursday, October 16, 2014

மனைவியின் கள்ளக்காதலை தட்டிக் கேட்கும் கணவன் மீது வரதட்சணை வழக்கு தொடரலாம்

இந்தியாவில் கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவியை தண்டிக்க எந்த சட்டமும் இல்லை.  அதற்கு பதிலாக கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவி ஒரு அப்பாவி என்று கூறும் சட்டம்தான் இருக்கிறது. 

IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

சட்ட‌மே கள்ளக்காதலை தட்டிக் கொடுத்து ஆதரிப்பதால் கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்ணின் கணவா்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதனால் பெரும்பாலான கணவா்கள்  வெளியே சொல்ல முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறாா்கள்.    அதைப்பற்றி இந்த இணைப்பில் சென்று பாருங்கள் -
ஆண்கள் தற்கொலை செய்துகொண்டால் நாட்டிற்கு நல்லது!

தான் ஒரு மானமுள்ள ஆண்  அதனால் மனைவியின் கள்ளக்காதலை தட்டிக் கேட்பேன் என்று முழக்கமிடும் ஆண்களை தண்டிக்க வரதட்சணை தடுப்புச் சட்டம் பயன்படுகிறது.  இதுதான் உண்மை.  இந்த உண்மையை தெரிந்துகொண்ட பல மருமகள்கள் பல காலமாக வரதட்சணை தடுப்புச் சட்டத்தை கள்ளக்காதலை கண்டிக்கும் கணவனை தண்டிக்கும் ஆயுதமாக பயன்படுத்தி வருகிறாா்கள்.

இப்படி கணவனை தண்டிக்க வரதட்சணை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி‌ய ஒரு மருமகள் எப்படியோ  நீதிமன்றத்தில் சிக்கிக் கொண்டாா்.  ஆனால் வழக்கம்போல இதுபோன்ற பொய் வழக்குப் போடும் மருமகள்களை தண்டிக்கும் தைரியம் மட்டும் யாருக்குமே இதுவரை வரவில்லை.  அதுதான் இந்த செய்தியிலும் வந்திருக்கிறது.


அக்டோபர் 16,2014  தினமலா்


மங்களூரு: வரதட்சணை கேட்டதாக, பொய் புகார் கொடுத்த, பெண்ணைக் கண்டித்த நிதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்தது.

மங்களூரு, பிக்கர்னகட்டேவை சேர்ந்த ஷேக் நூர் முஹம்மது-குல்ஸர் மகள் தாரானம். இவருக்கும், பாஜ்பேவை சேர்ந்த, இன்ஜினியர் ரிஸ்வான் அலி ஷேக்கிற்கும், கடந்த 2007 நவ., 21ல், திருமணம் நடந்தது. ரிஸ்வான், மனைவியை, துபாய்க்கு அழைத்து சென்று விட்டார். துபாயில், ரிஸ்வான் பணிக்கு சென்ற பின், வீட்டில் தனியாக இருந்த தாரானத்துக்கு, சமூக வலைதளம் மூலம், ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இதையறிந்த ரிஸ்வான், மனைவியிடம் கேட்டார். உண்மையை ஒப்புக் கொண்ட பெண், விவாகரத்து பெற்று கொள்வதாக கூறினார். ஒரு மாதத்துக்கு பின், தாரானம், பாஜ்பே காவல் நிலையத்தில், தன் தாலியை அறுத்து, வீட்டை விட்டு வெளியேற்றியதாக, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை புகார் கொடுத்தார். மங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. புகாரில் உண்மையில்லை என, ரிஸ்வான் சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சமூக வலைதளத்தில், தாரானம் உரையாடலை, 'சிடி'யாக பதிவு செய்து கோர்ட்டில் சமர்ப்பித்தார். இதையடுத்து, ரிஸ்வான் உட்பட, ஏழு பேர் மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், வரதட்சணை கொடுமை புகாரை தவறாக பயன்படுத்தக் கூடாது என்று தாரானத்தை எச்சரித்தது.


Friday, August 29, 2014

குடும்பப் பிரச்சனையில் டில்லி போலிஸ் தலையிடாதாம்!!!!

ஆகஸ்ட் 30,2014 தினமலர்


புதுடில்லி : டில்லியில் இளம்பெண்ணை, இரு இளைஞர்கள் மானபங்கம் செய்ய முயன்றதை தட்டிக் கேட்ட, தேசிய மகளிர் கமிஷன் முன்னாள் தலைவர், மோகினி கிரி, கும்பலால் தாக்கப்பட்டார். அங்கு வந்த போலீசாரிடம், தன்னை காப்பாற்றுமாறு மோகினி கேட்டுக் கொண்ட பிறகும், போலீசார் அந்த இடத்தை விட்டு அகன்றதாக, அவர் புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து, மோகினி கிரி கூறியதாவது: தெற்கு டில்லி பகுதியில், நான் காரில் சென்று கொண்டு இருந்தேன். ஒரு இளம்பெண்ணை, இளைஞர்கள் இருவர் தாறுமாறாக அடித்துக் கொண்டிருந்தனர். காரை நிறுத்தி, அந்தப் பெண்ணை காப்பாற்ற முயன்றேன். அங்கிருந்த மற்றொரு பெண், என்னை தாக்கி, கீழே தள்ளினாள். அப்போது, அந்த வழியாக வந்த போலீஸ் வாகனம் ஒன்றை மறித்து, என்னையும், அந்தப் பெண்ணையும் காப்பாற்றுமாறு கேட்டேன். ஆனால், வாகனத்தை நிறுத்தி இறங்கிய போலீசார், 'எங்களால் முடியாது' என, கூறிச் சென்றுவிட்டனர். அந்த பகுதிக்கு, இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு போலீஸ்காரரை தடுத்து நிறுத்தி, உதவி செய்யுமாறு கேட்டேன்; அவரும் மறுத்து விட்டார். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, டில்லி போலீசார் கூறுகையில், 'தாக்கப்பட்ட பெண்ணும், அவரை தாக்கி யவர்களும் நன்கு நெருக்கமானவர்கள். அது, அவர்களின் குடும்ப பிரச்னை என்பதை தெரிந்ததும் தான், போலீசார் தலையிடவில்லை. மோகினி கிரி கூறுவது போல, இளம்பெண் மீதான பாலியல் அத்துமீறலோ, அது தொடர்பான பிரச்னையோ அல்ல' என்றனர்.


Saturday, June 14, 2014

அப்பாவிக் குடும்பங்களை சூறையாடும் அசுரர்கள்

பெண்களை பாதுகாக்க பல சட்டங்களை அரசாங்கம் இயற்றினாலும் அந்த சட்டங்களைப் பயன்படுத்தி அப்பாவிக்குடும்பங்களை சிதைத்து பணம் பறித்து பிழைப்பு நடத்துவதில் காவல்துறையும் நீதித்துறையும் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுகின்றன என்று அனைவருக்கும் தெரியும் இதை தேசிய மகளிர் ஆணையமும்  உறுதி செய்திருக்கிறது 
National Commission for Women (NCW) chairperson Girija Vyas said that it was lack of awareness that led to false cases under 498A. "I would not like to use the term misuse. There is lack of awareness amongst people that is exploited by lawyers and police. '' Vyas said. (The Times of India, 1Feb 2009)

அதற்கு சான்றாக வந்துள்ள இன்றைய செய்தி.  குடும்பப் பிரச்சனையில் சிக்குவது ஆணாக இருந்தால் பணத்தைக் கறந்துவிடுவார்கள்.  பெண்ணாக இருந்தால் கற்பை சூறையாடிவிடுவார்கள்.  மொத்தத்தில் குடும்பங்களை சிதைத்து குளிர்காய்வதுதான் இவர்களது பிழைப்பு.  குடும்பப் பிரச்சனைகளை கையாள்வது பற்றி சென்னை உயர்நீதிமன்றம் 2008ல் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  ஆனாலும் அந்த சுற்றறிக்கை காவல்துறையின் கழிவறையில்தான் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
ஜூன் 14,2014 தினமலர்
பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், குன்னம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோஸ்வா, 34, இவரது மனைவி சாந்தி, 31. இவர்களுக்கிடையில், அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த, 3ம் தேதி, குன்னம் போலீசில், ஜோஸ்வா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சாந்தி புகார் கொடுத்தார்.
குன்னம் போலீஸ் எஸ்.எஸ்.ஐ., ராஜேந்திரன், ஜோஸ்வாவை ஸ்டேஷனுக்கு வரவழைத்து, புகாரின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க, 3,000 ரூபாய் தர வேண்டும் என கேட்டார். இதுகுறித்து ஜோஸ்வா, அரியலுார் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார். நேற்று மாலை, 5:30 மணியளவில், குன்னம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற ஜோஸ்வா, எஸ்.எஸ்.ஐ., ராஜேந்திரனிடம், ரசாயனம் தடவிய, 3,000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அவரை கைது செய்தனர்.



ஐதராபாத் :வரதட்சணைக் கொடுமை வழக்கில் உதவி கேட்டு வந்த பெண்ணுடன், மணிக்கணக்கில் போனில் பேசிய போலீஸ் அதிகாரி குறித்து விசாரணை நடத்த, அதிகாரிகளுக்கு ஆந்திர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திரா, குண்டூரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரின் மனைவி கோபி பிரியா; இன்ஜினியர். இவர்களுக்கு, 2009ல் திருமணம் நடந்தது. கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விவாகரத்து கோரி, குடும்ப நல கோர்ட்டில் கார்த்திக் மனு தாக்கல் செய்தார். இதற்குப் போட்டியாக, தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, கார்த்திக் மற்றும் அவரின் பெற்றோருக்கு எதிராக, கோபி பிரியா புகார் கொடுத்தார்.அப்போது, குண்டூர் ஊரக எஸ்.பி.,யான ஷியாம் சுந்தரிடம், இந்த விஷயத்தில் உதவும்படி கேட்டுக் கொண்டார்.

புகாரை விசாரிப்பதாக உறுதி அளித்த சுந்தர், கோபி பிரியாவுடன் அடிக்கடி தொலைபேசி மற்றும் மொபைல்போனில் பேசி வந்தார். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கார்த்திக், தனியார் துப்பறியும் நிறுவனத்தின் உதவியை நாடி, போலீஸ் அதிகாரியுடன் எத்தனை மணி நேரம் கோபி பிரியா பேசியுள்ளார் என்ற விவரங்களை பெற்றுத் தரும்படி கேட்டுக் கொண்டார்.

அதிர்ச்சி பட்டியல்:
துப்பறியும் நிறுவனமும், அவர் கேட்ட தகவலை திரட்டித் தந்தது. அதில், ஒவ்வொரு முறை போன் செய்யும் போதும், குறைந்தபட்சம் முப்பது நிமிடங்கள் கோபி பிரியாவுடன், போலீஸ் அதிகாரி ஷியாம் சுந்தர் பேசியுள்ளது தெரியவந்தது.இவ்வாறு, 80 நாட்களுக்கும் மேலாக, 166 முறை ஷியாம் சுந்தர், கோபி பிரியாவுடன் பேசியுள்ளார். நள்ளிரவு, அதிகாலை என, நினைத்த நேரத்தில் இருவரும் பேசி வந்துள்ளனர். கடந்த ஜனவரி 1 மற்றும் மார்ச் 20ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், இப்படி பேசியுள்ளனர்.தன் வீட்டிலிருந்து, 53 முறையும், தன் மொபைல்போனிலிருந்து 61 முறையும், தன் அலுவலகத்திலிருந்து 26 முறையும், தனது முகாம் அலுவலகத்திலிருந்து 26 முறையும், ஷியாம் சுந்தர் போனில் பேசியுள்ளார். அதேபோல், கோபி பிரியாவும், தன் பங்கிற்கு, 226 முறை போலீஸ் அதிகாரியை அழைத்து பேசியுள்ளார். இருவரும், 1,944 குறுஞ்செய்திகளை பரிமாறிக் கொண்டுள்ளனர்.

விசாரணைக்கு உத்தரவு: இந்த அதிர்ச்சி தரும் பட்டியலை, தன் வழக்கறிஞர் மூலம் ஆந்திர ஐகோர்ட்டில் தாக்கல் செய்த கார்த்திக், போலீஸ் அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.மேலும், இந்த வழக்கில் மட்டும், போலீஸ் ஐ.பி.எஸ்., அதிகாரி தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தியது ஏன் என்றும், அவரது வழக்கறிஞர் புரு÷ஷாத்தமன் கேள்வி எழுப்பினார்.இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட ஆந்திர ஐகோர்ட் நீதிபதி சுபாஷ் ரெட்டி, அடுத்தவர் மனைவியுடன் மணிக்கணக்கில் போனில் பேசிய போலீஸ் அதிகாரி ஷியாம் சுந்தர் குறித்து விசாரிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 


முதியோர்களை கொடுமை செய்வதில் முன்னணி வகிக்கும் மருமகள்கள்

பெண்ணுரிமை என்ற பெயரில் கூட்டுக் குடும்பங்களை ஒழித்துவிட்டு வயதான பெற்றோர்களை நடுத்தெருவில் நிற்கவைத்துவிட்டு முதியோர் இல்ல விளம்பரங்களை பார்த்து மகிழ்ந்துகொண்டிருக்கும் இந்த சமுதாயம் சிறுவர்களும், சிறுமிகளும் சீரழிந்து இளம்வயதிலேயே பாலியல், கொலை குற்றங்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை காணத் தவறிவிட்டார்கள்.

மூத்தவர்கள் இல்லாத குடும்பங்களில் வளரும் குழந்தைகள் தறிகெட்டு திரிவதை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். இப்படி முதியவர்கள் குடும்பங்களில் இல்லாமல் நடுத் தெருவிற்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது குடும்ப விளக்காக வரும் மருமகள்கள் என்பது மிகவும் அதிர்ச்சியான உண்மை.

பெண்ணுரிமை என்ற பெயரில் அரசாங்கம் கொடுத்திருக்கும் பல தவறான சட்டங்களை பல மருமகள்கள் பலவித விஷயங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள்.  வீட்டில் இருக்கும் கணவனின் பெற்றோரை விரட்டவும் இந்த சட்டங்கள் (வரதட்சணை தடுப்புச் சட்டம், IPC498A) பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  பின்வரும் விஷயங்களுக்குத்தான் வரதட்சணை சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

1. தனிக்குடித்தனம் போகவேண்டும்
2. மாமியார் மாமனாரை வீட்டை விட்டு விரட்டவேண்டும்
3. கணவரின் வயதான பெற்றோருக்கு பணம் தருவதை நிறுத்தவேண்டும்
4. உங்கள் வீட்டிற்கு பணம் அனுப்ப வேண்டும்
5. கணவரின் தம்பி தங்கைகளுக்கு செய்யும் உதவியை நிறுத்த வேண்டும்
6. உங்களின் ஆடம்பர வாழ்க்கையில் கணவர் குறுக்கிடுவதை தடுக்கவேண்டும்
7. மருமகள் விரும்பிய ஆண் நண்பர்களுடன் பேசுவதை கணவர் தெரிந்து கொண்டார் அல்லது அதை தடுக்க முயல்கிறார்.

இதற்கு சான்றாக பின்வரும் செய்திகள் உள்ளன.


ஜூன் 14,2014  தினமலர்
சென்னை:''சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள், மீண்டும் கூட்டுக் குடும்ப முறைக்கு மாறுவதே, எதிர்கால சமுதாயம் சிறக்க நல்ல வழி,'' என, முதியோர் வன்கொடுமை எதிர்ப்பு நாளில், மூத்த குடிமக்கள் சங்க பொதுச்செயலர், சுப்புராஜ் தெரிவித்தார்.முதியோருக்கு எதிரான வன்கொடுமைகள் எதிர்ப்பு தினமான, ஜூன் 15ம் நாளை ஒட்டி, 'ஹெல்ப்ஏஜ் இந்தியா' சார்பில், சென்னையில், விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. போலீஸ் இணை கமிஷனர் சங்கர், ஆய்வு நுாலை வெளியிட, மாவட்ட சமூகநல அலுவலர், ரேவதி பெற்றுக் கொண்டார்.

இந்திய மூத்த குடிமக்கள் சங்கங்களின், தேசிய கூட்டமைப்பு பொதுச் செயலர் சுப்புராஜ் பேசியதாவது: கூட்டுக் குடும்ப நிலை மாறியதால், முதியோர் புறக்கணிப்பு நடக்கிறது. பெற்ற குழந்தைகளே கைவிட்டு விட்டனரே என்ற வருத்தம், நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சராசரி வாழ்க்கை வயதும், 65க்கு கீழ் குறைந்து விட்டது. கணவன், மனைவி இருவரும் சம்பாதித்தால் தான், குடும்பம் நடத்த முடியும்; குழந்தைகளை கவனிக்க ஆட்கள் இல்லை. ஐந்து வயது வரை, குழந்தைகளுக்கு நல்ல கதைகள், பாரம்பரியத்தை சொல்லித் தந்து, அன்பும், ஆதரவும் காட்ட, முதியோர் அவசியம்.அதற்கு, மீண்டும் கூட்டுக் குடும்ப நிலை உருவாக வேண்டும். சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள், கூட்டுக் குடும்பங்களாக வாழ தங்களை மாற்றிக் கொண்டால், எதிர்கால சமுதாயம் சிறப்பானதாக மாறும்.இவ்வாறு, அவர் பேசினார்.

கொடுமையில் மிஞ்சும் மருமகள்?முதியோர் வன்கொடுமை ஆய்வு குறித்து, 'ஹெல்ப் ஏஜ் இந்தியா' அமைப்பின், இணை இயக்குனர் சிவகுமார் கூறியதாவது:
நாடு முழுவதும், 23 சதவீதமாக இருந்த முதியோருக்கு எதிரான கொடுமைகள், தற்போது, 50 சதவீதமாக அதிகரித்து விட்டது.டில்லியில், 22 சதவீதம் என, குறைவாகவும், பெங்களூருவில், 75 சதவீதம் என, அதிகமாகவும் கொடுமைகள் நடக்கின்றன. சென்னையில், 53 சதவீதமாக உள்ளது.
சென்னையில், மருமகளால், 37 சதவீதமும், மகன்களால், 56 சதவீதமும் கொடுமைகள் நடந்ததாக பதிவுகள் இருந்தன.
தற்போது, மகன்களைக் காட்டிலும், மருமகள்கள் மிஞ்சிவிட்டனர். மருமகள்களால் ஏற்படும் கொடுமை, 53 சதவீதமாக உயர்ந்ததோடு, மகன்களால் ஏற்படும் கொடுமைகள், 38 சதவீதமாக குறைந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

==============



செப்டம்பர் 07,2011 தினமலர் செய்தி



சிவகங்கை: குடும்ப பிரச்னையில் பெண்ணின் மாமனாரை மிரட்டியதாக தி.மு.க., ஒன்றிய செயலாளர் உட்பட 3 பேர் மீது சிவகங்கை மகளிர் போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்.

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சிங்காரவேலன். இவருக்கும், பட்டமங்கலத்தை சேர்ந்த கார்மேகம் மகள் மீனாட்சிக்கும் 2009ல் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின், தனிக்குடித்தனம் செல்ல தன் கணவரை மீனாட்சி வற்புறுத்தினார். அவர் வர சம்மதிக்கவில்லை. இதற்கிடையில், தனது மகனை மீனாட்சி துன்புறுத்துவதாக சென்னை குடும்ப நல கோர்ட்டில் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணை நடக்கிறது.

இதற்கிடையில் மீனாட்சி, திருப்புத்தூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தனது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக புகார் செய்தார். 

கடந்த மார்ச் 7 அன்று, திருப்புத்தூருக்கு ராமசாமி, அவரது மகன் விசாரணைக்கு வந்தனர். அங்கிருந்த சிவகங்கை தி.மு.க., ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், அவரது தம்பி இளங்கோவன், மீனாட்சியின் தாய் போதும்பொண்ணு ஆகியோர் மிரட்டி உள்ளனர். இது குறித்து ராமசாமி, மதுரை ஐகோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார். கோர்ட் உத்தரவுபடி, சிவகங்கை மகளிர் இன்ஸ்பெக்டர் குமாரி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிந்துள்ளார்.


Friday, May 02, 2014

மதுரை பகுதியில் நடக்கும் ஒப்பந்த “லிவிங் டூ கெதர்” லைஃப் ஸ்டைல்!

மேலைநாடுகளில் அனைவரும் ஆடையில்லாமல் திரிவார்கள்,  யாரும் யாருடனும் வாழலாம். எந்தவித கட்டுப்பாடு, கலாச்சாரம் எதுவும் இல்லை என்றெல்லா நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.   ஆனால் அவையெல்லாம் இந்தியாவின் குக்கிராமங்களில்தான் நடந்துகொண்டிருக்கிறது. 

மேற்கத்திய நாடுகளிலிருந்து நாம் இறக்குமதி செய்திருக்கும் ஒரே ஒரு நல்ல விஷயம் “Living together” எனப்படும் கூடிவாழும் முறை.   இதைத்தான் “பெண்ணுரிமை” என்று “பிற்போக்கு பெண்ணியவாதிகள்” கூறிக்கொண்டிருக்கிறார்கள்.  இதனால் கடைசியில் பாதிக்கப்பட்டிருப்பது யார் என்று செய்தியை படித்துப் பாருங்கள்...

தினமலர் செய்தி  3 மே 2014

மதுரை: "முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது, அவரை ஏமாற்றி, வேறு பெண்ணை திருமணம் செய்தால், ஏமாற்றப்பட்ட பெண்ணிற்கு, கணவன் பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும். இவ்வழக்கில் இருவர் இடையே செய்து கொண்ட ஒப்பந்தத்தை சமர்ப்பித்தும், அதை மாஜிஸ்திரேட் கருத்தில் கொள்ளாதது, பாராட்டத்தக்கதல்ல. மாஜிஸ்திரேட் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது,' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

தேனியை சேர்ந்தவர் ஈஸ்வரி. வீரபாண்டியை சேர்ந்தவர் பாண்டியன். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் கணவன், மனைவிபோல் சேர்ந்து வாழ்ந்தனர். பின், வேறு பெண்ணை பாண்டியன் திருமணம் செய்தார். ஈஸ்வரி,"எனக்கு வாழ்க்கை நடத்த சிரமமாக உள்ளது. பராமரிப்புத் தொகை வழங்க, பாண்டியனுக்கு உத்தரவிட வேண்டும்,' என உத்தமபாளையம் ஜே.எம்.,கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மாஜிஸ்திரேட், "பாண்டியனை திருமணம் செய்து கொண்டதை, மனுதாரர் நிரூபிக்கவில்லை,' எனக்கூறி, 2012 ல் தள்ளுபடி செய்தார். இதை ரத்து செய்யக்கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில், ஈஸ்வரி மேல்முறையீடு செய்தார். நீதிபதி பி.என்.பிரகாஷ் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் சக்கரவர்த்தி ஆஜரானார்.

நீதிபதி உத்தரவு: மனுதாரர் மற்றும் பாண்டியன் 1999 ல், திருமண ஒப்பந்தம் செய்துள்ளனர். இதை, தேனி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இருவரும் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தப் பத்திரம், ஒரு புதிர் போல் உள்ளது. இருவரும் முதலில் கணவன், மனைவி போல் வாழ்ந்துவிட்டு, பின், திருமண ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆயுள் முழுவதும் ஒன்றாக வாழ்வது என முடிவு செய்துள்ளனர்.

பிரிந்து போக நேரும்பட்சத்தில், யார் அவ்வாறு முடிவு செய்கின்றனரோ, அவர் 40 ஆயிரம் ரூபாய் வழங்குவது எனவும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஒப்பந்தத்திலுள்ள விஷயங்களை, பாண்டியன் ஒப்புக்கொண்டுள்ளார். ஒரு வழக்கு அடிப்படையில், சுப்ரீம் கோர்ட் 2008 ல் பதிவாளர்கள், சார்பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், "விதிகள் மற்றும் சம்பிரதாயப்படி, திருமணம் நடந்திருந்தால், பதிவு செய்ய வேண்டும்,' என குறிப்பிட்டுள்ளது. இருவருக்கு இடையில் திருமணம் நடந்ததா? இல்லையா? என, வழக்குத் தொடர்ந்தவர் தான், நிரூபிக்க வேண்டும். திருமணத்தை நடத்தி வைத்த பண்டிதர், "திருமணம் நடக்கவில்லை' எனக்கூறினார் எனில், நடந்ததாக கருத முடியாது.

இவ்வழக்கு ஆவணங்களின்படி, மனுதாரரும், பாண்டியனும், கணவன், மனைவி போல் சேர்ந்து வாழ்ந்தது உறுதியாகிறது. மனுதாரரை கைவிட்டு விட்டு, வேறு பெண்ணை பாண்டியன் திருமணம் செய்துள்ளார். முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது, அவரை ஏமாற்றி, இரண்டாவதாக வேறு பெண்ணை திருமணம் செய்தால், ஏமாற்றப்பட்ட பெண்ணிற்கு, கணவன் பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும்.

இவ்வழக்கில் இருவர் இடையே செய்து கொண்ட ஒப்பந்தத்தை சமர்ப்பித்தும், அதை மாஜிஸ்திரேட் கருத்தில் கொள்ளாதது பாராட்டத்தக்கதல்ல. மாஜிஸ்திரேட் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

வழக்கை, மாஜிஸ்திரேட் மீண்டும் விசாரித்து, மனுதாரருக்கு, பராமரிப்புத் தொகை எவ்வளவு வழங்குவது என நிர்ணயிக்க வேண்டும், என்றார்.

Wednesday, March 19, 2014

கள்ளக்காதல் பாதுகாப்பானதா? அல்லது புனிதமானதா?

இந்திய உச்ச நீதிமன்றத்தால் “சட்ட தீவிரவாதம்” என்று பிரகடனம் செய்யப்பட்ட பொய் வரதட்சணை வழக்குகள் சர்வரோக நிவாரணி போல மருமகள்கள் தாங்கள் நினைத்ததையெல்லாம் அடைவதற்கு உதவி செய்து வருகிறது என்பது உலகறிந்த உண்மை. 

இந்த வரிசையில் சமீபத்தில் வந்துள்ள செய்தியில் திருமணத்திற்கு முன்பான உறவின் மூலம் கர்பம் தரித்த பெண் புதுமணமகளாக மாறி திருமணம் செய்து கொண்டு தேனிலவில் கணவனுடன் இருக்கும்போது “வாந்தியும் வயிறுமாக” மாட்டிக்கொண்டார்.  கணவன் தனது உறவை கண்டுபிடித்துவிட்டானே என்ற ஆத்திரத்தில் பெண்ணுரிமையில் தலையிடும் கணவனை தண்டிக்க எல்லா மருமகள்களும் வழக்கமாக பயன்படுத்தும் “பொய் வரதட்சணைக் கொடுமை வழக்கை” ஆயுதமாக இந்த புதுமணப்பெண்ணும் கையில் எடுத்து வழக்கை போட்டுவிட்டார்.

கடைசியில் இப்போது கணவன் மருத்துவ சான்றுகளுடன் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்.  கணவனுக்கு இந்த ஜென்மத்தில் நீதிமன்றத்தில் வழக்கை முடித்து நீதி வழங்கமாட்டார்கள் என்பது நீதிமன்றத்தைப் பற்றி தெரிந்தவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்.

இந்த அப்பாவி மருமகள் செய்த ஒரு சிறு தவறு என்னவென்றால் “திருமணத்திற்கு முன்பான உறவில் பாதுகாப்பை” கடைபிடித்திருக்கவேண்டும். அல்லது திருமணத்திற்கு பிறகு “(கள்ள)காதலை” ஆரம்பித்திருக்கலாம்.  ஏனென்றால் திருமணத்திற்கு பின்பான கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவி ஒரு அப்பாவி என்று இந்திய தண்டனை சட்டம் கூறுகிறது.  அதனால் அரசாங்கம், காவல்துறை, நீதித்துறை இவற்றின் அமோகமான ஆதரவோடு கள்ளக்காதல் புரிந்து களியாட்டம் நடத்தலாம்.    கள்ளகாதல் என்றால் என்ன என்று தெரியாத அப்பாவிகள் இந்த வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.




IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.


மார்ச் 19,2014 தினமலர்

புதுடில்லி:திருமணத்துக்கு முன், கர்ப்பமானதை மறைத்து, கணவரை ஏமாற்றிய வழக்கில், டில்லியைச் சேர்ந்த பெண்ணுக்கு, செஷன்ஸ் கோர்ட், சம்மன்' அனுப்பியுள்ளது.டில்லி, நஜாப்கார் பகுதியைச் சேர்ந்தவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும், 2012ல், திருமணம் நடந்தது. இவர்கள், தேனிலவுக்காக சென்றிருந்தபோது, அந்த பெண்ணுக்கு, வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது; மருத்துவமனைக்கு செல்ல, அந்த பெண் மறுத்து விட்டார்.


உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி, அந்த பெண், தன், தாய் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து, கணவருக்கு, தான், கர்ப்பமாகி விட்டதாக, போன் மூலம் தெரிவித்தார்.இருவரும், மருத்துவமனைக்கு சென்றனர். அந்த பெண்ணுக்கு எடுக்கப்பட்ட, 'ஸ்கேன்' பரிசோதனையில், திருமணத்துக்கு முன்பே, அவர், கர்ப்பமடைந்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அந்த பெண்ணின் கணவர், விசாரித்ததில், திருமணத்துக்கு முன், அந்த பெண்ணுக்கும், வேறு ஒருவருக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து, அந்த பெண், கணவர் மீது, வரதட்சணை புகார் அளித்தார். இதுகுறித்து, டில்லி விசாரணை கோர்ட்டில் நடந்த வழக்கில், கணவர் கூறிய புகாரை, கோர்ட், ஏற்க மறுத்தது.இதையடுத்து, அவர், டில்லி செஷன்ஸ் கோர்ட்டில், மனு தாக்கல் செய்தார்.அதில், அவர் கூறியிருந்ததாவது:திருமணத்துக்கு முன், அந்த பெண்ணுக்கும், எனக்கும், எந்த சந்திப்பும் நிகழவில்லை. நான், வற்புறுத்தி கேட்டபோதும், பெண் வீட்டார் மறுத்து விட்டனர்.


தேனிலவின் போது, என் மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.'ஸ்கேன்' பரிசோதனையில், கருவின் வளர்ச்சியை கணக்கிட்டு பார்த்தபோது, திருமணத்துக்கு முன், அவர், கர்ப்பமாகியிருந்தது தெரியவந்தது. எனவே, கர்ப்பமானதை மறைத்து, என்னையும், என் குடும்பத்தினரையும் ஏமாற்றிய, என் மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில், அவர் கூறியிருந்தார்.இந்த மனு, நீதிபதி அசுதோஷ் குமார், முன், விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:ஸ்கேன் பரிசோதனை அறிக்கைகளை பார்க்கும் போது, அந்த பெண், திருமணத்துக்கு முன், கர்ப்பமானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, அப்பட்டமான மோசடி. கணவருக்கு தெரியாமலேயே அல்லது அவரின் ஒப்புதலின்றி, அந்த பெண், கர்ப்பமடைந்துள்ளார். இதனால், அவரின் கணவருக்கு, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தியுள்ளார்.எனவே, அந்த பெண், அடுத்த விசாரணையின்போது, கோர்ட்டில், நேரில் ஆஜராக வேண்டும். இது தொடர்பாக, அந்த பெண்ணுக்கு சம்மன் அனுப்பப்படும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

திருமணத்திற்கு முன்பான ஆண், பெண் உறவு புனிதமானதா?

IN THE SUPREME COURT OF INDIA
CRIMINAL APPELLATE JURISDICTION
CRIMINAL APPEAL NO. 913 of 2010
[Arising out of SLP (Crl.) No. 4010 of 2008]


S. Khushboo ... Appellant
Versus
Kanniammal & Anr. ... Respondents

21. While it is true that the mainstream view in our society is that sexual contact should take place only between marital partners, there is no statutory offence that takes place when adults willingly engage in sexual relations outside the marital setting, with the exception of `adultery' as defined under Section 497 IPC. At this juncture, we may refer to the decision given by this Court in Lata Singh Vs. State of U.P. & Anr., AIR 2006 SC 2522, wherein it was observed that a live-in relationship between two consenting adults of heterogenic sex does not amount to any offence (with the obvious exception of `adultery'), even though it may be perceived as immoral. A major girl is free to marry anyone she likes or "live with anyone she likes". (பெண் விரும்பினால் யாருடனும் சேர்ந்து வாழலாம் அது திருமணம் ஆன ஆணுடனா அல்லது திருமணமாகாத ஆணுடனா என்று சொல்லப்படவில்லை)



Sunday, March 02, 2014

உங்கள் குடும்பத்தை சிதைக்க ரூம் போட்டு யோசிக்கும் சதிகாரக் கூட்டம்!


சமீப ஆண்டுகளாக பல இந்தியக் குடும்பங்கள் சிதைந்து சீரழிந்து கொண்டிருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும்.  அதன் பின்னணியில் அரசாங்கம் இயற்றியுள்ள IPC498A  என்ற பெண்கள் பாதுகாப்பு சட்டமும் அதனை தவறாகப் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் பல முறை பல நீதிமன்றங்களால் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இந்த குற்றச் செயலுக்கு ஊழல்மிக்க காவல்துறை, சட்டம் படித்தவர்கள் மற்றும் சட்டம் சரியாகத் தெரியாத கீழ்நிலை மாஜிஸ்ட்ரேட்டுகள் ஆகியோர் பலவகையில் உதவி செய்து வருகிறார்கள் என்பதும் உலகறிந்த உண்மை.

சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி பெண்களை தவறான வழிக்கு வழிநடத்திச் செல்வதில் காவல்துறையும், சட்டம் படித்தவர்களும் முனைப்புடன் செயல்படுவதாக தேசிய பெண்கள் நல வாரியத் தலைவியே கூறியிருக்கிறார்.
Faced with adverse comments from the CJI, National Commission for Women (NCW) chairperson Girija Vyas said that it was lack of awareness that led to false cases under 498A. "I would not like to use the term misuse. There is lack of awareness amongst people that is exploited by lawyers and police. We feel there is no need to review the law,'' Vyas said. (The Times of India, 1Feb 2009)

கீழ்நிலை நீதித்துறையில் இருக்கும் சகிக்க முடியாத சீழ்பிடித்துள்ள ஊழலின் அளவை தமிழ் நாடு காவல்துறை மாத இதழ் பெருமையுடன் எழுதியிருக்கிறது.

"Transparency International, in its Global Corruption Report 2007 has revealed recently that an amount of Rs 2,630 crores was paid in bribes to the lower judiciary in India during 2006! " - Report from Tamilnadu police journal "Criminal Investigation Review. 2007. Volume V (IV)


One in three Indians "Utterly Corrupt"
Mumbai Mirror, September 09, 2010

Almost one-third of Indians are “utterly corrupt” and half are "borderline”, the outgoing head of the country’s corruption watchdog has said, blaming increased wealth for much of the problem.

20 per cent of Indians are honest, regardless of the temptations
30 per cent Indians are corrupt and 50 per cent are on borderline
Transparency International puts India 84th on its latest corruption perception index




இந்த நிலையில் பல பொய் வரதட்சணை வழக்குகள், பொய்யான குடும்ப வன்முறை வழக்குகள் என இந்திய நீதிமன்றங்கள் குப்பைக் கூடங்களாக நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றன.  இந்தக் குப்பைக் கூடங்களில் தாய், தந்தையை இழந்து திரிந்துகொண்டிருக்கும் குழந்தைகள் பல.  இவர்கள்தான் இந்தியாவை ஒளிரச் செய்யப்போகிறார்கள்.  அதன் ஒளியைத்தான் இப்போது பல இடங்களில் இளம் வயதில் காதல் மயக்கத்தில் ஓடுதல், கற்பழிப்பு, ஆசிட் வீட்சு, கொலை என பல வடிவங்களில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.  வருங்காலத்தில் இது  இன்னும் ஒளிரும்!

இவையெல்லாவற்றையும் பார்த்து பல முறை உயர்நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் பல தீர்ப்புகளில் பொய் வழக்குகளைப் பற்றி கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.  ஆனால் ஒரு முறை கூட பொய் வழக்குப் போட்ட பெண்ணை தண்டித்ததில்லை!!!    நீதிபதிகள் தனியறையில் பெண்ணை பலாத்காரம் செய்ததாக செய்திகள் வந்திருக்கின்றன.  தனியறையில் பெண்ணை சீண்ட தைரியம் இருக்கும் நீதிபதிகளுக்கு பொய் வழக்குப்போடும் பெண்களை நீதிமன்றத்தில் சட்டப்படி தண்டிக்க தைரியம் வருவதில்லையே ஏன்?

HC gives guidelines on Section 498A

  The Times of India


HYDERABAD: Finding fault with a woman who implicated the parents of her mother-in-law and the families of her husband's sisters currently residing abroad in a dowry harassment case under section 498 A of the IPC, the high court has issued certain guidelines to the state police to enforce the anti-dowry law. One of the main directions given is not to arrest the accused involved in dowry harassment cases without securing the permission of the district SP or any other officer of the equal rank in metropolitan cities.

Justice B Chandra Kumar pronounced this judgment while allowing a criminal petition filed by Syed Kaleemuallah Hussaini and three others seeking anticipatory bail in a dowry harassment case. In his order, the judge said that no accused should be arrested when the allegation is simple dowry harassment. "If arrest is necessary, the investigating officer should obtain the permission of either the SP or any other officer of the equal rank in metropolitan cities."

The judge directed the magistrates to ensure that no accused was remanded in judicial custody in a routine manner. When an accused is produced before the magistrate, the court should examine the matter judiciously and consider whether there are valid grounds for remanding the accused to judicial custody, the judge said. If arrest is not necessary, the police may complete the investigation and file a chargesheet before the court without arresting the accused, he said.

The judge made it clear that in the case of dowry death, suspicious death, and suicide or where the allegations are serious in nature, the police officer may arrest the accused and intimate the same immediately to the SP concerned. The judge ruled that no accused or witness should be unnecessarily called to the police station, and in case their presence is required for enquiry, they should be sent back immediately after completion of the process.

"During the investigation, if the officer is satisfied that there is an undue implication of a person in the case, then he may delete the names of such persons from the chargesheet after obtaining necessary permission from the SP or any other officer of the same rank", the judge said. "As soon as a complaint is received either from the wife alleging dowry harassment or from the husband that there is possibility of his being implicated in a case of dowry harassment, then, both the parties should be asked to undergo counselling with an experienced counsellor," the judge said and directed that the report of the counsellors should be made a part of the report to be submitted by the investigating officer to the court.

The judge also ruled that the SP in consultation with the chairman of the district legal services authority should constitute a panel of counsellors and details of such a panel along with their address and phone numbers should be made available at all the police stations.

Senior police officers should ensure that there are no complaints of forcible settlements or compromises made by the police. The advocates should play the role of social reformers and try to bring about reconciliation between bickering couples while dealing with such cases, particularly, where the couples have children, he said.

The judge in his order lamented that "it is most unfortunate that Section 498-A of IPC has become a weapon in breaking the families rather than uniting them."


He also said that there cannot be any doubt to say that there is dowry menace in the society. But, at the same time, it is also a fact that certain marriages are performed without any dowry. Due to ill-advice or under a wrong impression that the husband may come to terms if a dowry case is lodged, complaints are being lodged with the police, the judge opined. While directing the registry to mark a copy of this judgment to the DGP, justice Chandra Kumar wanted the DGP to issue necessary instructions to all the men under him in the state in this regard.


இந்த குடும்ப சீரழிப்பு பற்றி மேலும் தெரிந்துகொள்ள ----இந்தியாவில் திருமணம் செய்பவன் முட்டாளா?




Sunday, February 23, 2014

இந்தியக் குடும்பங்களை சிதைத்தால்தான் சாதனை புரிய முடியும்!

இந்தியாவில் பல ஆண்டுகளாக “பெண் உரிமை” என்ற பெயரில் பெண்களுக்கு தவறான வழிகாட்டுதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்று அனைவருக்கும் தெரியும். இதன் மூலம் பல குடும்பங்கள் சிதைந்து நடுத் தெருவிற்கு வந்து நிற்கின்றன என்பதும் அனைவருக்கும்  தெரியும்.  இந்த சூழலில் விவாகரத்தான குடும்பத்தை ஒன்றிணைப்பதாகக்கூறி உயர்நீதிமன்றம் மார்தட்டிக் கொண்டிருக்கிறது.  மற்றொரு புறம் இந்திய அரசாங்கம் ஒன்றாக இருக்கும் குடும்பங்களை சிதைப்பதற்கு புதிய சட்டத்தை தயார் படுத்திக்கொண்டிருக்கிறது என்று இரண்டு விதமான செய்திகள் ஒரே செய்தித்தாளில் வந்திருக்கின்றன. 

குடும்பங்களை சிதைந்தாலும் சரி, சிதைந்த குடும்பத்தை சரிசெய்வதாக கூறிக்கொண்டாலும் சரி நீதிமன்றங்களுக்கும், சட்டம் படித்தவர்களுக்கும், காவல்துறைக்கும் நல்ல வருமானம் இருக்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

இனி இந்தியக் குடும்பங்களின் நிலை என்னவாகுமோ?



பிப்ரவரி 23,2014 தினமலர்


சென்னை: குடும்ப நல கோர்ட்டில், விவாகரத்து பெற்ற தம்பதி, உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள், வழக்கறிஞர்களின் முயற்சியால், சமாதானம் ஆகினர். ஒன்றாகச் சேர்ந்து வாழ்வதாக, உத்தரவாதமும் அளித்தனர்.

கருத்து வேறுபாடு : சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், பழனியப்பன். மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவருக்கும், மனோரஞ்சிதம் என்பவருக்கும், திருமணம் நடந்தது.

இவர்களுக்கு, மூன்று பெண், ஒரு ஆண் என, நான்கு குழந்தைகள். மூத்த மகள், கல்லூரியில் இறுதி ஆண்டும், மற்ற மூவர், பள்ளியிலும் படிக்கின்றனர். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். குழந்தைகள், தாயார் கவனிப்பில் இருந்தனர்.
சேலம், குடும்ப நல கோர்ட், விவாகரத்து வழங்கியது. அதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மனோரஞ்சிதம், அப்பீல் மனு தாக்கல் செய்தார். சேலம் கோர்ட் உத்தரவுக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

இவ்வழக்கு, நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், தேவதாஸ் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் முன், மனோரஞ்சிதம், பழனியப்பன் ஆஜராகினர். அவர்கள் சார்பில், வழக்கறிஞர்கள் வி.ராகவாச்சாரி, கல்யாணராமன் ஆஜராகினர்.

உத்தரவு : கணவன், மனைவி இருவருக்கும், நீதிபதிகள் அறிவுரை கூறினர். அவர்களை சமாதானப்படுத்தி, சேர்ந்து வாழுமாறு கூறினர். வழக்கறிஞர்களும், உதவியாக இருந்தனர்.  இந்த சமாதான முயற்சி, வெற்றியில் முடிந்தது. கணவருடன், அவரது வீட்டில், குழந்தைகளுடன் சேர்ந்து வாழ, மனோரஞ்சிதம் சம்மதம் தெரிவித்தார்; அதற்கான மனுவையும் தாக்கல் செய்தார்.

இதையடுத்து, "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: இந்து திருமண சட்டம், குடும்ப நல கோர்ட்கள் சட்டம், சமாதான நடவடிக்கைகளை தான் வலியுறுத்துகின்றன. இந்த தொடர் நடவடிக்கைக்கு, எந்த முடிவும் கிடையாது. வழக்கறிஞர்களின் துணையுடன், சமாதான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதற்கு வெற்றி கிடைத்தது. பிரிந்து இருந்த இருவரும், ஒன்றாகச் சேர்ந்து வாழ, முடிவு செய்துள்ளனர். மாமனாரையும் கவனித்துக் கொள்வதாக, மனோரஞ்சிதம் கூறியுள்ளார். மனைவி, குழந்தைகளை கவனித்துக் கொள்வதாக, கணவர் பழனியப்பனும் கூறியுள்ளார்.

உறுதிமொழி : எனவே, குழந்தைகளுடன் கணவர் வீட்டுக்கு மனோரஞ்சிதம் செல்ல வேண்டும். மகளையும், அவரது குழந்தைகளையும், மருமகன் வீட்டில், மாமனார் விட வேண்டும். குழந்தைகளின் படிப்புக்கு எந்த இடையூறும் இருக்கக் கூடாது. கோர்ட் அளித்த உறுதி மொழியை, இருவரும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டது.

குடும்ப வாழ்க்கையை சீர்குலைக்கும் சட்டத் திருத்தம் 
கண்ணன் என்பவர் தினமலருக்கு எழுதிய கடிதம்
 பிப்ரவரி 17,2014 தினமலர்
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று நமது அரசியல் சட்டம் கூறுகிறது; ஆணும் பெண்ணும் சமம் என்று நம்புபவன்; அதன் மூலம் நாட்டை முன்னேற்ற நினைப்பவன் நான். ஆனால் தற்போது குடும்பத்தைச் சின்னாபின்னமாக்கும் பல சட்டங்களைக் அரசு கொண்டுவருகிறது.

2013ம் வருடத்திய இந்து திருமண திருத்த மசோதாவின் படி, ஒரு பெண் விவாகரத்து கோரி்ப் பெற்றால், அவருக்கு கணவரின் சொத்தில் பாதி வழங்கப்பட வேண்டும். கணவரின் பரம்பரைச் சொத்தாக இருந்தாலும், திருமணத்திற்கு முன் சேர்த்த சொத்தாகவும் இருந்தாலும், அதில் பாதியைப் பெற விவாகரத்து கோரும் மனைவிக்கு உரிமை உண்டு என்கிறது இந்த புதிய சட்டத்திருத்தம். மேலும் மனைவி விவாக ரத்து கோரினால் அதை மறுக்கும் உரிமை கணவனுக்கு இல்லை.

இது சட்டமாக மாறினால், அது சமுதாயத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். இந்த திருத்த மசோதா ஒரு தலைப்பட்சமானது; பாரபட்சமான இத்தகைய சட்டங்களை எதிர்க்க வேண்டும். நம்பிக்கை அடிப்படையில் இருக்க வேண்டிய குடும்ப நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் இந்த திருத்த மசோதாவை நிறைவேற்ற விடக்கூடாது.

இந்த திருத்த மசோதாவை மேலோட்டமாக படித்தாலே, நாம் திருமணம் இல்லாத ஒரு சமுதாயத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்ிழோம் என்பது தெளிவாகும். இதனால் முறையற்ற உறவுகளும் தந்தையர் இல்லாத குழந்தைகளும் உருவாகும் நிலை ஏற்படும்.

பொறுப்பற்ற பெண்களுக்கு இந்த சட்டத் திருத்தம் மேலும் ஒரு அராஜக ஆயுதமாக கிடைத்து விடும். பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதென்பது, ஆண்களின் உரிமைகளை ஒடுக்குவதாக இருக்கக்கூடாது.

இந்த புதிய சட்டத் திருத்ததின்படி, மனைவி விவாகரத்து கோரினால், கணவனால் அதை மறுக்க முடியாது. இது அரசியல் சட்டத்ததுக்கு எதிரானதல்லவா? ஏன் கணவன் விவாகரத்து பெற்று வேறு திருமணம் செய்யக்கூடாது? விவாகரத்து பெறும் மனைவிக்கு கணவனி்ன் பரம்பரைச் சொத்திலும், சுயமாக சேர்த்த சொத்திலம் பங்குஎன்பது எப்படி நியாயம்? ஒரு நாள் மனைவியாக இருந்தாலும், கணவனின் பரம்பரைச் சொத்திலும், அவன் உழைப்பால் சேர்த்த சொத்திலும் உரிமை கோருவதென்பது அர்த்தமற்றதாக இருக்கிறதே.

சொத்தில் பங்கு கேட்பதற்கு, குறிப்பிட்ட காலம் சேர்ந்து வாழ்ந்திருக்க வேண்டு்ம் என்று நிர்ணயிக்கப்பட வேண்டும்.

சட்டம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக இருக்க வேண்டு்ம்; கணவன் விவாகரத்து கோரினால் அதை எதிர்க்க மனைவிக்கு உரிமை இருக்கும்போது, மனைவி கோரும் விவாக ரத்தையும் எதிர்க்க கணவனுக்கு உரிமை தரப்பட வேண்டும்.

விவாகரத்தின்போது பரபம்பரைச் சொத்தை கணக்கில் கொள்ளக்கூடாது. நிதிநிலைச் சிரமம் என்பதற்கு தெளிவான விளக்கம் கொடுக்கப்பட வேண்டும்; இல்லையேல் பெண்கள் இதையே வியாபாரமாக கருதி விடக்கூடும்.

இருவரும் சேர்ந்து வாழ்ந்த காலத்தையும், இநத் திருமணத்தால் இருவருக்கும் ஏற்பட்ட இழப்பையும் கருத்தில் கொண்டு நிதி .உதவி நிர்ணயிக்கப்பட வேண்டும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும் விவாகரத்து வழங்கப்படும் முன் நிர்ணயிக்க வேண்டும்.

ஏற்கனவே உள்ள வரதட்சணைக் கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துவதால் எத்தனை ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். இந்த சட்டங்கள் அப்பாவி பெண்களுக்கு பயனுள்ளவைதான்; ஆனால் வேண்டுமென்றே தவறும் செய்யும் பெண்கள் இதை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.

நிறைவாக இந்த பதிய திருத்த சட்டத்தால் குடு்ம்ப ஒற்றுமையை நாம் இழப்போம்; தற்கொலைகள் அதிகரிக்கும். குழந்தைகள் தாய் தந்தையர் கவனிப்பின்றி அனாதைகளாக அடிமைகளாக மாற்றப்படுவர். இததகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க, இப்போதே நடவடிக்கை எடுப்பார்களா? .

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.