இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, June 14, 2014

முதியோர்களை கொடுமை செய்வதில் முன்னணி வகிக்கும் மருமகள்கள்

பெண்ணுரிமை என்ற பெயரில் கூட்டுக் குடும்பங்களை ஒழித்துவிட்டு வயதான பெற்றோர்களை நடுத்தெருவில் நிற்கவைத்துவிட்டு முதியோர் இல்ல விளம்பரங்களை பார்த்து மகிழ்ந்துகொண்டிருக்கும் இந்த சமுதாயம் சிறுவர்களும், சிறுமிகளும் சீரழிந்து இளம்வயதிலேயே பாலியல், கொலை குற்றங்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை காணத் தவறிவிட்டார்கள்.

மூத்தவர்கள் இல்லாத குடும்பங்களில் வளரும் குழந்தைகள் தறிகெட்டு திரிவதை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். இப்படி முதியவர்கள் குடும்பங்களில் இல்லாமல் நடுத் தெருவிற்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது குடும்ப விளக்காக வரும் மருமகள்கள் என்பது மிகவும் அதிர்ச்சியான உண்மை.

பெண்ணுரிமை என்ற பெயரில் அரசாங்கம் கொடுத்திருக்கும் பல தவறான சட்டங்களை பல மருமகள்கள் பலவித விஷயங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள்.  வீட்டில் இருக்கும் கணவனின் பெற்றோரை விரட்டவும் இந்த சட்டங்கள் (வரதட்சணை தடுப்புச் சட்டம், IPC498A) பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  பின்வரும் விஷயங்களுக்குத்தான் வரதட்சணை சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

1. தனிக்குடித்தனம் போகவேண்டும்
2. மாமியார் மாமனாரை வீட்டை விட்டு விரட்டவேண்டும்
3. கணவரின் வயதான பெற்றோருக்கு பணம் தருவதை நிறுத்தவேண்டும்
4. உங்கள் வீட்டிற்கு பணம் அனுப்ப வேண்டும்
5. கணவரின் தம்பி தங்கைகளுக்கு செய்யும் உதவியை நிறுத்த வேண்டும்
6. உங்களின் ஆடம்பர வாழ்க்கையில் கணவர் குறுக்கிடுவதை தடுக்கவேண்டும்
7. மருமகள் விரும்பிய ஆண் நண்பர்களுடன் பேசுவதை கணவர் தெரிந்து கொண்டார் அல்லது அதை தடுக்க முயல்கிறார்.

இதற்கு சான்றாக பின்வரும் செய்திகள் உள்ளன.


ஜூன் 14,2014  தினமலர்
சென்னை:''சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள், மீண்டும் கூட்டுக் குடும்ப முறைக்கு மாறுவதே, எதிர்கால சமுதாயம் சிறக்க நல்ல வழி,'' என, முதியோர் வன்கொடுமை எதிர்ப்பு நாளில், மூத்த குடிமக்கள் சங்க பொதுச்செயலர், சுப்புராஜ் தெரிவித்தார்.முதியோருக்கு எதிரான வன்கொடுமைகள் எதிர்ப்பு தினமான, ஜூன் 15ம் நாளை ஒட்டி, 'ஹெல்ப்ஏஜ் இந்தியா' சார்பில், சென்னையில், விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. போலீஸ் இணை கமிஷனர் சங்கர், ஆய்வு நுாலை வெளியிட, மாவட்ட சமூகநல அலுவலர், ரேவதி பெற்றுக் கொண்டார்.

இந்திய மூத்த குடிமக்கள் சங்கங்களின், தேசிய கூட்டமைப்பு பொதுச் செயலர் சுப்புராஜ் பேசியதாவது: கூட்டுக் குடும்ப நிலை மாறியதால், முதியோர் புறக்கணிப்பு நடக்கிறது. பெற்ற குழந்தைகளே கைவிட்டு விட்டனரே என்ற வருத்தம், நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சராசரி வாழ்க்கை வயதும், 65க்கு கீழ் குறைந்து விட்டது. கணவன், மனைவி இருவரும் சம்பாதித்தால் தான், குடும்பம் நடத்த முடியும்; குழந்தைகளை கவனிக்க ஆட்கள் இல்லை. ஐந்து வயது வரை, குழந்தைகளுக்கு நல்ல கதைகள், பாரம்பரியத்தை சொல்லித் தந்து, அன்பும், ஆதரவும் காட்ட, முதியோர் அவசியம்.அதற்கு, மீண்டும் கூட்டுக் குடும்ப நிலை உருவாக வேண்டும். சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள், கூட்டுக் குடும்பங்களாக வாழ தங்களை மாற்றிக் கொண்டால், எதிர்கால சமுதாயம் சிறப்பானதாக மாறும்.இவ்வாறு, அவர் பேசினார்.

கொடுமையில் மிஞ்சும் மருமகள்?முதியோர் வன்கொடுமை ஆய்வு குறித்து, 'ஹெல்ப் ஏஜ் இந்தியா' அமைப்பின், இணை இயக்குனர் சிவகுமார் கூறியதாவது:
நாடு முழுவதும், 23 சதவீதமாக இருந்த முதியோருக்கு எதிரான கொடுமைகள், தற்போது, 50 சதவீதமாக அதிகரித்து விட்டது.டில்லியில், 22 சதவீதம் என, குறைவாகவும், பெங்களூருவில், 75 சதவீதம் என, அதிகமாகவும் கொடுமைகள் நடக்கின்றன. சென்னையில், 53 சதவீதமாக உள்ளது.
சென்னையில், மருமகளால், 37 சதவீதமும், மகன்களால், 56 சதவீதமும் கொடுமைகள் நடந்ததாக பதிவுகள் இருந்தன.
தற்போது, மகன்களைக் காட்டிலும், மருமகள்கள் மிஞ்சிவிட்டனர். மருமகள்களால் ஏற்படும் கொடுமை, 53 சதவீதமாக உயர்ந்ததோடு, மகன்களால் ஏற்படும் கொடுமைகள், 38 சதவீதமாக குறைந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

==============



செப்டம்பர் 07,2011 தினமலர் செய்தி



சிவகங்கை: குடும்ப பிரச்னையில் பெண்ணின் மாமனாரை மிரட்டியதாக தி.மு.க., ஒன்றிய செயலாளர் உட்பட 3 பேர் மீது சிவகங்கை மகளிர் போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்.

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சிங்காரவேலன். இவருக்கும், பட்டமங்கலத்தை சேர்ந்த கார்மேகம் மகள் மீனாட்சிக்கும் 2009ல் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின், தனிக்குடித்தனம் செல்ல தன் கணவரை மீனாட்சி வற்புறுத்தினார். அவர் வர சம்மதிக்கவில்லை. இதற்கிடையில், தனது மகனை மீனாட்சி துன்புறுத்துவதாக சென்னை குடும்ப நல கோர்ட்டில் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணை நடக்கிறது.

இதற்கிடையில் மீனாட்சி, திருப்புத்தூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தனது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக புகார் செய்தார். 

கடந்த மார்ச் 7 அன்று, திருப்புத்தூருக்கு ராமசாமி, அவரது மகன் விசாரணைக்கு வந்தனர். அங்கிருந்த சிவகங்கை தி.மு.க., ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், அவரது தம்பி இளங்கோவன், மீனாட்சியின் தாய் போதும்பொண்ணு ஆகியோர் மிரட்டி உள்ளனர். இது குறித்து ராமசாமி, மதுரை ஐகோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார். கோர்ட் உத்தரவுபடி, சிவகங்கை மகளிர் இன்ஸ்பெக்டர் குமாரி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிந்துள்ளார்.


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.