சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, February 14, 2012

இப்படியும் நடக்குமா? நடக்கும்... ... ...


ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆசிரியரை ஆட்டோவில் கடத்தி, கட்டாய திருமணம் செய்த, பெண் தலையாரியை போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு புதுப்பட்டியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்,27. பி.எஸ்சி, பி.எட்., பட்டதாரியான இவர் ,வன்னியம்பட்டி தனியார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்.

இவருக்கு திருமணம் செய்ய , பூவாணியில் தலையாரியாக வேலை பார்க்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டின்பட்டியை சேர்ந்த முத்துலட்சுமி,28,யை, கடந்த ஒரு ஆண்டுக்கு முன் பெண் பார்த்தனர்.

இதன் பின் முத்துகிருஷ்ணன் வீட்டார் ,முத்து லெட்சுமியை திருமணம் செய்ய வேண்டாம் என கூறினர். ஆனால் பெண்ணிடம், முத்துக்குமார் தொடர்ந்து மொபைல் போனில் பேசி வந்துள்ளார். இதில் முத்துலட்சுமி முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறி, அவருடனான மொபைல் போன் தொடர்பை துண்டித்தார். இந்நிலையில், முத்துக்குமாருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய, அவரின் பெற்றோர் முடிவு செய்தனர். இதையறிந்த முத்துலட்சுமி, நேற்று முன் தினம் மாலை, பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய ஆசிரியர் முத்துக்குமாரை, தனது உறவினர்களுடன் சேர்ந்து, ஆட்டோவில் கடத்தி , மேல தொட்டியப்பட்டியில் வைத்து கட்டாய திருமணம் செய்தார். வேலைக்கு சென்றவர் வீடு திரும்பாதது குறித்து, அவரது தந்தை பிலாவடியான்,வன்னியம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்படி ,போலீசார் முத்துலட்சுமி உட்பட ஏழு பேர் மீது வழக்கு தொடர்ந்து,முத்துலட்சுமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.