பிப்ரவரி 06,2012 தினமலர்
அவினாசி : அவினாசி அனைத்து மகளிர் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் கண்ணெதிரே, தங்கையை அண்ணன் அரிவாளால் வெட்டினார். ஸ்டேஷனுக்குள் நடந்த கொலைவெறி தாக்குதலால், போலீசார் நிலைகுலைந்து போயினர். உயிருக்குப் போராடி வரும் பெண்ணுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அவரது தாய் பழனியம்மாள் நேற்று காலை, அவினாசி அனைத்து மகளிர் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். அதில், "மகள் அம்பிகாவை, அவரது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி பெண் இன்ஸ்பெக்டர் குப்பு, அம்பிகாவை அழைத்து நேற்று மாலை, ஸ்டேஷனில் விசாரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அம்பிகாவின் அண்ணன் வெள்ளியங்கிரி, 21, விசாரணைக்காக ஸ்டேஷனுக்குள் வந்துள்ளார். "வடிவேலுவுடன் தான் வாழ்வேன்' என்று அம்பிகா, இன்ஸ்பெக்டரிடம் கூறிக் கொண்டிருந்தார். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த வெள்ளியங்கிரி, ஆவேசத்துடன், "திரும்பத் திரும்ப சொல்லியும், அவனுடன் போகிறேன் என்றா சொல்கிறாய்' என்று கேட்டுக் கொண்டே, மறைத்து வைத்திருந்த அரிவாளால், அம்பிகாவின் முதுகில் வெட்டியுள்ளார்.
இதைக் கண்ட இன்ஸ்பெக்டர் குப்பு, அதிர்ச்சியடைந்து கூச்சல் போட்டார். அவர் போட்ட சத்தம் கேட்டு, ஸ்டேஷனிலிருந்து போலீசார் ஓடிச் சென்று வெள்ளியங்கிரியை பிடித்தனர். உயிருக்கு போராடிய அம்பிகாவை, அவினாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுவி அளிக்கப்பட்ட அவர், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போலீஸ் ஸ்டேஷனில் வைத்து தங்கையை, அண்ணன் அரிவாளால் வெட்டியதை அறிந்த திருப்பூர் எஸ்.பி., பாலகிருஷ்ணன், நேரில் விசாரணை நடத்தினார்.
No comments:
Post a Comment