சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, February 01, 2012

கணவன் வேண்டுமா? கலெக்டரிடம் மனு கொடுக்கலாம்!

பின்வரும் செய்தித்தாள் செய்தியிலிருந்து இந்தியத் திருமண வாழ்க்கை பற்றி கீழ்கண்ட உண்மைகள் தெரிய வருகிறது!

  • திருமணம் செய்தால் கணவன் தனது குடும்பத்திற்கு (பெற்றோர்களுக்கு) செய்ய வேண்டிய கடமைகளை செய்யமுடியாது!
  • கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் உறவினர்கள், நண்பர்களின் உதவியை நாடுவதைவிட போலிஸ், நீதிமன்றம், கலெக்டர் இவர்களை நாடினால் நல்ல பலன் கிடைக்கும்! (தொடர்புடைய பதிவு: கலெக்டரை கல்யாணத் தரகராக்கும் இளம் பெண்கள்!)
======


கோவை: கல்லூரியில் படிக்கும்போது திருமணம் செய்து, பிரிந்த காதல் ஜோடி, 10 மாத குழந்தை, முன்னிலையில் மீண்டும் தங்கள் திருமண ஒப்பந்தத்தை, "சட்டப்படி' நேற்று உறுதி செய்தது.

மதுரை, அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் செல்வம், 23; கோவை, அரசு கல்லூரி மாணவர்கள் விடுதியில் தங்கி கல்லூரியில், படித்தார். இவருடன் ஒரே வகுப்பில், கோவை, கணுவாயைச் சேர்ந்த சரண்யா,23;வும் படித்தார்.
கடந்த 2008-10 வரையிலான கல்லூரி நாட்களில், இவர்களுக்குள் ஏற்பட்ட காதல், 2010, ஜூன் 26 அன்று, திருமணத்தில் முடிந்தது.

நண்பர்கள் பாதுகாப்பில் தங்கியிருந்த இவர்கள், மதுரை, அலங்காநல்லூர் சென்றனர். செல்வத்தின் பெற்றோர், சரண்யாவை மருமகளாக ஏற்றனர்.
அடுத்த சில மாதங்களில், இவர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது; கர்ப்பமாக இருந்த சரண்யா கோவை திரும்பினார்.

பெற்றோர் பாதுகாப்பில் இருந்த சரண்யாவுக்கு, பெண் குழந்தை பிறந்தது. ஒரு முறை மட்டும் கோவை வந்த, செல்வம், மனைவியையும் குழந்தையையும் பார்த்து விட்டுச் சென்று விட்டார்.

குழந்தையை பெற்றோர் பராமரிப்பில் ஒப்படைத்து விட்டு, தனியார் கம்பெனியில் வேலைக்குச் சென்றார், சரண்யா.

இந்நிலையில், மக்கள் குறைகேட்பு நாளில், கோவை கலெக்டரை சந்தித்து, கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என, சரண்யா மனு கொடுத்தார்.

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு விசாரணைக்கு, இந்த மனு அனுப்பப்பட்டது. மாவட்ட நீதிபதி ஆதிநாதன் உத்தரவில், சட்ட ஆணைக்குழு செயலாளர் நீதிபதி மகிழேந்தி, சட்ட ஆலோசகர் வக்கீல் சுவாமிநாதன் ஆகியோரின் விசாரணைக்கு, மனு எடுத்துக் கொள்ளப்பட்டது. புகார் அளித்த சரண்யா, கணவர் செல்வம் ஆகியோர் வரவழைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டனர்.
"மனைவியையும் குழந்தையையும் ஏற்றுக் கொள்கிறேன். தற்போது, சென்னை மேயரின் "மனிதநேய அறக்கட்டளை'யில், ஐ.ஏ.எஸ்.,தேர்வு எழுத பயிற்சி பெறுகிறேன். இதேபோல், மதுரையில் இருக்கும் குடும்பத்துக்கு செய்ய வேண்டிய, சில கடமைகள் உள்ளன. இவற்றை முடித்துவிட்டு, மூன்று மாதங்களுக்குப் பின், மனைவி, குழந்தையை அழைத்துச்செல்கிறேன்'' என, செல்வம் உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் 10 மாத பெண் குழந்தையின் முன்னிலையில், திருமண ஒப்பந்தத்தை உறுதி செய்து, அதிகாரிகள் கையெழுத்து பெற்றனர்.

===========No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.