இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, January 13, 2012

கணவனை பிரியும் பெண்களின் நிலை என்ன?

இந்தியாவில் பல இளம் மனைவியர் தங்களது சுயலாபத்திற்காக காவல் மற்றும் நீதித்துறையின் உதவியோடு கணவனின் குடும்பத்தார் மீது பொய் வரதட்சணை வழக்குப் போட்டுவிட்டு பிறகு வாழ்க்கையை தொலைத்துவிட்டு தனியே பிரிந்து வாழ்கிறார்கள். இவர்களின் நிலை என்ன என்று இதுவரை தேசிய மகளிர் வாரியமோ, பெண்கள் அமைச்சகமோ ஏதாவது புள்ளிவிவரம் சேகரித்து வைத்திருக்கிறதா?

பொய் வரதட்சணை வழக்குகள் பதிவு செய்யப்படும்வரை பெண்களை உற்சாகப்படுத்தி எத்தனை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படுகிறது என்ற எண்ணிக்கையை மட்டும் எடுத்துக்கொண்டு ஊரெல்லாம் பெண்களுக்கு கொடுமை நடக்கிறது என்று எண்ணிக்கையை காட்டுபவர்கள் அந்த புகார் பதிவு செய்யப்பட்ட பிறகு அந்த வழக்கு எங்கு சென்று முடிகிறது, புகார் பதிவு செய்யும் பெண்களின் இறுதி நிலை என்ன என்று தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.


அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் பெண்ணை கர்ப்பமாக்கிய தனியார் நிறுவன இன்ஜினியரை, போலீசார் கைது செய்தனர்.அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சுமதி, 27. கணவனை பிரிந்து, குழந்தையுடன் தனித்து வசித்து வருகிறார்.இந்நிலையில், சுமதிக்கும், தனியார் நிறுவன இன்ஜினியர் வீரமணி, 34,க்கும் தொடர்பு ஏற்பட்டது.

திருமண ஆசை காட்டி சுமதியை கர்ப்பமாக்கி விட்டு, வீரமணி மாயமானார். இதன்பின் ஊருக்கு வந்த வீரமணி, சுமதியை திருமணம் செய்ய மறுத்ததுடன், அவரும், அவரது தந்தை பிச்சைவேல், தாய் சின்னத்தாய் ஆகியோர் சுமதியை தாக்கினர். சுமதி கொடுத்த புகார்படி, அருப்புக்கோட்டை மகளிர் போலீசார், வீரமணியை கைது செய்தனர். தாய், தந்தையரைதேடி வருகின்றனர்.

1 comment:

Yaathoramani.blogspot.com said...

இன்றுதான் உங்கள் பதிவினுக்குள் நுழைந்தேன்
பதிவுகள் அனைத்தும் பய்னுள்ள பதிவுகளால இருத்தல் கண்டேன்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
த.ம 1

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.