இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, January 23, 2012

பொய்வரதட்சணை வழக்குப்போடும் 40% பெண்கள்

காவல்துறை பட்டும் படாமல் சொல்லும் புள்ளிவிபரப்படி 40% வரதட்சணைப் புகார்கள் கணவனின் குடும்பத்தை பழிவாங்கும் நோக்கத்தோடு போடப்படுகிறதாம். மீதமுள்ளவற்றில் லஞ்சம், அரசியல் பின்னணி போன்ற காரணங்களால் பதிவு செய்யப்படும் பொய் வரதட்சணை வழக்குகளையும் கணக்கில் கொண்டால் 99% புகார்கள் பொய்யானவை என்று தெரியும்.

பொதுவாக காவல்நிலையத்தில் கொடுக்கப்படும் பொய் வரதட்சணைப் புகார்களில் ஏதாவது லாபம் கிடைத்தால் புகாரின் உண்மைத் தன்மையை பற்றியோ, அந்த பொய் வழக்கின் மூலம் அந்தக் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளின் நிலை என்னவாகும் என்ற சிந்தனையோ இல்லாமல் யாருடைய குடும்பமோ அழிந்து நடுத்தெருவிற்கு வந்தால் நமக்கென்ன என்ற மனப்போக்கில்தான் அனைத்து வரதட்சணை வழக்குகளும் மிருகத்தனமாக பதிவு செய்யப்படுகிறது. வரதட்சணை வழக்குகளை பதிவு செய்து விசாரணை செய்வதில் வரதட்சணை தடுப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள எந்தவித சட்ட நடைமுறைகளும் பின்பற்றப்படுவதே கிடையாது.

இதில் அற்புதமான விஷயம் என்னவென்றால் எத்தனை சதவீதம் பொய் வழக்குப்போட்டாலும் அப்பாவிகளை பழிவாங்கும் நோக்கில் காவல்துறையையும், நீதித்துறையையும் தவறாகப் பயன்படுத்தி பொய் வழக்குப் போடுபவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள் என்பதுதான் மிகவும் பெருமைக்குரிய விஷயம்.


பழிவாங்கும் நோக்கில் பொய் வரதட்சணை வழக்குப் போடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


Blame it on issues over supremacy, financial or educational status or discontent in marriage life, complaints of harassment against women are on the rise in the city in 2011 when compared to 2009 and 2010.

Yet, 70 per cent of the victim's problems were solved through counselling by the city police and 30 per cent were left for logical conclusion before a court of law.

Harassment against wife includes, beating of woman by husband in inebriated condition, abuse by mother-in-law, father-in-law and relatives, suspecting fidelity of the woman, blaming wife for childlessness, blaming her parents, disability harassment, spying on their activities, verbal and nor-verbal abuse are the forms of harassment reported.

Deputy Commissioner of Police (Law and Order) Hema Karunakaran said that most of the differences between wife and husband were over supremacy and that too in the age group of 21 – 30 years.

When a woman approaches an All Women Police Station to file a complaint, priority is given for resolving the issue through expert counselling. The last option is registering a case, she added.

When a husband or relative subject her to cruelty, a case would be filed under Section 498A of the Indian Penal Code in which, the guilty, upon conviction would get three years of imprisonment and fine.

In case of harassment, case would be registered under Section 4 of Tamil Nadu Prohibition of Harassment of Women Act 2002 provides a maximum of three year imprisonment or Rs. 10,000 fine or both.

In case of dowry harassment, the District Social Welfare Officer K. Aruna has to conduct an inquiry with the husband and wife and submit a report to the police station, after which the case is registered.

Counselling

Expert counselling is provided only if the couple wanted it, she added.

However, a police official said that some women misuse the law by preferring complaints over petty issues with the husband or his family.

They seek legal recourse to settle scores or intimidate the husband's family. Such petitions are often resolved by offering adequate counselling.

This accounts for nearly 40 per cent of the dowry harassment cases registered.



Friday, January 13, 2012

கணவனை பிரியும் பெண்களின் நிலை என்ன?

இந்தியாவில் பல இளம் மனைவியர் தங்களது சுயலாபத்திற்காக காவல் மற்றும் நீதித்துறையின் உதவியோடு கணவனின் குடும்பத்தார் மீது பொய் வரதட்சணை வழக்குப் போட்டுவிட்டு பிறகு வாழ்க்கையை தொலைத்துவிட்டு தனியே பிரிந்து வாழ்கிறார்கள். இவர்களின் நிலை என்ன என்று இதுவரை தேசிய மகளிர் வாரியமோ, பெண்கள் அமைச்சகமோ ஏதாவது புள்ளிவிவரம் சேகரித்து வைத்திருக்கிறதா?

பொய் வரதட்சணை வழக்குகள் பதிவு செய்யப்படும்வரை பெண்களை உற்சாகப்படுத்தி எத்தனை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படுகிறது என்ற எண்ணிக்கையை மட்டும் எடுத்துக்கொண்டு ஊரெல்லாம் பெண்களுக்கு கொடுமை நடக்கிறது என்று எண்ணிக்கையை காட்டுபவர்கள் அந்த புகார் பதிவு செய்யப்பட்ட பிறகு அந்த வழக்கு எங்கு சென்று முடிகிறது, புகார் பதிவு செய்யும் பெண்களின் இறுதி நிலை என்ன என்று தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.


அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் பெண்ணை கர்ப்பமாக்கிய தனியார் நிறுவன இன்ஜினியரை, போலீசார் கைது செய்தனர்.அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சுமதி, 27. கணவனை பிரிந்து, குழந்தையுடன் தனித்து வசித்து வருகிறார்.இந்நிலையில், சுமதிக்கும், தனியார் நிறுவன இன்ஜினியர் வீரமணி, 34,க்கும் தொடர்பு ஏற்பட்டது.

திருமண ஆசை காட்டி சுமதியை கர்ப்பமாக்கி விட்டு, வீரமணி மாயமானார். இதன்பின் ஊருக்கு வந்த வீரமணி, சுமதியை திருமணம் செய்ய மறுத்ததுடன், அவரும், அவரது தந்தை பிச்சைவேல், தாய் சின்னத்தாய் ஆகியோர் சுமதியை தாக்கினர். சுமதி கொடுத்த புகார்படி, அருப்புக்கோட்டை மகளிர் போலீசார், வீரமணியை கைது செய்தனர். தாய், தந்தையரைதேடி வருகின்றனர்.

Tuesday, January 10, 2012

ஏன்டி இந்த கொல வெறி? சிதையும் இந்தியக் குடும்பங்கள்

இந்தியாவில் குடும்பங்களில் ஏற்படும் சிறு பிரச்சனைகளுக்குக்கூட தகுந்த மனநல ஆலோசனை வழங்காமல் எடுத்ததற்கெல்லாம் கிரிமினல் IPC498A - வரதட்சணை வழக்குப் பதிவு செய்து குடும்பங்களை நாசமாக்கிக்கொண்டிருக்கும் கண்மூடி சட்டங்களால் பல குடும்பங்கள் நாசமாகியிருக்கிறது.

இதுபோன்று குடும்பங்கள் சட்டங்கள் மூலம் நாசமாக்கப்படும்போது அந்தக் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகள்தான் மிகப்பெரிய பிரச்சனைகளில் சிக்கித்தவிக்கிறார்கள் . குழந்தைகளின் நலனை இந்திய மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் ஒருபோதும்ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. கணவன் மனைவி பிரச்சனை என்று காவல்நிலையத்திற்கு வந்தால் உடனடியாக பொய் வரதட்சணை குற்ற வழக்கை பதிவு செய்து யாரோ ஒருவருடைய குடும்பம் நாசமானால் நமக்கென்ன என்று செயல்படும் காவல்துறையாலும், நீதித்துறையாலும் அழிந்த குடும்பங்கள் பல இருக்கின்றன.

இதுபோன்ற சூழலில் சிக்கும் குழந்தைகளின் நிலை எப்படி பரிதாபத்திற்கு உள்ளாகிறது என்பதை காட்டும் செய்தி.

சித்தி எனும் அரக்கியிடம் சிக்கிய குழந்தை : சுற்றிய கிரைண்டர் கல் மீது முகத்தை தேய்த்த கொடூரம்
ஜனவரி 11,2012 தினமலர்


திருப்பூர்: நான்கு வயது குழந்தை முகத்தை கிரைண்டரில் வைத்து அரைத்த சித்தி கொடுமை, திருப்பூரில் நடந்துள்ளது. திருப்பூர், நல்லூர் பொன்கோவில் நகரில் வசிப்பவர் சரவணன்; மனைவி சங்கீதா. இவர்களின் 4 வயது குழந்தை லோசனி; எல்.கே.ஜி., படிக்கிறார். கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால், சங்கீதா, திருவண்ணாமலையை அடுத்த ஆத்தூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். சரவணன், விஜி என்ற பெண்ணை திருமணம் செய்து, அதே பகுதியில் வசித்து வந்தார். சங்கீதாவுக்கு பிறந்த லோசனியை, விஜி துன்புறுத்தியுள்ளார். இதையறிந்து சங்கீதா குழந்தையை கேட்டார்; சரவணன் கொடுக்கவில்லை. இதன்பின், இருவரும், குழந்தையை அவ்வப்போது துன்புறுத்தினர்.

தகவல் தெரிந்ததும் குழந்தையை மீட்ட, "சேவ்' அமைப்பு தலைவர் ஆலோஷியஸ் கூறியதாவது: சரவணன் வீட்டின் அருகில் இருந்தவர்கள், ஹெல்ப் லைன் 1098க்கு தொடர்பு கொண்டனர். அப்பகுதிக்கு சென்று விசாரித்த போது, குழந்தை மீது துணியை போட்டு அழைத்து வந்த விஜி, "கடந்த வாரம் ஒரு விபத்தில் சிக்கியது. அதனால், முகமெல்லாம் காயமாகியுள்ளது' என்றார். முகத்தை திறந்து காண்பிக்க மறுத்தார். போலீசை அழைப்போம் எனக் கூறியதும், குழந்தையை காண்பித்தார். சிகிச்சைகாக குழந்தையை அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். "கோபம் வந்தால், சித்தி, ஓடும் கிரைண்டர் முன் முகம் காட்டுவார். சத்தம் போட்டால், கிரைண்டருக்குள் தூக்கி போட்டு உன்னையும் சேர்த்து அரைத்து விடுவேன் என மிரட்டுவார். இரண்டு, மூன்று முறை ஓடும் கிரைண்டரில் என் முகத்தை வைத்து உரசியுள்ளார். தூங்கி எழுந்ததும், குச்சியை வைத்து என் மூக்கின் உட்பகுதியில் இடித்து விடுவார். இரவில் பழுக்க காய்ச்சிய கம்பியை வைத்து கை, கால், பின்புறம் சூடு போடுவார்' என, மருத்துவமனையில் அழுது கொண்டே குழந்தை தெரிவித்தது. இவ்வாறு ஆலோஷியஸ் கூறினார்.

மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை குழந்தை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த லோசனியை பார்க்க சென்ற கலெக்டர் மதிவாணன் கூறும் போது, ""வெளியே சொல்ல முடியாத அளவு குழந்தையை கொடுமைப்படுத்தியுள்ளனர். அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு இல்லை. மருத்துவமனைக்குள் புகுந்து கழுத்தை நெரித்து கொன்று விடக்கூடும். எனவே, தனியார் மருத்துவமனையிலோ, "சேவ்' அமைப்பு பாதுகாப்பிலோ வைத்து சிகிச்சை மேற்கொள்ளுங்கள்,'' என்றார். இச்சம்பவத்தையடுத்து, சரவணன், விஜி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.



Friday, January 06, 2012

ஒரு இனிய காதல் / கல்யாண கதை!


கோவை : மனைவியை, வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்த இரும்பு வியாபாரியும், அதற்கு உடந்தையாக இருந்த, கல்லூரி பெண் விரிவுரையாளரும், கைது செய்யப்பட்டனர். அத்தப்பக்கவுண்டன்புதூர், வையாபுரி வீதியைச் சேர்ந்தவர் கவுதம், 30; பழைய இரும்பு வியாபாரி. சில ஆண்டுகளுக்கு முன், இதே பகுதியைச் சேர்ந்த கீதா, 26 வை, காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சில மாதங்களுக்கு பின், கணவரின் நடத்தையில் சந்தேகப்பட்டு, கீதா விசாரித்தார். கல்லூரி விரிவுரையாளர் உமாமகேஸ்வரி என்பவருடன், கணவருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. கள்ளத்தொடர்பு பற்றி, கணவரிடம் கீதா கேட்டார். அப்போது, "எனது தொழில் வளர்ச்சிக்கு, உமா மகேஸ்வரி தான் அனைத்து வழிகளிலும் உதவுகிறாள். உன்னுடன் வாழ வேண்டும் என்றால், உன் பெற்றோரிடம், ஐந்து லட்சம் ரூபாய், வாங்கி வர வேண்டும்' என, நிபந்தனை விதித்ததோடு, கீதாவை சித்திரவதை செய்தார். இதற்கு உடந்தையாக, கவுதமின் பெற்றோரும், மிரட்டல் விட துவங்கினர்.

இச்சூழலில், "உங்கள் மனைவியை எப்போது கொல்லப் போகிறீர்கள்?' எனக் கேட்டு, உமாமகேஸ்வரி எழுதிய கடிதம், கீதாவிடம் கிடைத்தது. கடிதத்துடன், வீட்டைவிட்டு வெளியேறிய கீதா,கோவை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி, வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்த கவுதம், கல்லூரி விரிவுரையாளர் உமா மகேஸ்வரி ஆகியோரை, கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய, கவுதமின் பெற்றோரை, போலீசார் தேடுகின்றனர்.



Tuesday, January 03, 2012

காதல் பரிசு - அன்னாசிப் பழம்!

காதல் பரிசு - அன்னாசி பழம்
கல்யாண பரிசு - பொய் வரதட்சணை வழக்கு

(IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act)


கள்ளக் காதலை கணவன் தட்டிக் கேட்டால் மனைவிக்கு இப்போதெல்லாம் கோபம் கொஞ்சம் அதிகமாகவே வருகிறது! முன்பெல்லாம் பொய் வரதட்சணை வழக்கு பதிவு செய்து கணவனை அவனது குடும்பத்தோடு சிறைக்கு அனுப்பி வைத்துவிட்டு தனது காதலை தொடர்ந்தார்கள். இப்போது தன் கண் எதிரிலேயே கணவன் சிறையில் கஷ்டப்படக்கூடாது என்ற கருணை உள்ளத்தோடு களத்தில் இறங்கி கணவனின் கழுத்திலேயே கை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்!

தவறான மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் இருக்கும்வரை கணவன்கள் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது.


கோட்டயம்: கள்ளக் காதலுக்கு இடைஞ்சலாக இருந்த கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி கள்ளக் காதலனுடன் கைது செய்யப்பட்டார். சதித் திட்டத்தை நிறைவேற்றிய, கள்ளக் காதலனுக்கு மனைவி அன்னாசி பழத்தை பரிசாக வழங்கினார்.

கேரள மாநிலம் கோட்டயம் அருகே திருக்காக்கரா பகுதியைச் சேர்ந்தவர் பால் வர்கீஸ், 35. இவர், எர்ணாகுளத்தில் ஜவுளிக் கடையில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சஜிதா, 32. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இவரது, சகோதரியின் திருமணம் தொடர்பாக அளித்த விளம்பரத்தை பார்த்து இங்கிலாந்தில் வேலை பார்த்து வந்த டிசன், 31 என்பவர் தொடர்பு கொண்டார். ஆனால், அவர் தொடர்பு கொண்டது சஜிதாவுடன் என்பது பால் வர்கீசுக்குத் தெரியவில்லை. தொலைபேசியில் தொடர்ந்த நட்பு, அவர் கேரளாவுக்கு வந்ததும் நேரில் சந்தித்து தொடர்ந்தது. கணவனை விட்டு விலகி, மகள்களுடன் இங்கிலாந்துக்கு வருமாறு டிசன் அழைத்தார். ஆனால், அதற்கு சஜிதா மறுத்து விட்டார். மனைவியின் கள்ளக் காதல் பால் வர்கீசுக்கு தெரிய வந்ததும். மனைவியை கண்டித்தார். இதனால், கோபம் அடைந்த அவர், கணவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்து, டிசனுடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டினார்.

டிசம்பர் மாதம் 22ம் தேதி இரவு, பணி முடிந்து வீட்டுக்கு வந்த கணவனுக்கு, உணவில் அதிகளவு தூக்க மாத்திரைகளை கலந்து சஜிதா கொடுத்தார். அதிகளவு மாத்திரைகளை சாப்பிட்டதால் இறந்து விடுவார் என எதிர்பார்த்த சஜிதாவும், டிசனும் ஏமாந்தனர். எனவே, நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த பால் வர்கீசின் கழுத்தில் துண்டால் இருவரும் சேர்ந்து முறுக்கினர். அவர், இறந்து விட்டதை உறுதி செய்ய தலையணையால் முகத்தை அழுத்தினர். இதில் அவர் இறந்து விட்டார் என தெரிந்ததும், சந்தோஷத்தில் திளைத்த சுஜிதா, வீட்டு தோட்டத்திலிருந்து அன்னாசி பழத்தை பறித்து கள்ளக் காதலனுக்கு பரிசாக அளித்தார்.

அவரை அனுப்பி விட்டு, கணவர் இறந்து விட்டார் என உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்து அழுது புரண்டார். ஆனால், பால் வர்கீசின் கழுத்தில் இருந்த அடையாளங்களை வைத்து உறவினர்கள் அவர் இறக்கவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என சந்தேகித்தனர். போலீசார் பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனை அறிக்கையில், பால் வர்கீசின் கழுத்தில் ரத்தம் தடைப்பட்டுள்ளது தெரிந்தது. இதை அடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் சஜிதாவும், டிசனும் சேர்ந்து தான் கொலை செய்துள்ளது தெரிந்தது. விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட இருவரும் கைது செய்யப்பட்டனர்.

=====
கள்ளக் காமத்தில் ஈடுபடும் மனைவியை தண்டிக்க இந்திய சட்டத்தில் இடமில்லை என்ற விஷயம் பல பெண்களுக்குத் தெரியாத காரணத்தால் கணவன் கண்டித்ததும் அவசரப்பட்டு அவனை கொலை செய்து தங்களது இனிய காதல் வாழ்வை நாசமாக்கிக் கொள்கிறார்கள். பெண்ணுரிமை பேசுபவர்கள் இந்த சட்ட விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினால் பல “அப்பாவி அபலைப்” பெண்களின் வாழ்வு கொலைப் பழியிலிருந்து பாதுகாக்கப்படும்.

IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.



“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.