இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, September 04, 2011

மாமியார் என்பவர் யார்? - அறிவியல் பூர்வமான விளக்கம்

பொதுவாக மாமியார் என்பவர் ஏதோ மருமகளை கொடுமை செய்யும் ஒரு உறவுமுறையாகவே பல காலமாக ஒரு மூடப்பழக்கம் படித்த மற்றும் படிக்காத மக்களிடையே நிலவி வருகிறது. ஆனால் ஒருவர்கூட இதுவரை இந்த “மாமியார்” என்ற குடும்ப உறுப்பினரின் அறிவியல் பூர்வமான முக்கியத்துவத்தைப் பற்றி தெரிந்துகொண்டதில்லை.

பெண்ணுரிமை பேசும் பல “புத்திசாலிகளுக்குக்” கூட இந்த அறிவியல் பூர்வமான உண்மை தெரிந்திருக்க சற்றும் வாய்ப்பே கிடையாது. ஏனென்றால் உண்மையான குடும்ப வாழ்க்கை நெறிமுறைக்குப் போராடுபவர்களுக்கு மட்டுமே இந்த உண்மை தெரியும்.

மானுடவியல் (Anthropology), இந்தியக் கலாச்சாராம் மற்றும் பண்பாட்டியல் (Cultural Studies), மற்றும் மரபியல் (Genetics) ஆகிய மூன்று அறிவியல் சார்ந்த உண்மையின் அடிப்படையில் பார்ப்பவர்களுக்கு மட்டுமே “மாமியார்” என்ற உறவுமுறையின் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்துகொள்ள முடியும்.

பழமையான இந்திய குடும்ப அமைப்பு முறையில் பெண்ணுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அனைத்து கடவுளுக்கும் அதிபதியாக பெண் தெய்வத்தை வழிபாடு செய்யும் முறை இந்திய நாகரீகத்தில் இருந்திருக்கிறது. அதுபோலவே வயதில் மூத்த பெண்கள் குடும்பத் தலைவியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வீட்டிற்கு வெளியே நடக்கும் கடினமான உடலுழைப்பு வேலைகளை குடும்பத்தலைவன் செய்து குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை ஈட்டினான். அதற்குச் சமமாக குடும்பத்தலைவி வீட்டு நிர்வாகத்தையும் குழந்தைகளையும், குடும்ப பாரம்பரியத்தையும் (Heredity) பேணிக்காக்கும் உயரிய பொறுப்பில் இருந்தார்கள்.

அதனால் வீட்டிற்குள் நடக்கும் அனைத்து வித நிகழ்வுகளையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் குடும்பத்தலைவிக்கு இருந்தது. அதுபோலவே ஒரு குடும்பத்தில் எதிர்கால தலைமுறை எப்படி இருக்கவேண்டும் என்று நிர்ணயிக்கும் மிக முக்கியமான பொறுப்பை குடும்பத்தலைவிகளே கவனித்து வந்தார்கள்.

பொதுவாக குடும்பத்தின் தலைமுறையானது அந்தக் குடும்பத்தின் சந்ததிகள் எப்படி நலமாகவும் வளமாகவும் வாழ்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் அமைகிறது. இது திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண் இருவரின் மரபுக் காரணிகள், உடல் நலம், மன நலம், குடும்ப அமைப்பு இவற்றைப் பொறுத்துத்தான் அமைகிறது.

மேற்சொல்லப்பட்ட அனைத்து காரணிகளும் நல்லவிதத்தில் அமைந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை பெற்றோரைப்போன்ற உடல் நலன்களுடனும், குண நலன்களுடன் இருக்கும் . இது மரபியல் விதி.

அதனால் குடும்பத்தலைவியான தாய் தன் மகனுக்கு அமையும் மனைவி அனைத்துவிதத்திலும் நற்குணங்களும், பரம்பரையாக இருக்கும் மரபியல் வியாதிகள் இல்லாமலும், வலிமையும் பெற்றிருந்தால்தான் அவளது வயிற்றில் பிறக்கப்போகும் எதிர்கால சந்ததி குடும்பத்தலைவியின் குடும்பதலைமுறை அழியாமல் இருக்க உதவும் என்ற இயற்கையான சுயநலம் கலந்த பொறுப்பு இருந்தது.

அதனால்தான் குடும்பத்தலைவி எனப்படும் மாமியார் தனது குடும்ப பாரம்பரியத்தின் வாரிசுகளை பெறப்போகும் மருமகளை தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடனுடம் பலவித தேர்வுமுறைகளுப் பின்புதான் தேர்வுசெய்து வந்தார்கள். இது இயற்கை பெண்களுக்குக் கொடுத்துள்ள உள்ளுணர்வு (Natural Innate Behavior). இது ஒவ்வொரு தாய்க்கும் இருக்கும் மாற்றமுடியாத உணர்வு.

இதைத்தான் பின்னாளில் மாமியார் தனது மகனுக்கு பெண் பார்க்கும்போது அடுக்கடுக்காக பல கேள்விகளை கேட்கிறார், நடக்கச் சொல்லி பார்க்கிறார் என்று இதனை ஏதோ ஒரு கொடுமையான செயலாக சித்தரிக்க ஆரம்பித்தது ஒரு கூட்டம்.

ஒரே பெண்ணுடன் வாழ்வது என்பது ஆணினத்தின் இயற்கையான குணம் கிடையாது. இயற்கை அப்படிப் படைக்கவும் இல்லை. அதனால் நாகரீக வளர்ச்சிக்கு முன் ஆண்கள் பல பெண்களை நாடும் நிலை இருந்தது. இந்த இயற்கை குணத்தை தடுத்து தனது குடும்பத்திற்கு வந்த எல்லா நலன்களுடனும் இருக்கும் மருமகளை விட்டு மகன் வேறு ஒரு பெண்ணை நாடி அவளுக்குப் பிறக்கும் குழந்தை தனது குடும்பப் பாரம்பரியத்தில் கலந்துவிடக்கூடாது என்ற உயரிய நோக்கில் இருந்த குடும்பத்தலைவி (மாமியார்) மருமகளும் மகனும் தாங்கள் எப்போது ஒருவரை ஒருவர் தனிமையில் சந்திப்போம் என்று இருவருக்கும் ஒரு ஈர்ப்பு ஏற்படும்படியான ஒரு சூழலை கூட்டுக்குடும்பம் என்ற முறையின் மூலம் வைத்திருந்தார்கள்.

பெண்கள் பணி செய்யும் இடம் தனியாகவும், ஆண்கள் பணி செய்யும் இடம் தனியாகவும் இருந்தது. குடும்பத்திற்கு வரும் இளைய பெண்கள் (மருமகள்கள்) எப்போதும் குடும்பத்தலைவியின் கண்காணிப்பில் பணிபுரியும் சூழ்நிலை உருவாக்கப்பட்டிருந்தது. அதனால் மருமகளுக்கு தனது கணவனை எப்போது தனிமையில் சந்திப்போம் என்ற எண்ணமும், மகனுக்கு தன் மனைவியை எப்போது சந்திப்போம் என்ற ஒரு ஈர்ப்புணர்வுடனும் வாழ்ந்து வந்தார்கள். அதனால்தான் அந்தக்காலத்தில் விவாகரத்து என்ற வார்த்தையே திருமண உறவில் இல்லை. இந்தப் பெருமை முழுதும் குடும்பத்தலைவியாக இருந்த மாமியாரையே சாரும்.

அதுபோலவே மகனுக்கும், மருமகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் தனது குடும்ப பாரம்பரியத்தை காக்கும் வாரிசுகளைப் பெற்ற மருமகளை குடும்பத்திலிருந்து வெளியேற்றவேண்டும் என்ற எந்த ஒரு தவறான எண்ணமும் இல்லாமல் அந்த கருத்து வேறுபாடுகளை குடும்பத்தலைவியான மாமியார் தகுந்த ஆலோசனை மூலம் சீர்படுத்தி வந்தார்.

கால மாற்றங்களில் பெண் விடுதலை என்ற பெயரில் புகுந்த போலியான கூட்டம் மாமியார்களின் இந்த அறிவியல் பூர்வமான குடும்ப பாதுகாப்பு முறையை மாமியார் கொடுமை என்று வர்ணம் பூசி தனிக்குடித்தனத்திற்கு வழிகோலினார்கள். கடைசியில் கூட்டுக் குடும்பத்தைவிட்டு வந்த இளம்மருமகளுக்கும், மகனுக்கும் மாமியார் என்ற மூத்த குடும்பத்தலைவியின் கண்காணிப்பு இல்லாமல் போனதால் கணவன்- மனைவி என்ற ஈர்ப்புணர்வு குறைந்து கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. அன்று முதல் இன்றுவரை நடந்துகொண்டிருப்பது விவாகரத்துக்கள் மட்டுமே.

மாமியாரின் அறிவியல் பூர்வமான அணுகுமுறையை அழித்துவிட்ட குள்ள நரிக்கூட்டங்கள் மூத்த குடும்பத்தலைவியின் கண்காணிப்பில்லாமல் தனிமையில் வாழும் அனுபவமற்ற இளம் தம்பதிகளினூடே புகுந்து பெண்ணுரிமை, மாமியார் கொடுமை, வரதட்சணைக் கொடுமை, விவாகரத்து என்ற பெயர்களில் குடும்ப அழிப்பு தந்திரங்களைக் காட்டி இந்தியக் குடும்பங்களை சிதைத்து வருகின்றன. இன்னும் சொல்லப்போனால் இன்று பல குடும்பங்களில் அதன் தலைமுறைகள் வலுவிழந்து நசிந்துகொண்டிருக்கின்றன.

கடைசியில் இப்போது அரசாங்கமும் இந்த குடும்ப அழிப்பு முறையில் பங்குகொண்டு அறிவியல் பூர்வமாக குடும்பங்களைப் பேணிக்காத்த பெருமைமிகு குடும்பத்தலைவிகளாக இருந்த மாமியார்களை துன்புறுத்தி குடும்பங்களை அழிக்க பல சட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. இதுபோன்ற மாமியார்கள் தங்களது நலனை பாதுகாக்க யாரும் இல்லையே என்று மனக்குமுறல்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதனை பின்வரும் பெண்கள் மலர் சிறப்புக் கட்டுரையில் பாருங்கள்.

Click and Read





1 comment:

Sivakumar Chennai said...

Very good informative article

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.