இந்தியாவில் பெண்கள் நல்வாழ்வுத்துறை என்று ஒரு அமைச்சகமும் அதற்கு ஒரு அமைச்சரும் இருக்கிறார். அவர்கள் என்ன வேலை செய்கிறார்களென்று ஒரே மர்மமாக இருக்கிறது!
முன்பு அமைச்சராக இருந்தவர் இந்தியப் பெண்களுக்கு பார்களில் "குடியுரிமை" வாங்கித்தருவது தான் அமைச்சகத்தின் முழு வேலை என்று சொல்லும் அளவிற்கு முழு மூச்சுடன் களத்தில் இறங்கி வேலைசெய்தார்
(Pub bharo' to beat moral police: Renuka Choudhary).இப்போது இருக்கும் அமைச்சர் பாகிஸ்தான் நாட்டுத் தளபதியை பெருமைபடுத்தியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் பெண்களே கிடையாது என்று சொல்லி அமெரிக்க நாட்டுப் பெண்ணை இந்தியப்பெண்ணாக உருவகம் செய்து பெண்கள் இல்லாத இந்தியாவை கற்பனை கூட செய்யமுடியாது என்று சொல்லி விளம்பரம் செய்திருக்கிறார்.
a photograph of Sunita L Williams, Born in Euclid, Ohio, is a US citizen and a naval officer, next to that of Lok Sabha speaker Meira Kumar, singer Lata Mangeshkar. It asked “Can you imagine India without women”.
இந்த பெண்கள் துறை அமைச்சர்கள் இந்தியப் பெண்களுக்கு என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை!
19 வருடங்களாக ஒரு இந்திய சிறுமியின் குடும்பம் நீதிகேட்டுப் போராடி சீரழிந்து கொண்டிருக்கிறது. ஆனால் இவர்கள் இதுபோன்ற இந்தியப் பெண்களுக்கு உதவி செய்யாமல் வெளிநாட்டவரைப் போற்றிப் புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நாட்டில் நடப்பதெல்லாம் விசித்திரமாக இருக்கிறது!
வெளிநாட்டுக்காரர்களுக்கு சலாம் அடித்து இந்த போஸ்டர் அடித்த செலவில் பல ஏழைக்குழந்தைகளுக்கு கல்வியுதவி செய்திருக்கலாம். பல ஏழைப்பெண்களுக்கு திருமண உதவி செய்திருக்கலாம்.
பாக். மாஜி விமானப்படைத் தளபதியை இந்திய ஹீரோவாக்கிய பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம்!டெல்லி: இந்திய அரசு வெளியிட்ட முழு பக்க பத்திரிகை விளம்பரத்தில், 'இந்திய ஹீரோ'க்களின் மத்தியில் பாகிஸ்தான் விமானப்படையின் முன்னாள் தளபதியின் படமும் இடம்பெற்றது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை ஒட்டி, மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஆங்கில பத்திரிகைகளில் முழுபக்க கலர் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்க முத்திரையுடன் வெளியிடப்பட்ட இந்த விளம்பரத்தில் பெண் சிசுக்கொலை தடுப்பு பற்றிய வாசகங்களுடன், கபில்தேவ், ஷேவாக், அம்ஜத் அலிகான், சோனியா, மன்மோகன்சிங் போன்றவர்களின் படம் இடம் பெற்றுள்ளது.
இவற்றின் கூடவே, பளிச்சென்று பாகிஸ்தானின் முன்னாள் விமானப்படை தளபதி தண்வீர் அகமதுவின் படமும் இடம்பெற்றுள்ளது.
'தாய் என்ற பெண் இல்லை என்றால் இதுபோன்ற தேசிய ஹீரோக்கள் சாத்தியமா' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ள இந்த விளம்பரத்தில் இந்திய சாதனையாளர்களுக்கு இணையாக பாகிஸ்தான் விமானப்படைத் தளபதியையும் சேர்த்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
A rush job to publicise the National Girl Child Week beginning Sunday went horribly wrong when half-page advertisements put out by the government placed a former Pakistani Air Force chief’s photograph alongside Prime Minister Manmohan Singh’s.
“We regret the inclusion of a foreign national’s photograph in a Government of India advertisement,” a statement by the Prime Minister’s Media Adviser Harish Khare said.Singh’s office apologised for the faux pas and ordered an inquiry to find out how former chief of the Pakistani Air Force Tanvir Mahmood Ahmed’s photograph was included in an advertisement issued by the Ministry of Women and Child Development (WCD).
Krishna Tirath, WCD minister of state, initially accused the media of hair-splitting, insisting that the image wasn’t important, the message was.
The Bharatiya Janata Party (BJP) was quick to react. Party spokesman Rajiv Pratap Rudy said the goof-up was “in consonance with the thought process of the Congress party”.
“We regret the inclusion of a foreign national’s photograph in a Government of India advertisement,” a statement by the Prime Minister’s Media Adviser Harish Khare said.
“While an internal inquiry has been instituted, the PMO apologises to the public for this lapse,” it said.
Initial inquiries revealed that the WCD ministry had woken up to the need to issue the advertisements to commemorate the girl child week rather late and signed a contract for four half-page advertisements with a private agency attached with a national daily for the material on Friday.
Overnight, the agency prepared the four advertisements. The one that attracted the maximum attention had national heroes such as Kapil Dev, Virender Sehwag and Amjad Ali Khan along with the Pakistani air force officer; their photographs downloaded from the Internet. But that wasn’t the only ad with a bloomer.
Another carried a photograph of Sunita L Williams, the Indian-origin Nasa astronaut next to that of Lok Sabha speaker Meira Kumar, singer Lata Mangeshkar. It asked “Can you imagine India without women”. Born in Euclid, Ohio, Williams is a US citizen and a naval officer.
=======================
“Can you imagine India without women”
பெண்கள் இல்லாத இந்தியாவை கற்பனை செய்யமுடியுமா? என்று பெண்கள் நலத்துறை அமைச்சகம் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக கீழுள்ள இந்த செய்தி செய்தித்தாளில் வந்துள்ளது!
நாட்டில் பெண்கள் இதுபோன்ற வேலைபார்த்துக்கொண்டிருந்தால் பிறகு ஏழைக்குடும்பங்களில் பிறக்கும் பெண் குழந்தைகளை பெற்றவர்கள் என்ன செய்வார்கள்? இது நடந்திருப்பதும் மதுரை பக்கம் தான்! பெண்கள் இல்லாத இந்தியாவில் பிறகு ஏழைப் பெண்ணுக்குத் திருமண உதவி வழங்கும் இதுபோன்ற வேலைகளை யார் செய்யமுடியும்?
மதுரை : மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில், தமிழக அரசின் திருமண நிதி உதவித் தொகை வழங்க, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, இரண்டு பெண் ஊழியர்களிடம், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்கின்றனர். மதுரை ஆத்திகுளத்தை சேர்ந்தவர் ராஜேஷ். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சண்முகப்பிரியா. ராஜேஷ் திருமண நிதி உதவி கோரி, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ரேவதியிடம் (57) விண்ணப்பித்தார். ரேவதி 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். பேரம் பேசி 1,000 ரூபாய் தர ராஜேஷ் சம்மதித்தார். அவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.
நேற்று மாலை 4 மணிக்கு, ரசாயனக் கலவை தடவிய 1,000 ரூபாயை, ரேவதியிடம் ராஜேஷ் கொடுத்தார். மறைந்திருந்த இன்ஸ்பெக்டர்கள் தமிழ்ச்செல்வன், மணிமாறன் ஆகியோர், ரேவதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஊர்நல அலுவலர் பழனியம்மாளை (52) கையும், களவுமாக பிடித்தனர். அவர்களிடம், கணக்கில் வராத 4,700 ரூபாயை பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்கு பின், துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.