சம்பாதிக்கும் மனைவிக்கு எதற்கு ஜீவனாம்சம்?
மே 13,2009
புதுடில்லி:"சம்பாதிக்க திறமையுள்ள விவாகரத்தான மனைவிக்கு, ஜீவனாம்ச தொகையை கணவன் அளிக்க தேவையில்லை' என, டில்லி கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.டில்லி மாவட்ட கூடுதல் கோர்ட் ஒன்றில், ஜீவானாம்சம் வழங்குவது குறித்த வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. சுயதேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு வருமானம் இல்லை. அதனால் விவாகரத்து பெற்ற மனைவிக்கு ஜீவனாம்சம் அளிப்பதை ரத்து செய்யக் கோரி கணவன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கில் மாவட்ட துணை நீதிபதி துவாரகா ராஜேந்திர குமார் சாஸ்திரி அளித்த தீர்ப்பில் கூறியதாவது:சம்பாதிக்கும் திறனுள்ள கணவன் தன்னையும் காப்பாற்றி, குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறப்படுகிறதோ அது பெண்களுக்கும் பொருந்தும். இந்து திருமண சட்டம் பிரிவு 24 ன்படி, சம்பாதிக்க இயலாத கணவனோ, மனைவியோ ஜீவனாம்சம் பெறலாம்.சம்பாதிக்க திறனுள்ள மனைவி விவாகரத்து பெறும் போது, தனது தேவைகளையே நிறைவேற்றி கொள்ள இயலாத கணவனிடம் ஜீவனாம்சம் அளிக்கும்படி, தொந்தரவு செய்வது சரியான அணுகுமுறை அல்ல.இவ்வாறு கோர்ட் தீர்ப்பளித்தது.
திருக்கோவிலூர் மணிவண்ணன் எடுத்த சரியான திருமண முடிவு, உங்களால் முடியுமா?
-
[image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா?]இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான
சட்டங்களால் தினமும் இலட்சக் கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல
அப்பாவி க...
10 years ago
No comments:
Post a Comment