சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, May 05, 2009

பெண்கள் என்ன ஆண்களின் அடிமைகளா?

பல காலமாக நீதிமன்றங்களில் மணமுறிவு பெறும் பெண்களுக்கு "அலிமோனி" எனப்படும் மணமுறிவு உதவித்தொகை கணவர்களிடமிருந்து பெற்றுத்தரப்படுகிறது. படிக்காத கல்வியறிவில்லாத வாழ வழியே தெரியாத பெண்ணாக இருந்தாலும் சரி அல்லது நன்கு படித்து நல்ல பணியில் நன்றhக சம்பாதிக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி கண்மூடிக்கொண்டு நீதிமன்றங்கள் இந்த உதவித்தொகையை கணவனிடமிருந்து பெற்றுத்தருகின்றன.

தன்னம்பிக்கையுடன் சுயமாக நின்று கைநிறைய சம்பாதிக்கும் திறமையான பெண்ணுக்கு கணவனிடமிருந்து மாத உதவித்தொகை பெற்றுத்தருவது பெண்ணினத்தையே அவமானப்படுத்துவதற்கு சமமாகும். இது பாரதி காண நினைத்த புதுமைப்பெண்ணினத்திற்கு ஒரு பெரிய அவமானம். பெண்கள் எந்தக்காலத்திலும் ஆண்களின் அடிமையாக, பணத்திற்கு அவனை எதிர்பார்த்திருக்கும் முதுகெலும்பற்ற ஊமைகளாகத்தான் வாழவேண்டுமா? பெண்களுக்கு என்று தான் நீதி கிடைக்குமோ?

பெண்ணுரிமை காக்க எத்தனை சட்டங்கள் வந்தாலும் சரி அதன் பின்னனியில் பெண்கள் என்றுமே அவமானப்படுத்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறhர்கள். சுயமாக சொந்தக்காலில் வாழும் தகுதியுடைய பெண்கள் மணமுறிவில் கணவனிடமிருந்து மாத உதவித்தொகை பெறுவது அந்தப்பெண் வழக்கில் வெற்றி பெற்றதாக நினைத்து சந்தோஷப்படவேண்டிய விஷயமல்ல, அது பெண்ணடிமைத்தனத்தின் அவமானச்சின்னம்.

படித்து வாழ்க்கையில் நிதிநிலைமையில் நன்றhக இருக்கும் பெண்களுக்கு மணமுறிவு உதவித்தொகை கொடுப்பதென்பது இன்றைய 22ம் நுற்றhண்டிலும் சமுதாயத்தில் பெண்களின் இழிநிலையை காட்டும் அளவுகோலாகும். எதற்காக பெண்கள் இப்படி இழிவுபடுத்தப்படுகிறhர்கள் என்பது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. இந்த அப்பாவி பெண்களை இந்த இழிநிலையிலிருந்து மீட்பது யாரோ? அது எந்தக் காலமோ?
பெண்களைக் காப்போம்! பெண்கள் நாட்டின் கண்கள்!!

*******************************************************************************
தினமலர் செய்தி
மே 06,2009

மும்பை : தொழில் பயிற்சி பெற்ற பெண்கள் விவாகரத்து பெற்ற பிறகு கணவரிடமிருந்து நிரந்தரமாக ஜீவனாம்சத்தை எதிர் பார்க்கக் கூடாது, என மும்பை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மும்பையில் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரியும், விமானப்பணி பெண்ணும் கடந்த 95ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

ஒன்றரை ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்த இவர்கள், சில காரணங்களால் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். கடந்த 97ம் ஆண்டு விவாகரத்து கோரி மனு செய்யப்பட்டது. மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பாதிக்கும் கணவரிடமிருந்து மாதம் 20 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்ச தொகையை பெற்று தரும் படி அந்த பெண் கோரினார். இதை எதிர்த்து கணவர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. "பேஷன் டிசைன் படிப்பில் டிப்ளமோ வாங்கியுள்ள அந்த பெண்ணுக்கு கை நிறைய சம்பளத்தில், நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன.எனவே, அவருக்கு காலம் முழுக்க ஜீவனாம்சத்தை தர முடியாது' என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள், தொழில் கல்வி படித்த நீங்கள் உங்கள் சொந்த காலில் நிற்க முயற்சி செய்ய வேண்டும். கணவரிடமிருந்து நீண்ட காலத்துக்கு ஜீவனாம்சத்தை நம்பியிருக்கக்கூடாது என அறிவுறுத்தினர்.

மாதம் 20 ஆயிரம் ரூபாயோ அல்லது மொத்தமாக 20 லட்சம் ரூபாயோ கொடுக்கும் படி சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.