'டிவி'பார்க்காதே என திட்டிய மாமியாரை கொலை செய்த மருமகள் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே "டிவி' பார்க்கும் தகராறில் தன்னை திட்டிய மாமியாரை, கட்டையால் அடித்துக் கொலை செய்த மருமகளும், கொலையை மறைத்த மகனும் கைதுசெய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த குப்பனாபுரம் கூலித்தொழிலாளி உடையார்(38), அவரது மனைவி பொன்னுத்தாய்(33), இரு குழந்தைகள் உள்ளனர். பொன்னுத்தாய் "டிவி'நிகழ்ச்சிகளை விரும்பி பார்ப்பார்.அதுதொடர்பாக அவருக்கும் மாமியார் ஆறுமுகத்தாயிக்கும் (55) அடிக்கடி தகராறு ஏற்படும்.
மாலை வழக்கம்போல் பொன்னுத்தாய் "டிவி' பார்த்துக்கொண்டிருந்தார். எரிச்சலடைந்த ஆறுமுகத்தாய், ""வீட்டுவேலைகளை பார்க்காமல் "டிவி' மட்டும் பார்த்தால் எப்படி' 'என கேட்டுள்ளார். அதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பொன்னுத்தாய், அங்கிருந்த கட்டையால் மாமியார் ஆறுமுகத்தாயின் பின் தலையில் ஓங்கி அடித்தார். அதில் காயமடைந்த ஆறுமுகத்தாய் இறந்துபோனார். மாமியாரை கொலை செய்த மருமகள் பொன்னுத் தாய், அவர் இறந்ததை போலீசுக்கு தெரியாமல் மறைக்க முயன்ற ஆறுமுகத்தாயின் மகன் உடையாரை கடம்பூர் போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலூர் மணிவண்ணன் எடுத்த சரியான திருமண முடிவு, உங்களால் முடியுமா?
-
[image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா?]இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான
சட்டங்களால் தினமும் இலட்சக் கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல
அப்பாவி க...
10 years ago