இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, June 14, 2014

அப்பாவிக் குடும்பங்களை சூறையாடும் அசுரர்கள்

பெண்களை பாதுகாக்க பல சட்டங்களை அரசாங்கம் இயற்றினாலும் அந்த சட்டங்களைப் பயன்படுத்தி அப்பாவிக்குடும்பங்களை சிதைத்து பணம் பறித்து பிழைப்பு நடத்துவதில் காவல்துறையும் நீதித்துறையும் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுகின்றன என்று அனைவருக்கும் தெரியும் இதை தேசிய மகளிர் ஆணையமும்  உறுதி செய்திருக்கிறது 
National Commission for Women (NCW) chairperson Girija Vyas said that it was lack of awareness that led to false cases under 498A. "I would not like to use the term misuse. There is lack of awareness amongst people that is exploited by lawyers and police. '' Vyas said. (The Times of India, 1Feb 2009)

அதற்கு சான்றாக வந்துள்ள இன்றைய செய்தி.  குடும்பப் பிரச்சனையில் சிக்குவது ஆணாக இருந்தால் பணத்தைக் கறந்துவிடுவார்கள்.  பெண்ணாக இருந்தால் கற்பை சூறையாடிவிடுவார்கள்.  மொத்தத்தில் குடும்பங்களை சிதைத்து குளிர்காய்வதுதான் இவர்களது பிழைப்பு.  குடும்பப் பிரச்சனைகளை கையாள்வது பற்றி சென்னை உயர்நீதிமன்றம் 2008ல் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  ஆனாலும் அந்த சுற்றறிக்கை காவல்துறையின் கழிவறையில்தான் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
ஜூன் 14,2014 தினமலர்
பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், குன்னம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோஸ்வா, 34, இவரது மனைவி சாந்தி, 31. இவர்களுக்கிடையில், அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த, 3ம் தேதி, குன்னம் போலீசில், ஜோஸ்வா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சாந்தி புகார் கொடுத்தார்.
குன்னம் போலீஸ் எஸ்.எஸ்.ஐ., ராஜேந்திரன், ஜோஸ்வாவை ஸ்டேஷனுக்கு வரவழைத்து, புகாரின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க, 3,000 ரூபாய் தர வேண்டும் என கேட்டார். இதுகுறித்து ஜோஸ்வா, அரியலுார் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார். நேற்று மாலை, 5:30 மணியளவில், குன்னம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற ஜோஸ்வா, எஸ்.எஸ்.ஐ., ராஜேந்திரனிடம், ரசாயனம் தடவிய, 3,000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அவரை கைது செய்தனர்.



ஐதராபாத் :வரதட்சணைக் கொடுமை வழக்கில் உதவி கேட்டு வந்த பெண்ணுடன், மணிக்கணக்கில் போனில் பேசிய போலீஸ் அதிகாரி குறித்து விசாரணை நடத்த, அதிகாரிகளுக்கு ஆந்திர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திரா, குண்டூரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரின் மனைவி கோபி பிரியா; இன்ஜினியர். இவர்களுக்கு, 2009ல் திருமணம் நடந்தது. கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விவாகரத்து கோரி, குடும்ப நல கோர்ட்டில் கார்த்திக் மனு தாக்கல் செய்தார். இதற்குப் போட்டியாக, தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, கார்த்திக் மற்றும் அவரின் பெற்றோருக்கு எதிராக, கோபி பிரியா புகார் கொடுத்தார்.அப்போது, குண்டூர் ஊரக எஸ்.பி.,யான ஷியாம் சுந்தரிடம், இந்த விஷயத்தில் உதவும்படி கேட்டுக் கொண்டார்.

புகாரை விசாரிப்பதாக உறுதி அளித்த சுந்தர், கோபி பிரியாவுடன் அடிக்கடி தொலைபேசி மற்றும் மொபைல்போனில் பேசி வந்தார். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கார்த்திக், தனியார் துப்பறியும் நிறுவனத்தின் உதவியை நாடி, போலீஸ் அதிகாரியுடன் எத்தனை மணி நேரம் கோபி பிரியா பேசியுள்ளார் என்ற விவரங்களை பெற்றுத் தரும்படி கேட்டுக் கொண்டார்.

அதிர்ச்சி பட்டியல்:
துப்பறியும் நிறுவனமும், அவர் கேட்ட தகவலை திரட்டித் தந்தது. அதில், ஒவ்வொரு முறை போன் செய்யும் போதும், குறைந்தபட்சம் முப்பது நிமிடங்கள் கோபி பிரியாவுடன், போலீஸ் அதிகாரி ஷியாம் சுந்தர் பேசியுள்ளது தெரியவந்தது.இவ்வாறு, 80 நாட்களுக்கும் மேலாக, 166 முறை ஷியாம் சுந்தர், கோபி பிரியாவுடன் பேசியுள்ளார். நள்ளிரவு, அதிகாலை என, நினைத்த நேரத்தில் இருவரும் பேசி வந்துள்ளனர். கடந்த ஜனவரி 1 மற்றும் மார்ச் 20ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், இப்படி பேசியுள்ளனர்.தன் வீட்டிலிருந்து, 53 முறையும், தன் மொபைல்போனிலிருந்து 61 முறையும், தன் அலுவலகத்திலிருந்து 26 முறையும், தனது முகாம் அலுவலகத்திலிருந்து 26 முறையும், ஷியாம் சுந்தர் போனில் பேசியுள்ளார். அதேபோல், கோபி பிரியாவும், தன் பங்கிற்கு, 226 முறை போலீஸ் அதிகாரியை அழைத்து பேசியுள்ளார். இருவரும், 1,944 குறுஞ்செய்திகளை பரிமாறிக் கொண்டுள்ளனர்.

விசாரணைக்கு உத்தரவு: இந்த அதிர்ச்சி தரும் பட்டியலை, தன் வழக்கறிஞர் மூலம் ஆந்திர ஐகோர்ட்டில் தாக்கல் செய்த கார்த்திக், போலீஸ் அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.மேலும், இந்த வழக்கில் மட்டும், போலீஸ் ஐ.பி.எஸ்., அதிகாரி தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தியது ஏன் என்றும், அவரது வழக்கறிஞர் புரு÷ஷாத்தமன் கேள்வி எழுப்பினார்.இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட ஆந்திர ஐகோர்ட் நீதிபதி சுபாஷ் ரெட்டி, அடுத்தவர் மனைவியுடன் மணிக்கணக்கில் போனில் பேசிய போலீஸ் அதிகாரி ஷியாம் சுந்தர் குறித்து விசாரிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 


முதியோர்களை கொடுமை செய்வதில் முன்னணி வகிக்கும் மருமகள்கள்

பெண்ணுரிமை என்ற பெயரில் கூட்டுக் குடும்பங்களை ஒழித்துவிட்டு வயதான பெற்றோர்களை நடுத்தெருவில் நிற்கவைத்துவிட்டு முதியோர் இல்ல விளம்பரங்களை பார்த்து மகிழ்ந்துகொண்டிருக்கும் இந்த சமுதாயம் சிறுவர்களும், சிறுமிகளும் சீரழிந்து இளம்வயதிலேயே பாலியல், கொலை குற்றங்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை காணத் தவறிவிட்டார்கள்.

மூத்தவர்கள் இல்லாத குடும்பங்களில் வளரும் குழந்தைகள் தறிகெட்டு திரிவதை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். இப்படி முதியவர்கள் குடும்பங்களில் இல்லாமல் நடுத் தெருவிற்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது குடும்ப விளக்காக வரும் மருமகள்கள் என்பது மிகவும் அதிர்ச்சியான உண்மை.

பெண்ணுரிமை என்ற பெயரில் அரசாங்கம் கொடுத்திருக்கும் பல தவறான சட்டங்களை பல மருமகள்கள் பலவித விஷயங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள்.  வீட்டில் இருக்கும் கணவனின் பெற்றோரை விரட்டவும் இந்த சட்டங்கள் (வரதட்சணை தடுப்புச் சட்டம், IPC498A) பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  பின்வரும் விஷயங்களுக்குத்தான் வரதட்சணை சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

1. தனிக்குடித்தனம் போகவேண்டும்
2. மாமியார் மாமனாரை வீட்டை விட்டு விரட்டவேண்டும்
3. கணவரின் வயதான பெற்றோருக்கு பணம் தருவதை நிறுத்தவேண்டும்
4. உங்கள் வீட்டிற்கு பணம் அனுப்ப வேண்டும்
5. கணவரின் தம்பி தங்கைகளுக்கு செய்யும் உதவியை நிறுத்த வேண்டும்
6. உங்களின் ஆடம்பர வாழ்க்கையில் கணவர் குறுக்கிடுவதை தடுக்கவேண்டும்
7. மருமகள் விரும்பிய ஆண் நண்பர்களுடன் பேசுவதை கணவர் தெரிந்து கொண்டார் அல்லது அதை தடுக்க முயல்கிறார்.

இதற்கு சான்றாக பின்வரும் செய்திகள் உள்ளன.


ஜூன் 14,2014  தினமலர்
சென்னை:''சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள், மீண்டும் கூட்டுக் குடும்ப முறைக்கு மாறுவதே, எதிர்கால சமுதாயம் சிறக்க நல்ல வழி,'' என, முதியோர் வன்கொடுமை எதிர்ப்பு நாளில், மூத்த குடிமக்கள் சங்க பொதுச்செயலர், சுப்புராஜ் தெரிவித்தார்.முதியோருக்கு எதிரான வன்கொடுமைகள் எதிர்ப்பு தினமான, ஜூன் 15ம் நாளை ஒட்டி, 'ஹெல்ப்ஏஜ் இந்தியா' சார்பில், சென்னையில், விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. போலீஸ் இணை கமிஷனர் சங்கர், ஆய்வு நுாலை வெளியிட, மாவட்ட சமூகநல அலுவலர், ரேவதி பெற்றுக் கொண்டார்.

இந்திய மூத்த குடிமக்கள் சங்கங்களின், தேசிய கூட்டமைப்பு பொதுச் செயலர் சுப்புராஜ் பேசியதாவது: கூட்டுக் குடும்ப நிலை மாறியதால், முதியோர் புறக்கணிப்பு நடக்கிறது. பெற்ற குழந்தைகளே கைவிட்டு விட்டனரே என்ற வருத்தம், நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சராசரி வாழ்க்கை வயதும், 65க்கு கீழ் குறைந்து விட்டது. கணவன், மனைவி இருவரும் சம்பாதித்தால் தான், குடும்பம் நடத்த முடியும்; குழந்தைகளை கவனிக்க ஆட்கள் இல்லை. ஐந்து வயது வரை, குழந்தைகளுக்கு நல்ல கதைகள், பாரம்பரியத்தை சொல்லித் தந்து, அன்பும், ஆதரவும் காட்ட, முதியோர் அவசியம்.அதற்கு, மீண்டும் கூட்டுக் குடும்ப நிலை உருவாக வேண்டும். சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள், கூட்டுக் குடும்பங்களாக வாழ தங்களை மாற்றிக் கொண்டால், எதிர்கால சமுதாயம் சிறப்பானதாக மாறும்.இவ்வாறு, அவர் பேசினார்.

கொடுமையில் மிஞ்சும் மருமகள்?முதியோர் வன்கொடுமை ஆய்வு குறித்து, 'ஹெல்ப் ஏஜ் இந்தியா' அமைப்பின், இணை இயக்குனர் சிவகுமார் கூறியதாவது:
நாடு முழுவதும், 23 சதவீதமாக இருந்த முதியோருக்கு எதிரான கொடுமைகள், தற்போது, 50 சதவீதமாக அதிகரித்து விட்டது.டில்லியில், 22 சதவீதம் என, குறைவாகவும், பெங்களூருவில், 75 சதவீதம் என, அதிகமாகவும் கொடுமைகள் நடக்கின்றன. சென்னையில், 53 சதவீதமாக உள்ளது.
சென்னையில், மருமகளால், 37 சதவீதமும், மகன்களால், 56 சதவீதமும் கொடுமைகள் நடந்ததாக பதிவுகள் இருந்தன.
தற்போது, மகன்களைக் காட்டிலும், மருமகள்கள் மிஞ்சிவிட்டனர். மருமகள்களால் ஏற்படும் கொடுமை, 53 சதவீதமாக உயர்ந்ததோடு, மகன்களால் ஏற்படும் கொடுமைகள், 38 சதவீதமாக குறைந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

==============



செப்டம்பர் 07,2011 தினமலர் செய்தி



சிவகங்கை: குடும்ப பிரச்னையில் பெண்ணின் மாமனாரை மிரட்டியதாக தி.மு.க., ஒன்றிய செயலாளர் உட்பட 3 பேர் மீது சிவகங்கை மகளிர் போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்.

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சிங்காரவேலன். இவருக்கும், பட்டமங்கலத்தை சேர்ந்த கார்மேகம் மகள் மீனாட்சிக்கும் 2009ல் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின், தனிக்குடித்தனம் செல்ல தன் கணவரை மீனாட்சி வற்புறுத்தினார். அவர் வர சம்மதிக்கவில்லை. இதற்கிடையில், தனது மகனை மீனாட்சி துன்புறுத்துவதாக சென்னை குடும்ப நல கோர்ட்டில் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணை நடக்கிறது.

இதற்கிடையில் மீனாட்சி, திருப்புத்தூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தனது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக புகார் செய்தார். 

கடந்த மார்ச் 7 அன்று, திருப்புத்தூருக்கு ராமசாமி, அவரது மகன் விசாரணைக்கு வந்தனர். அங்கிருந்த சிவகங்கை தி.மு.க., ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், அவரது தம்பி இளங்கோவன், மீனாட்சியின் தாய் போதும்பொண்ணு ஆகியோர் மிரட்டி உள்ளனர். இது குறித்து ராமசாமி, மதுரை ஐகோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார். கோர்ட் உத்தரவுபடி, சிவகங்கை மகளிர் இன்ஸ்பெக்டர் குமாரி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிந்துள்ளார்.


“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.