ஜூலை 11,2013
மும்பை : திருமணமான போலீஸ்காரரை காதலித்து, அவரை, சட்டப்படி திருமணம் செய்ய அனுமதி கோரிய பெண்ணின் மனுவை, மும்பை ஐகோர்ட், தள்ளுபடி செய்தது.
மும்பையை சேர்ந்த பெண் மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு:பிரசாத் மர்தே என்ற போலீஸ்காரரை, பல ஆண்டுகளாக, உயிருக்கு உயிராக காதலிக்கிறேன். அவரை, கணவனாக பாவித்து, கனவு காண்கிறேன். முறைப்படி, அவரை திருமணம் செய்து, அவர் மனைவியாக வேண்டும் என, ஆசைப்படுகிறேன்.இதற்காக, 14 ஆண்டுகளாக காத்திருக்கிறேன். அவருக்கு, ஏற்கனவே திருமணமாகி, மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். எனவே, அவரை, திருமணம் செய்ய, சட்டப்பூர்வமாக அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில், அந்த பெண் கூறியிருந்தார்.
இந்த மனு, மும்பை ஐகோர்ட் தலைமை நீதிபதி, மொகித் ஷா மற்றும் நீதிபதி சாதனா ஜாதவ் ஆகியோர் அடங்கிய, "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:போலீஸ்காரர் பிரசாந்த் முர்தேவுக்கு, ஏற்கனவே திருமணமாகி விட்டது. அவருக்கு, இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அவர்களின் வாழ்க்கை, இனிமையாகவும், அமைதியாகவும் செல்கிறது.இந்த சூழ்நிலையில், உங்களின் மனுவை ஏற்றால், அது, அவர்களின் இனிமையான வாழ்க்கையை, சீர்குலைத்து விடும்.இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த பெண்ணின் மனுவை, தள்ளுபடி செய்தனர்.
No comments:
Post a Comment