பெண்கள் மற்றும் குழந்தைகளின் வழக்குகளுக்கு முன்னுரிமை தருவோம் என்று இந்தியத் தலைமை நீதிபதி கூறிவரும் நிலையில் சட்டம் படித்த பெண் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தங்களுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதாக தலைமைநீதிபதிக்கு கடிதம் அனுப்பியிருப்பது இந்திய நீதித்துறையின் பாதுகாப்பற்ற நிலையை காட்டுகிறது. சட்டம் படித்த பெண்களுக்கே இந்தநிலை என்றால் சாதாரண பெண்களின் நிலை எப்படி இருக்கும் இந்த நாட்டில்?
இதில் கவனிக்கப்படவேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் குடும்பப் பிரச்சனையை தீர்த்துக்கொள்ள நீதிமன்றத்திற்கு சென்றதால் பல ஆண்டுகளாக வழக்கை நடத்தாமல் நீட்டித்துக்கொண்டிருக்கும் நீதிமன்றத்தின் பிடியில் சிக்கியிருக்கும் கணவனும் மனைவியும் விரைவில் விடுபடவேண்டும் என்று சனி ஞாயிறு நாட்களில் வழக்கை நடத்தலாம் என்றால் அதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
குடும்பநல நீதிமன்றங்கள் கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள பிரச்சனையை தீர்த்துவைக்க முன்னுரிமை கொடுத்து ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் இன்று வழக்கறிஞர்கள் அதனையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். இது எங்கு போய் முடியுமோ?

ஐகோர்ட் நீதிபதி பணியிடங்களில்பெண்களுக்கு 33 சதவீதம் கோரிக்கை ஜூலை 22,2013 தினமலர்
சென்னை:ஐகோர்ட் நீதிபதிகள் பணியிடங்களில், பெண் வழக்கறிஞர்களுக்கு, 33
சதவீத ஒதுக்கீடு கோரி, புதிய தலைமை நீதிபதிக்கு, பெண் வழக்கறிஞர்கள்
சங்கம், கடிதம் அனுப்பியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்
புதிய தலைமை நீதிபதியாக, தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் பொறுப்பேற்று
உள்ளார். சென்னை ஐகோர்ட்டில், தற்போது, 17 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக
உள்ளன. ஏற்கனவே, நீதிபதிகள் பணியிடங்களுக்கு, 15 பேர் பரிந்துரைக்கப்பட்டு,
சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.இந்நிலையில், புதிய தலைமை
நீதிபதிக்கு, சென்னையில் உள்ள, பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவி
பிரசன்னா, துணைத் தலைவி நளினி, செயலர் மஞ்சுளா தேவி ஆகியோர் அனுப்பியுள்ள
கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஐகோர்ட் நீதிபதிகள்
பணியிடங்களை நிரப்பும்போது, பெண்களுக்கான, 33 சதவீத ஒதுக்கீட்டை பின்பற்ற
வேண்டும். தற்போது ஐகோர்ட்டில், பெண் நீதிபதிகள், ஏழு பேர் உள்ளனர்.
இவர்களில், இரண்டு பேர், வழக்கறிஞராக இருந்து, ஐகோர்ட் நீதிபதியாக
நியமிக்கப்பட்டவர்கள். மீதி, ஐந்து பேர், கீழமை கோர்ட்டுகளில் இருந்து,
பதவி உயர்வு மூலம், ஐகோர்ட் நீதிபதியாக ஆனவர்கள். நீதிபதிகள் பணியிடங்கள்,
வழக்கறிஞர்கள் மத்தியில் இருந்து, 60 சதவீதம், நீதித் துறையில் இருந்து, 40
சதவீதம் (கீழமை கோர்ட்டுகளில் நீதிபதிகளாக பணியாற்றுவோர்) என்கிற
அடிப்படையில் நிரப்பப்படுகிறது.
எனவே,
நீதிபதிகள் பணியிடங்களில், பெண் வழக்கறிஞர்களுக்கு, 33 சதவீத அடிப்படையில்
நிரப்ப வேண்டும். சனி, ஞாயிறு கிழமைகளில் செயல்படும், விடுமுறை கால குடும்ப
நல கோர்ட்டுகளுக்கு, எதிர்ப்பு தெரிவிக்கிறோம். அன்றைய நாட்களில்,
கட்சிக்காரர்களை சந்திக்க முடியும்.மேலும், விடுமுறை நாட்களில்
கோர்ட்டுக்கு வருவதில், பாதுகாப்புப் பிரச்னையும் அடங்கிஉள்ளது. எனவே,
விடுமுறை நாட்களுக்குப் பதில், கூடுதலாக, குடும்ப நல கோர்ட்டுகளை திறக்க
வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.