இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, March 16, 2013

இந்த கொலைக்குக் காரணம் மதுவா, மனைவியா, கணவனா?

கள்ளுண்ணாமையை உலகிற்கு அழகிய தமிழில் கொடுத்த திருவள்ளுவரின் தமிழ்நாட்டில் இதுபோன்று குடும்பங்களில் நடக்கும் கொலைக்குக் காரணம் மதுவா, மனைவியா, கணவனா? இந்த சமூகக் குற்றங்களுக்கு  பொறுப்பேற்கப் போவது யார்? (மதுவால், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு)

தினந்தோறும் "செக்ஸ் டார்ச்சரால்' கணவனின் ஆணுறுப்பை அறுத்து கொலை செய்த மனைவி : பொள்ளாச்சி அருகே பரபரப்பு
  
மார்ச் 17,2013 தினமலர்


ஆனைமலை: தினந்தோறும் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால், கணவனின் ஆணுறுப்பை நறுக்கி, மனைவி கொலை செய்தார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த, ஆனைமலை, சுப்பேகவுண்டன்புதூரை சேர்ந்தவர் முத்துக்குமார், 36; கூலித் தொழிலாளி. இவருக்கும், கவுசல்யாதேவி, 29, என்பவருக்கும், ஒன்பது ஆண்டுகளுக்கு முன், காதல் திருமணம் நடந்தது. 7 மற்றும், 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. முத்துக்குமார் தினந்தோறும் குடித்துவிட்டு, அன்றாடம் மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். கடந்த பத்து நாட்களாக, கணவன் மனைவி இடையே தகராறு நடந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, முத்துக்குமார், வழக்கம் போல் வீட்டு முன் வாசலில் படுத்து உறங்கினார்.

நேற்று அதிகாலை, வீட்டிலிருந்து வெளியே வந்த முத்துக்குமாரின் மனைவி, கணவன், ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து, கதறி அழுதார். இத்தகவல் தெரிந்ததும், வால்பாறை போலீசார், விசாரணை நடத்தினர். இறுதியாக, முத்துக்குமாரின் மனைவி மீது, போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பல கேள்விகளுக்கு, "தெரியாது' என, பதில் கூறியவர், ஒரு கட்டத்தில் கணவனை வெட்டிக் கொலை செய்ததை, ஒப்புக் கொண்டார். போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், "என் கணவர், அன்றாடம் குடித்து விட்டு, அடித்து கொடுமை படுத்தினார். தொடர்ந்து, செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார். குழந்தைகளை அடித்து துன்புறுத்தியதாலும், ஆணுறுப்பை அறுத்தும், முகத்தை சிதைத்தும் கணவரை கொலை செய்தேன்' எனக் கூறினார்.கவுசல்யாவை, போலீசார் கைது செய்தனர்.




தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றில், பெரும்பாலான வன்முறைக்கு, மதுவே காரணம் என்பது, தெரிய வந்துள்ளது. தமிழகத்தில், மகளிர் நலன் காக்கவும், மகளிர் நிலையை உயர்த்தவும் தேவைப்படும் நடவடிக்கைகளை அரசுக்கு பரிந்துரைக்க, தமிழ்நாடு மகளிர் ஆணையம், 1993ல் துவக்கப்பட்டது.
பெண்கள் பாதுகாப்பு :
இவ்வாணையம், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளில் இருந்து, அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது, விசாரணை செய்வது போன்ற பணிகளை செய்து வருகிறது.மேலும், கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு போன்றவற்றில், பெண்களின் பங்கேற்பு குறித்து ஆலோசனை வழங்குவது, பெண்கள் சிறைச்சாலை, மகளிருக்கான இல்லம் போன்றவற்றை பார்வையிட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்புவது போன்ற பணிகளை செய்து வருகிறது.இதில், பாதிக்கப்பட்ட பெண்கள், நேரடியாக புகார் மனு அளிப்பர். அவற்றை பெற்று, இரண்டு தரப்பினரிடமும் பேசி, சுமுக தீர்வு ஏற்படுவதற்கு, ஆணையம் வழிவகுக்கும்.

புகார்:கடந்த, ஏழு ஆண்டுகளில், பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகார்களில், குடும்ப வன்முறை அதிகரித்து வருகிறது என்பது, தெரிய வந்துள்ளது. இப்பிரச்னைக்கு மதுவே, அடிப்படை காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, மகளிர் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:ஆணையத்தில், மனு அளிக்கும் பெண்களை, தனித் தனியாக விசாரிக்கும் போது, பெரும்பாலான குடும்ப வன்முறைக்கு, மதுவே காரணம் என, தெரிய வந்துள்ளது. பெரும்பாலும், குடித்து விட்டு வரும் கணவர், இரவு முழுக்க, தொல்லை செய்வதாக பெண்கள் புகார் அளித்துஉள்ளனர். மேலும், அதிக போதை ஏறுகிற போது, சிகரெட்டால் சுடும் சம்பவங்களும் நடந்துள்ளன.இதனால், பல குடும்பங்கள் பிரிந்துள்ளன. இரவில், போதையில் தள்ளாடும் கணவர், காலையில் போதை தெளிந்த பின், நல்ல
வராக மாறி விடுகிறார் எனவும், பல பெண்கள் தெரிவித்துள்ளனர். போதையே, குடும்ப உறவுகளை அழித்து வருகிறது.

பாலியல் வன்முறை:
குடும்ப வன்முறை தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களில், 10 சதவீதம் மட்டுமே, மாமியார், நாத்தனார் கொடுமைகளை பற்றி வந்துள்ளது. மற்றபடி, பாலியல் வன்முறைகளும் அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, மகளிர் ஆணைய தலைவர், விசாலாட்சி நெடுஞ்செழியன் கூறியதாவது: நான் பொறுப்பேற்று, ஒரு மாதமே ஆகிறது. இருந்தாலும், 100 புகார் மனுக்களை பெற்றுஉள்ளேன். அடுத்த மாதம் முதல், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்ய உள்ளேன். கடந்த, ஏழு ஆண்டுகளில் பெறப்பட்ட மனுக்களின் தன்மை குறித்து, விரிவாக என்னால் கூற முடியாது. நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்து, விரைவில் விரிவான விசாரணை துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Tuesday, March 05, 2013

பெற்ற குழந்தையைக் கொல்வதும் பெண்ணுரிமையின் வெளிப்பாடுதான்

இந்தியாவில் சமீப காலமாக  நாகரீகம், பெண்ணுரிமை என்ற பெயரில் பல இளம் பெண்கள் திருமண பந்தத்தை அறுத்தெறிந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு துணையாக பல பெண்ணுரிமை சங்கங்கள் குரல் கொடுக்க அரசாங்கம் பல சட்டங்களைக் கொடுத்து வாழ்த்திக் கொண்டிருக்கிறது.

இதன்விளைவாக பல குடும்பங்களில் மருமகள்களால் பொய் வரதட்சணை வழக்குகள் உருவாக்கப்பட்டு கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பமும் அரசாங்கத்தால் நீதிமன்றங்களில் துன்புறுத்தப்படுகிறது.  மருமகள்கள் பொய்வழக்குகள் மூலம்தான் முழுமையான “பெண்ணுரிமையை” பெறமுடியும் என்ற பிரச்சாரமும் நடந்துகொண்டிருக்கிறது.

தங்களது உரிமைக்காக தாலி அறுத்துக் கொள்ள நீதிமன்ற வாயிலில் காத்திருக்கும் பெண்கள் தங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒருபோதும் கருத்தில் கொள்வதில்லை.  தாய்மை இருந்தால்தானே பிள்ளையைப் பற்றிய எண்ணம் ஏற்படும்.  பிள்ளை பெற்றதால் மட்டும் ஒருவள் தாயாகி விடமுடியாது.

இதன் உச்சகட்டமாக இப்போது கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளை கொல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.  தாய் என்ற கருணை உள்ளத்தை இழந்துவரும் கேடு கெட்ட இனமாக இப்போது மனித இனம் மாறிக்கொண்டிருக்கிறது.  அதற்கு தவறான பெண்கள் ஆதரவு சட்டங்கள் வழி செய்துகொண்டிருக்கின்றன.




மார்ச் 05,2013 தினமலர்

சென்னை: கணவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், தன் ஒரு மாத பெண் குழந்தையை கொன்ற தாயை, போலீசார் கைது செய்தனர். சென்னை புரசைவாக்கம், மூக்காத்தாள் தெரு, டைமண்ட் அடுக்குமாடி குடியிருப்பில், வெங்கல்ராவ் என்பவர், கடந்த மூன்று ஆண்டுகளாக, காவலாளியாக பணிபுரிகிறார். இவர், ஆந்திர மாநிலம் வாரங்கல்லை சேர்ந்தவர்.

சந்தேகம் என்ற நோய் : இவரது மகள் ரம்யாவுக்கும், 19, வாரங்கல்லை சேர்ந்த உறவினர் பாபுவுக்கும், 24, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இருவரும், டைமண்ட் குடியிருப்பு பகுதியில், காவலாளிக்கான அறையிலேயே வசித்து வந்தனர். பாபு பெயின்டர் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு, வர்ஷா என்ற, ஒரு மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், பாபு அடிக்கடி, அலைபேசியில் யாருடனோ பேசி உள்ளார். இது, ரம்யாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பாபுவுக்கும், ரம்யா மீது சந்தேகம் இருந்துள்ளது. இதனால், தம்பதிகளுக்கிடையில், அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், பாபு, ரம்யாவின் தந்தை வெங்கல்ராவ் உள்ளிட்ட சிலர், வாரங்கல்லில் நடந்த திருவிழாவுக்கு சென்றனர். ரம்யா கைக்குழந்தையுடன் இருப்பதால், அவருக்கு துணையாக, பாக்யா என்ற உறவுக்கார பெண்ணை விட்டுச் சென்றனர்.

குழந்தையை கொன்றார் : நேற்று அதிகாலை, குழந்தையை காணவில்லை என, ரம்யா கூறினார். பின், குடியிருப்பு வளாகத்தில் கிடந்த பழுதடைந்த துணி துவைக்கும் இயந்திரத்தில், துணியால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், குழந்தை இறந்து கிடப்பதாக சொல்லி கதறி அழுதார்.

தகவல் அறிந்த வேப்பேரி போலீசார், விசாரணை நடத்தினர். வெளி ஆட்கள் யாரும் இதை செய்திருக்க முடியாத நிலையில், ரம்யாவை விசாரித்தபோது, குழந்தையை கொன்றதை ஒப்புக் கொண்டார். கணவரை பிரிந்து, தனக்கென வேறொரு வாழ்க்கை அமைத்துக் கொள்ள, ரம்யா நினைத்துள்ளார். பாபு ஊருக்கு சென்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, குழந்தையை கொலை செய்துள்ளார் என்பது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் ரம்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.