இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, February 26, 2013

கற்பழிப்பைவிட தினசரி நடந்துகொண்டிருக்கும் மோசமான பெண் கொடுமை


ஒரு பெண்ணுக்கு பாலியல் கொடுமை நடந்தால் உடனடியாக அவைகூடி அடுத்தநாளே புது சட்டம் போட்டு ஆண்கள் அனைவருக்கும் “கொட்டை” நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆவேசமாக கூப்பாடு போடும் கூட்டம் பல ஆண்டுகளாக இளம் பெண்களுக்கு எதிராக நாட்டில் இருக்கும் அவலத்தைப் பற்றி கண்டு கொள்வதே இல்லை. இதில் பொது மக்களும் அடக்கம்.

பெண்களுக்கு விழிப்புணர்ச்சியும், சுய சிந்தனையும் அளிக்கும் இடங்களாகிய கல்விக் கூடங்களில் கழிவறை, குடிநீர் வசதியில்லாமல் மாணவ மாணவிகள் திண்டாடுவது காலம் காலமாக இந்தியாவில் இருந்துகொண்டிருக்கும் அவலம்.  இதைப் பற்றி இதுவரை ஒருவர்கூட குரல் கொடுத்ததில்லை.  ஏன்?

உண்மையான பெண் சுதந்திரத்தில் அக்கறை இல்லை என்பதுதான் உண்மை.  பெண்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்பட்டு சிந்திக்கும் திறன் ஏற்பட்டுவிட்டால் அவர்களை மேல்நாட்டு கவர்ச்சி வலையில் வீழ்த்தி தவறான வழிக்கு அழைத்துச் சென்று “பெண்ணுரிமை” என்ற பெயரில் பணம் சம்பாதிக்க முடியாது என்ற உண்மையை அறிந்தவர்கள் எப்போதும் நகர்ப்புற மேல்தட்டு பெண்களை மட்டுமே மையமாக வைத்து “பெண்ணுரிமை” பேசி வியாபாரம் செய்துகொண்டிருப்பார்கள். 

உங்கள் வீட்டு பெண் பிள்ளைகள் செல்லும் நகராட்சி அல்லது அரசு பள்ளிகளில் கழிவறை, குடிநீர் அடிப்படை வசதி இருக்கிறதா என்று என்றாவது நீங்கள் யோசித்ததுண்டா? உங்கள் வரிப்பணம் கற்பழிப்பிற்கு நஷ்ட ஈடு கொடுக்க மட்டும்தான் பயன்படுத்தப்படவேண்டுமா?

பிப்ரவரி 26,2013 தினமலர்


ஜோத்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில், பள்ளிகளில் கழிப்பறை இல்லாததால், கடந்த மூன்று ஆண்டுகளில், மூன்று லட்சம் மாணவியர், படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில், பள்ளி குழந்தைகள் தொடர்பான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது; இந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாவது: ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் அரசு உள்ளது. இம்மாநிலத்தில் உள்ள பள்ளிகளில், கழிப்பறை வசதி இல்லாததால், கடந்த கல்வி ஆண்டில், 45 ஆயிரம் மாணவியர், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர்.

மூன்று ஆண்டுகளில், மொத்தம், மூன்று லட்சம் மாணவியர், இந்தப் பிரச்னைக்காக படிப்பை கைவிட்டுள்ளனர். முதல்வர் அசோக் கெலாட்டின் ஜோத்பூர் தொகுதியில், 144 பள்ளிகளிலும், மாநில கல்வி அமைச்சர், பிரிஜ்கிஷோர் சர்மாவின், ஜெய்ப்பூர் தொகுதியில், 236 பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் இல்லை.

"வரும் ஏப்ரல் மாதத்திற்குள், அனைத்து பள்ளிகளிலும், மாணவியருக்கு, தனி கழிப்பறை வசதிகளை அமைக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும், இந்த நிலைமை காணப்படுகிறது. இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிப் படிப்பை, மாணவ, மாணவியர் பாதியில் கைவிடுவதை தடுக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், சில மாநில அரசுகளின் கவனக் குறைவால், இதுபோன்ற நிலைமை காணப்படுகிறது.

Sunday, February 17, 2013

வரதட்சணை கொடுப்பது குற்றம் கிடையாது ஆனால் அது தக்க சமயத்தில் பயன்படும் ஆயுதம்!!!!

 இந்தியாவில் வழக்கமாக பெண்ணுக்கு சேர வேண்டிய குடும்ப சொத்தை திருமணத்தின்போது சீதனம் என்ற பெயரில் கொடுத்து வந்தார்கள். பிறகு அதனை கொடுக்காமல் தாங்களே சுருட்டிக்கொள்ள பெண்ணின் குடும்பத்தார் அதற்கு வரதட்சணை என்று பெயர் சூட்டியபோது பெண்ணியம் என்ற பெயரில் ஒரு கூட்டம் உள்ளே புகுந்து “வரதட்சணை தடுப்புச் சட்டம்” என்ற புதிய பணம் சம்பாதிக்கும் சட்டத்தை 1961ல் உள்ளே புகுத்தினார்கள்.
வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்படி வரதட்சணை கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம்.  ஆனால் இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் வரதட்சணை கொடுத்து குற்றம் புரிந்தவர் எவரும் இந்தியாவில் தண்டிக்கப்படுவதில்லை!!! அதற்கு மாறாக தான் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ததாக இந்திய சட்டத்திற்குப் புறம்பாக குடும்பத்தோடு தாங்கள் செய்த குற்றத்தை பகிரங்கமாக வெளியிட்டாலும் அரசாங்கம் கண்டுகொள்ளாது.  
 
THE DOWRY PROHIBITION ACT, 1961 
(Act No. 28 of 1961)

(20th May, 1961)

An Act to prohibit the giving or taking of dowry
3. Penalty for giving or taking dowry.-(1) If any person, after the commencement of this Act, gives or takes or abets the giving or taking of dowry, he shall be punishable with imprisonment for a term which shall not be less than five years, and with the fine which shall not be less than fifteen thousand rupees or the amount of the value of such dowry, whichever is more:

Provided that the Court may, for adequate and special reasons to be recorded in the judgment, impose a sentence of imprisonment for a term of less than five years.

இதனால் ருசி கண்டுவிட்ட பல பெண்கள் தங்கள் வசதிக்கேற்ப எப்போது கணவனை தண்டிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அப்போது தங்களது வசதிப்படி கணவனின் ஒட்டுமொத்த குடும்பத்தின் மீதும் பொய் வரதட்சணை வழக்கு பதிவு செய்துவிட்டு இந்திய காவல்துறையையும், நீதித்துதுறையும் அரசாங்க செலவில் இலவச கூலிப்படை போல பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள் என்பது தெரிந்தாலும் உணர்ச்சியற்ற ஜடங்களாகவே இந்திய சட்ட நடைமுறைகள் இருந்து வருகின்றன!!!

வரதட்சணை கொடுப்பது சட்டப்படி குற்றம் என்று தெரிந்திருந்தே திருமணம் செய்து கொண்டு பிறகு பல ஆண்டுகள் கழித்து திருமணத்தின்போது வரதட்சணை கொடுத்தோம் என்று கூறும் பெண்ணின் குடும்பத்தை முதலில் தண்டித்தால்தான் சமுதாயத்தில் வரதட்சணை முறை ஒழியும் என்று நீதி தெரிந்த டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தீர்ப்பில் எழுதியிருக்கிறார்.  


ஆனால் என்ன செய்வது.  இதுபோன்ற சுய உணர்வும் சிந்திக்கும் திறனும் அனைவருக்கும் இருந்துவிட்டால் நாடு நல்வழியில் சென்றுவிடுமே!!  பிறகு பொய் வழக்குகள் மூலம் லஞ்சம் வாங்கி ஊழல் செய்து அப்பாவிகளை மிரட்டி பணம் பறிக்க முடியாதே.
 
IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI
CRL.M.C.7262/2006
23.02.2007
Smt. Neera Singh….. Petitioner
Versus

THE STATE (GOVT. OF NCT OF DELHI) and ORS…..Respondents

after breakdown of the marriage show the mentality of the complainant. I consider where these kinds of allegations are made, the police should simultaneously register a case under Dowry Prohibition Act (in short, the Act) against the parents of the complainant as well, who married their daughter despite demand of dowry. Section 3 of the Act prohibits giving and taking of dowry. If a woman of grown up age and well educated gets married to a person despite dowry demand, she and her family becomes accomplice in the crime under Dowry Prohibition Act.

4. Now-a-days, exorbitant claims are made about the amount spent on marriage and other ceremonies and on dowry and gifts. In some cases claim is made of spending crores of rupees on dowry without disclosing the source of income and how funds flowed. I consider time has come that courts should insist upon disclosing source of such funds and verification of income from tax returns and police should insist upon the compliance of the Rules under Dowry Prohibition Act and should not entertain any complaint, if the rules have not been complied with.
Rule 2 of the Dowry Prohibition (Maintenance of List of Presents to the Bride and Bridegroom) Rules, 1985 reads as under: ? 2. RULES IN ACCORDANCE WITH WHICH LISTS OF PRESENTS ARE TO BE MAINTAINED.-(1) The list of presents which are given at the time of the marriage to the bride shall be maintained by the bride. (2)The list of presents which are given at the time of the marriage to the bridegroom shall be maintained by the bridegroom. (3)Every list of presents referred to in Sub-rule(1) or Sub-rule(2)- (a) shall be prepared at the time of the marriage or as soon as possible after the marriage; (b) shall be in writing; (c) shall contain:- (i) a brief description of each present; (ii) the approximate value of the present; (iii) the name of the person who has given the present; and (iv) where the person giving the present is related to the bride or bridegroom, a description of such relationship. (d) shall be signed by both the bride and the bridegroom.

தாங்கள் செய்த குற்றத்தை பகிரங்கமாக செய்தித்தாளில் வெளியிட்டு மகிழக்கூடிய ஒரே நாடு.  குற்றவாளிகளை ஆதரித்து அப்பாவிகளை பொய் வழக்குகளில் சிக்க வைக்கும் ஒரே நாடு. அந்த நாட்டில் இதுபோன்ற செய்திகளை காண்பது சாதாரண விஷயம்தான்.

திருப்பூர்:வரதட்சணையாக, 1 கோடி ரூபாய் கொடுத்தும், பட்டதாரி பெண்ணை, மேலும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, கணவர் குடும்பத்தார் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர், அவிநாசியைச் சேர்ந்த, சுகுமாரன் மகன், வீரசண்முகம், 32; பிட்னஸ் சென்டர் உள்ளிட்ட, பல வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கும், கோவையை சேர்ந்த மகேந்திரன் மகள், எம்.பி.ஏ., பட்டதாரியான, ராஜேஸ்வரி, 29, என்பவருக்கும், 2005ல் திருமணம் நடந்தது.அப்போது, 100 சவரன் நகை, 10 கிலோ வெள்ளி, வைர மோதிரம் என, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, வரதட்சனையாக பெண் வீட்டார் வழங்கினர். திருமணமாகி ஏழு ஆண்டுகளாகியும் குழந்தை பிறக்கவில்லை.இதனால், ராஜேஸ்வரியை வீரசண்முகமும், அவர் குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தினர். பெற்றோரிடம், 15 லட்சம் ரூபாய் வரதட்சணையாக பெற்று வருமாறும் வற்புறுத்தினர்.மனம் வெறுத்த ராஜேஸ்வரி, பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார். கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசில், கடந்த செப்., மாதம், புகார் செய்தார். இந்த வழக்கை, திருப்பூர் எஸ்.பி.,க்கு மாற்றம் செய்தனர்.அவரது உத்தரவை அடுத்து, திருப்பூர் அனைத்து மகளிர் போலீசார், ராஜேஸ்வரியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, அவர் கணவர் வீரசண்முகம், மாமனார், மாமியார் மற்றும் உறவினர் இருவர் மீது, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.