சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, March 21, 2012

காதலை தன் வழிக்குக் கொண்டுவர விசித்திரமான “அறுவை சிகிச்சை”

கணவனை தன் வழிக்குக் கொண்டுவர “இந்திய பொய் வரதட்சணை வழக்குகள்” மருமகள்களுக்கு உதவுகின்றன என்பது உலகறிந்த உண்மை. ஆனால் “கள்ள” காதலை தன் வழிக்குக் கொண்டுவர இப்படி ஒரு அறுவை சிகிச்சை இருப்பது இப்போதுதான் தெரிகிறது. எது நடந்தாலும் சரி எந்தவகையிலாவது தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற மருமகள்களின் ஆணவ குணத்தால்தான் பல பொய் வரதட்சணை வழக்குகள் இன்று நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கின்றன. அந்த வரிசையில் இப்படி ஒரு புதுமையை புகுத்தியிருக்கிறார் இந்த மருமகள்.


மதுரை: திருப்புத்தூர் அருகே, திருமணம் செய்ய மறுத்த காதலனின், மர்ம உறுப்பை, "நறுக்'கிய கள்ளக் காதலியிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம், வயல்சேரியை சேர்ந்தவர் மாரி, 29, கொத்தனார். சிவகங்கையில் கட்டுமானப் பணியில் இருந்தபோது, திருப்புத்தூர், கருவேப்பலம்பட்டி சுப்ரமணியன் மனைவி அமுதவல்லி, 35, சித்தாளாக வேலை பார்த்தார். மூன்று குழந்தைகள் உள்ளனர். மாரிக்கும், அமுதவல்லிக்கும் தொடர்பு ஏற்பட்டது. கள்ளத் தொடர்பை அறிந்த கணவர் சுப்ரமணியன், அமுதவல்லியை பிரிந்தார். தனிமையில் வாடிய தன்னை, திருமணம் செய்யும்படி, மாரியை வற்புறுத்தினார் அமுதவல்லி. அதற்கு மறுத்தார் மாரி.

நேற்று முன்தினம் இரவு, மாரி வீட்டிற்கு சென்ற அமுதவல்லி, அவரிடம் தகராறு செய்தார். வீட்டில் இருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து, ஊருக்கு அனுப்பினர். தன்னை பஸ் ஏற்றி அனுப்பி வைக்கும்படி கூறிய அமுதவல்லி, மதுரை மாட்டுத்தாவணிக்கு மாரியை அழைத்து வந்தார். நீண்ட நேரமாகி விட்டதால், இருவரும் அமுதவல்லியின் ஊருக்கு திரும்பினர். அங்குள்ள கண்மாய் கரையில் தூங்கினர். திடீரென மாரியின் மர்ம உறுப்பு, "நறுக்'கப்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் "நறுக்'கிய உறுப்புடன் மாரியை, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார் அமுதவல்லி. அங்கு அவருக்கு, மர்ம உறுப்பை பொருத்துவதற்கான அறுவை சிகிச்சை நடந்தது. மாரி போலீசில் கூறியபோது, ""அமுதாவுடன் மேலும் இருவர் இருந்தனர். இருட்டில் என்ன நடந்ததென்றே தெரியவில்லை'' என்றார். போலீசார், அமுதாவிடம் விசாரித்து வருகின்றனர்.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.