சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, December 13, 2013

கணவன் மனைவி தகராறா? இருபதாயிரம் ரூபாய் தயாராக வைத்திருங்கள்!!!!

குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் பிரச்சனை என்றாலே மகளிர் காவல்நிலையத்திற்கும், வழக்கறிஞர்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் ஒரே கொண்டாட்டம்தான் போலிருக்கிறது.

இளம் தம்பதிகளுக்கிடையே ஏற்படும் சிறு பிரச்சனைகளையும் பெரிதாக்கி பொய் வரதட்சணை வழக்குகள் மூலம் கொள்ளை லாபம் கண்டுவந்த மகளிர் காவல் நிலையங்களை கண்ட சென்னை உயர்நீதிமன்றம் குடும்ப பிரச்சனைகளை தீர்க்க தனியாக மாற்று சீறுடை அணிந்த குடும்பப் பிரச்சனைகளை தீர்க்கும் திறனுள்ள பயிற்சி பெற்ற அலுவலரை ஒவ்வொரு மகளிர் காவல்நிலையத்திலும் நியமிக்க வேண்டும் என்று 2008ல் உத்தரவிட்டது ஆனால் அந்த உத்தரவை கழிவறை காகிதம்போல் தூக்கி எறிந்துவிட்டு இன்றும் கொட்டம் அடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.  
 
பின்வரும் செய்தியை படித்துவிட்டு  உங்கள் பாக்கெட்டில் எப்போதும் ரூபாய் 25,000 க்கு குறையாமல் பணம் வைத்துக் கொள்ளுங்கள்.  உங்கள் குடும்பத்திலும் ஏதாவது பிரச்சனை வரும் அல்லவா?
 
 
சேலம்: பெண் விவசாயிடம், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, சேலம் மகளிர் எஸ்.ஐ., மற்றும் புரோக்கரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

சேலம், கோம்பக்காட்டை சேர்ந்தவர், இருசாயி, 40; விவசாய கூலி. இவரது கணவர் சுப்பிரமணி, இருசாயியுடன் தகராறு ஏற்பட்டு, முதல் மனைவி சரசுவுடன் வசித்து வந்தார். இருசாயிக்கு, அவரது சகோதரர்கள், செட்டிசாவடியில் ஒரு வீட்டை வாங்கி கொடுத்தனர். ஆனால், கோம்பக்காட்டிலேயே இருசாயி, தன் மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன், இருசாயி வீட்டுக்கு சென்ற சுப்பிரமணி, வீட்டு பத்திரத்தை கொடு என, மிரட்டினார். இதில் ஏற்பட்ட தகராறில், சுப்பிரமணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வழக்கு பதிந்த, கன்னங்குறிச்சி எஸ்.ஐ., மலர்விழி, இருவரையும் அழைத்து சமரசம் செய்துள்ளார். இதற்கிடையில், கன்னங்குறிச்சியை சேர்ந்த புரோக்கர் பாலு என்பவர் மூலம், இருசாயியை, எஸ்.ஐ., மலர்விழி அழைத்து, "வழக்கு சமரசம் ஆகவில்லை; இந்த வழக்கில் நீதிமன்றம் செல்ல வேண்டாமென்றால், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும்' என்றார். "நானோ ஏழை, என்னிடம் அவ்வளவு பணம் இல்லை' எனக் கூறிய இருசாயி, கடைசியில், 10 ஆயிரம் ரூபாய் தருவதாக, ஒப்புக் கொண்டார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில், இருசாயி புகார் கூறினார். நேற்று மதியம், கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் வெளியே நின்றிருந்த புரோக்கர் பாலுவுடன் சென்ற இருசாயி, எஸ்.ஐ., மலர்விழியிடம், 10 ஆயிரம் ரூபாயை கொடுத்தார். பணத்தை வாங்கிய மலர்விழி, 1,500 ரூபாயை புரோக்கர் பாலுவிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.