இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, February 25, 2011

போலிஸைப் பார்த்து ஓடிய போலிஸ் (அப்பாவி போலிஸ் - பகுதி 5)


ராமேஸ்வரம்:தனுஷ்கோடி ஸ்டேஷனில் நள்ளிரவில் ஆய்வு செய்ய வந்த ராமநாதபுரம் எஸ்.பி., அனில்குமார் கிரியிடம், போதையில் இருந்த ஏட்டு சிக்கினார். உடன் இருந்த இரு போலீசார் தப்பியோடினர். எஸ்.பி., அனில்குமார் கிரி, ஸ்டேஷன்களில் திடீர் விசிட் செய்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷன் வந்த போது, அங்கிருந்த ஏட்டுகள் ஜெயச்சந்திரன், முருகன், கருப்பையா போதையில் இருந்தனர். எஸ்.பி.,யை பார்த்ததும் முருகன், கருப்பையா தப்பி ஓடினர். ஏட்டு ஜெயச்சந்திரனை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி, அவர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி., உத்தரவிட்டார். தப்பிய போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர். கடந்த பிப்., 14ல் இலங்கை நபரை கைது செய்த "கியூ' பிரிவு போலீசார், அவரை தனுஷ்கோடி போலீசாரிடம் ஒப்படைக்க சென்ற போது, தப்பிய ஏட்டுகள் முருகன், கருப்பையா இருவரும் குடிபோதையில் தகராறு செய்தனர். இது குறித்து "கியூ' பிரிவு போலீசார் எஸ்.பி., யிடம் புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தக் கோபமெல்லாம் இப்படித்தான் வெளிப்படும்....
கருத்துப்படங்கள் - தினமலர்

தேனி மாவட்டம், மூணாறில் இளைஞர் காங்கிரசார் நடத்திய போராட்டத்தின் போது போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தடையை மீறி, தலைமை செயலகம் நோக்கி ஊர்வலமாக வந்து வன்முறையில் ஈடுபட்டதால், அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.



Wednesday, February 23, 2011

மாறிவரும் இந்தியக் குடும்பங்கள்!

திருமணமான தங்களது மகள் ஏதாவது தப்புத் தண்டா செய்து அது அவளுடைய கணவனுக்குத் தெரிந்துவிட்டால் உடனடியாக மகளை ஏவிவிட்டு பொய் வரதட்சணை வழக்குப் பதிவுசெய்வதுதான் வழக்கமாகப் பெற்றோர்கள் செய்துவந்த நடைமுறை.

இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்றவர்கள் ரொம்ப திருந்திவிட்டார்கள் போலிருக்கிறது. வீட்டுக்கு அடங்காத பெண்ணை தாங்களே கூலிப்படை வைத்து கொன்றுவிடுகிறார்கள். எது எப்படியோ வீட்டிற்கு வரும் அப்பாவி மருமகனை பலிகடாவாக்கி பொய் வரதட்சணை வழக்கில் சிக்கவைத்து சீரழிக்காமல் தங்கள் குடும்பத்திற்குள்ளேயே சங்கு ஊதிக்கொள்வது மிகவும் உத்தமமான செயல். அதுதான் பின்வரும் செய்தியில் வந்திருக்கிறது.


பிப்ரவரி 23,2011 தினமலர்

பல்லாவரம்: பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட மகளை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற தந்தையை கூட்டாளிகளுடன் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேரை தேடி வருகின்றனர்.

மதுரை, திருநகரை சேர்ந்தவர் மனோகர் (51). இவரது மகள் தீபிகா (19). பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (23). இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தீபிகாவிற்கு 18 வயது பூர்த்தியானது. இதையடுத்து, காதலனுடன் அவர் மதுரை, தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தார். அப்போது இருவருக்கும் திருமணம் செய்து வைக்குமாறு போலீசார் செய்த சமரசத்தை பெற்றோர் ஏற்க மறுத்தனர். மேலும், தங்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டால், கொலை செய்து விடுவோம் என்று பெண்ணின் பெற்றோர் மிரட்டினர். இதையடுத்து, தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தாம்பரம் சானடோரியம், மாதவன் தெருவில் நாகராஜ் மனைவியுடன் வாடகை வீட்டில் குடிபெயர்ந்தார். வீட்டிற்கு அருகே வாடிக்கையாளர் சேவை மையம் ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி மதியம் தீபிகா வீட்டில் தனியாக இருந்த போது, மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டியது. இதில், பலத்த காயமடைந்த தீபிகா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புறநகர் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவின்படி, பரங்கிமலை துணை கமிஷனர் ராமர் மேற்பார்வையில், தாம்பரம் உதவி கமிஷனர் நாராயணசாமி, குரோம்பேட்டை இன்ஸ்பெக்டர் அழகேசன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. விசாரணையில், எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால், தீபிகாவின் தந்தை மனோகர் கூலிப்படையை ஏவி அவரை கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. உள்ளகரத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த மனோகரையும், குரோம்பேட்டை நியூ காலனியில் தங்கியிருந்த பாரதி மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (20), முருகன் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து மனோகர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: என் மகளின் காதல் விவகாரம் தெரிந்தவுடன் அவரை கண்டித்தேன். பொறியியல் கல்லூரியில் மகளை படிக்க வைத்தேன். இரண்டு லட்ச ரூபாய் கல்லூரிக்கு கட்டணம் செலுத்தினேன். ஆனால், எங்களை ஏமாற்றிவிட்டு, திட்டமிட்டபடியே நாகராஜை, அவள் திருமணம் செய்து கொண்டாள். இதனால் ஆத்திரம் ஏற்பட்டது. என் சகோதரர் மகன் பாரதியின் உதவியுடன், மதுரையை சேர்ந்த கூலிப்படையை வைத்து தீபிகாவை கொலை செய்ய திட்டமிட்டோம். இதன்படி கூலிப்படைக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது. சம்பவம் நடந்த அன்று, மதுரையில் இருந்து கூலிப்படையினர் காரில் சென்னை வந்தனர். பாரதி அவர்களுடன் வந்தான். தீபிகாவை கூலிப்படைக்கு அவன் தான் அடையாளம் காட்டினான். இவ்வாறு மனோகர் வாக்குமூலத்தில் கூறினார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கூலிப்படையை சேர்ந்த மேலும் மூவரை தேடி வருகின்றனர்.

துணுக்குச் செய்தி: போலிஸ்காரர் மகளிடம் திருடிய களவாணிகள்!

தேனி: காதலனாலும், அவரது நண்பனாலும் ஏமாற்றப்பட்டு, திருப்பூரில் நடுரோட்டில் தவித்த தேனி போலீஸ்காரர் மகள் மீட்கப்பட்டார். தேனி அரண்மனைப்புதூரைச் சேர்ந்தவர் மேகலா (பெயர் [...]
=====


Sunday, February 20, 2011

தலைவிகளின் பார்வையில் பெண்கள்

தலைவிகள் இந்தியப் பெண்களை எப்படிப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு எப்படி நிதி ஒதுக்கலாம் என்று யோசிக்கிறார்கள் என்று பின்வரும் செய்தி விளக்கமாகச் சொல்கிறது. அதனைத் தொடர்ந்து இந்தியப் பெண்ணின் நிலையை தலைவிகள் உண்மையாக எப்படி வைத்திருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் காணலாம்.

சர்வதேச மகளிர் தின விழா: ஜெயந்தி நடராஜன் எம்.பி. பேச்சு
மாலை மலர் 18/2/2011


செய்தியின் சில முக்கியமான பகுதிகள்

தமிழக மகளிர் காங்கிரஸ் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா சத்தியமூர்த்தி பவனில் இன்று கொண்டாடப்பட்டது. மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி சாய்லட்சுமி வரவேற்று பேசினார். அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலாளர் காயத்திரிதேவி எம்.எல்.ஏ. தொடக்க உரையாற்றினார். விழாவில் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் எம்.பி. பேசியதாவது:-

தன்னை தேடி வந்த பிரதமர் பதவியையும் வேண்டாம் என்ற தியாகத் தலைவிதான் சோனியா காந்தி. அவர் பெண்களுக் கெல்லாம் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். பொருளாதார துறை, சட்டத்துறை, வெளியுறவுத்துறை உள்ளிட்ட எந்த துறையாக இருந்தாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

இளம் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்கும்போது அவர் அடிக்கடி சொல்வார், பெண்கள் மாபெரும் சக்தி, அவர்களது ஒத்துழைப் பால்தான் நாடு முன்னேற முடியும் என்பார்.

அரசு வேலைகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு இருக்க வேண்டும். பெண்கள் வன்முறை தடுப்பு சட்டத்தை தீவிரமாக அமுல் படுத்த தேவையான நிதி ஒதுக்க வேண்டும். சுய உதவிக்குழுக்களுக்கும், வங்கிகளுக்கும் உள்ள பிரச்சினைகளை களைய கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.

பெண்ணுரிமை பேசும் சங்கங்களுக்குள் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை இந்த வீடியோவில் கண்டு மகிழுங்கள்.



=====

பல ஏழைச் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் நல்ல கல்வி கூட கிடைக்காமல் தினம் தினம் அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் நலனிற்காக நிதி ஒதுக்கி பல நல்ல உபயோகமான திட்டங்களை செயல்படுத்தினால் யாருக்கும் “லாபம்” கிடைக்காதோ? அல்லது இவர்கள் எல்லாம் பெண்கள் என்று கருதப்படுவதில்லையா? அல்லது இதுபோன்ற இந்தியச் சிறுவர், சிறுமிகளுக்கு நல்ல கல்வி கிடைத்து தங்கள் நாட்டை தாங்களே ஆளும் அளவிற்கு திறமை வளர்ந்துவிடும் என்ற அச்சமோ?


கருத்துப் படம் - தினமலர் 20/2/2011 (Click and Read)

பெண்கள் வன்முறை தடுப்புச் சட்டம் என்ற பெயரில் அடுக்கடுக்காக பல சட்டங்களை இயற்றி நிதி ஒதுக்கினால் உண்மையாக பாதிக்கப்படுபவர்களுக்கு நன்மை ஏற்படுவதை விட சுற்றி இருப்பவர்களுக்கு அதிக வருமானமும், லாபமும் கிடைக்கும் என்று பலருக்கும் தெரிந்த உண்மை. ஒரே ஒரு பொய் வழக்கினால் ஒரு குடும்பம் சிதைந்து சின்னாபின்னமாகும்போது போலிஸ், வழக்கறிஞர், நீதிமன்றம் மற்றும் இடைத்தரகர்கள் என்று பலருக்கும் வருமானம் இருக்கிறதல்லவா? அதனைத் தொடர்ந்து வரும் விவாகரத்து பல ஆண்டுகளாக பல வழக்கறிஞர்களின் வாழ்வை வளமாக்கும் அல்லவா?

ஏழைச் சிறுமிகளின் நலனுக்காக நிதி ஒதுக்கீடு செய்து நல்ல காரியங்களைச் செய்தால் மேலே சொல்லப்பட்ட வருமானங்கள் யாருக்காவது கிடைக்குமா? நம்ம நாட்டுத் தலைவிகள் எப்போதுமே மாறுபட்ட கோணத்தில்தான் எதையும் யோசிப்பார்கள்.
====


Saturday, February 19, 2011

காவல் மகாராணிகள்!

Align Center
சாலை விதிகளை மீறக் கூடாது அவற்றை முறையாக கடை பிடிக்க வேண்டும் என நமக்கு சொல்லித் தருவதே போலீசார் தான். அந்த போலீசாரே விதிமுறையை மீறி இப்படி வாகன நெரிசல் மிகுந்த அண்ணாசாலையை குறுக்காக இப்படி கடப்பது சரியா? (தினமலர் கருத்துப் படம் 20/2/2011)
=====

அவங்க எது செஞ்சாலும் தப்பே இல்லை. குடும்பப் பிரச்சனைகளுக்கு பொய் வரதட்சணை வழக்கு பதிவு செய்து கட்டப்பஞ்சாயத்து மூலம் வசூல் செய்வது உட்பட . . . . அதை கீழுள்ள வீடியோவில் பார்த்து மகிழுங்கள்.
இந்தக் கன்றாவியைத் தாங்க முடியாமல்தான் 2008ல் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு முழுவதும் உள்ள மகளிர் காவல்நிலையங்களுக்கு தனியாக ஒரு உத்தரவே பிறப்பித்திருக்கிறது. அதை இங்கே சென்று படித்துப் பாருங்கள்... சட்ட தீவிரவாதம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றறிக்கை



இதையும் படித்து மகிழுங்கள்
மகளிர் காவல் நிலையங்களுக்கு பாவ மன்னிப்பு கிடைக்குமா?
=====


பெண்களின் சாபம் பலிக்குமா?


மீனவர் மகளிர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில், இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, சிறை பிடிக்கப்படுவதை கண்டித்து சென்னை மெரினா கண்ணகி சிலை முன் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆவேசமடைந்த பெண்கள், கண்ணகியைப் போலவே வேடமிட்டு வந்த பெண்கள், காற்சிலம்புகளை தூக்கி காட்டி ஆவேசமாக அரசுக்கு சாபமிட்டனர். ( செய்திப் படம்- தினமலர் 20.2.2011)

=======

மீன்பிடி தொழில் செய்யும் பல ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த பல பெண்கள் தங்களின் கணவனின் உயிரையும், தங்களது வாழ்க்கையைம் காப்பாற்றுங்கள் என்று தினம் தினம் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் வேதனையை இங்கே சென்று பாருங்கள் www.savetnfisherman.org

இந்தப் பெண்களின் கண்ணீர் யாருடைய கண்களுக்கும் தெரிவதில்லை. இவர்களின் அபயக்குரல்களோ யாருடைய செவிகளுக்கும் எட்டாது. ஏனென்றால் இவர்களுக்கு உதவினால் யாருக்கு லாபம்?

அதேசமயம் மேல்தட்டுவர்க்க நவநாகரீகப் பெண்னொருத்தி தன் கணவனையும் அவனது குடும்பதைத்தையும் பழிவாங்குவதற்காக கிசுகிப்பான குரலில் ஐயோ வரதட்சணைக் கொடுமை என்று கூறினால் போதும் மத்திய பெண்கள் நலத்துறை முதல் மாநில பெண்கள் வாரியம் வரை ஐயோ இந்தியப் பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் துன்புறுகிறார்கள் என்று கூப்பாடு போடுவார்கள். இது போதாதென்று பெண்ணுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்காமல் ஓயமாட்டோம் என்று பல சிறு சிறு அமைப்புகள் வட்டமடித்து சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

உண்மையாகவே துன்பப்படும் அப்பாவி இந்தியப் பெண்கள்
பெண் விடுதலை விரும்பிகளின் கண்களுக்கு எப்போதுமே தெரிவதில்லையே!

கீழுள்ள வீடியோவைப் பாருங்கள். மகளிர் சங்கத்தலைவிகளின் சேவையைப் போற்றி மகிழுங்கள்.



Thats Tamil News, 3/4/2008

நெல்லை: கணவன் அடித்தால திருப்பி அடியுங்கள், உடல் ரீதியான வன்முறைக்கு இடம் கொடுக்காதீர்கள் என்று குடும்பத் தலைவிகளுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் கூறினார்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் நெல்லை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இணைந்து குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் குறித்த கருத்தரங்கை நடத்தியது. கல்லூரி வாளகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரகாஷ் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், பொருளாதார வன்முறை, பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். கணவன் மனைவியை அடிப்பது இயல்பானது என்றும் அன்பின் வெளிப்பாடு என்றும் கூறப்படுகிறது.

அல்வாவும், பூவும் கொடுத்து பெண்களை சமாதானம் செய்து விடலாம் என்பது போன்ற காட்சிகள் திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகிறது.

குட்ட குட்ட குனிவதை தவிர்த்து எதிர்த்து நில்லுங்கள். கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள். உடல் ரீதியான வன்முறைக்கு இடம் கொடுக்காதீர்கள். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்றார் அவர்.
========



Thursday, February 17, 2011

இந்திய மூத்த குடிமக்களுக்கு எச்சரிக்கை!

18.2.2011 தினகரன்

காஜியாபாத் : காஜியாபாத்தைச் சேர்ந்தவர் ஹனிப், திடீரென மாயமானார். குடும்பத்தினர் புகாரின்பேரில் போலீசார் விசாரித்தனர். இதில், ஹனிப்பின் மருமகள் கமர்ஜகானுக்கும், ரியாசுல் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிந்தது. இருவரையும் விசாரித்தபோது, ஹனிப்பை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

கள்ளக்காதலை கண்டித்ததால் கமர்ஜகானின் ஆலோசனைப்படி 3 நண்பர்கள் உதவியுடன் ஹனிப்பை கடத்தி கழு த்தை அறுத்து ரியாசுல் கொன்றுள்ளார் என்று தெரிந்தது. 5 பேரும் கைது செய்யப்பட்டனர். கமர்ஜகான் கர்ப்பமாக உள்ளதால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
=====

கள்ளக்காதல் செய்யும் மருமகள்களுக்கு இந்திய சட்டங்கள் மிகவும் சாதகமாக இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை. கள்ளக்காதல் வெளியே தெரிந்துவிட்டால் கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் பொய் வரதட்சணை வழக்கில் உள்ளே தள்ளிவிடுவார்கள் பாசக்கார மருமகள்கள். இதுபோன்ற இழி செயல்களுக்கு துணைபோவது யாரென்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். பொய் வழக்குக் கொடுத்தாலும் அதைத் தட்டிக்கேட்காமல் அதை எந்தெந்தத் துறைகள் எப்படியெல்லாம் கையாள்கிறார்கள் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

கள்ளக்காதல் விஷயம் மாமனாருக்குத் தெரிந்துவிட்டால் மாமனார் ஒரு தள்ளாடும் கிழவராக இருந்தாலும் அவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என்று அவர் மீது கூசாமல் ஒரு குற்றச்சாட்டையும் அந்த பொய் வரதட்சணைப் புகாரில் சேர்த்துவிடுவார்கள் இதுபோன்ற மருமகள்கள். இப்போதெல்லாம் "Trend" மாறிவிட்டது போலிருக்கிறது. நேரடியாக கொலையே செய்துவிடுகிறார்கள். கைதேர்ந்த மருமகள்கள்! மருமகள் இருக்கும் வீடுகளில் வாழும் மூத்த குடிமக்களே ஜாக்கிரதை.

வாழ்க பாரதம்! மன்னன் எவ்வழியோ மருமகள்களும் அவ்வழியே.
=====


Sunday, February 13, 2011

அத்தைக்கு வந்த விபரீத ஆசை!

அத்தைக்கு வந்த விபரீத கள்ளக்காம ஆசையால் கோபம் கொண்ட இளைஞர் கடைசியில் கொலையாளியாகிவிட்டார். ஒவ்வொரு ஆணின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஒரு பெண்தான் இருப்பாள் என்பது எவ்வளவு உண்மை!

பெண்கள் நாட்டின் கண்கள் அல்லவா! அதைப்பொறுத்துத்தான் நாடும் உருவாகும். பெண் நல்லவளாக இருந்தால் ஆணும் நல்லவனாக இருப்பான். பெண் கெடுமதி கொண்டவளாக இருந்தால் ஆணும் அப்படித்தான் உருவாக்கப்படுவான். இப்போது நாட்டில் நடக்கும் பலவித செயல்களை பார்க்கும்போது எப்படிப்பட்ட சமுதாயம் உருவாகிக்கொண்டிருக்கிறது அதற்குக் காரணம் யார் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரியும்.

14/2/2011 தினகரன்

சென்னை : தாமல் ஏரிக்கரையில் தலையில்லாமல் கிடந்த உடலுக்குரிய தலை போளூரில் கிடைத்தது. கொலையானவர் சலூன் கடைக்காரர் என்பதும், கொலையாளியின் அத்தையுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததால் கொல்லப்பட்டார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீசில் சீனிவாசன் அளித்த வாக்குமூலம்:

ரவியின் சலூன் கடைக்கு அடிக்கடி வருவேன். இதனால் நண்பர்களானோம். அவரும் எனது வீட்டுக்கு வருவார். அப்போது, எனது அத்தை லட்சுமியுடன் ரவிக்கு பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இருவரும் உல்லாசமாக இருந்ததை நான் பார்த்து ஆத்திரமடைந்தேன். பின்னர், நண்பர்களுடன் சேர்ந்து, ரவியை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினேன். அதன்படி கடந்த 10ம் தேதி மது வாங்கி தருவதாக ரவியை காரில் அழைத்துச்சென்று, சென்னையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினோம்.

போதை தலைக்கேறியதும் காரில் வைத்து ரவியை அடித்து உதைத்தோம். அவர் மயங்கியதால், தாமல் ஏரி பகுதிக்கு கொண்டு வந்தோம். அங்கு, ரவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தோம். உடலை ஏரியில் வீசிவிட்டு, அடையாளம் தெரியாமல் இருக்க தலையை தனியாக துண்டித்து, திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே படவேடு கிராம மலை பகுதியில் புதைத்தோம். இவ்வாறு சீனிவாசன் கூறினார்.

இதையடுத்து, புதைக்கப்பட்ட தலையை மீட்பதற்காக 4 பேரையும் படவேடு மலை பகுதிக்கு போலீசார் அழைத்துச்சென்றனர். அடையாளம் காட்டிய இடத்தில் தலையை தோண்டி எடுத்தனர். பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு தலை அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து கத்தி, கொலைக்கு பயன்படுத்திய குவாலிஸ் கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 4 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

======

அத்தைக்கு மட்டுமல்ல பலருக்கு இதுபோல் ஏற்பட்ட ஆசையால் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று நீங்களே பாருங்கள்...


தினமலர் நவம்பர் 06,2010

குழந்தைகளை தவிக்கவிட்டு மருமகனுடன் அத்தை ஓட்டம்
புதன்கிழமை, அக்டோபர் 27, 2010 Thats Tamil

கள்ளத்தொடர்பில் பிறந்த சிசுவைக் கொலை செய்த தாய்

அக்டோபர் 25,2010 தினமலர்

அக்டோபர் 09,2010 தினமலர்
கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொலை செய்த தாய்க்கு ஆயுள்
தினமலர் அக்டோபர் 02,2010
"உல்லாசத்திற்கு' இடையூறாக இருந்த குழந்தை கொலை நாடகமாடிய தாய்
தினமலர் செப்டம்பர் 16,2010
காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகளுக்கு சூடு வைத்து சித்திரவதை செய்த ஆசிரியை
செப்டம்பர் 16, 2010 ThatsTamil
ஜூலை 29,2010 தினமலர்
கள்ளக்காதலுடன் ஓடிய தாயை பார்த்ததும் அழுத குழந்தைகள்
அக்டோபர் 29,2009 தினமலர்

====



இளம் பெண்களின் இந்த சொல்லுக்கு அரசியல்வாதிகள் மயங்கமாட்டார்கள்!

இளம் பெண்கள் எது சொன்னாலும் அன்புடன் கேட்கும் அரசியல்வாதிகள் இந்த விஷயத்தை மட்டும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளமாட்டாகள் என்று எல்லோருக்கும் தெரியும்.


எங்கே பார்த்தாலும் ஊழல், எதற்கெடுத்தாலும் லஞ்சம் கொதித்து போன ஜம்மு பகுதி மாணவர்கள் லஞ்சம், ஊழலுக்கு எதிரான பதாகைகள் பிடித்தபடி ஊர்வலமாகச் சென்றனர். (தினமலர் கருத்துப் படம் 13.2.2011)

துணுக்குச் செய்தி:

ஐநாசபையில் உரையை மாற்றிப்படித்தார் எஸ்எம் கிருஷ்ணா பிப்ரவரி 13,2011 தினமலர்
நியூயார்க்: ஐநா சபையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தன்னுடைய உரையை வாசிக்காமல் மற்றவர்களுடைய உரையை வாசித்ததால் குழப்ப நிலை ஏற்பட்டது. அமெரிக்காவில் உள்ள ஐ.நா சபையில் ஜி4 [...]



Saturday, February 12, 2011

வழக்கறிஞர்களை நம்பினால்?!

சட்டம் படித்து அதையே தொழிலாக செய்துகொண்டிருக்கும் இவர்களால் தங்களது பிரச்சனையையே சட்டப்படி தீர்த்துக்கொள்ள முடியாமல் இப்படி சாலையில் அமர்ந்து அடுத்தவருக்கு இடையூறு ஏற்படும்படி போராடிக்கொண்டிருந்தால் அடுத்தவர் பிரச்சனையை எப்படி சட்டத்தின் மூலம் இவர்களால் நீதிமன்றத்தில் தீர்த்துவைக்க முடியும்? அப்படியென்றால் இவர்களுக்கே சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லையா?


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மன்றோ சிலை அருகே அகில இந்திய வக்கீல்கள் சங்கத்தினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். (தினமலர் 2.12.2011கருத்துப்படம்)




விவாகரத்துக்களை தடுக்க எளிய வழி

இன்றைய தினமலர் செய்தித்தாளில் நாட்டில் விவாகரத்துக்கள் அதிகரித்துவிட்டன என்று வருத்தப்பட்டு ஒரு சிறப்புக் கட்டுரை எழுதியிருக்கிறார்கள்.

இந்த விவாகரத்துக்கள் அதிகரிப்பதற்கு முற்றிலும் ஆண்கள்தான் காரணம். மனைவியை “அட்ஜஸ்ட்” செய்து வாழத்தெரியாத ஜென்மங்கள்! இந்த வீடியோவைப் பார்த்தாவது மனைவியிடம் எப்படி அன்பாக நடந்து மனைவியின் மனம் கோணாமல் நடக்கவேண்டும் என்று கற்றுக்கொள்ளட்டும்.




மணந்தோம்; மறப்போம்! பிரிய துடிக்கும் ஜோடிகள்: ஒரே ஆண்டில் 1,759 வழக்குகள்

தினமலர் பிப்ரவரி 11,2011

குடும்ப உறவை வெட்டிக் கொள்வதில் ஆண், பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதால் கோவை குடும்ப கோர்ட்டில் கடந்த ஆண்டில் மட்டும் 1,759 விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. "அதிகரித்து வரும் வழக்குகளால் தாமதத்தை தவிர்க்க கூடுதலாக ஒரு கோர்ட் தேவை' என்கின்றனர், கோவை வக்கீல்கள்.

கலாசார சீரழிவு, யோசனை கூற உறவினர் இல்லாமை, தனிக்குடித்தன கோரிக்கை, பொறாமை, கள்ளத் தொடர்பு, தாம்பத்ய உறவில் ஏமாற்றம், ஆடம்பரம் இப்பிரச்னைகள் குடும்ப ஒற்றுமையை சீர்குலைக்கிறது. ஒரு சில குடும்பங்களில் மட்டுமே வரதட்சணை கேட்டு கணவர் துன்புறுத்துகிறார் என்ற புகார் எழுகிறது. "திருமணமாகி, ஒரு ஆண்டுக்கு பின்னரே விவாகரத்து' என சட்டத்தில் இடமுள்ளதால் திருமணமான சில நாட்களிலேயே பிரிந்த தம்பதிகள் ஓராண்டு காத்திருந்து கோர்ட்டுக்கு வருகின்றனர். விசாரணை துவங்கும் முன் விவாகரத்து கேட்கும் கணவன், மனைவிக்கு தனித்தனியாகவும், சேர்ந்தும் கவுன்சிலிங் தரப்படுகிறது. ஆனாலும், "வெட்டிக் கொள்வதை' விட்டுக் கொடுக்காமல் கோர்ட்டுக்கு வருவோர் கவுன்சிலிங் நடக்கும் போதும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியான குற்றசாட்டையே சுமத்திக் கொள்கின்றனர். வேறு வழியின்றி கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்படுகின்றன. விதிவிலக்காக ஒரு சிலர் மட்டுமே சேர்ந்து வந்து "மியூச்சுவல் டைவர்ஸ்' கேட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளில் சென்னை (இரண்டு கோர்ட்கள்), மதுரை, கோவை மற்றும் சேலத்தில் உள்ள குடும்ப கோர்ட்களில் பதிவாகும் வழக்குகள் ஆயிரக்கணக்கில் அதிகரித்துள்ளன. இதற்கு, பெண்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும், தன்னம்பிக்கையும் தான் காரணம் என்கின் றனர், வக்கீல்கள். தற்போது, குடும்ப கோர்ட்டில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் வழக்கு தொடர்கின்றனர். குறிப்பாக ஐ.டி.,துறையினர் தான் அதிகம். பொதுவாக பெண்கள் சொல்லும் காரணம்," தனிக்குடித்தனம் நடத்த விரும்பாமல், பெற்றோருடன் கூட்டுக் குடும்பமாக வாழவே கணவர்கள் எதிர்பார்க்கின்றனர். சிலர் கட்டாயப்படுத்துகின்றனர்' என்கின்றனர். கோவை கோர்ட்டில் நான்கு ஆண்டுகளில் படிப்படியாக விவாகரத்து வழக்குகள் அதிகரித் துள்ளன. கடந்த 2009ல் 1,253 விவாகரத்து வழக்குகளும், 239 ஜீவனாம்சம் கேட்பு வழக்குகளும் பதிவாகின. கடந்த ஆண்டு(2010) 1.429 விவாகரத்து வழக்குகளும், 330 ஜீவனாம்சம் கேட்பு வழக்குகள் என 1,759 வழக்கு பதிவாகியுள்ளன. வழக்குகள் அதிகரிப்பால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் பல வழக்குகள் முடிக்கப்பட்டு விவாகரத்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளன. இருந்தாலும் 2010, டிச.,31ல் 1,339 விவாகரத்து வழக்குகள் நிலுவையில் இருந்தன.

தற்போதைய நிலவரப்படி, ஒவ்வொரு மாதமும் 120 வழக்குகளுக்கும் கூடுதலாக பதிவாகின்றன. "அடுத்து வரும் ஆண்டுகளில் இது பல மடங்கு உயரும்' என வக்கீல்கள் தெரிவித்தனர். தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்கள், பத்திரிக்கைகளில் வெளியாகும் சில செய்திகள் விவாகரத்து பெறலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகின்றன.எனவே "மணந்தோம், மறந்து விடுவோம்' என முடிவு எடுக்காமல் பொறுமையும், சிறந்த அணுகுமுறையையும் கடை பிடித்தால் வாழ்க்கையில் சிக்கல் இருக்காது.

===========


Friday, February 11, 2011

சென்னையில் மகிழ்ச்சிக் களத்தில் இறங்கிய பெண்கள்

பில்லா சுரேசையும், விஜயனையும் ஈவு, இரக்கமின்றி கழுத்தை அறுத்து கொன்ற கொலையாளிகள், அவர்களது குடும்பத்தினர் யார் மீதும் தாக்குதல் நடத்தவில்லை. பில்லா கழ...

பெப்ரவரி 11, 2011 மாலை மலர் செய்தி


பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்

விஜயனை கொன்ற பிறகு 4-வது மாடியில் இருந்து இறங்கிய கொலையாளிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கூச்சல் போட்டுள்ளனர். எதிரிகள் ஒழிந்து விட்டனர் என்று கூடியபடி ஏகாம்பரம் பிள்ளைத் தெரு முனையில் நின்று ஆடி, பாடி உள்ளனர். அது மட்டுமின்றி இரட்டை கொலையை கொண்டாடும் விதமாக பட்டாசும் வெடித்துள்ளனர். சுமார் 10 நிமிடம் அந்த பகுதியை அல்லோகலப்படுத்திய பிறகே கொலையாளிகள் ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்து சென்றுள்ளனர்.

கொலையாளிகளில் 4 பேர் பெண்கள்

சென்னையில் எத்தனையோ ரவுடிக்கும்பல்கள் உள்ளன. அந்த ரவுடிக் கும்பல்களில் பெண்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆண் ரவுடிகளுக்கு உதவிகள் செய்வார்களேத் தவிர, கொலை செய்யும் இடங்களுக்கு செல்ல மாட்டார்கள். ஆனால் மயிலாப்பூரில் நடந்துள்ள இரட்டைக் கொலையில் பெண் ரவுடிகளும் களத்தில் இறங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

30 பேர் கொலை கும்பலில் 4 பேர் பெண்கள் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த 4 பேரில் சந்திரா, ரேணுகா என்ற இரண்டு பேர் மட்டும் பிடிபட்டுள்ளனர். இவர்களில் சந்திரா ஆயுதம் ஏந்தி வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் சந்திராவுக்கு உடம்பில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கைதானவர்களில் சந்திரா மட்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



கணவனைப் பிரிந்த 498A-காரிகைகளுக்கு நல்வழி பிறக்குமா?

மாலை மலர்
சென்னை, பிப். 11-2011
சென்னை அபிராமபுரம் கோவிந்தசாமி நகர் கட்ட பொம்மன் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் (34). பந்தல் போடும் தொழிலாளி. இவருக்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அபிராமபுரத்தில் குடும்பம் நடத்தி வந்தனர். கஸ்தூரிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. கணவர் பெயர் ஆறுமுகம் பெங்களூரைச் சேர்ந்தவர். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தனர்.

கஸ்தூரி தனது மகளை தாய் வீட்டில் ஒப்படைத்து விட்டு லோகநாதனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ஆறுமுகம் மனைவியைத் தேடி அபிராமபுரம் வந்தார். லோகநாதனை சந்தித்து மனைவியை தன்னுடன் அனுப்புமாறு கூறினார். கஸ்தூரியையும் தன்னுடன் வருமாறு அழைத்தார். அதற்கு இருவரும் மறுத்து விட்டனர்.
நேற்று இரவு 11.30 மணிக்கு ஆறுமுகம் மீண்டும் வந்து லோகநாதனிடம் மனைவியை தன்னுடன் அனுப்புமாறு கூறினார். அனுப்ப மறுத்ததால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லோகநாதனை குத்தினார்.

இதில் கத்திக்குத்து பட்ட லோகநாதன் அதே இடத்தில் இறந்தார். பின்னர் ஆறுமுகம் கத்தியுடன் போய் அபிராமபுரம் போலீசில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

ஏதோ ஒரு காரணத்தால் தாலி கட்டிய கணவனைப் பிடிக்காமல் சிலர் பிரிந்து வாழ்கின்றனர். சிலர் பலவித தப்புக் கணக்குப் போட்டு கணவனையும் அவனது குடும்பத்தையும் சிறையில் தள்ளவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பொய் வரதட்சணை வழக்குகளை போட்டுவிட்டு பிறகு கணவனைப் பிரிந்து வாழும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இந்திய நீதித்துறையின் புண்ணியத்தால் வழக்கும் ஒரு முடிவுக்கு வராது, SIF-ன் தவறான வழிகாட்டுதலால் கணவனும் அவ்வளவு எளிதாக மனைவிபோடும் கணக்கிற்கு அடிபணிந்து அவளது வழிக்கு வரமாட்டான். கடைசியில் இதுபோன்ற 498A-இளம் மனைவியர் இளமையில் தனிமையில் இருக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டு நீதிமன்றத்திலும், காவல்நிலையங்களிலும் பார்வைக்கு விருந்தாகிவிடுகிறார்கள்.


இப்படி எந்தப் பிரிவின் கீழ் கணவனைப் பிரிந்து இருந்தாலும் சட்டப்படி விவாகரத்து செய்யும்வரை இவர்கள் அந்த ஆணுக்கு சட்டப்படி மனைவிதான் என்று இந்திய திருமணச் சட்டம் சொல்கிறது. இந்த சட்டம் ஆணுக்கும் பொருந்தும் என்பதால் சில பொய் வரதட்சணை வழக்குப்போடும் பெண்கள் கணவனை துன்புறுத்துவதாக நினைத்துக்கொண்டு சட்டப்படியான விவாகரத்தைப் பெறாமல் தனியாக இருந்துகொண்டு திருமணமான பெண் என்ற பெயரிலும் இல்லாமல், விவாகரத்து பெற்றவள் என்ற பெயரிலும் இல்லாமல், திருமணம் ஆகாதவள் என்ற பெயரிலும் இல்லாமல் சமுதாயத்தில் ஒரு சுய அடையாளமே இல்லாமல் “498A-பொம்பளை” என்ற ஒரு தனிப்பிரிவாக திரிந்துகொண்டிருக்கிறார்கள்.

கடைசியில் இளமையில் தனிமையில் இருக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டு இளமையின் உந்துதலால் திருமணம் செய்யாமல் கூடிவாழலாமா? கள்ளக்காதலில் ஈடுபடலாமா? என்று தப்புத் தப்பாக யோசிக்கவேண்டியிருக்கிறது.


இவர்கள் தங்களது சுயதேவைக்கு ஆள் தேடும்போதுதான் சமுதாயத்தில் பிரச்சனைகள் உருவாகின்றன. கள்ளக்காதல், கொலை போன்ற குற்றங்கள் சமுதாயத்தில் உருவாகின்றன. இதோடு மட்டுமல்லாமல் இவர்களின் வயிற்றில் பிறந்த பாவத்திற்காக இவர்களின் குழந்தைகள் சரியான ஒரு வாழ்க்கை முறை இல்லாமல் சிதைக்கப்படுகிறார்கள்.

சமுதாயத்தில் 498A-பெண்களுக்கு இதுபோன்ற இன்னல்கள் ஏற்படாமல் இருப்பதற்கு பெண்கள் அமைச்சகமும், பெண்கள் வாரியமும் 498A சட்டத்தை உருவாக்கிக் கொடுத்ததுபோல் தனியாக “நிதி ஒதுக்கீடு” செய்து பொய் வரதட்சணை வழக்குப்போட்டுவிட்டு இளமையில் தனிமையில் தவிக்கும் பெண்களுக்காக தனியாக அன்னை “..............’’ 498A-பெண்கள் மறுமணத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கித் தரவேண்டும். (498A) மரம் வைத்தவர்கள்தானே (மறுமணம் என்ற) தண்ணீரையும் ஊற்றவேண்டும்!

இந்த புதிய திட்டத்தை உருவாக்கினால் நாட்டில் 75% வன்முறைகள் குறைந்துவிடும். இப்போது நாட்டில் நடக்கும் பெரும்பாலான வன்முறைகள் இதுபோன்ற கள்ளக்காதல், குடும்பப்பிரச்சனை இவைகளால்தான் ஏற்படுகிறது என்று தினமும் செய்தித்தாள் படிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும்.


இந்தத்திட்டத்தை உருவாக்கினால் நாட்டில் பல 498A அபலைப் பெண்கள் தங்களுக்கென்று சரியான ஒரு முகவரியுடன் தைரியமாகவும், சுதந்திரமாகவும் தங்களுக்கான வாழ்க்கைத்துணையை தேடிக்கொள்ளும் அற்புதமான நிலை ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை. அதுவரை மேலுள்ள செய்தியைப்போலத்தான் பல வன்முறைச்செய்திகள் தினம் தினம் வந்துகொண்டிருக்கும்.



Thursday, February 10, 2011

மங்களகரமான திருட்டு!

ஆண் செய்தால் திருட்டு, பெண் செய்தால் அது மங்களகரமான திருட்டு. அப்படிச்சொல்வதுதானே பெண்ணுரிமைக்குக் கொடுக்கும் மரியாதை!

எப்போதுதான் பெண் அதிகாரிகளை நிம்மதியாக “தொழில்” செய்ய விடுவார்களோ இந்த கொடுமைக்கார பொதுமக்கள், குறிப்பாக “ஆண்கள்”.

தினகரன் 11.2.2011

சென்னை : பதிவு செய்யப்பட்ட பத்திரத்தைக் கொடுக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்ட பெண் பதிவாளர் கைது செய்யப்பட்டார். சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் பாசித். இவர், அதே பகுதியில் செருப்புக் கடை வைத்துள்ளார். இவரது உறவினர் ஜியாவுல் ஹக். இவர், சவுதி அரேபியாவில் வசிக்கிறார். இதனால் அவர் அனுப்பிய பணத்தைக் கொண்டு ஏழுகிணறு பகுதியில் ரூ.25 லட்சத்துக்கு ஒரு வீட்டை அப்துல் பாசித் வாங்கினார்.

பின் அதை ஏழுகிணறு பகுதியில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தில் நேற்று பதிவு செய்தார். பதிவு செய்த பத்திரத்தை அப்துல் பாசித் கேட்டபோது, அதற்காக ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று மாவட்ட பதிவாளர் ராதா (57) கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அப்துல் பாசித், இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி துக்கையாண்டியிடம் புகார் செய்தார்.

நேற்று மாலையில், ஏழுகிணறு பகுதியில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காத்திருந்தனர். அப்போது, ரூ.5 ஆயிரத்தை ராதாவிடம் அப்துல் பாசித் கொடுத்தபோது, அவரை கைது செய்தனர்.



இந்திய அரசியல் ஒரு பார்வை - சிரிக்க, சிந்திக்க

செய்திப் படங்கள்- தினமலர் 11/2/2011

2020-ஐ நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்திய அரசியல்!

பீகார் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ், பாட்னாவில் நடத்திய ஊழியர் கூட்டத்திற்கு, வந்திருந்த தொண்டர் ஒருவர் ஆசீர்வாதம் பெறுகிறார்.


கடலூர் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற கூட்டம் சேர்மன் தங்கராசு தலைமையில் நடந்தது.

சென்னையில் நடைபெற்ற ம.பெ.சி சிலை திறப்பு விழாவில் முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட தங்க வாள் மற்றும் கிரீடத்தை அமைச்சர் பரிதி இளம்வழுதி மேடையில் வைத்து ஏலமிட்டார், இதை தொண்டர் ஒருவர் 55 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தார்.



Wednesday, February 09, 2011

காதலித்தால் மரணம்தான் பரிசா?

கணவனைப் பிடிக்காததால் வேறு ஒருவனைக் காதலித்தால் அதற்கு மரணம்தான் பரிசா? என்ன ஒரு கொடுமை இந்த நாட்டில்! “அபலைப் பெண்களை” காப்பாற்ற யாருமே இல்லையா? கணவனிடம் வரதட்சணைக் கொடுமை, கள்ளக் காதலனிடம் கொலை செய்துவிடுவானோ என்ற அச்சம். பெண்ணின் “அன்பை” பக்குவமாக புரிந்துகொண்டு அன்பு செலுத்த நேர்மையான ஆண்களே இல்லையா?

கணவனை ஏமாற்றிய மனைவி கள்ளக்காதலில் மரணம்
மாலைமலர் 8/2/2011

கோவை, பிப். 8-

கணவரை ஏமாற்றி விட்டு கள்ள காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் கொலை செய்யப்பட்டார். கோவை சாய்பாபாகாலனி பகுதியை சேர்ந்தவர் அருண் தினேஷ் (25). ஓட்டல் ஊழியர். இவரது மனைவி மலர்கொடி (21). இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

மலர்கொடி மருந்து கடையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மலர்கொடிக்கு வடவள்ளி வி.ஓ.நகரை சேர்ந்த தன்ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். நாளடைவில் அது கள்ள காதலாக மாறியது. 2 பேரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர்.

கள்ளகாதல் விவகாரம் கணவன் அருண்தினேசுக்கு தெரியாமல் இருப்பதற்காக தன்ராஜை தனது பழைய நண்பன் என்று கணவரிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். நேற்று முன்தினம் மலர்கொடியும், அருண்தினேசும், வடவள்ளியில் உள்ள தன்ராஜ் வீட்டிற்கு விருந்துக்கு சென்றனர்.
நேற்று தன்ராஜ் மலர் கொடிக்கு போன் செய்து வீட்டில் யாரும் இல்லை. நீ உடனே புறப்பட்டு வா? நாம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி அழைத்துள்ளார். இதையடுத்து மலர்கொடி கணவரிடம் கோவையில் வேலைக்கு விண்ணப்ப மனு கொடுக்க போவதாக பொய்யான தகவலை கூறிவிட்டு தன்ராஜ் வீட்டிற்கு சென்றார்.

அங்கு 2 பேரும் காலை முதல் மதியம் வரை உல்லாசமாக இருந்தனர். அப்போது தன்ராஜூக்கும் மலர்கொடிக்கும் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கள்ளகாதலன் தன்ராஜ் மலர்கொடியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தான்.

பின்னர் போன் மூலம் நடந்த தகவலை தாய் விஜயலட்சுமிக்கு போன் செய்து கூறினான். மதுரைக்கு செல்வதாக கூறிவிட்டு தப்பி ஓடிவிட்டான். அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி வீட்டிற்கு வந்து பார்த்தார். அங்கு படுக்கை அறையில் மலர்கொடி நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். மலர்கொடி மூக்கில் இருந்து ரத்தம் வடிந்திருந்தது.

இதுகுறித்து விஜயலட்சுமி வடவள்ளி போலீசுக்கு தகவல் கொடுத்தார். கூடுதல் துணை சூப்பிரண்டுகள் ஜெயபாண்டியன், அண்ணா துரை, பேரூர் துணை சூப்பிரண்டு முத்தரசு ஆகியோர் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்துவிட்டு தலைமறைவான தன் ராசை பிடிக்க பேரூர் டி.எஸ்.பி. முத்தரசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது தன்ராஜின் மோட்டார் சைக்கிள் சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் நிற்பதை கண்டு பிடித்தனர்.

எனவே கொலையாளி தன்ராஜ் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சிங்காநல்லூரில் இருந்து மதுரைக்கு தப்பி சென்றிருக்கலாம் என தெரிகிறது. தனிப்படை போலீசார் மதுரை விரைந்துள்ளனர்.

தினமலர் பிப்ரவரி 10,2011

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே கள்ளக்காதலியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.மேலகுமிழங்குளத்தை சேர்ந்தவர் நாகேஷ் (41). இவரது மனைவி சீதை (32). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த பெரியசாமி மகன் முருகன்(28) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதில் இருவரும் வெளியூருக்கு ஓடி விட்டனர். சில மாதங்களில் சீதை ஊர் திரும்பினார். முருகனும் ஊர் திரும்பி, வேறு திருமணம் செய்து கொண்டார்.கடந்த 2007 ஜூன் 6ம் தேதி முருகனை சீதை சந்தித்தார். முருகன், "எனக்கு திருமணம் ஆகி விட்டது, நீ மருந்து குடித்து செத்து தொலை' எனக்கூறினார். வீடு திரும்பிய சீதை, தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கில் முருகனுக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து அருப்புக்கோட்டை சப் கோர்ட் நீதிபதி ஜெசிந்தா மார்டின் தீர்ப்பளித்தார்.

====

  • கள்ளக்காமத்தலைவனின் பேச்சை தலையில் தாங்கி தட்டாமல் உயிரைக்கூட விடும் பெண்கள் தன்னுடைய கணவனின் பேச்சை மட்டும் மதிப்பதில்லையே!
  • கள்ளக்காமத்தலைவனின் மீது வைத்திருக்கும் மதிப்பு மரியாதையில் சிறிதளவுகூட வயதான மாமனார் மாமியார் மீது வைப்பதில்லையே!
  • தான் பெற்ற குழந்தைகள் மீது இருக்கவேண்டிய பாசத்தைவிட கள்ளக்காமத்தில் இருக்கும் மோகம் அதிகமாக இருக்கிறதே!
ஆனால் இதெல்லாம் இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதை "பெண்ணடிமைத்தனம்" என்று சொல்வார்கள் பல தலைவிகள். அதனால் இதுபோன்ற கள்ளக்காமத்திற்கு ஏங்கும் “அப்பாவிப் பெண்களை” ஆதரித்து குரல் கொடுத்தால் நீங்களும் “பெண் விடுதலை விரும்பி” என்று சமுதாயத்தால் போற்றப்படலாம்.

திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் ஏதோ ஒரு காரணத்தால் மனைவி இறந்துவிட்டால் கணவனும், அவனது குடும்பத்தாரும்தான் அதற்குக் காரணம் என்று கூறி “வரதட்சணைக் கொலை” என்ற ஒரு சட்டத்தின் பெயரில் கணவனை அவனது குடும்பத்தோடு சிறையில் அடைக்கும் நடைமுறை இந்தியாவில் பல ஆண்டுகளாக இருந்துவருகிறது. இந்த சட்ட நடைமுறையுடன் சேர்த்து மனைவி கள்ளக்காமத்தில் பலியானால் அதற்கும் அவளது கணவன்தான் பொறுப்பேற்கவேண்டும் என்று கூறி அதற்காக கணவனுக்கு தூக்குதண்டனை என்று ஒரு புதிய சட்டம் இயற்றவேண்டும் என்று பெண்ணுரிமை பேசி நாட்டு நடப்பிற்கேற்ப ஊரோடு நாமும் அனுசரித்துப்போவதுதான் புத்திசாலித்தனம்.



Monday, February 07, 2011

ஊழலின் நிறம் என்னவென்று தெரியுமா?

அடேங்கப்பா!
தினமலர் பிப்ரவரி 08,2011
(படங்களும், செய்தியும் - தினமலர்)

Latest News

புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சர்ச்சை நீடிக்கையில், தொலைத்தொடர்பு துறையில், அடுத்த மெகா ஊழல் அம்பலமாகியிருக்கிது. 2005ல், இஸ்ரோ செயற்கைக்கோள்களில், "எஸ்-பாண்ட்' அலைவரிசையை [...]


மேலுள்ள படங்களில் சிவப்பு, வெள்ளை நிற புகைகள் தெரிகிறது. இந்த நிறங்களுடன் பச்சை நிறம் தெரிகிறதா என்று பாருங்கள்.

மேலும் பல வண்ணங்களைப் பற்றி தெரிந்துகொள்ள இதைப் படியுங்கள்: 2020க்கு முன்பாகவே இந்தியாவை வல்லரசாக்கிவிட்ட மாமனிதர்கள்!

Sunday, February 06, 2011

கவர்ச்சியான அட்டகாசங்கள்

பின்வரும் திருக்குறள்களை படித்துவிட்டுப் பிறகு பின்வரும் செய்திகளைப் படியுங்கள். அப்போதுதான் செய்தி நன்றாகப் புரியும்! இல்லையென்றால் திருவள்ளுவரையும் ஆணாதிக்க எண்ணம் கொண்டவர், பெண்ணடிமை பேசுபவர் என்று முத்திரை குத்திவிடுவீர்கள்!

"மனைவி" என்ற உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தெய்வப் புலவர் திருவள்ளுவரின் விளக்கம்
:

மனைத்
தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
.

பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.

***********************

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.


உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.

திருவள்ளுவரின் “கள்ளுண்ணாமையும்”, “பிறன்மனை நோக்காமையும்”தான் இப்போது தமிழ்நாட்டின் உயிர் மூச்சாக இருக்கிறது என்று பின்வரும் செய்திகளைப் படித்தால் உங்களுக்கே புரியும்!

தமிழ்ப்பெயர் வைத்த திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளித்து தமிழ் வளர்க்கும் கலியுக தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழைப்போற்றுங்காலத்தில் பின்வரும் செய்திகள் எல்லாம் பெருமைப்படவேண்டிய விஷயங்கள்தான்.


காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி
தினகரன் 7/2/2011

சீர்காழி : கள்ளக்காதலன் சந்திக்க மறுத்ததால் சீர்காழி காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை சேர்ந்தவர் தாமமூர்த்தி. இவரது மனைவி ஜெனட் (30). கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். (498A கணவர்கள் ஜாக்கிரதை!) இதற்கிடையே ஜெனட் பஸ்சில் சென்று வந்தபோது நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள கோதண்டபுரத்தைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ராஜசிம்மனுடன்(35) பழக்கம் ஏற்பட்டது.

ராஜசிம்மன் கடந்த 2 ஆண்டுகளாக அடிக்கடி வேட்டவலம் சென்று ஜெனட்டை சந்தித்து வந்தார். இந்நிலையில் ராஜசிம்மன் சில மாதங்களாக ஜெனட்டை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இதனால் வருத்தமடைந்த ஜெனட் நேற்றுமுன்தினம் சீர்காழி புறப்பட்டு வந்தார். அங்கு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ராஜசிம்மனிடம் ஏன் என்னை பார்க்க வரவில்லை என கேட்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஜெனட் மண்ணெண்ணெய் கேனுடன் சீர்காழி போலீஸ் ஸ்டேஷன் முன்பு தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அதைக்கண்ட போலீசார் ஓடிவந்து அவரை தடுத்தனர். சம்பவம் குறித்து விசாரித்த போலீசார் தற்கொலைக்கு முயன்ற ஜெனட் மீதும், பொது இடத்தில் ஆபாசமாக பேசி பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ராஜசிம்மன் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.


கள்ளக்காதலன் விஷம் குடித்தார் அதிர்ச்சியில் கள்ளக்காதலி தற்கொலை
பிப்ரவரி 07, 2011 தினமலர்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பெற்றோர் கண்டித்ததால், கள்ளக்காதலன் விஷம் குடித்தார். இதையறிந்த, அவரது கள்ளக்காதலி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி, ஜோதிபாசு நகரைச் சேர்ந்தவர் முருகன்(45). இவரது மனைவி அமுதலட்சுமி(35). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. அமுதலட்சு மிக்கும், மகாராஜன்(25) என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இதையறித்த முருகன், அமுதலட்சுமியையும், மகாராஜனை அவரது பெற்றோரும் கண்டித்துள்ளனர். மனமுடைந்த மகாராஜன், பிப்., 4ல் விஷம் குடித்தார். அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த அமுதலட்சுமி, நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாளமுத்துநகர் போலீசார் விசாரித்தனர்.

======

கள்ளக்காம ஜோடிகளின் நல்வாழ்விற்கென தனியாக ஒரு நலவாரியமும், நல அமைச்சகமும் உருவாக்கினால் பல உயிர்கள் பலியாவது தவிர்க்கப்படும். சம்மந்தப்பட்ட அலுவலர்களும், பெண்ணார்வ அமைப்புகளும், வாரியங்களும் இதைக் கருத்தில்கொண்டு தேவையான நிதியுதவியை வழக்கம்போல வெளிநாடுகளிலிருந்து பெறுவதற்கு ஏற்பாடு செய்யலாம்.

“பெண்களுக்கு வரதட்சணைக் கொடுமை” என்ற பெயரில் நிதியுதவி பெறுவதைவிட இந்தக் கள்ளக்காம உயிரிழப்புகளைக் காட்டி நிதியுதவி பெறுவது தான் தற்போதைய “பெண் விடுதலை” வியாபாரத்திற்கான சரியான நிலவரம் (Current Trend). காலத்திற்கேற்ப வியாபார யுக்தியையும் மாற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்!



Thursday, February 03, 2011

குப்பையை கொட்டும் மருமகள்களை தடுப்பது யார்?

விதிமுறையை மீறினால் தப்பில்லை: திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு சென்டர் மீடியனில் விடப்பட்டுள்ள சிறிதளவு இடைவெளியில் டூவீலர்கள் செல்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. (படமும் கருத்தும் - தினமலர் படம் 3.2.11)

மேலுள்ள படத்தைப் பாருங்கள். சட்டத்தை மீறி பொதுமக்களும், காவல் அதிகாரியும் ஒன்றாக இணைந்து சாலையை கடப்பதுபோலத்தான் அப்பாவிகளுக்கெதிராக தொடரப்படும் பொய்வரதட்சணை வழக்குகளிலும் மருமகள்களும், காவல்துறையும் ஒன்றாக இணைந்து செயல்படுகிறார்கள்.

பொய் வரதட்சணை வழக்குகள் பதிவாகும்போது காவல்துறை முறையான புலன்விசாரணை செய்யாமல் இருப்பதால் காவல்துறையும் தங்களுக்கு சாதகமாக பொய் வழக்குப்போட உதவுகிறது என்ற தைரியத்துடன் பல மருமகள்களும் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி தங்களுக்கு தேவையானவற்றை அடைவதற்காகவும், பழிவாங்குவதற்காகவும் தினம் தினம் பல பொய் வரதட்சணை வழக்குகளை குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பல மருமகள்கள் காவல்துறையுடன் சேர்ந்துகொண்டு பொய் வரதட்சணை வழக்குகளை பதிவுசெய்து கணவனையும் அவனது குடும்பத்தையும் துன்புறுத்தி வருகிறார்கள். மருமகள்கள் பொய்யான புகார் அளித்தாலும் அதைக் காவல்துறை முறையாக விசாரணை செய்து அப்பாவிகள் பொய் வழக்குகளில் சிக்கவைக்கப்படாமல் பாதுகாக்கவேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதைவிட அப்பாவிகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதுதான் மிக மிக முக்கியம். ஆனால் நாட்டில் நடப்பதோ தலைகீழ். உண்மையாக புலன் விசாரணை செய்தால் பல பொய் வழக்குகள் நீதிமன்றத்திற்கு செல்லவேண்டிய அவசியமிருக்காது. பல அப்பாவிகளும் தேவையில்லாமல் தங்களது வாழ்வை இழக்க நேரிடாது.

நாட்டில் நடந்துகொண்டிருக்கும் தற்போதைய நடைமுறைப்படி விசாரணை என்பதே பல பொய் வரதட்சணை வழக்குகளில் செய்யப்படுவதில்லை. நடிகர் பிரசாந்த் அவர்களின் மீது சுமத்தப்பட்ட பொய் வரதட்சணை வழக்கை மட்டுமே காவல்துறை முறையாக விசாரணை செய்து அந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் என்று உண்மையான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்தார்கள். அந்த விசாரணை அறிக்கையை இங்கே சென்று பாருங்கள் (நடிகர் பிரசாந்த் அவர்களின் 498A வழக்கின் போலிஸ் விசாரணை முழு அறிக்கை). இதுபோல எத்தனை வரதட்சணை வழக்குகளில் முறையான விசாரணை நடைபெற்றிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

பெரும்பாலான பொய் வரதட்சணை வழக்குகளில் எந்தவித விசாரணையும் செய்யாமல் பிச்சைக்காரன் வாந்தி எடுத்ததுபோல அப்படியே புகாரை “காப்பியடித்து” விசாரணை அறிக்கை என்ற பெயரில் அப்பாவிகளை குற்றவாளி பட்டியலில் சேர்த்து நீதிமன்றங்களில் பொய் வழக்குகளை குவித்துவிடுகிறார்கள். அதனால் இந்திய நீதிமன்றங்கள் பொய் வரதட்சணை வழக்குகள் என்னும் குப்பைகளால் நிரம்பி வழிந்து துர்நாற்றம் அடித்துக் கொண்டிருக்கிறது. இதன்விளைவாகப் பல அப்பாவிகள் நீதிமன்றங்களில் வருடக்கணக்கில் நீதிகிடைக்காமல் அலைந்துகொண்டிருக்கிறார்கள். இந்த அப்பாவிகளின் வயிற்றெரிச்சல் சும்மா விடுமா?



“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.