இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Showing posts with label Woman Police. Show all posts
Showing posts with label Woman Police. Show all posts

Thursday, October 07, 2010

மூத்தோர் இல்லாத வீட்டில் போலிஸ் புகும்

திருமணமானவுடன் மாமியார் மாமனாரை விரட்டிவிட்டு கணவனை அடிமைப்படுத்த நினைக்கும் புரட்சிப் பெண்கள் பலர் இப்போது உருவாகிவிட்டார்கள். பெற்றவர்களை வெளியே விரட்டவேண்டும் அல்லது தனிக்குடித்தனம் போகவேண்டும் என்று பல மனைவியர் கணவனுக்கு வரதட்சணை தடுப்புச் சட்டங்களைக் காட்டி “அன்புக் கட்டளை” போடுகிறார்கள்.

இதுபோன்ற மூத்தோர் இல்லாத குடும்பங்களில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாட்டை களைவதற்கும், தக்க அறிவுரை கூறுவதற்கும் ஆளில்லாமல் எல்லாக் குடும்பப் பிரச்சனைகளுக்கும் “குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் வழிகாணலாம்” “வரதட்சணை தடுப்புச் சட்டங்களைக் காட்டி மிரட்லாம்” என்று பெண்களுக்குத் தவறான வழிகாட்டப்படுவதால் மூத்தோர் இல்லாத வீட்டில் போலிசும் சட்டமும்தான் புகுந்து குடும்பங்களை சிதைத்துவிட்டுச் செல்லும். இதனால் நஷ்டப்படப்போவது பெண்களும், அப்பாவிக் குழந்தைகளும்தான்.

தலைவிகள் சொல்லும் பின்வரும் அறிவுரைகளைப் படித்துவிட்டு அதனைத் தொடர்ந்து வரும் செய்தியையும் படியுங்கள்.


"I want to teach men what their mothers didn’t"

"I am here to teach men what their mothers didn't teach them," declared Women and Child Development Minister Renuka Chaudhury
August 29, 2007
http://www.rediff.com/news/2007/aug/29men.htm

• • • • • • • • • •

Thats Tamil News, 3/4/2008
கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்று குடும்பத் தலைவிகளுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் கூறினார்.

• • • • • • • • • •

கணவருடன் சேர்த்து வைக்க கோரி தர்ணா நடத்திய மனைவி

அக்டோபர் 07,2010 தினமலர்

விருதுநகர்: விருதுநகரில் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கணவர் வீட்டு முன் பெண் தர்ணா போராட்டம் நடத்தினார். போலீசார் சமரசத்திற்கு பின் போராட்டத்தை கைவிட்டார்.

விருதுநகர் பெரிய கிணற்று தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி மகள் அஷ்டலட்சுமி(32). இவருக்கும் முத்தமிழ் வீதி குறுக்கு தெருவைச் சேர்ந்த ஜெயபாலன் மகன் சிவசங்கருக்கும் 1998ல் திருமணம் நடந்தது. வரதட்சணையாக 53 சவரன் நகைகள், பொருட்கள் வழங்கப்பட்டன.

சிவசங்கர், பழைய பாலி பேக் இயந்திரங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு பாலகணேஷ்(12) பாலமுருகன்(9) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.தொழிலுக்காக ஊர், ஊராக சென்று வருபவர். இவர் மனைவியையும், குழந்தைகளையும் கவனிப்பதில்லை. இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். மகளிர் போலீசில் புகார் செய்ததில் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து சமரசம் செய்து அனுப்பினர். இந்நிலையில், சிவசங்கர், மனைவிக்கு நேற்று விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார்.

இதனால் கணவருடன் சேர்த்து வைக்கும் படி கூற மாமனார் வீட்டிற்கு அஷ்டலட்சுமி வந்தார். அங்கு யாரும் இல்லாத நிலையில், பிற்பகல் 3 மணி முதல் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். பாண்டியன் நகர் போலீசார், புகார் தெரிவிக்க கூறியதால், இரவு 7.15 மணிக்கு அஷ்டலட்சுமி தன் போராட்டத்தை கைவிட்டார்.

=======

“வெளிச்சம் புகாத வீட்டில் வைத்தியன் புகுவான்” என்பது பழமொழி

“மூத்தோர் இல்லாத வீட்டில் போலிஸ் புகும்” என்பது புதுமொழி

ஆரோக்கியமற்ற வீட்டிற்குள்தான் வைத்தியன் புகவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வைத்தியன் புகுந்து குடும்பத்திற்குள் ஆரோக்கியத்தை மீண்டும் கொண்டு வருவான்.

அழியப்போகின்ற குடும்பத்திற்குள்தான் போலிஸ் புகும். குடும்பத்திற்குள் போலிஸ் புகுந்த பிறகு பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர்வதை விட குடும்ப அழிவு விரைவுபடுத்தப்பட்டு அதன் அழிவு உறுதிப்படுத்தப்பட்டுவிடும்.

இதுதான் பழமொழிக்கும் புதுமொழிக்கும் உள்ள ஒற்றுமையும் வேற்றுமையும்.




Saturday, October 02, 2010

மகளிர் காவல் நிலையங்களுக்கு பாவ மன்னிப்பு கிடைக்குமா?

Thats Tamil News வியாழக்கிழமை, பிப்ரவரி 19, 2009

சென்னை: சென்னையில் 8 மாத கர்ப்பிணியிடம் தாலி சங்கிலியை லஞ்சமாக கேட்ட பெண் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

சென்னை வியாசர்பாடி, பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஜீவிதா (18). இவரது கணவர் மோகன். ஜீவிதா திருவான்மியூரில் பெண்கள் விடுதி நடத்தி வருகிறார்.
திருமணமானவுடன் ஜீவிதா கர்ப்பமடைந்தார். ஆனால், ஜீவிதாவின் நடத்தையில் மோகன் சந்தேகப்பட ஆரம்பித்தார். சேர்ந்து வாழ வேண்டுமென்றால் பெரிய அளவில் வரதட்சணை வேண்டும் என்றும் சித்ரவதை செய்ய ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தி்ல் ஜீவிதாவின் நகைகளைப் பறித்துக் கொண்டு வீட்டை விட்டு விரட்டிவிட்டார். இதையடுத்து ஜீவிதா தனது பெற்றோர் வீட்டில் தஞ்சமடைந்தார்.

கடந்த 2ம் தேதி தனது தந்தை முரளிகுமார், தாயார் தமிழ்செல்வி ஆகியோரோடு ஜீவிதா அடையார் மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்று இன்ஸ்பெக்டர் கீதாவிடம், தனது கணவர் செய்யும் கொடுமைகள் குறித்து புகார் தந்தார்.

மனுவை வாங்கிக்கொண்ட இன்ஸ்பெக்டர் கீதா, ஜீவிதாவையும் மோகனையும் ஒன்றாக வைத்து விசாரணை நடத்தினார். அப்போது இனிமேல் ஜீவிதாவோடு வாழமாட்டேன் என்று மோகன் பிடிவாதம் செய்தார்.

ஜீவிதா தினமும் தனது பெற்றோருடன் அடையார் போலீஸ் நிலையத்துக்கு நடையாக நடந்தும் கூட இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்காமல் இன்ஸ்பெக்டர் கீதா இழுத்தடித்ததார்.

கணவர் பறித்து வைத்துள்ள நகைகளையாவது மீட்டுத்தாருங்கள் என்று ஜீவிதா கோரினார்.

பலநாள் ஜீவிதாவை அலைய விட்ட இன்ஸ்பெக்டர் கீதா, இனிமேல் இந்த வழக்கை நான் விசாரிக்க மாட்டேன், கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன் என்று எழுதிக்கொடு என்று ஜீவிதாவிடம் கூறியுள்ளார்.

ஜீவிதா கதறி அழவே, உன் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் ரூ.5,000 தர வேண்டும் என்று கூறியுள்ளார். தன்னிடம் அவ்வளவு பணமில்லை என்று கூறிய ஜீவிதாவிடம், கழுத்துல கிடக்கிற தாலிய வித்துக்கு வந்து காச குடுடி என்று சினிமா வில்லி போல இன்ஸ்பெக்டர் கீதா பேசவே, அதிர்ந்துபோன ஜீவிதா லஞ்ச ஒழிப்பு போலீசில் கீதா மீது புகார் கொடுத்தார்.

இதையடுத்து கீதா மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புப் பிரிவு இயக்குனர் ராமானுஜம், ஐ.ஜி. துக்கையாண்டிக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து எஸ்பி பவானீஸ்வரி, துணை எஸ்பி பொன்னுசாமி, இன்ஸ்பெக்டர்கள் பரமசாமி, அசோகன், இம்மானுவேல் ஞானசேகரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

நேற்று மாலை அடையாறு போலீஸ் நிலையத்தில் மாறுவேடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காத்திருக்க, ஜீவிதா ரூ.5,000 பணத்தோடு, இன்ஸ்பெக்டர் கீதாவை போய் பார்த்தார்.

அப்போது பணத்தை கையில் வாங்காமல், தன்னுடைய டைரியை கொடுத்து அதற்குள் பணத்தை வைக்கும்படி இன்ஸ்பெக்டர் கீதா கூறினார். ஜீவிதாவும் பணத்தை டைரிக்குள் வைத்தார்.

அப்போது அங்கு புகுந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டர் கீதாவை கைது செய்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சண்டை போட்ட கீதா பி்ன்னர் தரையில் விழுந்து புரண்டு அழுது நாடகமாடினார்.

ஆனாலும் அவரை போலீசார் விடவில்லை. அவரைக் கைது செய்ததோடு சைதாப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் உள்ள கீதாவின் வீட்டிலும் சோதனை நடத்தி ஏராளமான சொத்துப் பத்திரங்களை கைப்பற்றியுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அடையார் காவல் நிலையத்தில் பணியாற்றும் கீதா மீது ஏற்கனவே ஏராளமான லஞ்ச குற்றச்சாட்டுகள் உள்ளன.

நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரித்தபோது திடீரென்று தரையில் விழுந்து உருண்டு அழுததோடு நெஞ்சு வலிப்பதாகக் கூறினார்.

பின்னர் 'மயக்கம்' போட்டு விழுந்தார். டாக்டர் வரவழைக்கப்பட்டு அவருக்கு 'சிகிச்சை' அளிக்கப்பட்டது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு வழக்குக்கும் இன்ன விலை என நிர்ணயித்து ஆட்டம் போட்டு வந்த கீதா வரதட்சணை புகார்களில் இரு தரப்பினரிடமும் பணம் வாங்கிக் கொண்டு கணவன்-மனைவியை பிரித்து அனுப்பும் வேலையை செய்வதில் கில்லாடி.

இதுவரை ஒரு தம்பதியைக் கூட கவுன்சிலிங் மூலம் சேர்த்து வைக்காதவர் என்ற பெருமையுடைவர்.

கீதாவுக்கு லஞ்சம் வாங்கித் தருவதில் பெண் ஏட்டு சோபியா என்பவரும் பக்க பலமாக இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையே இன்ஸ்பெக்டர் கீதாவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ள போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், போலீஸ் வேலையை பொது மக்களுக்கு சேவை செய்வதற்காக பயன்படுத்துங்கள். சட்டவிரோதமாக சம்பாதிக்க முயலும் போலீசார் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். லஞ்சம் கேட்கும் போலீஸ் அதிகாரிகள் பற்றி பொதுமக்கள் என்னிடம் நேரடியாக புகார் செய்யலாம் என்றார்.

மகளிர் காவல் நிலையங்களில் பொது காவல் நிலையங்களுக்கு இணையாக அநியாயங்களும், கட்டப் பஞ்சாயத்துகளும், லஞ்சம்-ஊழலும் கொடி கட்டிப் பறந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் புகார் தருவோர், பிடிபட்டோரிடம் கெட்ட வார்த்தைகளை பிரயோகப்படுத்துவதிலும் மகளிர் காவல் நிலையங்கள் எந்த விதத்திலும் சளைத்தவை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

==============

மகளிர் காவல்நிலையங்களில் பொய் வரதட்சணை வழக்குகளில் அப்பாவிகளை துன்புறுத்தி அவமானப்படுத்தும் - செய்த பாவத்திற்கும், செய்துகொண்டிருக்கின்ற பாவத்திற்கும், செய்யப்போகிற பாவத்திற்கெல்லாம் விமோசனம் கிடைக்கவேண்டுமென்றால் கீழுள்ள படத்தில் உள்ளதுபோல் செய்தால் கிடைத்துவிடுமா?

செய்தியும் படமும் தினமலரில் வந்துள்ளது.



புது பயிற்சி: பெண் போலீஸ் கோலம்மெல்லாம் போடுறாங்க ஏதாவது புது பயிற்சியா இல்ல கோலப் போட்டி நடக்குதான்னு நினைச்சிடாதீங்க. போலீஸ், பொதுமக்கள் நல்லுறவுக்காக பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு முன்னதாக போடப்பட்ட கோலம்தான் இது. பரவாயில்லை வீடு போல் பாவித்து இப்படியெல்லாம் செய்தா, மக்கள் மத்தியில போலீஸ் "உங்கள் நண்பன்னு' நிருபிக்கலாமில்ல. (தினமலர் அக்டோபர் 2, 2010)




“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.