இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Showing posts with label இந்தியப் பெண்கொடுமை. Show all posts
Showing posts with label இந்தியப் பெண்கொடுமை. Show all posts

Tuesday, April 19, 2011

இந்தியக் காதலுக்கு இது புதுசு!


துரைப்பாக்கம் : பழைய காதலனுடன் தொடர்பு வைத்திருந்ததால் மனைவியை ஒன்றரை மாதத்துக்கு முன் வீட்டை விட்டு விரட்டினார் மெக்கானிக். குழந்தையை கேட்டு திரும்பி வந்த மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு போலீசில் அவர் சரணடைந்தார்.

பெருங்குடி கல்லுக்குட்டை அம்பேத்கர் புரட்சி நகரை சேர்ந்தவர் பாரி (25). ஆட்டோ மெக்கானிக். இவரது மனைவி கவிதா (22). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடமாகிறது. ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

கடந்த சில மாதங்களாக கணவன் வேலைக்கு சென்றதும் கவிதா வெளியே சென்றுள்ளார். இதை பாரி கண்காணித்துள்ளார். அப்போது, ராயபுரத்தை சேர்ந்த கதிர் என்பவரை கவிதா திருமணத்துக்கு முன்பே காதலித்து சுற்றித் திரிந்ததும், அவர்களுக்குள் மீண்டும் தொடர்பு ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்தது. மனைவியை கண்டித்து, கதிருடன் தொடர்பை விடும்படி கூறியுள்ளார்.

எனினும் அவர்கள் தொடர்பு நீடித்துள்ளது. இதனால் ஒன்றரை மாதத்துக்கு முன்பு குழந்தையை வாங்கிக் கொண்டு, காதலனுடன் போய் விடு என்று திட்டி அனுப்பியுள்ளார் பாரி. ராயபுரத்தில் உள்ள தாய் வீட்டில் தங்கிய கவிதா, விவாகரத்து கேட்டும் குழந்தையை கேட்டும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் தாய் சுமதியுடன், குழந்தையை பார்க்க நேற்று பெருங்குடிக்கு கவிதா வந்துள்ளார். தாய் வெளியே நின்றுகொள்ள, கவிதா மட்டும் வீட்டில் சென்று பாரியிடம் குழந்தையை கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த பாரி, கவிதாவின் துப்பட்டாவை பறித்து அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் துரைப்பாக்கம் போலீஸ் நிலையம் சென்று சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
====

திருமணத்திற்கு முந்தைய காமத்தை திருமணத்திற்குப் பிறகும் தடையில்லாமல் கணவனுக்குத் தெரியாமல் கள்ளக் காமமாகத் தொடர உதவுவதுதான் இந்திய வரதட்சணை தடுப்புச் சட்டங்கள்.

கள்ளக்காமம் கணவனுக்குத் தெரியவரும்போதே அவன் மீது பொய் வரதட்சணை வழக்கைப் போட்டுவிட்டால் அவன் தனது குடும்பத்தோடு காவல்நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அலைந்துகொண்டிருப்பான். இப்படி கள்ளக்காமத்திற்குத் தடையாக இருக்கும் கணவனை வரதட்சணை வழக்கு என்ற “சிறு வேலை” கொடுத்து “பிஸியாக” வைத்திருந்தால் மனைவியை கண்டிக்கவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்படுமா?
அல்லது அதைப்பற்றித்தான் சிந்திக்க நேரம் இருக்குமா? இந்தியாவில் பலருக்கும் இந்த இந்திய சட்ட ரகசியம் தெரியும்.

இப்படிக் கணவனை பொய் வரதட்சணை வழக்கில் சிக்கவைத்துவிட்டு பிறகு தன்வசதிக்கேற்றபடி மனைவி யாருடன் வேண்டுமானாலும் உல்லாசமாக இருக்கலாம். பெண்ணுக்கு கள்ளக்காமம் செய்யவேத் தெரியாது என்று பாரத அன்னை மீது சத்தியம் செய்யாத குறையாக இந்திய சட்டம் கள்ளக்காமப் பெண்ணுக்கு பாதுகாப்பாக வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறது. அதனால் இதுபோன்ற சட்டங்கள் இருக்கின்ற வரையில் கள்ளக்காம மனைவி சட்டத்தின் அங்கீகாரத்துடன் இன்பமாக இருக்கலாம் அல்லவா? இதைப் பற்றித் தெரியாதவர்கள்தான் இப்படி துன்பத்திற்கு ஆளாகிறார்கள். பாவம்!
IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
W.P.No.45974 of 2006
(O.A.No.8971 of 2000)
DATED: 28.02.2011

23. In this context, an analogy must be drawn to the offence of 'adultery' defined in Section 497 of IPC. The offence of adultery as defined in that section can only be committed by a man, not by a woman. Section itself provides that the wife shall not be punishable even as an abettor. The Indian penal Code itself contemplates that the wife, who is involved in an illicit relationship with another man, is a victim and not author of the crime. .... ... ...


Sunday, April 17, 2011

இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் பெண்கொடுமை

தினமலரில் வந்துள்ள செய்திப் படத்தைப் பாருங்கள். இதுவும் இந்தியப் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைதான். பெண்களின் வாழ்க்கைத்தரம் இப்படி கீழ்நிலையில் இருப்பதற்குக்காரணம் யார்? இதற்கும் கணவனும், மாமியார் கொடுமைதான் காரணமா?

வரதட்சணை மட்டுமே பெண்களுக்கான பிரச்சனை கிடையாது அதையும்தாண்டி பல முக்கியமான பிரச்சனைகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஏன் பெண்ணுரிமை சங்கங்களும், பெண்கள் நல வாரியங்களும் கண்டுகொள்வதில்லை?

வரதட்சணை இன்னும் இந்தியாவில் இருப்பதாகக் கற்பனை செய்தால்கூட அது இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்குமே தவிர ஒவ்வொரு இந்தியக் குடும்பத்திலும் இருக்கின்ற விஷயம் கிடையாது. ஆனால் பின்வரும் படத்திலுள்ளது போன்ற கொடுமைகள் ஒவ்வொரு சராசரி இந்தியப் பெண்ணும் தினசரி அனுபவித்துக்கொண்டிருக்கும் கொடுமையாகும். இதுபோன்ற பிரச்சனைகளை பெண்விடுதலை பேசும் அமைப்புகள் ஏன் திரும்பிக்கூட பார்ப்பதில்லை?


(தினமலரின் கருத்து) எத்தனையோ இலவச திட்டங்களை அறிவித்து மக்களை மயக்கி, ஓட்டுகள் வாங்கும் அரசியல்வாதிகளே இதை பாருங்கள்... நல்ல தண்ணீர் குழாய் அருகே கழிவு நீர் சாக்கடை ஓடுகிறது, இதனால் அப்பகுதிமக்கள் கழிவு நீர் கலந்த குடிநீரை பலகாலமாக பருகி பல்வேறு நோய்களுக்கு ஆளாகியது தான் மிச்சம். இந்நிலை மாற இலவசங்கள் வேண்டாம் சுத்தமான தண்ணீர் சுகாதாரமான வாழ்வை மக்களுக்கு தருவீர்களா? இடம் : மடிப்பாக்கம் கங்கையம்மன் தெரு.

குடிநீருக்காக கஷ்டப்படும் இந்தியப் பெண்கள் (தினமலர் படம்)

Pesum Padam


இந்தக் கொடுமை வெறும் செய்திப்படமல்ல. ஒவ்வொரு இந்தியக் குடும்பத்திலும் அன்னையரும், சகோதரிகளும் தினமும் அனுபவித்துக்கொண்டிருக்கும் கஷ்டங்கள். இவர்களின் நலனுக்காக குரல்கொடுக்க உண்மையான பெண்ணுரிமை பேசும் பெண்ணியவாதிகள் ஒருவர்கூட இல்லை.

ஆனால் பெண்ணுக்கு மதுசாலையில் குடிக்க உரிமையும், மேல்தட்டுவர்க்க பெண்களின் கள்ளக்காதலுக்குத் தடையாக இருக்கும் கணவனை பொய் வரதட்சணை வழக்குகள் மூலம் தண்டித்து “பெண் விடுதலை” வாங்கித்தரவும் பலர் போட்டிபோட்டுக்கொண்டு கோஷமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் இதுபோன்ற விஷயங்களில் அதிக லாபம் கிடைக்கிறது என்பது பலருக்கும் தெரியாத ஒரு பெண்ணிய வியாபார ரகசியம்!

`Pub bharo' to beat moral police: Renuka Choudhary - Times Of India

Feb 6, 2009 ... NEW DELHI: Turning the iconic freedom struggle slogan " jail bharo" on its head, Minister of State for Women and Child Development since ...

August 29, 2007 Rediff News

"I am here to teach men what their mothers didn't teach them," declared Women and Child Development Minister Renuka Chaudhury


Thats Tamil News, 3/4/2008

கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்று குடும்பத் தலைவிகளுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் கூறினார்.

ஜனாதிபதியை எதிர்க்கும் பெண்கள் சங்கத்தலைவிகள்

தினமலர் ஜனவரி 06,2009

புதுடில்லி : "வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான சட்டத்தை பெண்களில் சிலர், தவறாகப் பயன்படுத்தி கணவர்களைத் தண்டிக்கின்றனர் என்ற சர்வே தகவல் கூறுகிறது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்' என்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவி சுதா சுந்தரம் கூறுகையில், "பெண்கள் சம்பந்தப்பட்ட பல சட்டங்கள் போதுமான அளவில் அமல்படுத்தப்படுவதில்லை. பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ள சட்டங்களை சரியாக அமல்படுத்தாத நிலையில், ஜனாதிபதியின் கருத்து வேதனையானது' என்று தெரிவித்தார்.


“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.