இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Showing posts with label Domestic Violence. Show all posts
Showing posts with label Domestic Violence. Show all posts

Thursday, August 05, 2010

சொத்துக்காக கணவனைக் கொன்ற மனைவி


பெரம்பலூர்: சொத்தை எழுதித்தர மறுத்த கணவனை, இரும்பு சுத்தியால் அடித்து கொன்ற மனைவி மற்றும் மாமியாருக்கு, ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.

பெரம்பலூர் அருகே பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்த சிதம்பரத்தின் (50) மனைவி பெரியம்மாள் (43). பெரியம்மாளுக்கு சிதம்பரம், இரண்டாவது கணவராவார். இவர்களுக்கு, இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கடந்த 2007ம் ஆண்டு, சிதம்பரம் பெயரில் உள்ள சொத்தை, குழந்தைகள் பெயருக்கு எழுதி தருமாறு, பெரியம்மாள் கணவரிடம் கேட்டுள்ளார். "மூன்று பிள்ளையும் எனக்கு பிறக்காததால், நிலத்தை எழுதித்தர முடியாது' என, சிதம்பரம் மறுத்தார். இதை, தன் தாய் செல்லம்மாளிடம் தெரிவித்தார் பெரியம்மாள். இதைக்கேட்ட அவர், "சிதம்பரம் உயிருடன் இருக்கும் வரை, சொத்து கிடைக்காது. இருவரும் சேர்ந்து அவரை கொலை செய்து விடலாம்' என, கூறியுள்ளார். ஏப்., 23, 2007ம் ஆண்டு, இரவு 9 மணிக்கு, வீட்டுக்கு அருகே மாட்டுக் கொட்டகையில் உள்ள கட்டிலில், தூங்கிக் கொண்டிருந்த சிதம்பரத்தை, இருவரும் சேர்ந்து இரும்பு சுத்தியால், தலையில் அடித்தனர். ரத்த வெள்ளத்தில் துடித்த சிதம்பரத்தை, அக்கம்பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி இறந்தார். பிரம்மதேசம் வி.ஏ.ஓ., பெருமாள்சாமி, மங்கலமேடு போலீசில் அளித்த புகாரின்படி, இருவரையும் கைது செய்து போலீசார், சிறையில் அடைத்தனர். பிறகு, இருவரும் ஜாமீனில் வெளி வந்தனர். பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கு, பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நேற்று, இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, "சிதம்பரத்தை கொலை செய்த பெரியம்மாள் மற்றும் இவரது தாய் செல்லம்மாள் ஆகிய இருவருக்கும், தலா ஆயுள் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால், மேலும் மூன்று மாதம் சிறை தண்டனை வழங்கப்படும்' என்றார்.
=================

பணத்திற்காக எதுவும் செய்பவள்தான் கலிகாலத்துப் பெண்ணா? ஆனால் அதையும் நன்றாகத் திட்டமிட்டுத்தான் செய்கிறார்கள்.

Thursday, July 29, 2010

தாயில்லாமல் பிறக்கும் குழந்தைகள்

ஜூலை 29,2010 தினமலர்

மேலூர் : பிறந்து ஒருவாரமே ஆன பெண் குழந்தை, மதுரை - மேலூர் நான்கு வழிச்சாலை ஓரத்தில் வீசப்பட்டது. ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்தக்குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நான்கு வழிச்சாலையில் மேலூருக்கு திரும்பும் இடத்தில் உள்ள வாழை தோட்டத்தில் கிணறு தோண்டியபோது எடுக்கப்பட்ட கற்கள் குவிக்கப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை அதற்குள் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தனர். இரு புறமும் பாறாங்கற்கள் வைக்கப் பட்டு, அதன் நடுவில் குழந்தை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அதை அகற்றி பார்த்த போது, எறும்புகள் மொய்த்த நிலையில் காயங்களுடன், ஒல்லியான பெண் சிசு இருந்தது. அரசின் "108' இலவச ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சுரேஷ், விமல், சரவணன் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்தனர்.

டாக்டர்கள் கூறியதாவது:
இக்குழந்தை பிறந்து ஒரு வாரமே ஆகி உள்ளது. மேற்புறமாக கல் அழுத்தி உள்ளதால் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. வலது கால் உடைந்துள்ளதாக தெரிகிறது. முதலுதவி சிகிச்சைக்கு பின், மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக குழந்தை அனுப்பப் பட்டுள்ளது, என்றனர்.

மனிதாபிமானமற்ற பெற்றோர் யார்?
: நான்கு வழிச்சாலையில் வழியாக பயணம் செய்த யாரோ தான் இப்படி குழந்தையை போட்டு விட்டு சென்றிருக்க வேண்டும். குழந்தையின் கை மற்றும் காலில் கண்மை இடப்பட்டு உள்ளது. ஆசையுடன் கொஞ்சிய பச்சிளம் குழந்தையை இப்படி வீசியதற்கு பதில் அரசு தொட்டிலில் சேர்த்து இருக்கலாமே.

மனிதத்தாய்மைக்கும் விலங்கினத்தில் இருக்கும் தாய்மைக்கும் உள்ள வித்தியாசம்

பெற்றோரால் வீசியெறியப்பட்ட சிசு

அன்னையின் அரவணைப்பில் இருக்கும் குழந்தை

தாயில்லாமல் குழந்தைகள் பிறந்து தெருவில் கிடக்கும் அதிசயம் நடந்துகொண்டிருக்கிறதா? தாய்மை இன்னும் இருக்கிறதா? இல்லாத தாய்மையின் பெயரால் எதற்கு “பெண்கள் சிறப்புச் சட்டங்கள்”?


இதையும் செய்வாள் பெண்

எப்போதுமே கணவன்தான் மனைவியை கொடுமை செய்வான் என்று தவறான எண்ணம் கொண்டவர்களுக்கு ஒரு வித்தியாசமான செய்தி. ஆனால் இது உண்மை. இப்படி பல நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் வெளிச்சத்திற்கு வருவதில்லை.


கணவனை கொன்ற மனைவிக்கு ஆயுள்தண்டனை
ஜூலை 30,2010 தினமலர்

ஊட்டி : குடும்பத் தகராறு காரணமாக கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து, நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. குன்னூர் குமரன் நகரைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி(28); இவரது மனைவி பூங்காவனம். இருவரிடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி மாலை 3 மணியளவில் வீட்டில் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி இருவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஆத்திரமடைந்த பூங்காவனம், வீட்டிலிருந்த இரும்பு குழாயால் பார்த்தசாரதியை தாக்கினார். இதில் படுகாயமடைந்த பார்த்தசாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கின் விசாரணை, ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கணவனை கொன்ற குற்றத்துக்காக பூங்காவனத்துக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி முருகன்.





Sunday, February 21, 2010

ஜனாதிபதியை எதிர்க்கும் பெண்கள் சங்கத்தலைவிகள்

சென்ற ஆண்டு இந்திய ஜனாதிபதி பெணகள் பாதுகாப்பு சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு அப்பாவிகளை துன்புறுத்தும் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்று பெண் வழக்கறிஞர்கள் மாநாட்டில் உரையாற்றினார். ஆனால் அதற்கு பல மகளிர் சங்ககங்களும் மகளிர் வாரியங்களும் பலத்த எதிர்ப்பு தெரிவித்து செய்தி வெளியிட்டிருந்தார்கள். அதைப்பற்றிய செய்தியும் அதற்கு செய்தித்தாளில் ஒரு வாசகர் எழுதியிருந்த பதிலும் உங்களின் சிந்தனைக்காக தரப்பட்டிருக்கிறது. படித்துவிட்டு நன்கு யோசியுங்கள்.

வரதட்சணை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா? ஜனாதிபதி பிரதிபா கருத்துக்கு பெண்கள் எதிர்ப்பு
தினமலர் ஜனவரி 06,2009

புதுடில்லி : "வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான சட்டத்தை பெண்களில் சிலர், தவறாகப் பயன்படுத்தி கணவர்களைத் தண்டிக்கின்றனர் என்ற சர்வே தகவல் கூறுகிறது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்' என்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் யாவட்மால் பகுதியில், பெண்கள் மாநாடு நடந்தது. பெண்களுக்கு நீதி கிடைக்கிறதா? என்ற தலைப்பில் நடந்த இந்த மாநாட்டில், பெண் வக்கீல்களும், பள்ளி, கல்லூரி ஆசிரியைகளும் பங்கேற்றனர்.

மாநாட்டில் பேசிய ஜனாதிபதி பிரதிபா, "பெண்கள் பாதுகாப்பாக இருக்க, பல வகையில் சட்டங்கள் உள்ளன. ஆனால், வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி, கணவர்களை சில பெண் கள் தண்டிப்பதாக சர்வே தகவல்கள் கூறுகின்றன. இப்படி தவறு நேராவண்ணம் வக்கீல்கள் உஷாராக இருக்க வேண்டும்' என்று பேசினார்.

இந்த பேச்சு, இப்போது பெண்கள் அமைப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. "ஜனாதிபதி பிரதிபா அப்படி பேசியிருக்கக் கூடாது. ஏற்கனவே, பெண்களுக்கு சாதகமாக சட்டங்கள் உள்ளதாக கருத்து நிலவும் நிலையில் இப்படி பேசினால், இந்த சட்டங் களால் பெண் கள் பலன் அடைவதாக அர்த்தமாகி விடும்' என்று கூறியுள்ளனர்.

தேசிய குற்ற ஆவணங்களின் படி, கடந்த ஆண்டு இரண்டு லட்சத்து 16 ஆயிரம் வரதட்சணைக் கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன. அவற்றில், 85 - 95 சதவீதம் பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். "இதை சுட்டிக் காட்டிய பெண்கள் அமைப்பினர், "சட்டம் இருக்கும் போதே இப்படி நேரும் போது, பெண்களுக்கு இந்த சட்டங்களால் பெரிய அளவில் பாதுகாப்பு இல்லை' என்று வருத்தப்பட்டனர்.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவி சுதா சுந்தரம் கூறுகையில்,
"பெண்கள் சம்பந்தப்பட்ட பல சட்டங்கள் போதுமான அளவில் அமல்படுத்தப்படுவதில்லை. பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ள சட்டங்களை சரியாக அமல்படுத்தாத நிலையில், ஜனாதிபதியின் கருத்து வேதனையானது' என்று தெரிவித்தார்.

மகளிர் சங்கங்களும் வாரியங்களும் பெண்களுக்கு எந்தவகையான போதனைகள் செய்து கொண்டிருக்கின்றன என்பதை சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு சிறுமி அழகாக நடித்துக்காட்டியிருக்கிறார். இது தான் இந்த சங்கங்களின் இன்றைய நிலையா என்ற உண்மையை விஷயம் தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். இந்த புத்திசாலி சிறுமிக்குப் பாராட்டுக்கள்.





ஜனாதிபதிக்கு "ஜே':
பா.சி.ராமச்சந்திரன், திருவொற்றியூர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: "வரதட்சணைக் கொடுமை சட்டம், சில பெண்களால் தவறாகப் பயன்படுத்துவதாக ஒரு சர்வே கூறியிருக்கிறது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்' என்று, இந்தியாவின் முதல் பெண்மணியும், நமது ஜனாதிபதியுமான பிரதிபா பாட்டீல் கூறியது, நூற்றுக்கு நூறு உண்மை. மிகப் பெரிய பொறுப்பிலுள்ள ஓர் பெண்மணி கூறியதை, உடனே பெண்கள் அமைப்புகள் கண்டனம் செய்தது, கண்டனத்திற்கு உரியதாகும். அவர் அப்படிச் சொன்னது உண்மை தானா என்று ஆராயாமல், அவர் கருத்தை எதிர்ப்பது தவறானது. ஒரு ஆய்வுத் தகவல் இப்படிச் சொல்கிறதே என்று ஜனாதிபதி வருத்தப் பட்டதையே எதிர்க்கும் பெண்கள், வீட்டில் மாமியாரை எப்படி ஆதரிப்பர்? தங்களுடைய வீட்டில், தன்னைப் பெற்ற அன்னைக்கு ஆதரவாயிருக்கும் பெண்கள், தன்னுடைய கணவரைப் பெற்றதும் ஒரு அன்னையே என்பதை அறியாமல், அவர்களுக்கு எதிராக செயல்படும் பெண்கள் இன்று ஏராளம். கருத்து சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் என்ற பெயரில், பெண்கள் தங்களுடைய மாமியார், மாமனாருக்கு எதிராகப் போவதை சுப்ரீம் கோர்ட்டே கண்டித்திருக்கிறது. அது மட்டுமல்ல, வரதட்சணைக் கொடுமைச் சட்டம், பாலியல் பலாத்காரச் சட்டம் போன்றவைகளையும் சில பெண்கள் தவறாகப் பயன்படுத்தி, மாமனார், மாமியார், மேலதிகாரிகள், உடன் பணிபுரிவோர் போன்றவர்களையும் கம்பி எண்ண வைத்திருக்கின்றனர். அதனால் தான், காவல் துறை எந்த ஒரு சட்டத்தையும் பயன்படுத்தும் போது, தீர விசாரித்து கைது செய்ய வேண்டும். "சட்டத்தின் முன் அனைவரும் சமம்; ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம்' என்றெல்லாம் பேசிவிட்டு, செய்யாத தவறுக்காக பெண் உரிமையைப் பயன்படுத்தி ஆண்களையும், பெண்களையும் கைது செய்வது எந்தவிதத்தில் நியாயம்? பல குடும்பங்களில் மருமகள் செய்யும் கொடுமைகளை மாமனார், மாமியார் போன்றோர், காவல் துறைக்குத் தெரிவித்து, மருமகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்காததற்குக் காரணம், குடும்ப கவுரவம் பாழாகிவிடக் கூடாது என்பதால் தான். இதை இளம் பெண்கள் புரிந்து கொண்டு வாழ்வதே சிறந்த குடும்ப அமைப்பு. சரியான நேரத்தில் ஜனாதிபதி கூறியது முற்றிலும் சரியே!

Sunday, October 18, 2009

குடும்ப வன்முறையில் சிக்கித் தவிக்கும் அப்பாவி ஆண்கள்

குடும்ப வன்முறையில் சிக்கித் தவிக்கும் அப்பாவி ஆண்கள்
கணவனை மனைவி தாக்கினால் அந்த பாதிப்புக்குள்ளான கணவர் காவல் நிலையத்தில் மனைவிக்கெதிராக புகார் கொடுத்தால் மனைவி மீது நடவடிக்கை எடுக்க எந்தவித சட்டங்களும் கிடையாது. மனைவியின் வன்முறையால் தாக்கப்பட்டும், காவல்நிலையத்தில் அவமானப்பட்டும் தான் கணவன் திரும்பவேண்டும். சமீபத்தில் வந்துள்ள "உன்னைப்போல் ஒருவன்" திரைப்படத்தில் இதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்கள்.




ஆனால் இதுவே மனைவி காவல் நிலையத்திற்குச் சென்று கண்ணைக் காட்டினால் போதும் (இப்போது ரொம்ப அட்வான்சாக ஈமெயில் கொடுத்தால் கூட போதும்) கணவர் அவரது குடும்பத்தார் அனைவரையும் எந்தவித ஆதாரமும் இன்றி கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்கள். அதற்கேற்றவாறு பெண்களுக்கு குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், மற்றும் IPC498A போன்ற பல விதமான வன்முறை ஆயுதங்களை சட்டம் என்ற பெயரில் அரசாங்கம் கொடுத்து உதவி வருகிறது. அதனை ஆதரித்து பணம் சம்பாதிக்கவும் பல நிறுவனங்கள் உள்ளன.

நாகரீகத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய பல நாடுகளை விட இந்தியாவில் தான் பெண்களுக்குச் சாதகமான பல சட்டங்கள் இருப்பதாக தேசிய பெண்கள் நல வாரியம் பெருமையுடன் கூறியிருக்கிறது.
Do not be forced into participating in legal action in country of husband’s residence. You can file a case in India and cannot be forced to defend a case filed against you by husband abroad-especially divorce. India has more women-friendly laws than many other countries - National Commission for Woman
சட்டம் என்பது நடுநிலையாக இருக்க வேண்டுமா? அல்லது ஒரு பாலினத்திற்கு சாதகமாக இருக்க வேண்டுமா? எது சிறந்த சட்டம்?

பெண்கள் தங்கள் அப்பாவி கணவருக்கெதிராக பயன்படுத்துவதற்கென அரசாங்கம் கொடுத்துள்ள வன்முறை ஆயுதங்களில் ஒன்று தான் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம். இந்த சட்டத்தில் கொடுத்துள்ள விளக்கங்களில் சிலவற்றை கீழே காணுங்கள். இந்த சட்டப்படி மனைவி எப்போதும் அப்பாவியாகவும் ("aggrieved person" means any woman) கணவன் எப்போதும் குற்றவாளியாகவும் ("respondent" means any adult male person) கருதப்படுவார்.

The Protection Of Women From Domestic Violence Act, 2005

Definitions.-In this Act, unless the context otherwise requires,-

(a) "aggrieved person" means any woman (Note: Woman is always a victim and Male is Never considered as a victim of domestic violence) who is, or has been, in a domestic relationship with the respondent and who alleges to have been subjected to any act of domestic violence by the respondent;

(e) "domestic incident report" means a report made in the prescribed form on receipt of a complaint of domestic violence from an aggrieved person;

(q) "respondent"
means any adult male person (Note: Male is always accused respondent) who is, or has been, in a domestic relationship with the aggrieved person and against whom the aggrieved person has sought any relief under this Act:Provided that an aggrieved wife or female living in a relationship in the nature of a marriage may also file a complaint against a relative of the husband or the male partner;


“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.