இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Showing posts with label Woman in Indian Politics. Show all posts
Showing posts with label Woman in Indian Politics. Show all posts

Tuesday, December 07, 2010

பெண்கள் செய்யும் கட்டுப்படுத்தமுடியாத சாதனைகள்


காசியாபாத் : நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஊழல் செய்த குற்றச்சாட்டுக்காக, உ.பி., முன்னாள் தலைமைச் செயலர் நீரா யாதவுக்கும், பிரபல தொழில் அதிபர் அசோக் சதுர்வேதிக்கும், தலா நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நேற்று தீர்ப்பு அளித்தது.

உ.பி., மாநில முன்னாள் தலைமைச் செயலர் நீரா யாதவ். முலாயம் சிங் யாதவ் முதல்வராக இருந்தபோது, இவர் தலைமைச் செயலராக இருந்தார். ஏழு ஆண்டுக்கு முன், நொய்டா பெருநகர வளர்ச்சிக் குழு தலைவராக பதவி வகித்தார். அப்போது, தொழில் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்வதில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்தது. நிலம் ஒதுக்கீடு செய்வதற்கான விதிமுறைகளை மீறியதாகவும், தனது பெயரில் 300 ச.மீட்டர் நிலத்தை ஒதுக்கீடு செய்து கொண்டதாகவும் இவர் மீது புகார் கூறப்பட்டது. இந்த 300 ச.மீட்டர் நிலத்தை பின், 450 ச.மீட்டராக அதிகரித்துக் கொண்டதாகவும் நீரா யாதவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீராவின் மகள்கள் சன்ஸ்கிரிதி, சுக்ரிதி ஆகியோர் பெயரிலும் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதும் தெரியவந்தது.

விதிமுறைகளை பொருட்படுத்தாமல், தொழில் நிறுவனங்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கும் நிலத்தை ஒதுக்கீடு செய்ததும் தெரியவந்தது. விதிமுறைகளை மீறி, நிலத்தை பெற்றதாக பிளெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட்., தலைவர் அசோக் சதுர்வேதி மீதும், சி.பி.ஐ., சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை, காசியாபாத்தில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் விசாரித்தது.நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, கோர்ட் வளாகத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது. நீரா யாதவ், அசோக் சதுர்வேதி உள்ளிட்டோர் கோர்ட்டில் ஆஜராகியிருந்தனர். அப்போது, தனது உடல் நிலையை காரணம் காட்டிய நீரா யாதவ், அமர்வதற்கு இருக்கை வேண்டும் என, கேட்டார். இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ஏ.கே.சிங்., தீர்ப்பை வாசிக்கத் துவங்கினார். இதில், கைலாஸ் மருத்துவமனைக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான முதல் வழக்கில் நீரா யாதவை விடுதலை செய்து, நீதிபதி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை கேட்ட நீரா யாதவ் மகிழ்ச்சியாக காணப்பட்டார். இதையடுத்து, அடுத்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வழக்கில், நீரா யாதவுக்கும், அசோக் சதுர்வேதிக்கும் தலா நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.

கதறி அழுதார்
: தீர்ப்பைக் கேட்ட நீரா, கதறி அழுதார். நீராவும், அசோக் சதுர்வேதியும் தஸ்னா மாவட்ட சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கைகளில் விலங்கு மாட்டப்பட்ட நிலையில், சதுர்வேதி அழைத்துச் செல்லப்பட்டார். நீரா யாதவ் மற்றும் சதுர்வேதிக்காக ஜாமீன் கோரி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப் போவதாக அவர்கள் வக்கீல்கள் தெரிவித்தனர். சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டின் இந்த தீர்ப்பு, உ.பி.,யில் மட்டுமல்லாமல், தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தலைமைச் செயலர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவர் நீரா யாதவ் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும், 1997ல் உ.பி.,யைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சார்பில், ஊழல் செய்த அதிகாரிகள் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டு, பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், நீரா யாதவ் அதிக ஊழல் செய்பவர் என்ற அடைமொழியுடன் இடம் பெற்றிருந்தார். மேலும், அதிக ஊழல் செய்தவர் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டும் அவரைத் தலைமைச் செயலர் பதவியில் இருந்து அகற்ற உத்தரவிட்டது. தவிரவும், முன்பு சி.பி.ஐ., டைரக்டராக இருந்த ஜோகிந்தர் சிங் காலத்தில் தொடரப்பட்ட வழக்கு இது. அதுவும் பெண் ஐ.ஏ.எஸ்.,அதிகாரி ஊழலில் சம்பந்தப்பட்டதை ஆய்வு செய்யும் வழக்காக இருந்தது. நேற்று இத்தீர்ப்பு குறித்து ஜோகிந்தர் கருத்துக் கூறுகையில், "இது நல்ல துவக்கம், இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வந்ததில் மகிழ்ச்சி' என்றார்.

============

வீட்டிற்குள்ளே பெண்ணை பூட்டிவைக்காதீர் என்று சொன்ன பாரதி இப்போது மீசையை முறுக்கிக் கொண்டு என்ன சொல்லியிருப்பார்?




Tuesday, November 16, 2010

பெண்ணால் மட்டுமே செய்யக்கூடிய உதவி

ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்ட பெண் அலுவலர் கைது

தினமலர் 17 நவம்பர் 2010

சென்னை : வீட்டை வேறு பெயருக்கு மாற்றித் தர, 3,000 ரூபாய் லஞ்சம் கேட்ட குடிசை மாற்று வாரிய பெண் பில் கலெக்டர் மற்றும் வளாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.

சென்னை, செனாய் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரி(20). இவரது பாட்டிக்கு சொந்தமான வீடு, டி.பி.சத்திரம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ளது. இந்த வீட்டை தனது தாயார் மற்றும் சித்தி பெயருக்கு மாற்றுவதற்காக டி.பி.சத்திரம் குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்த பில் கலெக்டர் வரலட்சுமி, பெயர் மாற்றம் செய்ய ஈஸ்வரியிடம் 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஈஸ்வரி லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி., சுப்புலட்சுமியிடம் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனையின் பேரில், ஈஸ்வரி நேற்று காலை வரலட்சுமியிடம் அவரது அலுவலகத்தில் முதற்கட்டமாக 1,500 ரூபாய் கொடுத்தார். பணத்தை வாங்க மறுத்த வரலட்சுமி, இளநிலை வளாக அலுவலரான கணேசனிடம் கொடுக்குமாறு கூறினார். கணேசனிடம் ஈஸ்வரி பணத்தை கொடுக்கும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் வரலட்சுமியையும், கணேசனையும் பிடித்தனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Thursday, October 07, 2010

மூத்தோர் இல்லாத வீட்டில் போலிஸ் புகும்

திருமணமானவுடன் மாமியார் மாமனாரை விரட்டிவிட்டு கணவனை அடிமைப்படுத்த நினைக்கும் புரட்சிப் பெண்கள் பலர் இப்போது உருவாகிவிட்டார்கள். பெற்றவர்களை வெளியே விரட்டவேண்டும் அல்லது தனிக்குடித்தனம் போகவேண்டும் என்று பல மனைவியர் கணவனுக்கு வரதட்சணை தடுப்புச் சட்டங்களைக் காட்டி “அன்புக் கட்டளை” போடுகிறார்கள்.

இதுபோன்ற மூத்தோர் இல்லாத குடும்பங்களில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாட்டை களைவதற்கும், தக்க அறிவுரை கூறுவதற்கும் ஆளில்லாமல் எல்லாக் குடும்பப் பிரச்சனைகளுக்கும் “குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் வழிகாணலாம்” “வரதட்சணை தடுப்புச் சட்டங்களைக் காட்டி மிரட்லாம்” என்று பெண்களுக்குத் தவறான வழிகாட்டப்படுவதால் மூத்தோர் இல்லாத வீட்டில் போலிசும் சட்டமும்தான் புகுந்து குடும்பங்களை சிதைத்துவிட்டுச் செல்லும். இதனால் நஷ்டப்படப்போவது பெண்களும், அப்பாவிக் குழந்தைகளும்தான்.

தலைவிகள் சொல்லும் பின்வரும் அறிவுரைகளைப் படித்துவிட்டு அதனைத் தொடர்ந்து வரும் செய்தியையும் படியுங்கள்.


"I want to teach men what their mothers didn’t"

"I am here to teach men what their mothers didn't teach them," declared Women and Child Development Minister Renuka Chaudhury
August 29, 2007
http://www.rediff.com/news/2007/aug/29men.htm

• • • • • • • • • •

Thats Tamil News, 3/4/2008
கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்று குடும்பத் தலைவிகளுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் கூறினார்.

• • • • • • • • • •

கணவருடன் சேர்த்து வைக்க கோரி தர்ணா நடத்திய மனைவி

அக்டோபர் 07,2010 தினமலர்

விருதுநகர்: விருதுநகரில் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கணவர் வீட்டு முன் பெண் தர்ணா போராட்டம் நடத்தினார். போலீசார் சமரசத்திற்கு பின் போராட்டத்தை கைவிட்டார்.

விருதுநகர் பெரிய கிணற்று தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி மகள் அஷ்டலட்சுமி(32). இவருக்கும் முத்தமிழ் வீதி குறுக்கு தெருவைச் சேர்ந்த ஜெயபாலன் மகன் சிவசங்கருக்கும் 1998ல் திருமணம் நடந்தது. வரதட்சணையாக 53 சவரன் நகைகள், பொருட்கள் வழங்கப்பட்டன.

சிவசங்கர், பழைய பாலி பேக் இயந்திரங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு பாலகணேஷ்(12) பாலமுருகன்(9) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.தொழிலுக்காக ஊர், ஊராக சென்று வருபவர். இவர் மனைவியையும், குழந்தைகளையும் கவனிப்பதில்லை. இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். மகளிர் போலீசில் புகார் செய்ததில் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து சமரசம் செய்து அனுப்பினர். இந்நிலையில், சிவசங்கர், மனைவிக்கு நேற்று விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார்.

இதனால் கணவருடன் சேர்த்து வைக்கும் படி கூற மாமனார் வீட்டிற்கு அஷ்டலட்சுமி வந்தார். அங்கு யாரும் இல்லாத நிலையில், பிற்பகல் 3 மணி முதல் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். பாண்டியன் நகர் போலீசார், புகார் தெரிவிக்க கூறியதால், இரவு 7.15 மணிக்கு அஷ்டலட்சுமி தன் போராட்டத்தை கைவிட்டார்.

=======

“வெளிச்சம் புகாத வீட்டில் வைத்தியன் புகுவான்” என்பது பழமொழி

“மூத்தோர் இல்லாத வீட்டில் போலிஸ் புகும்” என்பது புதுமொழி

ஆரோக்கியமற்ற வீட்டிற்குள்தான் வைத்தியன் புகவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வைத்தியன் புகுந்து குடும்பத்திற்குள் ஆரோக்கியத்தை மீண்டும் கொண்டு வருவான்.

அழியப்போகின்ற குடும்பத்திற்குள்தான் போலிஸ் புகும். குடும்பத்திற்குள் போலிஸ் புகுந்த பிறகு பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர்வதை விட குடும்ப அழிவு விரைவுபடுத்தப்பட்டு அதன் அழிவு உறுதிப்படுத்தப்பட்டுவிடும்.

இதுதான் பழமொழிக்கும் புதுமொழிக்கும் உள்ள ஒற்றுமையும் வேற்றுமையும்.




Friday, September 24, 2010

குழந்தைகள் நலனில் அக்கறை காட்டினால் லாபம் கிடையாது

சேலம் 53வது வார்டு வேலு புதுத்தெருவில் செயல்பட்டு வரும் சிறிய குழந்தைகள் மையத்தில், குழந்தைகள் அதிகளவில் உள்ளதால் போதிய இடவசதி இல்லாமல், ஒருவர்மேல் ஒருவர் என்று படுத்து உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தனியாக சமையலறை வசதி இன்றி, சிறிய வகுப்பறைக்குள் சமையல் பாத்திரங்கள், நாற்காலிகள், காஸ் சிலிண்டர் வைத்துள்ளதால் அசம்பாவிதம் ஏற்படும் நிலையில் உள்ளது.
(தினமலர் படம் 25 செப்டம்பர் 2010)

இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை என்று ஒரு தனி அமைச்சகமே இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இதற்காக நிதி “ஒதுக்கீடும்” நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் கண்ணில் படுவதெல்லாம் பொய் வரதட்சணை வழக்குப் போட்டு நாட்டை சீர்குலைக்கும் “அப்பாவிப்” பெண்கள் மட்டுமே. அவர்களுக்காக அடுக்கடுக்காக பல சட்டங்கள் இயற்றுவதற்குமட்டும்தான் இந்த அலுவலர்கள் வியர்வை சிந்தி உழைப்பார்கள்!

அமைச்சகத்தின் உழைப்பிற்கு ஒரு உதாரணம்:

`Pub bharo' to beat moral police: Renuka Choudhary
Times of India 6 Feb 2009

NEW DELHI: Turning the iconic freedom struggle slogan " jail bharo" on its head, Minister of State for Women and Child Development since Renuka Choudhary on Thursday suggested that the only way to tackle the moral police was to launch a " pub bharo andolan".



பொய் வரதட்சணை வழக்குகள் எவ்வளவு அதிகமாக பதிவு செய்யப்படுகிறதோ அவ்வளவு எண்ணிக்கையில் பெண்கள் இந்தியாவில் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள் என்று புள்ளி விவரம் காட்டி நிதியுதவி பெறலாம். ஒவ்வொரு ஆண்டும் எத்தனை FIR பதிவு செய்யப்படுகிறது என்பதை மட்டும்தான் கணக்கில் கொள்ளவேண்டும். அப்போதுதான் அது மிகப்பெரிய எண்ணாகத் தெரியும். வழக்கின் முடிவில் எத்தனை உண்மையானவை என்று எண்ணிப்பார்த்து உண்மையைச் சொன்னால் பிழைக்க முடியாதல்லவா! அதனால் பெண்களைக் காப்பாற்றுகிறேன் என்று புதுப்புது சட்டங்களை இயற்றி அதிக அளவில் பொய் வழக்குகளை உருவாக்கினால் அதிக எண்ணிக்கையில் FIR பதிவுசெய்யப்பட்டு பணமழையாகப் பொழியுமல்லவா.

இதுபோல் குழந்தைகளை வைத்து ஏதாவது பணம் பார்க்கமுடியுமா? அல்லது குழந்தைகள்தான் பொய்வழக்குப் போடுவார்களா?




Monday, August 09, 2010

33% ஒதுக்கீடு இல்லாமலேயே சாதனை செய்யும் பெண் அலுவலர்கள்

33% இடஒதுக்கீடு கொடுத்தால்தான் பெண்களால் எத்துறையிலும் முன்னேற முடியும் என்று நினைப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு எதுவும் இல்லாமலேயே எத்துறையிலும் சாதனை செய்யலாம் என்று இந்த கிராமப்புற பெண் அதிகாரி நிரூபித்துக் காட்டியுள்ளார்.

உதவி தொகை வழங்க லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது
ஆகஸ்ட் 10,2010 தினமலர்

காரைக்குடி: திருமண நிதி உதவி தொகை வழங்க, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, சாக்கோட்டை ஒன்றிய ஊர்நல அலுவலர் லலிதா (54), கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணாநகரைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது உறவினர் அமிர்தத்திற்கு (22), வரும் 27ல் திருமணம் நடக்கவுள்ளது. அரசு வழங்கும் திருமண உதவி திட்டத்தில், 25 ஆயிரம் ரூபாய் பெற, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அவரது வீட்டுக்கு சென்று விசாரித்த ஊர் நல அலுவலர் லலிதா, மனுவை சமூகநலத்துறைக்கு பரிந்துரைக்க, 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில், சுப்பையா புகார் செய்தார். நேற்று மாலை அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற லலிதாவை, டி.எஸ்.பி., அருளானந்தன், இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பாண்டியராஜன், ஏட்டு மைக்கேல், சிவக்குமார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

================

இப்படித்தான் பெண் மற்றொரு பெண்ணுக்கு உதவி செய்து ஆணாதிக்கத்திற்கு எதிராக சாதனை படைத்துக்கொண்டிருக்கிறார்கள்! இப்படி சுயநல நோக்கில் உருவானவைதான் பெண்களுக்கு பாதுகாப்பு தருகிறோம் என்ற பெயரில் பெண்கள் அமைப்புகளால் ஆதரிக்கப்படும் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் எனப்படும் வரதட்சணை சட்டங்கள்.



Tuesday, August 03, 2010

பாலியல் வன்கொடுமையை ஆண்கள் ஆதரிக்கிறார்களா?

செய்தியைப் மேலோட்டமாகப் படித்ததும் ஏதோ ஆண்கள் அனைவரும் பெண்களுக்கு எதிரானவர்கள் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் ஏற்படும். அப்படித்தான் பல ஆண்டுகளாக ஒரு மாயை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் உண்மையை யாரும் இதுவரை அறிந்திருக்கமாட்டார்கள். இந்தப் பதிவை முழுதுமாக கடைசிவரை படித்துப்பாருங்கள். பிறகு இதுபோல செய்தித்தாள்களில் வரும் செய்தி எப்படி மேலோட்டமாக எழுதப்பட்டு மக்களை திசைதிருப்பிக்கொண்டிருக்கிறது என்று உங்களுக்கே புரியும்.



புதுடில்லி : "குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டு வரப்படவுள்ள பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதா, பெண்களுக்கு சாதகமாகவும், ஆண்களுக்கு பாதகமாகவும் உள்ளது. அதில் திருத்தம் கொண்டு வர வேண்டும்' என, ஆண்களுக்கான அமைப்பு ஒன்று கோரியுள்ளது.

குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில், "பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதா' இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இம்மசோதா, "அலுவலகங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை விசாரிக்க, அவற்றின் தலைமையாதிகாரி உட்பட பெண்கள் பெரும்பான்மை உறுப்பினர்களாக கொண்ட விசாரணை கமிட்டி அமைக்கப்பட வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பரிந்துரைக்கிறது. இந்நிலையில் டில்லியை சேர்ந்த "தி சேவ் இந்தியன் பேமிலி பவுண்டேஷன்' என்ற ஆண்களுக்கான அரசு சாரா அமைப்பு ஒன்று, இம்மசோதா தற்போதைய நிலையில் நிறைவேற்றப்பட கூடாதென, எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இது குறித்து அவ்வமைப்பின் பொதுச்செயலர் நீலாத்ரி சேகர் தாஸ் கூறியதாவது: பெண்கள் எப்போதும் பொய்யே பேச மாட்டார்கள் என்றும், ஆண்கள் பிறக்கும் போதே "கிரிமினல்'களாக தான் பிறக்கின்றனர் என்றும் அம்மசோதா கருதுகிறது. ஆனால், பெண்களால் ஆண்களும் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இம்மசோதா, பெண்களுக்கே சாதகமாக அமைந்துள்ளது. அதனால், இருபாலினத்தவரையும் சமமாக மதிக்கும் முறையில் மசோதா திருத்தப்பட வேண்டும். இதன் தற்போதைய வடிவம், இந்திய அரசியல் சாசனத்தின் 15வது பிரிவின், மத அல்லது பாலின ரீதியில் பாகுபாடு காட்டப்படக் கூடாதென்ற உரிமைக்கு எதிராக அமைந்துள்ளது. பெண்களுக்கு தேவையில்லாமல் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.

மசோதா கூறியுள்ள இத்தகைய கமிட்டிகள், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஏற்கனவே உள்ளன. அந்த கமிட்டியில் இடம் பெறுபவர்களுக்கான அடிப்படை தகுதியாக, ஒருவர் பெண்கள் நலம் குறித்து கவலை கொள்பவராக இருந்தால் போதும் என்று மசோதா கூறுகிறது. பெண்களே பெரும்பான்மையாக உள்ள கமிட்டியில் எப்படி ஆண்களுக்கான நீதி கிடைக்கும்? ஆண்கள் குற்றம் செய்யக் கூடாதென கூறும் மசோதா, பெண்களிலும் அப்படிப்பட்டவர்கள் இருக்கின்றனர், அவர்களையும் விசாரிக்க வேண்டுமென்பதை ஏன் கண்டு கொள்ளாமல் விட்டது? பெண்களால், பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கற்பனை செய்திகளின் அடிப்படையில் சட்டம் இயற்றுவது, அபாயகரமான சமூக விளைவுகளை ஏற்படுத்தி விடும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளையும், ஆண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளையும் நடவடிக்கை ரீதியாகவோ, சம்பவ ரீதியாகவோ சம நோக்கில் பார்க்க கூடாதென, அமைச்சகம் கருதுகிறது. இது தவறு. இவ்வாறு நீலாத்ரி சேகர் தாஸ் தெரிவித்தார்.


ஒருதலைபட்சமான முடிவுகள் ஏன் ஆபத்தானது என்று கீழுள்ள வீடியோவில் பாருங்கள் புரியும்.


மேலுள்ள செய்தியில் இந்தியக் குடும்பப் பாதுகாப்பு இயக்கம் ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கிறது என்பதற்கான உண்மையையும் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த உண்மை எந்த செய்தித்தாளிலும் வெளிவராது. இந்தியப் பெண்களுக்கும் தெரியாது. ஒட்டுமொத்தமாக இந்திய மக்களுக்குத் தெரியாமல் உண்மை வேறுவிதமாக திசைதிருப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இதுபோன்ற பெண்கள் தொடர்பான சட்டங்களை இயற்றுவதற்கு முன்பு உண்மை நிலவரத்தை ஆராய்ந்து அதற்கேற்ப சட்டங்களை இயற்றவேண்டும். பெண்கள் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பெண்கள் நல வாரியத்திற்கு இதுபோன்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சரியான ஆலோசனை வழங்குவதுதான் வேலை. ஆனால், பெண்கள் வாரியத்தில் நடக்கும் விஷயங்களோ மிகவும் நம்பமுடியாதவையாக இருக்கின்றன.

இதுபோன்ற பெண்கள் தொடர்பான ஆய்வுக்கு நிதிவேண்டி விண்ணப்பம் செய்பவர்களுக்கு லட்சக்கணக்கில் பணத்தை கணக்கில்லாமல் கொடுக்கிறார்கள். ஆனால் அப்படி ஒதுக்கப்படும் நிதியில் ஆராய்ச்சி உண்மையாகவே நடத்தப்படுகிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

இது போன்று பல ஆண்டுகளாக நடக்கின்ற இந்த அரிய உண்மையை 2008 - 2009 ஆண்டிற்கான தேசிய மகளிர் வாரியத்தின் வரவு செலவிற்கான தணிக்கை அறிக்கையில் இந்திய தணிக்கை வாரியம் கண்டுபிடித்திருக்கிறது. அந்த உண்மையை கீழே படித்து உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள். கடந்த 5 ஆண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் இயங்கும் அமைப்புகளுக்கு பெண்கள் தொடர்பான ஆராய்சி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட பல லட்சக்கணக்கான ரூபாய்க்கு எந்தவித வரவு செலவு கணக்கும் காட்டப்படவில்லை என்றும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எந்த ஆராய்ச்சி முடிவுகளையும் மகளிர் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கவில்லை என்றும் தணிக்கை அதிகாரி கண்டுபிடித்திருக்கிறார். கொடுத்த பணத்தைப் பற்றி மகளிர் வாரியமும் கண்டுகொள்ளவில்லை என்றும் தணிக்கை அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

படத்தின் மீது ‘கிளிக்’ செய்து பெரிதாக்கிப் படிக்கலாம்




உண்மை நிலவரம் இப்படி இருக்கும்போது பெண்கள் தொடர்பான பல சட்டங்கள் அடுக்கடுக்காக எப்படி, ஏன் இயற்றப்படுகிறது என்பது இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும். இதுபோன்ற பல வெளிவராத உண்மைகள் நிறைய இருக்கின்றன. அவை ஒவ்வொன்றாக இனிவரும் பதிவுகளில் வெளிவரும். இந்தியாவில் பெண்களை வைத்து நடக்கும் வியாபாரம் மிகவும் அமோகமாக நடந்துகொண்டிருக்கிறது. அதற்கு பலியாக்கப்படுவது அப்பாவி ஆண்கள்.

பெண்களே விழித்துக்கொள்ளுங்கள். உங்களுக்காக இயற்றப்படும் ஒவ்வொரு சட்டத்திற்குப் பின்னாலும் பலகோடி வருமானம் யாருக்கோ கிடைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் கடைசியில் அழியப்போவது உங்களது குடும்பங்கள்தான். இப்படி உருவானவைதான் IPC498A, Domestic Violence Act போன்றவை.

தேசிய மகளிர் வாரியத்தில் எந்தவிதமான செயல்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்று மகளிர் வாரிய முன்னாள் உறுப்பினர் ஒருவரால் வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதை கீழுள்ள வீடியோவில் பாருங்கள்.



Nirmala Venkatesh,EX MLC & Ex Member NCW,addressing a press confrence to demand the resignation of Girija Viyas,chairperson of National Commission for Women,at Press Club, in New Delhi.





Wednesday, July 21, 2010

சூப்பர் ஷோ!


சபாநாயகரை நோக்கி செருப்பு வீச்சு :67 பேர் சஸ்பெண்ட்
தினமலர் ஜூலை 21, 2010
பெண்களுக்கு என்ன உரிமை கிடைக்கவில்லை இந்தத் திருநாட்டில்?
கருத்து சொல்லும் படம்


பாட்னா : முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, பீகார் சட்டசபையில் நேற்று இரண்டாவது நாளாக கடும் கூச்சல், குழப்பம், அமளி நிலவியது. சபாநாயகரை நோக்கி செருப்பும் வீசப்பட்டது. இதையடுத்து, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 67 பேர், மழைக்கால கூட்டத்தொடர் முழுவதற்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதன்பின் அதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ., பப்லு தேவை சபைக்காவலர்கள் வெளியேற்ற முற்பட்ட போது, மற்ற உறுப்பினர்கள் தடுக்க முற்பட்டனர். இந்த மல்லுக்கட்டின் போது, சபாநாயகரின் இருக்கையை நோக்கி செருப்பு ஒன்றும் வீசப்பட்டது. செருப்பை யார் வீசியது என்பது தெரியவில்லை. இருந்தாலும் அந்தச் செருப்பு, சபாநாயகர் மீது படவில்லை. இதேபோல், பீகார் சட்டசபை மேலவைக்கு வெளியேயும் பெரும் அமளி மற்றும் நாடகம் நடந்தது. நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.சி., ஜோதி குமாரி என்பவரை, சபைக்கு உள்ளே நுழைய விடாமல் காவலர்கள் தடுக்க முற்பட்ட போது, அவர் பூந்தொட்டிகளை தூக்கி வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து, அவரை பெண் காவலர்கள் சில அடி தூரத்திற்கு இழுத்துச் சென்று விட்டனர். சபையின் வெளியேதான் இந்த நிலைமை என்றால், உள்ளேயும் கடும் அமளி நிலவியது. ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.சி., சஞ்சய் பிரசாத், மேஜை மீதிருந்த மைக்குகளை பிடுங்கி ஆளும் கட்சியினரை நோக்கி எறிந்தார். சட்டசபை மேலவையில் ரகளையில் ஈடுபட்டதற்காக நேற்று முன்தினமே 14 எம்.எல்.சி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

=============



“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.