இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Showing posts with label WCD. Show all posts
Showing posts with label WCD. Show all posts

Thursday, October 07, 2010

மூத்தோர் இல்லாத வீட்டில் போலிஸ் புகும்

திருமணமானவுடன் மாமியார் மாமனாரை விரட்டிவிட்டு கணவனை அடிமைப்படுத்த நினைக்கும் புரட்சிப் பெண்கள் பலர் இப்போது உருவாகிவிட்டார்கள். பெற்றவர்களை வெளியே விரட்டவேண்டும் அல்லது தனிக்குடித்தனம் போகவேண்டும் என்று பல மனைவியர் கணவனுக்கு வரதட்சணை தடுப்புச் சட்டங்களைக் காட்டி “அன்புக் கட்டளை” போடுகிறார்கள்.

இதுபோன்ற மூத்தோர் இல்லாத குடும்பங்களில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாட்டை களைவதற்கும், தக்க அறிவுரை கூறுவதற்கும் ஆளில்லாமல் எல்லாக் குடும்பப் பிரச்சனைகளுக்கும் “குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் வழிகாணலாம்” “வரதட்சணை தடுப்புச் சட்டங்களைக் காட்டி மிரட்லாம்” என்று பெண்களுக்குத் தவறான வழிகாட்டப்படுவதால் மூத்தோர் இல்லாத வீட்டில் போலிசும் சட்டமும்தான் புகுந்து குடும்பங்களை சிதைத்துவிட்டுச் செல்லும். இதனால் நஷ்டப்படப்போவது பெண்களும், அப்பாவிக் குழந்தைகளும்தான்.

தலைவிகள் சொல்லும் பின்வரும் அறிவுரைகளைப் படித்துவிட்டு அதனைத் தொடர்ந்து வரும் செய்தியையும் படியுங்கள்.


"I want to teach men what their mothers didn’t"

"I am here to teach men what their mothers didn't teach them," declared Women and Child Development Minister Renuka Chaudhury
August 29, 2007
http://www.rediff.com/news/2007/aug/29men.htm

• • • • • • • • • •

Thats Tamil News, 3/4/2008
கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்று குடும்பத் தலைவிகளுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் கூறினார்.

• • • • • • • • • •

கணவருடன் சேர்த்து வைக்க கோரி தர்ணா நடத்திய மனைவி

அக்டோபர் 07,2010 தினமலர்

விருதுநகர்: விருதுநகரில் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கணவர் வீட்டு முன் பெண் தர்ணா போராட்டம் நடத்தினார். போலீசார் சமரசத்திற்கு பின் போராட்டத்தை கைவிட்டார்.

விருதுநகர் பெரிய கிணற்று தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி மகள் அஷ்டலட்சுமி(32). இவருக்கும் முத்தமிழ் வீதி குறுக்கு தெருவைச் சேர்ந்த ஜெயபாலன் மகன் சிவசங்கருக்கும் 1998ல் திருமணம் நடந்தது. வரதட்சணையாக 53 சவரன் நகைகள், பொருட்கள் வழங்கப்பட்டன.

சிவசங்கர், பழைய பாலி பேக் இயந்திரங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு பாலகணேஷ்(12) பாலமுருகன்(9) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.தொழிலுக்காக ஊர், ஊராக சென்று வருபவர். இவர் மனைவியையும், குழந்தைகளையும் கவனிப்பதில்லை. இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். மகளிர் போலீசில் புகார் செய்ததில் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து சமரசம் செய்து அனுப்பினர். இந்நிலையில், சிவசங்கர், மனைவிக்கு நேற்று விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார்.

இதனால் கணவருடன் சேர்த்து வைக்கும் படி கூற மாமனார் வீட்டிற்கு அஷ்டலட்சுமி வந்தார். அங்கு யாரும் இல்லாத நிலையில், பிற்பகல் 3 மணி முதல் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். பாண்டியன் நகர் போலீசார், புகார் தெரிவிக்க கூறியதால், இரவு 7.15 மணிக்கு அஷ்டலட்சுமி தன் போராட்டத்தை கைவிட்டார்.

=======

“வெளிச்சம் புகாத வீட்டில் வைத்தியன் புகுவான்” என்பது பழமொழி

“மூத்தோர் இல்லாத வீட்டில் போலிஸ் புகும்” என்பது புதுமொழி

ஆரோக்கியமற்ற வீட்டிற்குள்தான் வைத்தியன் புகவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வைத்தியன் புகுந்து குடும்பத்திற்குள் ஆரோக்கியத்தை மீண்டும் கொண்டு வருவான்.

அழியப்போகின்ற குடும்பத்திற்குள்தான் போலிஸ் புகும். குடும்பத்திற்குள் போலிஸ் புகுந்த பிறகு பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர்வதை விட குடும்ப அழிவு விரைவுபடுத்தப்பட்டு அதன் அழிவு உறுதிப்படுத்தப்பட்டுவிடும்.

இதுதான் பழமொழிக்கும் புதுமொழிக்கும் உள்ள ஒற்றுமையும் வேற்றுமையும்.




Saturday, October 02, 2010

மகளிர் காவல் நிலையங்களுக்கு பாவ மன்னிப்பு கிடைக்குமா?

Thats Tamil News வியாழக்கிழமை, பிப்ரவரி 19, 2009

சென்னை: சென்னையில் 8 மாத கர்ப்பிணியிடம் தாலி சங்கிலியை லஞ்சமாக கேட்ட பெண் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

சென்னை வியாசர்பாடி, பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஜீவிதா (18). இவரது கணவர் மோகன். ஜீவிதா திருவான்மியூரில் பெண்கள் விடுதி நடத்தி வருகிறார்.
திருமணமானவுடன் ஜீவிதா கர்ப்பமடைந்தார். ஆனால், ஜீவிதாவின் நடத்தையில் மோகன் சந்தேகப்பட ஆரம்பித்தார். சேர்ந்து வாழ வேண்டுமென்றால் பெரிய அளவில் வரதட்சணை வேண்டும் என்றும் சித்ரவதை செய்ய ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தி்ல் ஜீவிதாவின் நகைகளைப் பறித்துக் கொண்டு வீட்டை விட்டு விரட்டிவிட்டார். இதையடுத்து ஜீவிதா தனது பெற்றோர் வீட்டில் தஞ்சமடைந்தார்.

கடந்த 2ம் தேதி தனது தந்தை முரளிகுமார், தாயார் தமிழ்செல்வி ஆகியோரோடு ஜீவிதா அடையார் மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்று இன்ஸ்பெக்டர் கீதாவிடம், தனது கணவர் செய்யும் கொடுமைகள் குறித்து புகார் தந்தார்.

மனுவை வாங்கிக்கொண்ட இன்ஸ்பெக்டர் கீதா, ஜீவிதாவையும் மோகனையும் ஒன்றாக வைத்து விசாரணை நடத்தினார். அப்போது இனிமேல் ஜீவிதாவோடு வாழமாட்டேன் என்று மோகன் பிடிவாதம் செய்தார்.

ஜீவிதா தினமும் தனது பெற்றோருடன் அடையார் போலீஸ் நிலையத்துக்கு நடையாக நடந்தும் கூட இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்காமல் இன்ஸ்பெக்டர் கீதா இழுத்தடித்ததார்.

கணவர் பறித்து வைத்துள்ள நகைகளையாவது மீட்டுத்தாருங்கள் என்று ஜீவிதா கோரினார்.

பலநாள் ஜீவிதாவை அலைய விட்ட இன்ஸ்பெக்டர் கீதா, இனிமேல் இந்த வழக்கை நான் விசாரிக்க மாட்டேன், கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன் என்று எழுதிக்கொடு என்று ஜீவிதாவிடம் கூறியுள்ளார்.

ஜீவிதா கதறி அழவே, உன் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் ரூ.5,000 தர வேண்டும் என்று கூறியுள்ளார். தன்னிடம் அவ்வளவு பணமில்லை என்று கூறிய ஜீவிதாவிடம், கழுத்துல கிடக்கிற தாலிய வித்துக்கு வந்து காச குடுடி என்று சினிமா வில்லி போல இன்ஸ்பெக்டர் கீதா பேசவே, அதிர்ந்துபோன ஜீவிதா லஞ்ச ஒழிப்பு போலீசில் கீதா மீது புகார் கொடுத்தார்.

இதையடுத்து கீதா மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புப் பிரிவு இயக்குனர் ராமானுஜம், ஐ.ஜி. துக்கையாண்டிக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து எஸ்பி பவானீஸ்வரி, துணை எஸ்பி பொன்னுசாமி, இன்ஸ்பெக்டர்கள் பரமசாமி, அசோகன், இம்மானுவேல் ஞானசேகரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

நேற்று மாலை அடையாறு போலீஸ் நிலையத்தில் மாறுவேடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காத்திருக்க, ஜீவிதா ரூ.5,000 பணத்தோடு, இன்ஸ்பெக்டர் கீதாவை போய் பார்த்தார்.

அப்போது பணத்தை கையில் வாங்காமல், தன்னுடைய டைரியை கொடுத்து அதற்குள் பணத்தை வைக்கும்படி இன்ஸ்பெக்டர் கீதா கூறினார். ஜீவிதாவும் பணத்தை டைரிக்குள் வைத்தார்.

அப்போது அங்கு புகுந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டர் கீதாவை கைது செய்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சண்டை போட்ட கீதா பி்ன்னர் தரையில் விழுந்து புரண்டு அழுது நாடகமாடினார்.

ஆனாலும் அவரை போலீசார் விடவில்லை. அவரைக் கைது செய்ததோடு சைதாப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் உள்ள கீதாவின் வீட்டிலும் சோதனை நடத்தி ஏராளமான சொத்துப் பத்திரங்களை கைப்பற்றியுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அடையார் காவல் நிலையத்தில் பணியாற்றும் கீதா மீது ஏற்கனவே ஏராளமான லஞ்ச குற்றச்சாட்டுகள் உள்ளன.

நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரித்தபோது திடீரென்று தரையில் விழுந்து உருண்டு அழுததோடு நெஞ்சு வலிப்பதாகக் கூறினார்.

பின்னர் 'மயக்கம்' போட்டு விழுந்தார். டாக்டர் வரவழைக்கப்பட்டு அவருக்கு 'சிகிச்சை' அளிக்கப்பட்டது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு வழக்குக்கும் இன்ன விலை என நிர்ணயித்து ஆட்டம் போட்டு வந்த கீதா வரதட்சணை புகார்களில் இரு தரப்பினரிடமும் பணம் வாங்கிக் கொண்டு கணவன்-மனைவியை பிரித்து அனுப்பும் வேலையை செய்வதில் கில்லாடி.

இதுவரை ஒரு தம்பதியைக் கூட கவுன்சிலிங் மூலம் சேர்த்து வைக்காதவர் என்ற பெருமையுடைவர்.

கீதாவுக்கு லஞ்சம் வாங்கித் தருவதில் பெண் ஏட்டு சோபியா என்பவரும் பக்க பலமாக இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையே இன்ஸ்பெக்டர் கீதாவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ள போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், போலீஸ் வேலையை பொது மக்களுக்கு சேவை செய்வதற்காக பயன்படுத்துங்கள். சட்டவிரோதமாக சம்பாதிக்க முயலும் போலீசார் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். லஞ்சம் கேட்கும் போலீஸ் அதிகாரிகள் பற்றி பொதுமக்கள் என்னிடம் நேரடியாக புகார் செய்யலாம் என்றார்.

மகளிர் காவல் நிலையங்களில் பொது காவல் நிலையங்களுக்கு இணையாக அநியாயங்களும், கட்டப் பஞ்சாயத்துகளும், லஞ்சம்-ஊழலும் கொடி கட்டிப் பறந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் புகார் தருவோர், பிடிபட்டோரிடம் கெட்ட வார்த்தைகளை பிரயோகப்படுத்துவதிலும் மகளிர் காவல் நிலையங்கள் எந்த விதத்திலும் சளைத்தவை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

==============

மகளிர் காவல்நிலையங்களில் பொய் வரதட்சணை வழக்குகளில் அப்பாவிகளை துன்புறுத்தி அவமானப்படுத்தும் - செய்த பாவத்திற்கும், செய்துகொண்டிருக்கின்ற பாவத்திற்கும், செய்யப்போகிற பாவத்திற்கெல்லாம் விமோசனம் கிடைக்கவேண்டுமென்றால் கீழுள்ள படத்தில் உள்ளதுபோல் செய்தால் கிடைத்துவிடுமா?

செய்தியும் படமும் தினமலரில் வந்துள்ளது.



புது பயிற்சி: பெண் போலீஸ் கோலம்மெல்லாம் போடுறாங்க ஏதாவது புது பயிற்சியா இல்ல கோலப் போட்டி நடக்குதான்னு நினைச்சிடாதீங்க. போலீஸ், பொதுமக்கள் நல்லுறவுக்காக பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு முன்னதாக போடப்பட்ட கோலம்தான் இது. பரவாயில்லை வீடு போல் பாவித்து இப்படியெல்லாம் செய்தா, மக்கள் மத்தியில போலீஸ் "உங்கள் நண்பன்னு' நிருபிக்கலாமில்ல. (தினமலர் அக்டோபர் 2, 2010)




Friday, September 24, 2010

குழந்தைகள் நலனில் அக்கறை காட்டினால் லாபம் கிடையாது

சேலம் 53வது வார்டு வேலு புதுத்தெருவில் செயல்பட்டு வரும் சிறிய குழந்தைகள் மையத்தில், குழந்தைகள் அதிகளவில் உள்ளதால் போதிய இடவசதி இல்லாமல், ஒருவர்மேல் ஒருவர் என்று படுத்து உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தனியாக சமையலறை வசதி இன்றி, சிறிய வகுப்பறைக்குள் சமையல் பாத்திரங்கள், நாற்காலிகள், காஸ் சிலிண்டர் வைத்துள்ளதால் அசம்பாவிதம் ஏற்படும் நிலையில் உள்ளது.
(தினமலர் படம் 25 செப்டம்பர் 2010)

இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை என்று ஒரு தனி அமைச்சகமே இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இதற்காக நிதி “ஒதுக்கீடும்” நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் கண்ணில் படுவதெல்லாம் பொய் வரதட்சணை வழக்குப் போட்டு நாட்டை சீர்குலைக்கும் “அப்பாவிப்” பெண்கள் மட்டுமே. அவர்களுக்காக அடுக்கடுக்காக பல சட்டங்கள் இயற்றுவதற்குமட்டும்தான் இந்த அலுவலர்கள் வியர்வை சிந்தி உழைப்பார்கள்!

அமைச்சகத்தின் உழைப்பிற்கு ஒரு உதாரணம்:

`Pub bharo' to beat moral police: Renuka Choudhary
Times of India 6 Feb 2009

NEW DELHI: Turning the iconic freedom struggle slogan " jail bharo" on its head, Minister of State for Women and Child Development since Renuka Choudhary on Thursday suggested that the only way to tackle the moral police was to launch a " pub bharo andolan".



பொய் வரதட்சணை வழக்குகள் எவ்வளவு அதிகமாக பதிவு செய்யப்படுகிறதோ அவ்வளவு எண்ணிக்கையில் பெண்கள் இந்தியாவில் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள் என்று புள்ளி விவரம் காட்டி நிதியுதவி பெறலாம். ஒவ்வொரு ஆண்டும் எத்தனை FIR பதிவு செய்யப்படுகிறது என்பதை மட்டும்தான் கணக்கில் கொள்ளவேண்டும். அப்போதுதான் அது மிகப்பெரிய எண்ணாகத் தெரியும். வழக்கின் முடிவில் எத்தனை உண்மையானவை என்று எண்ணிப்பார்த்து உண்மையைச் சொன்னால் பிழைக்க முடியாதல்லவா! அதனால் பெண்களைக் காப்பாற்றுகிறேன் என்று புதுப்புது சட்டங்களை இயற்றி அதிக அளவில் பொய் வழக்குகளை உருவாக்கினால் அதிக எண்ணிக்கையில் FIR பதிவுசெய்யப்பட்டு பணமழையாகப் பொழியுமல்லவா.

இதுபோல் குழந்தைகளை வைத்து ஏதாவது பணம் பார்க்கமுடியுமா? அல்லது குழந்தைகள்தான் பொய்வழக்குப் போடுவார்களா?




Tuesday, August 03, 2010

விவசாயிக்கு உதவிய பெண் சார்பதிவாளர்!

இந்திய விவசாயி நிலத்தை அடமானம் வைக்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் ஒரு பெண் அதிகாரி விவசாயியிடம் லஞ்சம் கேட்டிருக்கிறார் போலிருக்கிறது. இதுபோன்ற கண்மணிகள்தான் நாட்டிற்குத் தேவையோ?

பெண்கள் இன்னும் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் என்று பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நல்ல கல்வியும் பதவியும் கிடைத்தபிறகு என்ன செய்கிறார்கள்? சட்டங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக இல்லாதவரை பெண்கள் தங்களுக்குக் கிடைக்கும் வசதிகளைத் தவறாகத்தான் பயன்படுத்த நினைப்பார்கள். ஏனென்றால் அதுதான் ஆணுக்குச் சமமாக உரிமை கிடைத்ததன் அடையாளம் என்று பெண்ணுரிமை பேசும் கூட்டம் பெண்களுக்குத் தவறான பாடத்தை சொல்லிக்கொண்டிருக்கிறது.

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய பெண் சார்பதிவாளர்

04 Aug 2010 தினமணி

நில அடமானப் பத்திரத்தை பதிவு செய்ய ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக நீடாமங்கலம் சார்பதிவாளரையும், அவருக்கு உதவியவரையும் ஊழல் தடுப்புத் துறை போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், புள்ளவராயன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பூவண்ணன் (40), விவசாயி.தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்குவதற்காக தனது நிலத்தின் ஆவணங்களை நீடாமங்கலம் சார்பதிவாளர் தேவகியிடம் தாக்கல் செய்து, நில அடமானப்பத்திரம் பதிவு செய்துதர விண்ணப்பித்தார் பூவண்ணன். ஆனால், தேவகி பத்திரப்பதிவு செய்து தராமல் தாமதம் செய்து வந்தாராம்.இந்த நிலையில் பத்திரத்தை பதிவு செய்து தருமாறு தனது நண்பர் நீடாமங்கலம் சோணாப்பேட்டை ஜெயகாந்தனின் உதவியை பூவண்ணன் நாடினாராம். ஜெயகாந்தன் நீடாமங்கலம் சார்பதிவாளர் தேவகியிடம் பேசியதில், பத்திரத்தை பதிவு செய்து தர ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தரவேண்டுமென்று சார்பதிவாளர் தரப்பில் கேட்கப்பட்டதாம். இந்த நிலையில் பூவண்ணன் நாகப்பட்டினம் ஊழல் தடுப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் மாணிக்கவாசகத்திடம் புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை ஜெயகாந்தன் லஞ்சப் பணத்தை சார்பதிவாளர் தேவகியிடம் கொடுத்தபோது மறைந்திருந்த ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் தேவகியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். உடந்தையாக இருந்த சோணாப்பேட்டை ஜெயகாந்தனும் கைது செய்யப்பட்டார்.





பாலியல் வன்கொடுமையை ஆண்கள் ஆதரிக்கிறார்களா?

செய்தியைப் மேலோட்டமாகப் படித்ததும் ஏதோ ஆண்கள் அனைவரும் பெண்களுக்கு எதிரானவர்கள் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் ஏற்படும். அப்படித்தான் பல ஆண்டுகளாக ஒரு மாயை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் உண்மையை யாரும் இதுவரை அறிந்திருக்கமாட்டார்கள். இந்தப் பதிவை முழுதுமாக கடைசிவரை படித்துப்பாருங்கள். பிறகு இதுபோல செய்தித்தாள்களில் வரும் செய்தி எப்படி மேலோட்டமாக எழுதப்பட்டு மக்களை திசைதிருப்பிக்கொண்டிருக்கிறது என்று உங்களுக்கே புரியும்.



புதுடில்லி : "குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டு வரப்படவுள்ள பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதா, பெண்களுக்கு சாதகமாகவும், ஆண்களுக்கு பாதகமாகவும் உள்ளது. அதில் திருத்தம் கொண்டு வர வேண்டும்' என, ஆண்களுக்கான அமைப்பு ஒன்று கோரியுள்ளது.

குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில், "பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதா' இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இம்மசோதா, "அலுவலகங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை விசாரிக்க, அவற்றின் தலைமையாதிகாரி உட்பட பெண்கள் பெரும்பான்மை உறுப்பினர்களாக கொண்ட விசாரணை கமிட்டி அமைக்கப்பட வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பரிந்துரைக்கிறது. இந்நிலையில் டில்லியை சேர்ந்த "தி சேவ் இந்தியன் பேமிலி பவுண்டேஷன்' என்ற ஆண்களுக்கான அரசு சாரா அமைப்பு ஒன்று, இம்மசோதா தற்போதைய நிலையில் நிறைவேற்றப்பட கூடாதென, எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இது குறித்து அவ்வமைப்பின் பொதுச்செயலர் நீலாத்ரி சேகர் தாஸ் கூறியதாவது: பெண்கள் எப்போதும் பொய்யே பேச மாட்டார்கள் என்றும், ஆண்கள் பிறக்கும் போதே "கிரிமினல்'களாக தான் பிறக்கின்றனர் என்றும் அம்மசோதா கருதுகிறது. ஆனால், பெண்களால் ஆண்களும் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இம்மசோதா, பெண்களுக்கே சாதகமாக அமைந்துள்ளது. அதனால், இருபாலினத்தவரையும் சமமாக மதிக்கும் முறையில் மசோதா திருத்தப்பட வேண்டும். இதன் தற்போதைய வடிவம், இந்திய அரசியல் சாசனத்தின் 15வது பிரிவின், மத அல்லது பாலின ரீதியில் பாகுபாடு காட்டப்படக் கூடாதென்ற உரிமைக்கு எதிராக அமைந்துள்ளது. பெண்களுக்கு தேவையில்லாமல் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.

மசோதா கூறியுள்ள இத்தகைய கமிட்டிகள், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஏற்கனவே உள்ளன. அந்த கமிட்டியில் இடம் பெறுபவர்களுக்கான அடிப்படை தகுதியாக, ஒருவர் பெண்கள் நலம் குறித்து கவலை கொள்பவராக இருந்தால் போதும் என்று மசோதா கூறுகிறது. பெண்களே பெரும்பான்மையாக உள்ள கமிட்டியில் எப்படி ஆண்களுக்கான நீதி கிடைக்கும்? ஆண்கள் குற்றம் செய்யக் கூடாதென கூறும் மசோதா, பெண்களிலும் அப்படிப்பட்டவர்கள் இருக்கின்றனர், அவர்களையும் விசாரிக்க வேண்டுமென்பதை ஏன் கண்டு கொள்ளாமல் விட்டது? பெண்களால், பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கற்பனை செய்திகளின் அடிப்படையில் சட்டம் இயற்றுவது, அபாயகரமான சமூக விளைவுகளை ஏற்படுத்தி விடும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளையும், ஆண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளையும் நடவடிக்கை ரீதியாகவோ, சம்பவ ரீதியாகவோ சம நோக்கில் பார்க்க கூடாதென, அமைச்சகம் கருதுகிறது. இது தவறு. இவ்வாறு நீலாத்ரி சேகர் தாஸ் தெரிவித்தார்.


ஒருதலைபட்சமான முடிவுகள் ஏன் ஆபத்தானது என்று கீழுள்ள வீடியோவில் பாருங்கள் புரியும்.


மேலுள்ள செய்தியில் இந்தியக் குடும்பப் பாதுகாப்பு இயக்கம் ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கிறது என்பதற்கான உண்மையையும் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த உண்மை எந்த செய்தித்தாளிலும் வெளிவராது. இந்தியப் பெண்களுக்கும் தெரியாது. ஒட்டுமொத்தமாக இந்திய மக்களுக்குத் தெரியாமல் உண்மை வேறுவிதமாக திசைதிருப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இதுபோன்ற பெண்கள் தொடர்பான சட்டங்களை இயற்றுவதற்கு முன்பு உண்மை நிலவரத்தை ஆராய்ந்து அதற்கேற்ப சட்டங்களை இயற்றவேண்டும். பெண்கள் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பெண்கள் நல வாரியத்திற்கு இதுபோன்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சரியான ஆலோசனை வழங்குவதுதான் வேலை. ஆனால், பெண்கள் வாரியத்தில் நடக்கும் விஷயங்களோ மிகவும் நம்பமுடியாதவையாக இருக்கின்றன.

இதுபோன்ற பெண்கள் தொடர்பான ஆய்வுக்கு நிதிவேண்டி விண்ணப்பம் செய்பவர்களுக்கு லட்சக்கணக்கில் பணத்தை கணக்கில்லாமல் கொடுக்கிறார்கள். ஆனால் அப்படி ஒதுக்கப்படும் நிதியில் ஆராய்ச்சி உண்மையாகவே நடத்தப்படுகிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

இது போன்று பல ஆண்டுகளாக நடக்கின்ற இந்த அரிய உண்மையை 2008 - 2009 ஆண்டிற்கான தேசிய மகளிர் வாரியத்தின் வரவு செலவிற்கான தணிக்கை அறிக்கையில் இந்திய தணிக்கை வாரியம் கண்டுபிடித்திருக்கிறது. அந்த உண்மையை கீழே படித்து உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள். கடந்த 5 ஆண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் இயங்கும் அமைப்புகளுக்கு பெண்கள் தொடர்பான ஆராய்சி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட பல லட்சக்கணக்கான ரூபாய்க்கு எந்தவித வரவு செலவு கணக்கும் காட்டப்படவில்லை என்றும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எந்த ஆராய்ச்சி முடிவுகளையும் மகளிர் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கவில்லை என்றும் தணிக்கை அதிகாரி கண்டுபிடித்திருக்கிறார். கொடுத்த பணத்தைப் பற்றி மகளிர் வாரியமும் கண்டுகொள்ளவில்லை என்றும் தணிக்கை அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

படத்தின் மீது ‘கிளிக்’ செய்து பெரிதாக்கிப் படிக்கலாம்




உண்மை நிலவரம் இப்படி இருக்கும்போது பெண்கள் தொடர்பான பல சட்டங்கள் அடுக்கடுக்காக எப்படி, ஏன் இயற்றப்படுகிறது என்பது இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும். இதுபோன்ற பல வெளிவராத உண்மைகள் நிறைய இருக்கின்றன. அவை ஒவ்வொன்றாக இனிவரும் பதிவுகளில் வெளிவரும். இந்தியாவில் பெண்களை வைத்து நடக்கும் வியாபாரம் மிகவும் அமோகமாக நடந்துகொண்டிருக்கிறது. அதற்கு பலியாக்கப்படுவது அப்பாவி ஆண்கள்.

பெண்களே விழித்துக்கொள்ளுங்கள். உங்களுக்காக இயற்றப்படும் ஒவ்வொரு சட்டத்திற்குப் பின்னாலும் பலகோடி வருமானம் யாருக்கோ கிடைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் கடைசியில் அழியப்போவது உங்களது குடும்பங்கள்தான். இப்படி உருவானவைதான் IPC498A, Domestic Violence Act போன்றவை.

தேசிய மகளிர் வாரியத்தில் எந்தவிதமான செயல்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்று மகளிர் வாரிய முன்னாள் உறுப்பினர் ஒருவரால் வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதை கீழுள்ள வீடியோவில் பாருங்கள்.



Nirmala Venkatesh,EX MLC & Ex Member NCW,addressing a press confrence to demand the resignation of Girija Viyas,chairperson of National Commission for Women,at Press Club, in New Delhi.





Sunday, August 01, 2010

இந்திய மனைவியும் பிச்சைக்காரியும் சமம்?

ஆகஸ்ட் 01,2010, தினமலர்

புதுடில்லி : "கடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது இல்லத்தரசிகள் பொருளாதார ரீதியில் எவ்வித வருமானமும் ஈட்டாதவர்கள் என்ற வகையில் அவர்களை பிச்சைக்காரர்களோடும், சிறைவாசிகளோடும் ஒப்பிட்டு கணக்கெடுப்புத் துறை மதிப்பிட்டுள்ளது. வருந்தத்தக்க இல்லத்தரசிகளின் மதிப்பை மறுநிர்ணயம் செய்யும் நேரம் இப்போது வந்துள்ளது. பார்லிமென்ட் இதுகுறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும்' என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன், அருண் அகர்வாலும் அவரது 39 வயது மனைவி ரெனுவும் தங்கள் காரில் சென்று கொண்டிருந்த போது, உ.பி., மாநிலம் ஹர்தோய் என்ற இடத்தில் லாரி மோதி விபத்து நேரிட்டு, ரெனு இறந்து போனார்.அருண், தன் மனைவியின் உயிரிழப்புக்கு , 19 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக இன்சூரன்ஸ் நிறுவனம் தர வேண்டும் என்று கோரி, வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாணையமும், அலகாபாத் ஐகோர்ட்டும் அவரது மனுவை நிராகரித்து விட்டன.அவை தமது தீர்ப்பில்,"ரெனு ஓர் இல்லத்தரசி. அவருக்கு மாதந்தோறும் வருமானம் எதுவும் வரவில்லை. மேலும், அவரது குடும்பம் அவரைச் சார்ந்தும் இல்லை. அதனால் அவரது மதிப்பு மாதத்துக்கு 1, 250 ரூபாய்தான் பெறும்' என்று கூறிவிட்டன.

மோட்டார் வாகன சட்டம் 1988ன்படி, ஓர் இல்லத்தரசியின் மதிப்பு, அவரது வருமானம் ஈட்டும் கணவரின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்குதான் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதை அவை சுட்டிக் காட்டியிருந்தன.இதனால் அருண், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அவரது வழக்கை ஏற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், ரெனுவின் குடும்பத்தாருக்கு இழப்பீடாக ஆறு லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டது.மேலும், இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே. கங்குலி ஆகியோர் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:கடந்த 2001ல் நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறை, இந்தியாவின் 36 கோடி பெண்களை, வருமானம் ஈட்டாதவர்கள் என்ற பிரிவின் கீழ் சேர்த்துள்ளது.

பிச்சைக்காரர்கள், சிறைவாசிகள், பாலியல் தொழிலாளர்கள் ஆகியோரை பொருளாதார ரீதியில் எவ்வித வருமானமும் ஈட்டாதவர்கள் என்ற வகையில் சேர்த்ததைப் போலவே அவர்களோடு இல்லத்தரசிகளையும் சேர்த்தது, உணர்ச்சியற்ற செயல். இது தொழிலாளர்களையும், பெண்களையும் அவமானப்படுத்துவதாகும்.அதேநேரம், இதேபோல் நடக்கும் பாலியல் ரீதியிலான பாகுபாடு நம்மைக் கவலை கொள்ளச் செய்கிறது. ஓர் இல்லத்தரசியின் வீட்டுவேலைகளை மதிப்பிட்டு அதன் அடிப்படையில் அவரது பொருளாதார மதிப்பை, மோட்டார் வாகனச் சட்டங்கள் மற்றும் இதர சட்டங்கள் வழங்குவதற்கான வழிவகையைக் கொண்டு வர வேண்டிய தருணம் இது. இதுகுறித்து பார்லிமென்ட் சிந்திக்க வேண்டும்.

சட்டங்கள், இல்லத்தரசிகளின் வேலைகளான சமையல், பாத்திரங்கள் கழுவுதல், குழந்தைகளைக் கவனித்தல், தண்ணீர் எடுத்து வைத்தல் போன்றவற்றை ஒரு வேலையாகவே கருதவில்லை என்பதை ரெனு தொடர்பான வழக்கு நமக்கு காட்டுகிறது. இல்லத்தரசிகள் வீட்டு வேலைகளில் செலவிடும் நேரத்தை ஒரு பணியிலோ அல்லது அவர்களது கல்வியிலோ செலவிட முடியும் என்பதை நாம் வசதியாக மறந்து விடுகிறோம். அவர்களது வீட்டு வேலைகளை அங்கீகரிப்பதில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள்தான், பெண்கள் மத்தியில் வறுமை அதிகரிக்கவும் சமுதாயத்தில் அவர்களின் துயரம் தொடரவும் காரணமாகின்றன.ஒரு மூன்றாம் நபரை சம்பளத்துக்கு அமர்த்தி வீட்டு வேலைகளை செய்யச் சொல்வதை விட, இல்லத்தரசிகளின் பணி மிகவும் உயர்ந்தது. ஒரு சமையல்காரருக்கு தரும் சம்பளம் அல்லது கடையில் வாங்கும் உணவுக்குக் கொடுக்கப்படும் பணம் அல்லது ஒரு குடும்பத்துக்கு வேண்டிய உணவை வாங்க செலவிடப்படும் பணம் என்ற அடிப்படையில் இல்லத்தரசிகளின் சமையல் பணி மதிப்பிடப்பட வேண்டும்.இல்லத்தரசிகளிடமிருந்து பெறப்படும் பரிசுப் பொருள் கூட, ஓர் இல்லத்தரசி அல்லது பெற்றோர் என்ற அடிப்படையில்தான் மதிப்பிடப்பட வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

=============

பெண்களுக்கு உரிமை கொடுக்கிறோம் என்று வெளியே பேசிக்கொண்டிருக்கும் கூட்டம் இத்தனை ஆண்டுகள் பெண்களை எப்படி நடத்திவருகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். பெண்களுக்கு இயற்றப்படும் சட்டங்களும் இப்படித்தான். பெண்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அவர்களின் வாழ்க்கையைத்தான் அழிந்துக்கொண்டிருக்கின்றன.

இதுவரை இந்த இழிநிலை தேசிய பெண்கள் வாரியத்திற்கோ, பெண்கள் அமைச்சகத்திற்கோ ஏன் தெரியவில்லை. பொய் வழக்குப் போடும் மருமகள்களை ஊக்குவிக்கும் விதமாக அடுக்கடுக்காக சட்டம் இயற்றும் இந்தக் கூட்டத்திற்கு ஒட்டுமொத்த இந்தியப் பெண்களின் இழிநிலை ஏன் கண்ணுக்குத் தெரியவில்லை? இந்த உண்மை பெண்களின் உரிமைக்காகப் போராடுகிறோம் என்று சொல்லும் கூட்டத்திற்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் தங்களின் சுயநலம் காரணமாக அதை மூடிமறைத்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இனியாவது அப்பாவிப் பெண்கள் தெரிந்துகொள்ளுங்கள் - உங்களை வைத்து எல்லோரும் வியாபாரம்தான் செய்வார்களே தவிர எந்தவிதத்திலும் உங்கள் மரியாதையைக் காப்பாற்றமாட்டார்கள்.

பெண்களுக்குச் சிறப்புப் பாதுகாப்புச் சட்டம் இயற்றுகிறேன் என்பதும், 33% ஒதுக்கீடு கேட்கிறேன் என்பதும் இதுபோன்றதொரு பிரித்தாலும் வியாபார தந்திரமே. உண்மையாகவே உதவி தேவைப்படும் அப்பாவிப் பெண்களையும், தவறாக சட்டங்களைப் பயன்படுத்தத் துடிக்கும் மேல்தட்டுவர்க்கப் பெண்களையும் பிரித்தாலும் சூழ்ச்சிதான் இன்றைய பெண்சுதந்திர முழக்கங்கள். கடைசியில் அரசியல் தந்திரங்களால்
கேட்பாரற்று சீரழிக்கப்படுவது என்னவோ அப்பாவிப் பெண்களின் வாழ்க்கைதான்.




Thursday, July 29, 2010

தாயில்லாமல் பிறக்கும் குழந்தைகள்

ஜூலை 29,2010 தினமலர்

மேலூர் : பிறந்து ஒருவாரமே ஆன பெண் குழந்தை, மதுரை - மேலூர் நான்கு வழிச்சாலை ஓரத்தில் வீசப்பட்டது. ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்தக்குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நான்கு வழிச்சாலையில் மேலூருக்கு திரும்பும் இடத்தில் உள்ள வாழை தோட்டத்தில் கிணறு தோண்டியபோது எடுக்கப்பட்ட கற்கள் குவிக்கப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை அதற்குள் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தனர். இரு புறமும் பாறாங்கற்கள் வைக்கப் பட்டு, அதன் நடுவில் குழந்தை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அதை அகற்றி பார்த்த போது, எறும்புகள் மொய்த்த நிலையில் காயங்களுடன், ஒல்லியான பெண் சிசு இருந்தது. அரசின் "108' இலவச ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சுரேஷ், விமல், சரவணன் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்தனர்.

டாக்டர்கள் கூறியதாவது:
இக்குழந்தை பிறந்து ஒரு வாரமே ஆகி உள்ளது. மேற்புறமாக கல் அழுத்தி உள்ளதால் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. வலது கால் உடைந்துள்ளதாக தெரிகிறது. முதலுதவி சிகிச்சைக்கு பின், மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக குழந்தை அனுப்பப் பட்டுள்ளது, என்றனர்.

மனிதாபிமானமற்ற பெற்றோர் யார்?
: நான்கு வழிச்சாலையில் வழியாக பயணம் செய்த யாரோ தான் இப்படி குழந்தையை போட்டு விட்டு சென்றிருக்க வேண்டும். குழந்தையின் கை மற்றும் காலில் கண்மை இடப்பட்டு உள்ளது. ஆசையுடன் கொஞ்சிய பச்சிளம் குழந்தையை இப்படி வீசியதற்கு பதில் அரசு தொட்டிலில் சேர்த்து இருக்கலாமே.

மனிதத்தாய்மைக்கும் விலங்கினத்தில் இருக்கும் தாய்மைக்கும் உள்ள வித்தியாசம்

பெற்றோரால் வீசியெறியப்பட்ட சிசு

அன்னையின் அரவணைப்பில் இருக்கும் குழந்தை

தாயில்லாமல் குழந்தைகள் பிறந்து தெருவில் கிடக்கும் அதிசயம் நடந்துகொண்டிருக்கிறதா? தாய்மை இன்னும் இருக்கிறதா? இல்லாத தாய்மையின் பெயரால் எதற்கு “பெண்கள் சிறப்புச் சட்டங்கள்”?


Wednesday, July 21, 2010

கர்ப்பவதி குற்றம் செய்யலாமா?

பின்வரும் செய்தியைப் படிப்பதற்கு முன் இந்த இணைப்பில் உள்ள செய்தியை படித்துக்கொள்ளுங்கள்.

பெண் லஞ்சம் வாங்கினால் குடியா மூழ்கிவிடும்?

• • • • • • • •

எஸ்.ஐ., ரேகாவுக்கு ஜாமீன் மறுப்பு

ஜூலை 21,2010 தினமலர்

சென்னை : லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை, சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்தது.

வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் லட்சுமி(40); லாரி உரிமையாளர். சென்னையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் பத்திரங்களை அடகு வைத்து இரண்டு லட்ச ரூபாய் பெற்றார். பின், கடன் தொகையை செலுத்தியுள்ளார். ஆனால், மேலும் 41 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே, பத்திரத்தை கொடுக்க முடியும் என நிதி நிறுவனம் கூறியுள்ளது. இது குறித்து, சென்னை போலீஸ் கமிஷனரிடம் லட்சுமி புகார் செய்தார். யானைக்கவுனி பெண் சப்-இன்ஸ்பெக்டர் ரேகா விசாரித்தார். லட்சுமியிடம் 30 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கி தனியார் நிதி நிறுவனத்திடம் கொடுத்த ரேகா, லட்சுமியின் பத்திரங்களை வாங்கி வைத்துக் கொண்டார். அதன் பின், லட்சுமியிடம் 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். லட்சுமி கொடுத்த ஆயிரம் ரூபாயை வாங்க மறுத்தார். பின், அவர் கேட்ட பணத்தை கொடுத்தார். ரசாயனம் தடவிய பணத்தை வாங்கிக் கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் ரேகா புறப்பட்டார். அவரை பின் தொடர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், எஸ்.ஐ., ரேகாவை மடக்கிப் பிடித்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரேகா, ஜாமீன் கோரி சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இம்மனு நீதிபதி தேவதாஸ் முன் விசாரணைக்கு வந்தது. ரேகா தரப்பில் ஆஜரான வக்கீல், நீண்ட நாட்களுக்கு பின் ரேகா கர்ப்பமாக உள்ளதால், மனிதாபிமான அடிப்படையில் ஜாமீன் வழங்க கோரினார். நீதிபதி தேவதாஸ் பிறப்பித்த உத்தரவு: லஞ்சம் வாங்கியதாக மனுதாரர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அவர் ஊழல் போலீஸ் அதிகாரி என கூறப்படுகிறது. புழல் சிறையில் மருத்துவமனை உள்ளது. அங்கு பெண் டாக்டரும் உள்ளார். என்ன மருந்து தேவையோ அது வழங்கப்படும். சமீபத்தில் தான் ரேகா கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கின் தன்மை, சூழ்நிலை கருதி ஜாமீன் வழங்க விருப்பமில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

=======

ஒரு பெண் போலிஸ் அதிகாரியாக இருந்துகொண்டு புகார் கொடுக்க வந்த மற்றொரு பெண்ணிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய இந்தப் பெண் இப்போது “தாய்மையைக்” காரணம் காட்டி ஜாமின் கேட்கிறார். பெண்ணுக்கு பெண்தான் எதிரி என்பது உண்மைதானோ?

தாய்மையுடன் இருக்கும்போது எப்படி ஒரு பெண்ணுக்கு இதுபோன்ற குற்றங்கள் செய்ய எண்ணம் தோன்றுகிறது. காலம் மாறிவிட்டது. தாய்மை என்பது இப்போதெல்லாம் குற்றம் செய்துவிட்டு தப்பித்துக்கொள்ள பயன்படுத்தும் கேடயமாகிவிட்டது. இந்தத் தாய்மையின் புனிதத்தின் பெயரால்தானே பல ஒருதலைபட்சமான சட்டங்கள் பெண்களுக்காக என்று இயற்றப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பல பெண்கள் இப்படித்தவறாகத்தானே பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். கடைசியில் “தாய்மையின்” புனிதத்தைப் பெண்களே மதிக்காதபோது பிறகு பெண்களை யார் மதிப்பார்கள்?



தன்வினை தன்னைச் சுடுமா? கண்டிப்பாகச் சுடும்.

செய்கின்ற ஒவ்வொரு செயலையும் நன்கு யோசித்து பிறகுதான் செய்யவேண்டும். தன்வினை தன்னைச் சுடும் என்று அன்று மூதாதையர்கள் சொன்னார்கள். அதைப் பின்பற்றி முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சொன்னார்கள். பிறகு அதையே அறிவியல் என்ற பெயரில் ஒவ்வொரு விசைக்கும் எதிர்விசை உண்டு என்று சொன்னார்கள். இவ்வளவு சொல்லியும் அதை பெண்களுக்கு எடுத்துரைக்க சரியான ஆசிரியர் இல்லை. இந்த ஆன்மிக, அறிவியல் உண்மைகளை இந்தக் காலத்துப் பெண்கள் குறிப்பாக பொய் வரதட்சணை வழக்குப் போடும் பெண்கள் நன்கு உணரவேண்டும். அதற்குப் பெண்கள் வாரியம்தான் உதவி செய்யவேண்டும். வேறுயாரும் பொய்வழக்குப்போடும் பெண்களைக் காப்பாற்றவே முடியாது.



கிரகலட்சுமியின் அண்ணி தற்கொலை
ஜூலை 22,2010 தினமலர்

சென்னை : பிரபல நடிகரின் முன்னாள் மனைவியின் அண்ணி தற்கொலையில் சிலருக்கு தொடர்பிருப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை, தி.நகர், மெலோனி தெருவைச் சேர்ந்தவர் பொன்குமார் தனசேகரன். இவர், பிரபல நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவியான கிரகலட்சுமியின் சகோதரர். பொன்குமாரின் மனைவி அபிராமி(30). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பொன்குமாரின் சகோதரர் நாகராஜனும் தன் மனைவியுடன் இதே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.சொத்துப் பிரச்னை ஏற்பட்ட நிலையில், இருவரும் தனித்தனியே செலவுகளை கவனித்து வந்தனர். பொன்குமாரின் மனைவி அபிராமி, தன் படுக்கையறையில் தூக்கில் தொங்கினார். இது குறித்து, மாம்பலம் போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் அபிராமியின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், மாம்பலம் போலீசில் அபிராமியின் தாயார் ஜோன் சீனிவாசன், "பொன்குமாரின் சகோதரர் நாகராஜன், அவரது மனைவி ஜோதி மற்றும் ஜோதியின் சகோதரர் யுவகிருஷ்ணன் ஆகியோர் தான் தனது மகளை தற்கொலை செய்து கொள்ள தூண்டியுள்ளனர்' என புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tuesday, July 20, 2010

குழந்தைகளுக்கு எமனாகும் இந்தியக் கள்ளக்காதல் கலாச்சாரம்

சமீப காலமாக பத்திரிக்கைகள் விழிப்புடன் செய்திகள் வெளியிடுவதன் மூலம் பெண்கள் பாதுகாப்புச் சட்டம் என்ற இருட்டறைக்குள் இருந்துகொண்டு கொலைசெய்துகொண்டிருக்கும் பல பெண்களின் அப்பாவித்தனம் வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கிறது. இதுவரை கள்ளக்காதலுக்காக கணவனைக் கொல்லும் நிலை மாறி இப்போது குழந்தைகளையும் கொல்லும் இழிநிலையில் சென்றுகொண்டிருக்கிறது நிலவரம்.

சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பும், கருத்தும் எரிகின்ற தீயில் பெட்ரோல் ஊற்றியது போல பலருக்கும் நல்ல தன்னம்பிக்கையை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கருத்துப்படி வயதுவந்த ஆண், பெண் இருவரும் விரும்பி உறவுகொண்டு அது கள்ளஉறவாக அதாவது இந்திய சட்டம் IPC497- Adultery சட்டப்படி அடுத்தவன் மனைவியுடனான உறவாக இல்லாதபட்சத்தில் அது சட்டப்படி தவறில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியே அது அடுத்தவன் மனைவியுடனான உறவாக இருந்தால் உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும்தான் தண்டனை வழங்கப்படும் என்று சட்டத்தில் வரையறை செய்துவைத்திருக்கிறார்கள். அந்தத் தீர்ப்பின் பகுதியையும் அந்த சட்டப்பிரிவையும் கீழே பாருங்கள்.

IN THE SUPREME COURT OF INDIA
CRIMINAL APPELLATE JURISDICTION
CRIMINAL APPEAL NO. 913 of 2010
[Arising out of SLP (Crl.) No. 4010 of 2008]

S. Khushboo ... Appellant
Versus
Kanniammal & Anr. ... Respondents

21. While it is true that the mainstream view in our society is that sexual contact should take place only between marital partners, there is no statutory offence that takes place when adults willingly engage in sexual relations outside the marital setting, with the exception of `adultery' as defined under Section 497 IPC. At this juncture, we may refer to the decision given by this Court in Lata Singh Vs. State of U.P. & Anr., AIR 2006 SC 2522, wherein it was observed that a live-in relationship between two consenting adults of heterogenic sex does not amount to any offence (with the obvious exception of `adultery'), even though it may be perceived as immoral. A major girl is free to marry anyone she likes or "live with anyone she likes". (பெண் விரும்பினால் யாருடனும் சேர்ந்து வாழலாம் அது திருமணம் ஆன ஆணுடனா அல்லது திருமணமாகாத ஆணுடனா என்று சொல்லப்படவில்லை)

IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

மேலே கொடுக்கப்பட்டுள்ள சட்ட வரையறைப்படியும், நீதிமன்ற தீர்ப்பின் கருத்தின்படியும் கீழுள்ள செய்தியில் கள்ளஉறவு ஏற்பட்டு அதில் ஒரு குழந்தை பலியிடப்பட்டிருக்கிறது. கீழுள்ள செய்தியில் திருமணமான ஆண் திருமணமாகாதப் பெண்ணுடன் உறவுவைத்திருக்கிறார். இது சமீபத்திய தீர்ப்புப்படி இரு வயதுவந்த ஆண்,பெண் கொண்ட விருப்ப உறவாக அமையும் அதேநேரத்தில் IPC497 (Adultery) சட்டப்படி அடுத்தவன் மனைவியுடனான உறவாக இல்லாததால் இது Adultery என்ற பிரிவின் கீழ் குற்றமாகவும் வராது.

மேலும் அந்த ஆண் அந்தப் பெண்ணுடன் திருமணம் செய்திருந்தால்தான் அது அந்த ஆணைத் தண்டிக்க வழி செய்யும் இருதார மணம் (Bigamy) என்ற பிரிவில் கருதப்படும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் மனைவியல்லாத இரண்டாவது காதலியுடன் திருமணம் செய்யாமல் பல அரசியல்வாதிகள் உங்கள் கண்ணுக்கெதிரேயே பெருமையுடன் உங்கள் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதனால் கீழுள்ள செய்தியில் உள்ளதுபோன்ற குற்றங்களை சட்டங்களும் சமுதாயமும் எப்படி ஊக்குவித்துக்கொண்டிருக்கின்றன என்று தெளிவாகத் தெரிகிறதல்லவா.


சூட்கேசில் சிறுவன் பிணம் : கள்ளக்காதலியின் வெறிச்செயல் அம்பலம்

தினமலர் ஜூலை 20, 2010

கொலை செய்யப்பட்ட சிறுவன் ஆதித்யா உடல், நாகை சுடுகாட்டில் புதைக்கப்பட்ட போது கதறியழும் தாய் ஆனந்தி.

சென்னை :சென்னையில் காணாமல் போய், சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் ஆதித்யாவை, அவனது தந்தையின் கள்ளக்காதலி பூவரசியே கொன்று சூட்கேசில் எடுத்துச் சென்று நாகப்பட்டினத்தில் வீசியுள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பூவரசியை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை, விருகம்பாக்கம் பத்மாவதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (33). கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த இவர், சென்னையில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆனந்தி (எ) அனந்த லட்சுமி (30). இவர்களுக்கு நிவேதா (6) என்ற மகளும், மூன்றரை வயதில் ஆதித்யா என்ற மகனும் உள்ளனர்.வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த திருவலம் கிராமத்தை சேர்ந்தவர் பூவரசி (26). எம்.எஸ்சி., பட்டதாரியான இவர், ஜெயக்குமார் பணியாற்றும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஜெயக்குமாரும், பூவரசியும் முன்னரே, சென்னையில் வேறு ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய போது நெருக்கம் ஏற்பட்டு, கள்ளத் தொடர்பாக வளர்ந்தது. பூவரசியை, வேப்பேரியில் உள்ள ஒய்.டபிள்யூ.சி.ஏ., விடுதியில் ஜெயக்குமார் தங்க வைத்தார். இதை அறியாத ஆனந்தியும், அவரது குழந்தைகளும், பூவரசியிடம் நெருக்கமாக பழகினர்.ஜெயக்குமார் அடிக்கடி தனது மகன் ஆதித்யாவை அலுவலகத்திற்கு அழைத்து வரும் போது, பூவரசி தன்னுடன் அழைத்துச் செல்வது வழக்கம். கடந்த சனிக்கிழமை 17ம் தேதி வழக்கம் போல் ஆதித்யா, அலுவலகம் வந்த போது, அரண்மனைக்காரன் தெருவில் உள்ள ஆண்டர்சன் சர்ச்சில் விழா நடப்பதாகவும், அங்கு ஆதித்யாவை அழைத்துச் செல்வதாகவும் பூவரசி கூறினார். தொடர்ந்து, ஜெயக்குமார், ஆதித்யாவை பூவரசியுடன் அனுப்பி வைத்தார். அன்று மாலை 6 மணிக்கு தனது மகன் ஆதித்யாவை காணவில்லை என்று எஸ்பிளனேடு போலீசில் ஜெயக்குமார் புகார் அளித்தார். விசாரணையில், தனது மகனை, நண்பியான பூவரசியுடன் அனுப்பியதாகவும், அவர் சர்ச்சில் மயங்கி விழுந்த போது மகனை காணவில்லை என்றும் கூறியிருந்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்த பூவரசியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவரும் அப்படியே கூறியதால், மறுநாள் விசாரணைக்கு வருமாறு போலீசார் கூறியிருந்தனர். மறுநாள் காலை போலீசும், ஜெயக்குமாரும் தொடர்பு கொண்ட போது, பூவரசியின் மொபைல் "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் இணைப்பு கிடைத்த நிலையில், போலீசார் மீண்டும் பூவரசியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நாகை மாவட்ட புதிய பஸ் நிலையத்தில் சூட்கேசில் இறந்த நிலையில் சிறுவன் பிணம் மீட்கப்பட்டது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த படத்தை வைத்து கேட்ட போது ஜெயக்குமாரும், பூவரசியும் மறுத்துவிட்டனர். ஆனால், ஆனந்திக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர் அடையாளம் காட்ட நாகைக்கு அனுப்பப்பட்டார்.அங்கு சென்ற ஆனந்தி, சூட்கேசில் இருந்த சிறுவன் உடல் தனது மகன் ஆதித்யாவுடையது தான் என தெரிவித்தார். தொடர்ந்து, பூவரசியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், ஆதித்யாவை கொன்றதை ஒப்புக் கொண்டார். போலீசார், பூவரசியை கைது செய்தனர். சிறுவனின் தந்தை ஜெயக்குமார் தற்போது நாகை விரைந்துள்ளார்.

சிறுவன் உடல், நாகை அரசு மருத்துவமனையில் குளிரூட்டப்பட்ட பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.இது குறித்த செய்தி பத்திரிகைகளில் வெளிவந்ததையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை போலீசாருடன், நாகை அரசு மருத்துவமனைக்கு வந்த ஆனந்தி, சிறுவன் உடலை பார்த்து கதறியழுது மயங்கி விழுந்தார். மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் ஆனந்தி சேர்க்கப்பட்டார்.நேற்று மாலை சிறுவன் ஆதித்யா உடல், பிரேத பரிசோதனைக்கு பின், நாகை சுடுகாட்டில் போலீஸ் பாதுகாப்புடன் புதைக்கப்பட்டது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் சோகத்தோடு பங்கேற்றனர்.நாகை பஸ் ஸ்டாண்டு முழுப்பகுதியையும் கண்காணிக்க, நவீன கேமரா பொருத்தப்பட்டு இதன் கட்டுப்பாட்டு அறை டி.எஸ்.பி., அலுவலகத்தில் 24 மணி நேரமும், தனி அலுவலரால் கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில், பஸ் ஸ்டாண்டின் மையப்பகுதியில், சிறுவனை கொலை செய்து உடலை அடைத்து வைத்திருந்த சூட்கேஸ் இறக்கி வைக்கப்பட்டு, அனாதையாக கிடந்துள்ளது. இது நவீன கண்காணிப்பு கேமராவில் பதிவாகாத மர்மம் போலீசாருக்கு புரியாத புதிராக உள்ளது.

"ஜெயக்குமாரை பழிவாங்கவே கொன்றேன்'

ஜெயக்குமாருக்கும், எனக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். நான் கர்ப்பமடைந்த நிலையில், ஜெயக்குமாரின் வற்புறுத்தலால் கருவை கலைத்தேன். இரண்டு முறை அப்படி நடந்தது. தொடர்ந்து அவர், கருவை கலைக்கச் சொன்னதால் நான் ஆத்திரமடைந்தேன். திருமணம் செய்யுமாறு கூறியபோது ஜெயக்குமார் மறுத்தார். எனக்கு உருவான குழந்தையை கொன்றுவிட்டு, ஜெயக்குமார் மட்டும் குழந்தையுடன் சந்தோஷமாக இருக்கக் கூடாது என்று எண்ணினேன்.கடந்த 17ம் தேதி, சிறுவன் ஆதித்யாவை கூட்டிக் கொண்டு எனது விடுதிக்குச் சென்று, அங்கு அவன் அணிந்திருந்த டிரஸ்சில் இருந்து நைலான் கயிறை எடுத்து கழுத்தில் இறுக்கி கொன்றேன். பின்பு, தலையை பிளாஸ்டிக் கவரை கொண்டு மூடி உடலை சூட்கேசில் வைத்தேன். அங்கிருந்து ஆண்டர்சன் சர்ச்சிற்கு பாவமன்னிப்பு கேட்கச் சென்ற போது மயங்கி விழுந்து விட்டேன். போலீசார், மருத்துவமனையில் வைத்து விசாரிக்கும் போது, ஆதித்யாவின் உடல் சூட்கேசில் எனது அறையில் இருந்தது.மறுநாள் காலை மருத்துவமனையில் இருந்து வந்து, ஆட்டோவில் சூட்கேசை ஏற்றி கோயம்பேடு சென்று, அங்கிருந்து பஸ்சில் ஏற்றி புதுச்சேரி சென்றேன். அங்கு, நாகை பஸ்சில் சூட்கேசை ஏற்றி வைத்து விட்டு, மீண்டும் சென்னை திரும்பி விட்டேன். ஜெயக்குமாரை பழிவாங்கவே நான் இந்த கொலையை செய்தேன்.

==============

இந்த செய்தியிலிருந்து பெண்ணியவாதிகள் என்ன சொல்வார்கள் என்றால் பெண்ணை கர்ப்பம் அடையச் செய்து ஏமாற்றிவிட்டான் ஆண் என்று சொல்வார்கள். ஆனால் செய்தியில் பார்த்தீர்களா? முதல் முறை கர்ப்பம் அடைந்து அது கலைக்கச்சொல்லியும் மீண்டும் பெண்ணின் ஒத்துழைப்பு இல்லாமலா இரண்டாவது கர்ப்பம் எப்படி ஏற்பட்டிருக்கும்? இப்படித்தான் கள்ள உறவு IPC497 (Adultery) சட்டம் சொல்கிறது. கள்ள உறவில் ஈடுபடும் பெண் குற்றவாளி இல்லை என்று சொல்லி பெண்ணிற்கு தண்டணையிலிருந்து விலக்கு அளித்து பெருமைப்படுத்தினால் அப்பாவிக் குழந்தைகளின் உயிரை பணயம்வைத்து இதுபோன்ற சிறுமைத்தனங்கள்தான் நாட்டில் இனி பெருகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக ''தாய்மை" என்ற பண்பு சட்டங்கள் மூலம் சமுதாயத்தில் அழிக்கப்பட்டு வருகிறது என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. ஆனால் தாய்மை என்ற பெயரில் பெண்களுக்கு ஒருதலைபட்சமான சிறப்புச் சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. கடைசியில் அந்தத் தவறான சட்டங்களை பயன்படுத்துபவர்கள் கொடூர குணம் கொண்ட அரக்கிகள் மட்டுமே. உங்கள் வீட்டிலிருக்கும் உங்களது தாய் மற்றும் சகோதரிகளை இந்த சட்டங்கள் ஒருபோதும் பாதுகாக்கவில்லையே ஏன்?

இதுபோலத்தான் பல பொய் வரதட்சணை வழக்குகள் நாட்டில் உலவிக்கொண்டிருக்கிறது. இதுபோலத்தானே ஒரு பெண் இரண்டுமாதக் குழந்தையைக் கூட வரதட்சணை வழக்கில் குற்றவாளியாகச் சேர்த்தார்.

Stepmom Names Two-Month-Old Baby in Dowry Complaint (link)

In diapers, lying in her mother's lap and yet to sprout teeth, but Zoya is an accused in a dowry harassment case. The two-month-old baby was named along with seven adults by her stepmother in a complaint letter to the police. What is worse is that the police has included the child's name in the FIR [“First Information Report,” the Indian equivalent of a police report]. Her mom: I told them (police) that she is a baby and how can you write her name in the police FIR.

கடைசியில் பெண்களுக்குச் சரியான சட்ட விழிப்புணர்ச்சி இல்லாததால்தான் இதுபோன்ற செயல்கள் நடைபெறுகிறது என்று பெண்கள்வாரியம் சொல்கிறது.



Elaborating on false cases being filed in recent times, the CJI said that relatives not involved with a matrimonial dispute were unfairly implicated. "In some cases, 498A is grossly misused,'' he said. Balakrishnan was speaking at a seminar, `Marriage laws -- issues and challenges', organised by the National Commission for Women.

The IPC section allows for immediate arrest of the husband and in-laws by the police on the basis of a woman's complaint and has been controversial. Several pro-male organisations have been protesting against the section saying that the law is being misused by women for selfish gains and should include a penalty provision against its misuse. But women activists have been lobbying for no change in the law.

Faced with adverse comments from the CJI, National Commission for Women (NCW) chairperson Girija Vyas said that it was lack of awareness that led to false cases under 498A. "I would not like to use the term misuse. There is lack of awareness amongst people that is exploited by lawyers and police. We feel there is no need to review the law,'' Vyas said.


இதுபோன்ற கள்ளக்காதல் கொலை, பொய் வரதட்சணை வழக்கு போன்ற செயல்களில் ஈடுபடும் பெண்கள் யாரும் கல்வியறிவில்லாத அறியாமையில் உழலும் அப்பாவிகள் கிடையாது. அனைவரும் நன்கு படித்து நல்ல பணியில் இருக்கும் மேல்தட்டுவர்க்க நகரத்துப் பெண்கள். இவர்கள் இப்படி செய்வதற்குக்காரணம் என்ன அறியாமையா? பழிவாங்கத்துடிக்கும் வஞ்சக குணம், ஆணவம், அனைவரையும் அடக்கியாளத் துடிக்கும் கொடூர எண்ணம். இந்தக் குணங்களை பெண்ணுரிமை என்ற பெயரில் பல அமைப்புகள் பெண்களிடையே புகுத்திவருகிறார்கள். அதன் வெளிப்பாடுகள்தான் பின்வரும் வீர வசனங்கள்.

"I want to teach men what their mothers didn’t"

"I am here to teach men what their mothers didn't teach them," declared Women and Child Development Minister Renuka Chaudhury
August 29, 2007
http://www.rediff.com/news/2007/aug/29men.htm

• • • • • • • • • •

Thats Tamil News, 3/4/2008
கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்று குடும்பத் தலைவிகளுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் கூறினார்.

• • • • • • • • • •

அந்த வக்கிர ஆசையை தவறான பெண்கள் பூர்த்தி செய்துகொள்ள உதவுபவைதான் இன்றைய நடுநிலையற்ற பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள். இதுபோன்ற நடுநிலையற்ற சட்டங்கள் தவறானப் பெண்களை ஊக்குவிப்பதை நிறுத்தும்வரை இதுபோன்ற அப்பாவிப் பிஞ்சுக்குழந்தைகள் தங்களது உயிரை உங்களுக்காகத் தியாகம் செய்துகொண்டிருக்கும் அவலநிலை தொடரும்.




Saturday, July 17, 2010

உள்நாட்டு ‘ஸ்டைலில்’ ஒரு இலவச "செக்ஸ்" கல்வி?!

தினமலரில் வந்த படம் ஜூலை 17, 2010

இதையெல்லாம் தடுக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்திற்கும், பெண்கள் நல வாரியத்திற்கும் நேரமில்லை போலிருக்கிறது! இவர்கள் வரதட்சணை வழக்குகளுக்கு மட்டும்தான் முன்னுரிமை தருவார்கள். ஏன் என்ற கேள்வி எழுப்பும் சிந்தனையாளர்கள் இதற்குப் பின்னால் இருக்கும் வெளிநாட்டு நிதியுதவி வலைப்பின்னலைப் பற்றி இங்கே சென்று பாருங்கள் இந்திய குடும்ப அழிப்புச் சட்டங்களை இயற்ற “குடும்ப வன்முறை சட்ட நிதி” என்ற பெயரில் வெளிநாடு கொடுக்கும் நிதியுதவி!

இவற்றில் உருவாகிக்கொண்டிருப்பவைதான் சமீப காலமாக உருவாகிக்கொண்டிருக்கும் 2005 Domestic Violence Act போன்ற சட்டங்கள்.

  1. வரதட்சணை தடுப்புச் சட்டம் (1961) - இதில் இதுவரை வரதட்சணை கொடுத்த எந்தப் பெண்ணும் தண்டிக்கப்பட்டதில்லை.
  2. IPC498A (1984) - இந்த சட்டப்படி மனைவி சொல்வது மட்டும்தான் உண்மை. மனைவி பொய்யாகப் புகார் கொடுத்தால் தண்டிக்க எந்தவித பிரிவுகளும் கிடையாது.
  3. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் (2005) - இந்த சட்டப்படி பெண் என்பவள் எந்த வன்முறையும் செய்யத் தெரியாதவள். ஆண்தான் எப்போதும் குற்றவாளியாகக் கருதப்படுவான்.
  4. கள்ளக் காதல் உறவு (IPC497) - இந்த சட்டப்படி பெண்ணின் கள்ள உறவு என்பது புனிதமானது. இந்த தவறான உறவில் ஈடுபடும் பெண் தானே விரும்பி தவறு செய்தாலும் எந்த தண்டணையும் கிடையாது. ஆனால், ஆணுக்கு தண்டனை உண்டு.

ஒரேவித நோக்கத்திற்காக இதுவரை அடுக்கடுக்காகப் பலவித சட்டங்கள் தொடர்ந்து இயற்றப்பட்டு வருகிறது. ஆனால் சட்டத்தின் நோக்கத்தை முழுமையாகச் செயல்படுத்தாமல் வரதட்சணை கொடுப்பவர்களையும், சட்டத்தை சுயநலத்திற்காகப் பயன்படுத்துபவர்களையும் தண்டிக்காமல் ஆதரித்து வளர்க்கும் வகையில் இந்த சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

அதற்குக் காரணம் பல பொய் வழக்குகள் பதிவானால்தான் அதிக புள்ளிவிபரம் காட்டி நிதியுதவி பெறமுடியும். எப்போதும் இதுபோன்ற புள்ளிவிபரங்களில் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை மட்டும்தான் காட்டப்படும். கடைசியில் எத்தனை வழக்குகள் நீதிமன்றத்தில் குற்றம் என நிருபிக்கப்பட்டது என்று குறிப்பிடமாட்டார்கள். ஏனென்றால் புள்ளிவிபரம் காட்ட எண்ணிக்கையே இல்லாமல் போய்விடும் அல்லவா? அதனால் காவல்நிலையத்தில் எத்தனை FIR பதிவாகிறது என்பது மட்டும்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதிக எண்ணிக்கையில் வழக்குகள் பதிவாக பலவகையான சட்டங்கள் தேவை. அவற்றை தவறாகப் பயன்படுத்தினால்தானே பதிவாகும் புகார்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். இந்த தந்திரம் தெரிந்தவர்கள் பெண்களின் பெயரால் பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மையை உணர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

இந்த சட்டங்களால் நாட்டில் நடந்துகொண்டிருக்கும் அவலநிலைக்கு ஒரு துளி உதாரணம் கீழே உள்ளசெய்திகள்.


Stepmom Names Two-Month-Old in Dowry FIR (link)
In diapers, lying in her mother's lap and yet to sprout teeth, but Zoya is an accused in a dowry harassment case. The two-month-old baby was named along with seven adults by her stepmother in a complaint letter to the police. What is worse is that the police has included the child's name in the FIR [“First Information Report,” the Indian equivalent of a police report]. Her mom: I told them (police) that she is a baby and how can you write her name in the police FIR.



92 year old woman dragged to police stations (link)

The officer in-charge of Bainsada police station had arrested Badan Devi (92), a widow, and her 40-yearold daughter Minatee of Ichhapur village on Saturday. The police action followed an FIR lodged by the woman's daughter-in-law, Santilata. Police did not even bother to make special arrangements for the old woman. They virtually dragged the tottering accused" to court along with other criminals.

இதுபோன்ற சட்டங்களால் பெண்கள் சட்டங்களை எப்படித் தவறாகப் பயன்படுத்தி தங்களது குடும்பங்களைத் தங்களுக்குத் தெரியாமலேயே எப்படி அழிந்துகொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை நீதிமன்றம் விரிவாகச் சொல்லியிருக்கிறது. இதுபோன்ற குடும்ப அழிப்புகளுக்குக் காரணம் பொய் வழக்குப் போடும் மனைவிகளா? அல்லது பெண்கள் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தும் விதத்தில் ஊக்குவிக்கும் அமைப்புகளா? அல்லது இதுபோன்ற பல சட்டங்களை இயற்ற வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிதியுதவியா? சிந்தியுங்கள்.


N THE HIGH COURT OF DELHI AT NEW DELHI, CRL. R 462/2002 DATE OF DECISION: May 19, 2003,
HON’BLE MR. JUSTICE J.D. KAPOOR

23.These provisions were though made with good intentions but the implementation has left a very bad taste and the move has been counter productive. There is a growing tendency amongst the women which is further perpetuated by their parents and relatives to rope in each and every relative- including minors and even school going kids nearer or distant relatives and in some cases against every person of the family of the husband whether living away or in other town or abroad and married, unmarried sistes, sister-in-laws, unmarried brothers, married uncles and in some cases grand-parents or as many as 10 to 15 or even more relatives of the husband. Once a complaint is lodged under Sections 498A/406 IPC whether there are vague, unspecific or exaggerated allegations or there is no evidence of any physical or mental harm or injury inflicted upon woman that is likely to cause grave injury or danger to life, limb or health, it comes as an easy tool in the hands of Police and agencies like Crime Against Women Cell to hound them with the threat of arrest making them run here and there and force them to hide at their friends or relatives houses till they get anticipatory bail as the offence has been made cognizable and non-bailable. Thousands of such complaints and cases are pending and are being lodged day in and day out.

24.These provisions have resulted into large number of divorce cases as when one member of the family is arrested and sent to jail without any immediate reprieve of bail, the chances of salvaging or surviving the marriage recede into background and marriage for all practical purposes becomes dead. Result is that major bulk of the marriages die in their infancy, several others in few years. The marriage ends as soon as a complaint is lodged and the cognizance is taken by the police.




Thursday, July 15, 2010

இந்தியக் கணவனின் தலையெழுத்து

கள்ள உறவில் ஈடுபடும் மனைவியை தண்டிக்க சட்டங்கள் கிடையாது. அதனால் கணவன்தான் தற்கொலை செய்துகொள்ளவேண்டும். இது எழுதப்படாத சட்டம். அப்படி செய்யாமல் மனைவியின் தவறை சுட்டிக்காட்டினால் கணவன் மீது பொய் வரதட்சணை வழக்குகள் தொடரப்படும். பொய் வரதட்சணை வழக்கில் சிக்கும் கணவன் சட்ட தீவிரவாதக் கூட்டத்தில் சிக்கி தினம் தினம் சாகவேண்டும். இதுதான் நாட்டில் நடந்துகொண்டிருக்கும் நடைமுறை சட்டம்.

கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: கணவன் தற்கொலை

ஜூலை 16,2010 தினமலர்

ஓமலூர்: ஓமலூர் அருகே மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசத்தில் இருப்பதை பார்த்த கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.ஓமலூரை அடுத்த காங்கியானூர் காலனி பகுதியை சேர்ந்த மாரியப்பன், கூலி தொழிலாளி. அவரது மனைவி அம்சவேணி.சில மாதங்களாகவே அம்சவேணிக்கும் அதே பகுதியில் உள்ள சிலருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வருவதாக மாரியப்பனுக்கு தெரியவந்தது. மனமுடைந்த நிலையில் மாரியப்பன் இருந்து வந்தார்.நேற்று முன்தினம் மாரியப்பன் வீட்டில் இல்லாத நேரத்தில் அம்சவேணி வேறு ஒருவருடன் இருந்தார்.

திடீரென வீட்டிற்கு வந்த மாரியப்பன், தன் மனைவி வேறு ஒருவருடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தன் மனைவி அம்சவேணியிடம் தகராறு செய்தார். ஆத்திரமடைந்த அம்சவேணி தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.மாரியப்பன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் மாரியப்பனை ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். வழியிலேயே மாரியப்பன் உயிரிழந்தார்.தீவட்டிப்பட்டி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.


IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.




Saturday, July 10, 2010

ராத்திரி நேரத்து பூஜை ஆரம்பம்!

தமிழ் நாட்டில் இரவு நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் குடும்ப நீதிமன்றங்கள் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. நல்ல முன்னேற்றம். நாட்டில் பல விவாகரத்து வழக்குகள் அதிகமாகியிருப்பதுதான் இதற்குக் காரணம்.

சென்னை, ஜூலை 10: கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் இலவச ஆலோசனை வழங்குவதற்காக சட்ட உதவி மையத்தில் "ஹெல்ப் லைன்' தொடங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தெரிவித்தார்.

இதன் மூலம் குடும்பத்தில் ஏற்படும் சிறிய பிரச்னைகள் விவாகரத்து வரை செல்வது தடுக்கப்படுவதோடு, விவாகரத்து மனுக்களும் பெருமளவில் குறைக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

வார விடுமுறையில் குடும்ப நல நீதிமன்றங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் தொடக்க விழா சென்னை உயர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பேசியது: நாட்டிலேயே முதல்முறையாக வார விடுமுறை நாள்களில் குடும்ப நல நீதிமன்றங்கள் இங்கு செயல்பட உள்ளன.

இந்தத் திட்டம் விரைவிலேயே நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.10 லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரத்துக்கு ஒரு குடும்ப நல நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் தாக்கல் செய்யப்படும் குடும்ப நல வழக்குகளுக்கு இப்போதுள்ள 3 நீதிமன்றங்கள் போதுமானவையாக இல்லை.

இந்த நீதிமன்றங்களின் எண்ணிக்கையை 5 ஆக அதிகரிக்க வேண்டும் என்றும், மாவட்டத் தலைநகரங்கள் தோறும் குடும்ப நல நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.கடந்த 2000- ல் விவாகரத்து கோரி 972 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2009-ல் இந்த எண்ணிக்கை 2,425 ஆக அதிகரித்துள்ளது.

விவாகரத்து தவிர ஜீவனாம்ச வழக்குகளும் இதேபோன்று பல மடங்கு அதிகரித்துள்ளன.மொத்தம் 12,659 வழக்குகள் சென்னையிலுள்ள 3 குடும்ப நல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வழக்குகள் நல்ல ஆலோசனைகள் வழங்கினால் தீர்க்கப்பட்டு விடும்.கணவன், மனைவி இடையே மனக்கசப்பு ஏற்பட்ட உடனேயே அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் பிரச்னை சிறிதாக இருக்கும்போதே தீர்வு காண்பதோடு, விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையை பெருமளவு குறைக்கலாம். இதற்காக சட்ட உதவி மையத்தில் "ஹெல்ப் லைனை' தொடங்கும் திட்டம் உள்ளது.

அதேபோல், சட்ட உதவி மையத்தில் செயல்படும் ஆலோசனை மையங்களையும் இரவு 10 மணி வரை நீட்டிக்கும் திட்டம் உள்ளது.குடும்ப நல நீதிமன்றங்களுக்கு வரும் பெண்கள், குழந்தைகளுக்கு உதவும் வகையில் புதிய கட்டடம் ஒன்றும் அமைக்கப்பட வேண்டும் என்றார் எம்.ஒய்.இக்பால்.நீதிபதி எலிப் தர்மாராவ்: மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மாவட்ட நீதிபதிகளுக்கு வழங்கப்படுவதில்லை.


மாவட்ட நீதிமன்றங்கள், நீதிபதிகளின் அறைகள், வீடுகளில் ஏ.சி. வசதி செய்யப்பட வேண்டும் என்றார் எலிப் தர்மாராவ்.நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா, நீதிபதி டி.முருகேசன், குடும்ப நல முதன்மை நீதிபதி பி.ராமலிங்கம், லா அசோசியேஷன் தலைவர் டி.வி. கிருஷ்ணகுமார், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் டி.பிரசன்னா, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி. பால்கனகராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

இதுபோல விவாகரத்து வழக்குகள் அதிகமானதற்குக் காரணம் கணவன் மனைவியிடையே ஏற்படும் சிறு பிரச்சனைகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்க ஆளில்லாமல்போனதுதான் காரணம் என்று நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் நாட்டில் என்ன நடக்கிறது. பெண்களுக்கு நல்வழி காட்வேண்டிய பெண்கள் வாரியம் சொல்லிக்கொடுப்பது என்ன என்று கீழுள்ள செய்தியில் பாருங்கள்:

நெல்லை: கணவன் அடித்தால திருப்பி அடியுங்கள், உடல் ரீதியான வன்முறைக்கு இடம் கொடுக்காதீர்கள் என்று குடும்பத் தலைவிகளுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் கூறினார்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் நெல்லை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இணைந்து குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் குறித்த கருத்தரங்கை நடத்தியது. கல்லூரி வாளகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரகாஷ் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், பொருளாதார வன்முறை, பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். கணவன் மனைவியை அடிப்பது இயல்பானது என்றும் அன்பின் வெளிப்பாடு என்றும் கூறப்படுகிறது.

அல்வாவும், பூவும் கொடுத்து பெண்களை சமாதானம் செய்து விடலாம் என்பது போன்ற காட்சிகள் திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகிறது.

குட்ட குட்ட குனிவதை தவிர்த்து எதிர்த்து நில்லுங்கள். கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள். உடல் ரீதியான வன்முறைக்கு இடம் கொடுக்காதீர்கள். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்றார் அவர்.

உண்மையை சொல்லவேண்டுமென்றால் நாட்டில் என்ன நடக்கிறதென்றால் கணவன் மனைவிக்கிடையே சிறு பிரச்சனை ஏற்பட்ட உடனே பெண்களுக்கு வழங்கப்படும் அறிவுரை என்னவென்றால் பொய் வரதட்சணை வழக்குத் தொடரவேண்டும் என்பதுதான். இதுதான் பல சட்டமேதைகள் தங்களிடம் வரும் பெண்களுக்கு சொல்லித்தரும் அறிவுரை. பிரச்சனைக்குக் காரணம் என்ன என்றுகூட யாரும் கேட்கமாட்டார்கள். பிறகு இதற்கு “காசிற்காக” தூபம் போடுவதுபோல் மகளிர் காவல்நிலையத்தில் நடக்கும் கட்ட பஞ்சாயத்து, கணவனையும் அவனது குடும்பத்தையும் சிறையிலடைத்து அவமானப்படுத்தி மிரட்டும் கொடுஞ்செயல். இவையெல்லாம் கடைசியில் எல்லா குடும்பத்தையும் விவாகரத்தில்தான் கொண்டுபோய் சேர்க்கும்.

இந்த விஷயத்தை 2003ம் ஆண்டில் தில்லி உயர்நீதிமன்றம் சொல்லிவிட்டது:

IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI,
DATE OF DECISION: May 19, 2003,

23.These provisions were though made with good intentions but the implementation has left a very bad taste and the move has been counter productive. There is a growing tendency amongst the women which is further perpetuated by their parents and relatives to rope in each and every relative- including minors and even school going kids nearer or distant relatives and in some cases against every person of the family of the husband whether living away or in other town or abroad and married, unmarried sisters, sister-in-laws, unmarried brothers, married uncles and in some cases grand-parents or as many as 10 to 15 or even more relatives of the husband. Once a complaint is lodged under Sections 498A/406 IPC whether there are vague, unspecific or exaggerated allegations or there is no evidence of any physical or mental harm or injury inflicted upon woman that is likely to cause grave injury or danger to life, limb or health, it comes as an easy tool in the hands of Police and agencies like Crime Against Women Cell to hound them with the threat of arrest making them run here and there and force them to hide at their friends or relatives houses till they get anticipatory bail as the offence has been made cognizable and non-bailable. Thousands of such complaints and cases are pending and are being lodged day in and day out.

24.These provisions have resulted into large number of divorce cases as when one member of the family is arrested and sent to jail without any immediate reprieve of bail, the chances of salvaging or surviving the marriage recede into background and marriage for all practical purposes becomes dead. Result is that major bulk of the marriages die in their infancy, several others in few years. The marriage ends as soon as a complaint is lodged and the cognizance is taken by the police.

அதனால் விவாகரத்து வழக்குகள் அதிகமாகிவிட்டன என்பதற்காக நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதே நேரத்தில் ஏன் இப்படி அதிகமானது என்ற அடிப்படைக் காரணத்தை ஆராய்ந்து அதை சரி செய்தால்தான் சமுதாயத்தில் குடும்பக் கட்டமைப்பு சிதையாமல் இருக்கும். நீதிமன்றங்கள் அதிகரிப்பதால் பலருக்கு வருமானம் கிடைப்பதைத்தவிர அப்பாவிகளுக்கு எந்த நன்மையும் ஏற்படாது.


பொய் வரதட்சணை வழக்குகள் உருவாவதை தடுக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்படாதவரை இந்தியக்குடும்பங்கள் அழிவதை யாராலும் தடுக்க முடியாது. பணம் கிடைக்கிறது என்பதற்காக அடுத்தவன் குடிதானே கெடுகிறது நமக்கென்ன என்றிருப்பவர்களுக்கு தன்குடி கெடும்போதுதான் அந்த உண்மை புரியும். அதுவரை இந்த ராத்திரி நேரத்து நீதிமன்ற பூஜைகள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கும்.




Friday, July 02, 2010

எங்கெங்கு காணிணும் ஓட்டம்தான்!

ஓடிப்போலாமா?

ஜூலை 2, 2010 ThatsTamil.com


வேலூர்: திருப்பத்தூர் தொகுதி பாமக எம்.எல்.ஏ. டி.கே.ராஜாவின் தம்பி பூபதியின் மகள் தனது கணவரை விட்டு விட்டு காதலனுடன் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பூபதி திருப்பத்தூர் நகர பா.ம.க. செயலாளராக உள்ளார். இவரது மகள் ரம்யா(18). இவர் ஒரு கார் டிரைவரை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த ரம்யாவின் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி பழனி என்பவருக்கு கட்டி வைத்து விட்டனர்.

இந்நிலையில் நேற்று மாலை முதல் ரம்யாவை காணவில்லை. அவரை காதலரான சரவணன் என்பவர் காரில் கூட்டிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. ரம்யாவே விருப்பப்பட்டுத்தான் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

தனது மகளை சரவணன் கடத்திச் சென்று விட்டதாக போலீஸில் பூபதி புகார் கொடுத்துள்ளார்.

Wednesday, June 30, 2010

வரதட்சணைக் கொடுத்த பெண்ணை பாராட்டிய இந்திய ஜனாதிபதி!

இந்தியாவில் 1961ல் வரதட்சணை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும் இன்றுவரை பெண்கள் வரதட்சணைக் கொடுமை அடைவதாக பெண்கள் நல வாரியம், பெண்கள் நல அமைச்சகம் மற்றும் பல மகளிர் குழுக்கள் போர்க்கொடி தூக்கிக்கொண்டு ஓலமிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தக்கூட்டம் ஒரு உண்மையை மட்டும் மறைத்து தங்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் பிரச்சனையை திசைதிருப்பிக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த சட்டம் பல ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டிருந்தாலும் இன்றுவரை அதை ஒழுங்காக செயல்படுத்தாமல் தடைசெய்து வருவது இந்திய அரசாங்கம்தான். இயற்றிய சட்டத்தை சுயநல நோக்கில் ஒழுங்காக செயல்படுத்தாமல் அப்பாவிக் கணவர்கள் மீது பழி சுமத்தி சிறையில் தள்ளி சமுதாயத்தை சீரழித்து வருகிறது இந்த ஒட்டுமொத்தக் கூட்டம்.

வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு 3 ன் படி வரதட்சணை கொடுப்பவரும் தண்டிக்கப்படவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

THE DOWRY PROHIBITION ACT, 1961

(Act No. 28 of 1961)


3. Penalty for giving or taking dowry.-(1) If any person, after the commencement of this Act, gives or takes or abets the giving or taking of dowry, he shall be punishable with imprisonment for a term which shall not be less than five years, and with the fine which shall not be less than fifteen thousand rupees or the amount of the value of such dowry, whichever is more


சட்டம் இப்படி இருக்கிறது. ஆனால் இன்றுவரை ஒருவர் கூட வரதட்சணைக் கொடுத்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டதில்லை. கொடுப்பவர் இல்லையென்றால் வாங்குபவர்கள் இருப்பார்களா? ஆனால் இதைப் பற்றி யாரும் கவலைப்படவே இல்லை. காரணம் பல மகளிர் அமைப்புகளுக்கு வரதட்சணை வழக்குகளின் புள்ளி விபரம்தான் பணம் காய்க்கும் மரமாக, வாழ்வாதாரமாக இருக்கிறது. அதனால் அவர்களுக்கு இந்த வரதட்சணை முறையை ஒழிக்க மனம் வராது.

கீழுள்ள செய்தியில் பாருங்கள் இந்திய ஜனாதிபதி கூட இதே வேலையைத்தான் செய்திருக்கிறார்.

புதுடில்லி: வரதட்சணை பிரச்னையால் திருமணத்தை உதறித் தள்ளிய துணிச்சல் பெண்ணை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கவுரவப்படுத்த உள்ளார்.

மேற்குவங்க மாநிலம் துர்காபூரை சேர்ந்த இளம்பெண் புல்தி பாகி. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த புல்தி பாகிக்கு சஞ்சய் பாகி என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவரது பெற்றோர் புல்தி பாகி திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த சேமிப்புப் பணத்தில் திருமண ஏற்பாடுகள் செய்தனர். மேலும் உள்ளுர் பைனான்ஸ் அதிபரிடம் கடன் வாங்கி மாப்பிள்ளை வீட்டார் கேட்ட சீர்வரிசைகளை வழங்கினர். கடந்த மாதம் திருமண மண்டபத்தில் திருமணம் சிறப்பாக நடந்தது. திருமணத்தின் போது ஒரு லட்ச ரூபாய் ரொக்கமாக வரதட்சணை கொடுக்க புல்தியின் வீட்டார் ஒப்புக்கொண்டிருந்தனர். ஆனால் 90 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்தனர். மீதம் பத்தாயிரம் ரூபாயை சிறிது நாட்களில் தருவதாக கூறினர். இதனை மாப்பிள்ளை வீட்டார் ஏற்கவில்லை.மேலும் கூடுதல் வரதட்சணை கொடுக்க வேண்டும் என்றும் நிர்பந்தம் விதித்தனர். மேலும் மாப்பிள்ளை சஞ்சய் குடிபோதையில் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து மீதி பத்தாயிரம் ரூபாயை உடனே தரவேண்டும்;கூடுதலாக வரதட்சணை கொடுத்தால் தான் புல்தியை வீட்டிற்கு அழைத்துச் செல்வேன் எனக் கூறினார்.

மாப்பிள்ளை வீட்டாரின் செயல்களை பார்த்துக் கொண்டிருந்த புல்திபாகி அதிர்ச்சியடைந்தார். மணமேடையில் இருந்து திடீரென எழுந்து கழுத்தில் இருந்த மாலை, நகைகளை கழற்றி வீசினார். நான் சஞ்சய் பாகியுடன் செல்ல மாட்டேன்;எனக்கு இந்தத் திருமணமே வேண்டாம் என கூறிவிட்டு விருட்டென்று எழுந்து வீட்டிற்கு சென்று விட்டார். திருமணத்திற்கு வந்த உறவினர்கள் புல்தி பாகியின் செயலைக் கண்டு திகைத்தனர்.இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பெற்றோர்,உறவினர் சமாதானங்களை புல்திபாகி ஏற்கவில்லை.இதையடுத்து பிரச்னையில் ஊர் பெரியவர்கள் தலையிட்டு இந்தத் திருமணம் செல்லாது என அறிவித்தனர்.

இந்நிலையில் வரதட்சணை பிரச்னையால் திருமணத்தை உதறித்தள்ளி,பெண் சமுதாயத்துக்கு முன்னுதாரணமாகத் திகழும் புல்தி பாகியின் துணிச்சலை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் புல்தி பாகியை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து விரைவில் அவர் கவுரவப்படுத்த உள்ளார். கிராமப்புறங்களில் பெண்கள் திருமணத்தை உதறித் தள்ளுவதால் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதையும் மீறி திருமணத்தை உதறித்தள்ளிய புல்தியை ஜனாதிபதி நேரில் அழைத்து ஊக்கப்படுத்த விரும்புகிறார்.அவர் கல்வி கற்கவும் அல்லது வேலைக்கு செல்லவும் ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார். புல்திக்கு நிதி உதவி செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார். இதேபோன்று சமுதாயப் புரட்சி செய்த சரிதா மட்டோ,பிரவீனா கதுன் மற்றும் ரேகா ஆகியோரையும் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கவுரவப்படுத்த உள்ளார்.

=============

மேலுள்ள செய்தியில் முதலில் வரதட்சணைக்கொடுக்க பெண்வீட்டார் ஏன் ஒப்புக் கொண்டார்கள் என்ற கேள்வியே கேட்கப்படவில்லை. வரதட்சணை கொடுக்க முற்பட்டது சட்டப்படி ஒரு குற்றச் செயலாகும். முதலிலேயே மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்கும்போதே திருமணத்தை உதறியிருந்தால் இந்தப் பெண் புரட்சிப்பெண் என்று சொல்லலாம். ஆனால் இரண்டு கூட்டமும் சேர்ந்து ஒரு குற்றத்தை இழைத்திருக்கிறார்கள். பிறகு “டீல்” ஒத்து வரவில்லையென்றால் அடுத்த ஆள் மீது பழியைப் போட்டுவிடுகிறார்கள். இதுதான் இந்தியாவில் நடந்துவரும் வரதட்சணை சட்ட நடைமுறை. இதில் வரதட்சணைக்கொடுத்துத் திருமணம் செய்ய முயன்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ஏன் பரிந்துரைக்கவில்லை? வரதட்சணை தடுப்புச் சட்டத்தை முழுமையாக யார்தான் கடைபிடிப்பார்களோ?

நாட்டின் சட்டத்தை கடைபிடிக்கவேண்டிய முதல் பெண்மணியே வரதட்சணை கொடுத்துத் திருமணம் செய்ய முயன்றவர்களை பாராட்டி கௌரவம் செய்தால் நாட்டில் இதுபோன்ற சமுதாயக் குற்றங்களை களைவது யார்? பெண்களுக்கு உண்மையாகவே நன்மை செய்யப்போவது யார்?

சமீபத்தில் தில்லி நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி வரதட்சணை சட்டங்கள் ஒழுங்காக செயல்படுத்தப்படாமல் இருப்பதை கண்டித்திருக்கிறார். வரதட்சணை கொடுத்தவர்களும் தண்டிக்கப்படவேண்டியவர்களே என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறார். ஆனால் ஜனாதிபதியோ வரதட்சணை கொடுத்தவர்களை பாராட்டி மகிழ்கிறார். என்ன ஒரு சட்ட நடைமுறையோ! கடைசியில் பெண்களை வைத்து நன்றாக சட்ட, அரசியல் வியாபாரம் செய்துவிடுகிறார்கள் இந்த நாட்டில்.


Express News Service Mon Jun 28 2010

Observing that the anti-dowry law has been reduced to a ''paper tiger'' due to the bride's family giving away dowry in many cases, a court here said they also need to be prosecuted like the groom's family to eliminate the social evil.

New Delhi : While laws prohibiting dowry not only forbid receipt but also giving it, a city court, in a significant observation, held that the brides’ families are to be blamed for rendering the social welfare legislation largely ineffective.

“It is unfortunate that the legislation (Dowry Prohibition Act) has been reduced to a mere paper tiger. What is more unfortunate is that the family of the woman (involved in the marriage) is responsible for the non-accomplishment of this legislation,” Additional Sessions Judge (ASJ) Kamini Lau noted.

To meet the objectives of the law, not only the grooms’ families but also the brides’ must be booked for giving dowry in the name of social obligation, the court said.

“Dowry is a two-way traffic and unless there is a giver there can be no taker... In order to eliminate this evil both the giver and taker have been made liable under the Act. It is not possible to leave one and book the other,” ASJ Lau said.

“It is time this social welfare legislation is ruthlessly implemented and none is permitted to take the shield of social compulsion. This has become all the more necessary in order to check the misuse and abuse of special laws,” she added.

The court also said expensive gifts given by relatives to a couple before and after marriage must be brought to the notice of the authorities for levying of taxes.

The court made the observations while dismissing the plea of a woman seeking to quash criminal proceedings initiated against her family for giving of dowry following a complaint by her husband who faced dowry harassment charges. The woman had challenged the order by a Metropolitan Magistrate in October last year, who had directed the registration of an FIR against her family members for giving dowry for her marriage in April 2008.



“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.