இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Showing posts with label Dowry Law Misuse. Show all posts
Showing posts with label Dowry Law Misuse. Show all posts

Saturday, March 19, 2011

மகளின் வாழ்வை நாசமாக்கும் இந்தியப் பெற்றோர்கள்

கசப்பான உண்மை! உண்மை சில உள்ளங்களுக்கு எப்போதுமே கசக்கும். அதுபோன்ற கசந்த உள்ளங்கள் வாயில் கொஞ்சம் சர்க்கரையைக் கொட்டிக்கொண்டு படிக்கவும்.

இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டி என்று சில தினங்களுக்கு முன்பு ஒரு பதிவு எழுதியிருந்தேன் அதன் தொடர்ச்சியாக மற்றொரு அதிர்ச்சியான செய்தி வந்திருக்கிறது.

இந்தியாவில் இப்போதெல்லாம் பெண்களின் நிலை எவ்வளவோ உயர்ந்துவிட்டது. நல்ல ஏட்டுக் கல்வி, உயர்ந்த பணி, கை நிறைய சம்பளம் இவற்றைக் காணும் சில பெற்றோர்கள் தங்கள் மகளின் வருமானத்தில் தங்கள் வாழ்க்கையை எப்படி ஓட்டலாம் என்று எண்ண ஆரம்பித்துவிட்டார்கள். அதன்விளைவாக பெண்ணின் திருமணத்தை எந்தவகையிலாவது தடை செய்து தள்ளிப்போடுகிறார்கள்.

அப்படியே தட்டுத்தடுமாறி திருமணம் நடந்துவிட்டால் மகளின் திருமண வாழ்வில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனையைக்கூட பெரிதாக்கி மகளுக்கும், மருமகனுக்கும் பிளவு ஏற்படுத்தி வரதட்சணைக் கொடுமை என்று வண்ணங்கள் பூசி மகளை நம்பவைத்து தங்கள் மகளை வைத்தே மருமகன் மீது பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்யவைத்து மகளை வீட்டோடு வைத்துக்கொண்டு அவளின் வருமானத்தில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இது போதாதென்று மகளை வைத்து மருமகனை மிரட்டி பொய்வழக்கிலிருந்து விடுபடவேண்டுமென்றால் பெருந்தொகை கொடுக்கவேண்டும் என்று கூட சில பெற்றோர்கள் தங்கள் சொந்த மகளை வைத்தே (Extortion) வியாபாரம் செய்யவும் துணிந்துவிடுகிறார்கள். அரசாங்கம் கொடுத்திருக்கும் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் இதுபோன்ற பல பெற்றோர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இது உண்மையா என்று தெரிந்துகொள்ள ஒருமுறை உங்கள் ஊரில் இருக்கும் குடும்பநல நீதிமன்றங்களை சென்று பாருங்கள்.

இந்த பதிவில் இருக்கும் உண்மை சிலருக்கு கசக்கும். அதுபோன்ற கசந்த உள்ளங்களுக்காகவே பின்வரும் வீடியோ. மக்கள் அரங்கத்தில் பொதுஜனம் ஒருவர், அதுவும் ஒரு பெண் இந்த உண்மையை சொல்லியிருக்கிறார். பார்த்து மனதை தேற்றிக்கொள்ளுங்கள்.



இந்தியாவில் பெண்ணை பெற்றவர்கள் அடிக்கும் லூட்டியை இதற்குப் பிறகும் உங்களால் நம்பமுடியவில்லையென்றால் ஒரு பெண்ணே தனது பொறுப்பற்ற பெற்றோரைப் பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் எழுதிக்கொடுத்திருக்கும் அவலத்தையும் பாருங்கள்.

மகள் தக்க திருமண வயது அடைந்தும் அவருக்கு திருமணம் செய்துவைக்காமல் அவரது பணத்தின் மீதே கண்ணாக இருந்த பெற்றோரைக் கண்டு மனம் நொந்த பெண் தானாக திருமணம் செய்துகொண்டார். அதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் சொந்த மகள் மீதே புகார் கொடுத்து அவரின் அரசுப் பணியை பறித்திருக்கிறார்கள். என்ன ஒரு கொடுமை!

இது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பின் அந்தப் பகுதியைப் பாருங்கள்.

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
DATED: 28.02.2011
CORAM:THE HONBLE MR.JUSTICE K.CHANDRU
W.P.No.45974 of 2006
(O.A.No.8971 of 2000)

K.Rajeswari ...Petitioner
Vs
1.The Secretary to Government,
Personnel and Administrative
Reforms Department,
Govt. of Tamilnadu,Secretariat, Chennai -9.
2.Deputy Director of Medical and
Rural Health Services and Family Welfare,
Salem.
3.Medical Officer,
Govt. Primary Health Centre,
Konganapuram, Salem District. ...Respondents

7. The facts leading to the filing of the writ petition were as follows:- The petitioner joined as a Store Keeper in the year 1982 in the Government Health Department in Salem District. Her parents did not take care of her and did not get her married at an appropriate age. She had crossed 32 years but yet her parents were only concerned about her income. At that time, when she was feeling depressed and mentally worried about her future, one Thangavel approached her and asked the petitioner whether she was willing to marry him. He also told her that he has a wife who is ill and unable to take care of herself. But however, he has got two children through her. The said Thangavel was unwilling to divorce his first wife on the ground that she was unwell. Therefore, with the consent of his first wife, the petitioner got married to the said Thangavel. The marriage was solemnized on 08.01.1990 at the Sub-Registrar Office, Edapadi. The petitioner never had intention to disregard the law and she got married only after ascertaining the wishes of the first wife of Thangavel.

8. The said Thangavelu was employed as a Junior Assistant in the Department of Treasuries and Accounts. After their marriage, the parents of the petitioner started giving trouble to the petitioner's husband by sending petitions to his department.

9. The petitioner's parents, however started sending further petitions to the petitioner's department which resulted in the issuance of a charge memo under Rule 17(b) of the TNCS (D & A) Rules to the petitioner on 24.07.1996. The petitioner gave her explanation on 19.08.1996. Subsequently, an enquiry was held against the petitioner and a personal hearing was given to her on 10.06.1997. The Enquiry Officer's report was communicated to the petitioner with a covering letter dated 11.05.1998. The petitioner sent a further representation dated 23.06.1998. Thereafter, the second respondent consulted the Government Pleader, Salem. The Government Pleader by his opinion dated 18.10.000 opined that the action committed by the petitioner will amount to 'Bigamy' and the consent obtained from the first wife will not in any way legalise the action. Further, it was also indicated that even if the second marriage was void, the fact that Government servant living with another married Government servant will also be a misconduct in terms of Rule 19(1) of the Government Servants' Conduct Rules. In view of the marriage, which fact was not disputed, a major penalty was imposed on her. Accordingly, the petitioner, vide an order dated 31.10.2000 was removed from service by the second respondent. Though she was eligible to file a statutory appeal, she did not do so. After getting waiver of the appellate remedy, she filed the Original Application and also obtained an interim stay as noted already.


இந்த நீதிமன்ற வழக்கின் செய்தி...


இரண்டாம் திருமணம் நடந்தாலும் பணி நீக்கம் செய்ய கூடாது: ஐகோர்ட் உத்தரவு
மார்ச் 14,2011 தினமலர்

சென்னை: ஏற்கனவே திருமணமான, அரசு ஊழியரை இரண்டாவதாக திருமணம் செய்ததால், அந்தப் பெண் ஊழியரை பணி நீக்கம் செய்ததை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.

சேலம் மாவட்ட சுகாதாரத் துறையில், ராஜேஸ்வரி என்பவர் பணியாற்றினார். 32 வயதை கடந்தும் திருமணமாகவில்லை. அதைப் பற்றி, அவரது பெற்றோர் அக்கறை கொள்ளவில்லை. கருவூலத் துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய தங்கவேல் என்பவர் ராஜேஸ்வரியை அணுகி, திருமணம் செய்து கொள்வது பற்றி கேட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே திருமணமானவர். மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. இரண்டு குழந்தைகளும் உள்ளனர். முதல் மனைவியின் ஒப்புதலுடன், இரண்டாவதாக ராஜேஸ்வரியை தங்கவேல் திருமணம் செய்து கொண்டார். எடப்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் 1990ம் ஆண்டு திருமணம் நடந்தது. இதையடுத்து, ராஜேஸ்வரியின் பெற்றோர், தங்கவேல் பணியாற்றும் அலுவலகத்துக்கு புகார் அனுப்பினர். இதையடுத்து, தங்கவேல் மீது விசாரணை நடந்தது. ஊக்க ஊதியத்தை ஐந்து ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்தனர். பின், பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து, மாநில நிர்வாக தீர்ப்பாயத்தில், தங்கவேல் மனு தாக்கல் செய்தார். கட்டாய ஓய்வை ரத்து செய்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

மகளுக்கு எதிராகவும் பெற்றோர் புகார் அனுப்பினர். விசாரணை நடந்தது. அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி, திருமணமான அரசு ஊழியர் ஒருவருடன், அரசு ஊழியர் (பெண்) வாழ்ந்து வந்தால், அது ஒழுங்கீனமாகும் எனக் கூறி, ராஜேஸ்வரியை பணியில் இருந்து நீக்கி, சேலம் மாவட்ட சுகாதார அதிகாரி உத்தரவிட்டார்.

பணி நீக்கத்தை எதிர்த்து, மாநில நிர்வாக தீர்ப்பாயத்தில் ராஜேஸ்வரி தாக்கல் செய்த மனுவில், "தீர்ப்பாய உத்தரவுப்படி எனது கணவர் தங்கவேல், மீண்டும் பணியில் நியமிக்கப்பட்டார். எனக்கு மட்டும் தண்டனை அளிப்பது என்பது பாரபட்சமானது. அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது' என கூறப்பட்டுள்ளது.

இம்மனு, ஐகோர்ட் விசாரணைக்கு மாற்றப்பட்டது. மனுவை நீதிபதி சந்துரு விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல்கள் பி.கணேசன், எஸ்.மணி ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு: அரசு ஊழியரைப் பொறுத்த வரை, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்து கொள்ள தனிப்பட்ட சட்டம் அனுமதித்தாலும், அரசின் முன் அனுமதியின்றி ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை அவர் திருமணம் செய்து கொள்ள முடியாது. அப்படி செய்து கொண்டால், அந்த திருமணம் செல்லத்தக்கது என்றாலும், நடத்தை விதிகளை அந்த அரசு ஊழியர் மீறியதாக அர்த்தம்.

இருதார திருமணம், இந்திய தண்டனைச் சட்டத்தின்படி கிரிமினல் குற்றம். அரசுப் பணியில் ஒருவர் சேரும் போது, நடத்தை விதிகள் அவருக்கு நன்றாக தெரிய வேண்டும். அந்த விதிகளை மீறினால் என்ன தண்டனை என்பதும் தெரிய வேண்டும். எனவே, அந்த விதி தன்னிச்சையானது என்றோ, அரசியலமைப்புச் சட்டத்தை மீறுகிறது என்றோ கூற முடியாது. ஆகையால், தண்டனை விதிக்கும் விதிகள் செல்லும். முதல் மனைவியின் ஒப்புதல் பெற்றே இரண்டாவது திருமணம் நடந்தது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் மனைவியின் ஒப்புதல் பெற்றாலும் கூட, இந்திய தண்டனைச் சட்டப்படி, இரண்டாவது திருமணம் கிரிமினல் குற்றம். மேலும் அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின்படி, அது ஒழுங்கீனமாக கருதப்படும்.

தங்கவேல் தாக்கல் செய்த வழக்கில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மாநில அரசு அப்பீல் மனு தாக்கல் செய்யவில்லை. அவரை பணியில் நியமித்துள்ளது. ஏற்கனவே திருமணமான ஒருவர், நடத்தை விதிகளின்படி ஒழுங்கீனம் செய்துள்ளார் என்றாலும், அவருக்கு எந்த தண்டனையும் இல்லாமல் விட்டுள்ளனர். திருமணத்துக்கு ஒப்புக் கொண்டார் என்பதற்காக அந்தப் பெண்ணை கடுமையாக தண்டிக்கக் கூடாது. கணவனுக்கு ஒரு அளவுகோல், மனைவிக்கு ஒரு அளவுகோல் என, இரண்டு விதமான அளவுகோலை அரசு பின் பற்ற முடியாது.

சரி சமமாக குற்றம் புரிந்த கணவனை தண்டிக்காமல் விட்டுவிட்டு, மனைவிக்கு மட்டும் பணி நீக்கம் என்கிற தண்டனையை அரசு ஏன் விதிக்க வேண்டும் என்பதற்கு எந்த காரணமும் இல்லை. எனவே, தண்டனை விதிப்பதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. இதில் கோர்ட் தலையிட வேண்டியதுள்ளது. மனுதாரரை வேறு விதமாக கருதுவதற்கு எந்த சிறப்பான காரணங்களையும் அரசு தரப்பில் தெரிவிக்கவில்லை. கணவன், மனைவி வெவ்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனர் என்பதை மட்டுமே அரசு கூறியுள்ளது. இந்த பணி நீக்கம் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.

====

இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டி இப்படி ஒருபுறம் நடந்துகொண்டிருக்க உடன் பிறந்தவர்கள் தன் சகோதரிக்கு சட்டப்படி சேரவேண்டிய சொத்தை அவளது திருமணத்திற்குப் பிறகு எப்படி அபகரிக்கலாம் என்று திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதையும் கண்டு மகிழுங்கள். இந்த சொத்து தொடர்பான விஷயத்தை இங்கே சென்று படியுங்கள்: இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டி



இந்தியாவில் உருவாகும் பல பொய் வரதட்சணை வழக்குகளின் பின்னணி இதுதான். 1. பெண்ணை பெற்றவர்களின் பணப் பேராசை, 2. உடன் பிறந்த சகோதரர்கள் தங்கள் சகோதரிக்கு சொத்தை கொடுக்காமல் எப்படி ஏமாற்றலாம் என்று போடும் திட்டங்கள். இந்த இரண்டின் வெளிப்பாடுதான் சொந்த மகளின் அல்லது உடன்பிறந்த சகோதரியின் வாழ்வையே நாசமாக்கும் பல பொய் வரதட்சணை வழக்குகள் நாட்டில் உலவிக்கொண்டிருப்பதற்குக் காரணம்.

பெற்றோர் மற்றும் உடன் பிறந்த ஆண்களின் தவறான வழிகாட்டுதலால் பொய் வரதட்சணை வழக்கு மூலம் கட்டிய கணவனையும் விட்டு விட்டு, உடன் பிறந்த ஆண்களால் வஞ்சிக்கப்பட்டு சட்டப்படியாக தனக்கு சேரவேண்டிய குடும்ப சொத்தையும் இழந்து வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு கடைசியில் நீதிமன்றங்களில் “வழக்கறிஞரின் உதவியோடு” பெண்கள்பாதுகாப்பு சட்டங்கள் மூலம் வாழ்வு கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள் பல அப்பாவிப் பெண்கள்! இந்தக் கொடிய காட்சியைக் காண ஒரு முறை சென்னை குடும்ப நல நீதிமன்றத்திற்குச் சென்று வாருங்கள்.
====



Thursday, February 03, 2011

குப்பையை கொட்டும் மருமகள்களை தடுப்பது யார்?

விதிமுறையை மீறினால் தப்பில்லை: திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு சென்டர் மீடியனில் விடப்பட்டுள்ள சிறிதளவு இடைவெளியில் டூவீலர்கள் செல்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. (படமும் கருத்தும் - தினமலர் படம் 3.2.11)

மேலுள்ள படத்தைப் பாருங்கள். சட்டத்தை மீறி பொதுமக்களும், காவல் அதிகாரியும் ஒன்றாக இணைந்து சாலையை கடப்பதுபோலத்தான் அப்பாவிகளுக்கெதிராக தொடரப்படும் பொய்வரதட்சணை வழக்குகளிலும் மருமகள்களும், காவல்துறையும் ஒன்றாக இணைந்து செயல்படுகிறார்கள்.

பொய் வரதட்சணை வழக்குகள் பதிவாகும்போது காவல்துறை முறையான புலன்விசாரணை செய்யாமல் இருப்பதால் காவல்துறையும் தங்களுக்கு சாதகமாக பொய் வழக்குப்போட உதவுகிறது என்ற தைரியத்துடன் பல மருமகள்களும் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி தங்களுக்கு தேவையானவற்றை அடைவதற்காகவும், பழிவாங்குவதற்காகவும் தினம் தினம் பல பொய் வரதட்சணை வழக்குகளை குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பல மருமகள்கள் காவல்துறையுடன் சேர்ந்துகொண்டு பொய் வரதட்சணை வழக்குகளை பதிவுசெய்து கணவனையும் அவனது குடும்பத்தையும் துன்புறுத்தி வருகிறார்கள். மருமகள்கள் பொய்யான புகார் அளித்தாலும் அதைக் காவல்துறை முறையாக விசாரணை செய்து அப்பாவிகள் பொய் வழக்குகளில் சிக்கவைக்கப்படாமல் பாதுகாக்கவேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதைவிட அப்பாவிகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதுதான் மிக மிக முக்கியம். ஆனால் நாட்டில் நடப்பதோ தலைகீழ். உண்மையாக புலன் விசாரணை செய்தால் பல பொய் வழக்குகள் நீதிமன்றத்திற்கு செல்லவேண்டிய அவசியமிருக்காது. பல அப்பாவிகளும் தேவையில்லாமல் தங்களது வாழ்வை இழக்க நேரிடாது.

நாட்டில் நடந்துகொண்டிருக்கும் தற்போதைய நடைமுறைப்படி விசாரணை என்பதே பல பொய் வரதட்சணை வழக்குகளில் செய்யப்படுவதில்லை. நடிகர் பிரசாந்த் அவர்களின் மீது சுமத்தப்பட்ட பொய் வரதட்சணை வழக்கை மட்டுமே காவல்துறை முறையாக விசாரணை செய்து அந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் என்று உண்மையான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்தார்கள். அந்த விசாரணை அறிக்கையை இங்கே சென்று பாருங்கள் (நடிகர் பிரசாந்த் அவர்களின் 498A வழக்கின் போலிஸ் விசாரணை முழு அறிக்கை). இதுபோல எத்தனை வரதட்சணை வழக்குகளில் முறையான விசாரணை நடைபெற்றிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

பெரும்பாலான பொய் வரதட்சணை வழக்குகளில் எந்தவித விசாரணையும் செய்யாமல் பிச்சைக்காரன் வாந்தி எடுத்ததுபோல அப்படியே புகாரை “காப்பியடித்து” விசாரணை அறிக்கை என்ற பெயரில் அப்பாவிகளை குற்றவாளி பட்டியலில் சேர்த்து நீதிமன்றங்களில் பொய் வழக்குகளை குவித்துவிடுகிறார்கள். அதனால் இந்திய நீதிமன்றங்கள் பொய் வரதட்சணை வழக்குகள் என்னும் குப்பைகளால் நிரம்பி வழிந்து துர்நாற்றம் அடித்துக் கொண்டிருக்கிறது. இதன்விளைவாகப் பல அப்பாவிகள் நீதிமன்றங்களில் வருடக்கணக்கில் நீதிகிடைக்காமல் அலைந்துகொண்டிருக்கிறார்கள். இந்த அப்பாவிகளின் வயிற்றெரிச்சல் சும்மா விடுமா?



Thursday, August 12, 2010

கலியுக மருமகளால் வரப்போகும் ஆபத்து!

போலியான பெண்ணியவாதிகள் கூட்டம் எப்போது பார்த்தாலும் பெண்களுக்கு கொடுமை நடக்கிறது, பெண்கள் அடிமையாக இருக்கிறார்கள், பெண்களுக்கு அங்கே அது நடக்கிறது, இது நடக்கிறது என்று கூப்பாடு போட்டு மோடி வித்தைக்காரர்கள் போல கூட்டம் சேர்த்து காசு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அற்பத்தனமான சுயநலத்திற்காக உருவாக்கப்பட்டவைதான் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் என்று சொல்லப்படும் (IPC498A, Domestic Violence Act) தவறான ஒருதலைபட்சமான சட்டங்கள். இந்த சட்டங்களால் பெண்களுக்கு நன்மை ஏற்பட்டதைவிட பல பெண்களின் வாழ்க்கை சீரழிந்து பல குடும்பங்கள் அழிந்ததுதான் மிச்சம். ஒரு கலியுக மருமகளின் பொய்யான வரதட்சணைப் புகாரால் ஒரு குடும்பத்திலுள்ள குறைந்தது 4 - 6 பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது.

இதுபோன்ற போலியான பெண்ணியவாதிகளின் முகத்திரையைக் கிழித்து ஒரு புதுமைப் பெண் கருத்தாழமிக்க ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அதன் ஒரு பகுதி கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. முழுக்கட்டுரையையும் பின்வரும் இணைப்பில் சென்று படியுங்கள்.

சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள்

இன்று பெண்கள் எந்தத் துறையில் இல்லை? ஆட்டோ ஓட்டுநராக, பேருந்து ஓட்டுநராக, மின்சார ரயில் ஓட்டுநராக, தபால் பட்டுவாடா செய்பவராக, பெட்ரோல் பங்குகளில், ரேஷன் கடைகளில் பொருள்களை அளந்துபோடுபவராக… இன்னும் உயர்ந்த நிலையில் சொல்லவேண்டுமானால் விமானம் ஓட்டுபவராக, விண்வெளிப் பயணியாக, விண்வெளி விஞ்ஞானியாக என்று பல துறைகளிலும் பரிமளிக்கிறார்கள் தானே? இதை விடவும் என்ன முன்னேற்றமும் உரிமையும் வேண்டும்? ஒரு சிலர் எல்லாப் பெண்களுக்கும் கிடைத்துவிட்டதா என்றும் கேட்கின்றனர். சரி, இல்லை என்றே வைத்துக்கொள்வோம். எல்லா ஆண்களுக்கும் இந்தச் சம உரிமை கிடைத்திருக்கிறதா? ஏன் எல்லா ஆண்களும் உயர்ந்த இடத்தில் இல்லை? ஏன் ஒரு சிலருக்கு மட்டும் நல்ல உயர்ந்த பதவிகளும், பட்டங்களும் கிடைக்கின்றன? இன்னும் சில ஆண்கள் மூட்டை தூக்கியும், வண்டி இழுத்தும், ரிக்ஷா ஓட்டியும் பிழைக்கின்றனர்? ஏன் இப்படி?? அவர்களுக்காகப் போராட யாருமே இல்லையா? ஆண்கள் முன்னேறவேண்டாமா? அவங்களுக்கும் இதில் எல்லாம் உரிமை இல்லையா?

பெண்களுக்கு இப்போது பணமும் ஆடம்பர வாழ்க்கையும் உல்லாசப் பொழுது போக்குகளும் மட்டுமே முக்கியமாய் இருக்கின்றன. எல்லாப் பெண்களையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டவில்லை. நானும் ஒரு பெண்தான். குடும்பத் தலைவிதான்.


மேலுள்ள கட்டுரையைப் படித்தபிறகு கலியுகப் பெண்கள் ஏன் மோசமான போலியான பெண்ணியவாதிகளால் தவறான பாதையில் இப்படி தவறான சட்டங்கள் மூலமாக வழிநடத்திச் செல்லப்படுகிறார்கள் என்று யோசித்தால் அதற்கான பதிலை பல ஆண்டுகளுக்கு முன்பே நீதி வெண்பா என்ற பழந்தமிழ் நூலில் ஒரு அறிஞர் பாடிச் சென்றிருக்கிறார்.

நீதிவெண்பா

32. ஈயுகத்தில் இல்லந்தோறும் கூற்றுவன்

என்னே கிரேதத் திரேணுகையே கூற்றுவனாம்
தன்னேர் திரேருதத்திற் சானகியே - பின்யுகத்தில்
கூடும் திரௌபதியே கூற்றாம் கலியுகத்தில்
வீடுதொறும் கூற்றுவனா மே.

அந்தப் பாடலில் என்ன சொல்லியிருக்கிறதென்றால் கிரேதாயுகத்தில் ரேணுகை என்ற பெண்ணால் உலகம் அழிந்தது. திரேதாயுகத்தில் சானகி என்ற சீதையால் இராமாயணப்போர் ஏற்பட்டு உலகம் அழிந்தது. அதன்பிறகான காலத்தில் திரௌபதி என்ற பெண்ணால் பாரதப்போர் ஏற்பட்டு உலகம் அழிந்தது.

இந்தக் கலியுகத்தில் வீட்டிற்கு வீடு இருக்கும் ஒரு பெண்ணால் இந்த உலகம் அழியும் என்று அந்த அறிஞர் பாடிவிட்டுச் சென்றிருக்கிறார். அந்தப் பெண் யாருமல்ல பொய்யான பெண்ணுரிமை பேசும் கூட்டத்தால் தவறாக வழிநடத்தப்பட்டு தவறான சட்டங்கள் என்ற ஆயுதங்களை கையில் எடுத்து சிறு குழந்தை முதல் முதியோர் வரை வயது வித்தியாசம் பார்க்காமல் வீட்டிலிருக்கும் அனைவரையும் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கவைக்கும் மருமகள்தான் அந்தப் பெண். புராண காலத்து யுகங்களில் இருந்த பெண்களால் அநீதிக்கு எதிராக போர் ஏற்பட்டது. ஆனால் இந்தக் கலியுகத்தில் ஏற்பட்டிருக்கிற போரில் நீதியை அழிக்க அநீதிகளலெல்லாம் ஒன்று கூடி தவறான சட்டங்கள் என்ற உருவில் வந்திருக்கிறது. இதுதான் வித்தியாசம்.

அதனால் இந்தக் காலத்துப் பெண்களுக்கு நல்வழிகாட்டி அவர்களை பண்புடன் வளர்த்து நல்ல மகளாகவும், நல்ல மருமகளாகவும் மாற்றுவது பெற்றவர்களின் கடமை. இல்லையெனில் நீதிவெண்பாவில் சொன்னது உண்மையாகிவிடும். இப்போதே நாட்டின் நிலைமை அந்தப் பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது என்று அன்றாடம் செய்தித்தாள்களில் வரும் செய்தியிலேயே நீங்கள் உணரமுடியும். அதற்கான சிறு உதாரணம் கீழே தரப்பட்டுள்ளது.


சென்னை, ஜூலை 29:கள்ளக்காதல் காரணமாக மின்வாரிய ஊழியரை ஆட்களை வைத்து கொலை செய்ததாக பெண் போலீஸ் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

மனைவி, கள்ளக்காதலன் உட்பட மூவர் கைது
ஆகஸ்ட் 10,2010 தினமலர்

பூந்தமல்லி: கள்ளத்தொடர்பு விவகாரம் தெரிந்துவிடும் என்று கருதிய மனைவி, தனது கள்ளக்காதலன் மற்றும் அவரது சகோதரரை ஏவி, கணவனை கொலை செய்த சம்பவம் பூந்தமல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உதவி தொகை வழங்க லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது
ஆகஸ்ட் 10,2010 தினமலர்

கள்ளக்காதல் மோகம்: கணவனை உதறிய ராஜபாளையம் பெண்

தினமலர் ஆகஸ்ட் 08,2010

இரும்பு சுத்தியால் அடித்து கணவனை கொலை செய்த மனைவி
ஆகஸ்ட் 05,2010 தினமலர்

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய பெண் சார்பதிவாளர்
04 Aug 2010 தினமணி

லைசென்ஸ் புதுப்பிக்க 1,000 ரூபாய் லஞ்சம்:கலெக்டரின் நேர்முக பெண் உதவியாளர் கைது

ஆகஸ்ட் 03,2010 தினமலர்


ஜூலை 29,2010 தினமலர்

குடும்பத் தகராறில் பெற்ற குழந்தைகளைக் கொன்ற பெண்
ஜூலை 24, 2010 தினமலர்

கர்ப்பவதி குற்றம் செய்யலாமா?
லஞ்சம் வாங்கி சிக்கிய பெண் போலீஸ் எஸ்.ஐ.

ஜூலை 19,2010 தினமலர்

சூட்கேசில் சிறுவன் பிணம் : கள்ளக்காதலியின் வெறிச்செயல் அம்பலம்

தினமலர் ஜூலை 20, 2010

கள்ளக்காதலுக்கு இடையூறு கணவனை கொன்ற மனைவி

தினமலர் 20 ஜூலை 2010
சட்டம் படித்த பெண் செய்த சுவாரஸ்யமான கொலை

கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: கணவன் தற்கொலை
ஜூலை 16,2010 தினமலர்
Woman ASI caught taking Rs 500 bribe
தாயுடன் கணவனுக்கு கள்ளக்காதல்: நடவடிக்கை கோரி இளம் பெண் புகார்
தினமலர் மார்ச் 05, 2010
கள்ளக்காதலுடன் ஓடிய தாயை பார்த்ததும் அழுத குழந்தைகள்
அக்டோபர் 29,2009 தினமலர்
கலியுக கண்ணகி: (கள்ளக்)கணவனுக்காக தீக்குளிக்க முயற்சி!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி

தினமலர் ஜூன் 12,2010
மாமியாரை குடும்பத்தோடு தீர்த்துக் கட்டிய பலே மருமகள்
Net India123.com Warangal | Tuesday, Jun 8 2010
மாமியாருக்கு “குத்து”விளக்கு ஏற்றிய குல விலக்கு மருமகள்
தினமலர் 18 மே 2010
மாமியார் கொலை : மருமகளுக்கு ஆயுள்
தினமலர் 18 மே 2010
பணம், காதலுக்காக பாகிஸ்தானுக்கு 'போட்டுக் கொடுத்த' இந்திய பெண் அதிகாரி
தினமலர் மே 02,2010
கும்மிடிப்பூண்டி : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனாரை கொலை செய்ய திட்டம் தீட்டிய மருமகள், கள்ளகாதலன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
எத்துறையிலும் முன்னேறுவோம்! இடஒதுக்கீடே தேவையில்லை!!

அதனால் அவரவர் வீட்டுப் பெண்களை நல்வழிப்படுத்தி வீட்டையும், நாட்டையும் உலகையும் காப்பாற்றவேண்டியது பெற்றவர்களின் கடமை. பெற்றோர்களே, போலியான பெண்ணியவாதிகளின் தவறான வழிகாட்டுதலில் “பெண் விடுதலை” என்பதற்கு தவறான அர்த்தத்தை உங்களின் மகள்களுக்கு காட்டி அவர்களின் வாழ்வை சீரழித்துவிடாதீர்கள்.





Wednesday, June 30, 2010

வரதட்சணைக் கொடுத்த பெண்ணை பாராட்டிய இந்திய ஜனாதிபதி!

இந்தியாவில் 1961ல் வரதட்சணை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும் இன்றுவரை பெண்கள் வரதட்சணைக் கொடுமை அடைவதாக பெண்கள் நல வாரியம், பெண்கள் நல அமைச்சகம் மற்றும் பல மகளிர் குழுக்கள் போர்க்கொடி தூக்கிக்கொண்டு ஓலமிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தக்கூட்டம் ஒரு உண்மையை மட்டும் மறைத்து தங்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் பிரச்சனையை திசைதிருப்பிக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த சட்டம் பல ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டிருந்தாலும் இன்றுவரை அதை ஒழுங்காக செயல்படுத்தாமல் தடைசெய்து வருவது இந்திய அரசாங்கம்தான். இயற்றிய சட்டத்தை சுயநல நோக்கில் ஒழுங்காக செயல்படுத்தாமல் அப்பாவிக் கணவர்கள் மீது பழி சுமத்தி சிறையில் தள்ளி சமுதாயத்தை சீரழித்து வருகிறது இந்த ஒட்டுமொத்தக் கூட்டம்.

வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு 3 ன் படி வரதட்சணை கொடுப்பவரும் தண்டிக்கப்படவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

THE DOWRY PROHIBITION ACT, 1961

(Act No. 28 of 1961)


3. Penalty for giving or taking dowry.-(1) If any person, after the commencement of this Act, gives or takes or abets the giving or taking of dowry, he shall be punishable with imprisonment for a term which shall not be less than five years, and with the fine which shall not be less than fifteen thousand rupees or the amount of the value of such dowry, whichever is more


சட்டம் இப்படி இருக்கிறது. ஆனால் இன்றுவரை ஒருவர் கூட வரதட்சணைக் கொடுத்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டதில்லை. கொடுப்பவர் இல்லையென்றால் வாங்குபவர்கள் இருப்பார்களா? ஆனால் இதைப் பற்றி யாரும் கவலைப்படவே இல்லை. காரணம் பல மகளிர் அமைப்புகளுக்கு வரதட்சணை வழக்குகளின் புள்ளி விபரம்தான் பணம் காய்க்கும் மரமாக, வாழ்வாதாரமாக இருக்கிறது. அதனால் அவர்களுக்கு இந்த வரதட்சணை முறையை ஒழிக்க மனம் வராது.

கீழுள்ள செய்தியில் பாருங்கள் இந்திய ஜனாதிபதி கூட இதே வேலையைத்தான் செய்திருக்கிறார்.

புதுடில்லி: வரதட்சணை பிரச்னையால் திருமணத்தை உதறித் தள்ளிய துணிச்சல் பெண்ணை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கவுரவப்படுத்த உள்ளார்.

மேற்குவங்க மாநிலம் துர்காபூரை சேர்ந்த இளம்பெண் புல்தி பாகி. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த புல்தி பாகிக்கு சஞ்சய் பாகி என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவரது பெற்றோர் புல்தி பாகி திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த சேமிப்புப் பணத்தில் திருமண ஏற்பாடுகள் செய்தனர். மேலும் உள்ளுர் பைனான்ஸ் அதிபரிடம் கடன் வாங்கி மாப்பிள்ளை வீட்டார் கேட்ட சீர்வரிசைகளை வழங்கினர். கடந்த மாதம் திருமண மண்டபத்தில் திருமணம் சிறப்பாக நடந்தது. திருமணத்தின் போது ஒரு லட்ச ரூபாய் ரொக்கமாக வரதட்சணை கொடுக்க புல்தியின் வீட்டார் ஒப்புக்கொண்டிருந்தனர். ஆனால் 90 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்தனர். மீதம் பத்தாயிரம் ரூபாயை சிறிது நாட்களில் தருவதாக கூறினர். இதனை மாப்பிள்ளை வீட்டார் ஏற்கவில்லை.மேலும் கூடுதல் வரதட்சணை கொடுக்க வேண்டும் என்றும் நிர்பந்தம் விதித்தனர். மேலும் மாப்பிள்ளை சஞ்சய் குடிபோதையில் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து மீதி பத்தாயிரம் ரூபாயை உடனே தரவேண்டும்;கூடுதலாக வரதட்சணை கொடுத்தால் தான் புல்தியை வீட்டிற்கு அழைத்துச் செல்வேன் எனக் கூறினார்.

மாப்பிள்ளை வீட்டாரின் செயல்களை பார்த்துக் கொண்டிருந்த புல்திபாகி அதிர்ச்சியடைந்தார். மணமேடையில் இருந்து திடீரென எழுந்து கழுத்தில் இருந்த மாலை, நகைகளை கழற்றி வீசினார். நான் சஞ்சய் பாகியுடன் செல்ல மாட்டேன்;எனக்கு இந்தத் திருமணமே வேண்டாம் என கூறிவிட்டு விருட்டென்று எழுந்து வீட்டிற்கு சென்று விட்டார். திருமணத்திற்கு வந்த உறவினர்கள் புல்தி பாகியின் செயலைக் கண்டு திகைத்தனர்.இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பெற்றோர்,உறவினர் சமாதானங்களை புல்திபாகி ஏற்கவில்லை.இதையடுத்து பிரச்னையில் ஊர் பெரியவர்கள் தலையிட்டு இந்தத் திருமணம் செல்லாது என அறிவித்தனர்.

இந்நிலையில் வரதட்சணை பிரச்னையால் திருமணத்தை உதறித்தள்ளி,பெண் சமுதாயத்துக்கு முன்னுதாரணமாகத் திகழும் புல்தி பாகியின் துணிச்சலை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் புல்தி பாகியை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து விரைவில் அவர் கவுரவப்படுத்த உள்ளார். கிராமப்புறங்களில் பெண்கள் திருமணத்தை உதறித் தள்ளுவதால் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதையும் மீறி திருமணத்தை உதறித்தள்ளிய புல்தியை ஜனாதிபதி நேரில் அழைத்து ஊக்கப்படுத்த விரும்புகிறார்.அவர் கல்வி கற்கவும் அல்லது வேலைக்கு செல்லவும் ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார். புல்திக்கு நிதி உதவி செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார். இதேபோன்று சமுதாயப் புரட்சி செய்த சரிதா மட்டோ,பிரவீனா கதுன் மற்றும் ரேகா ஆகியோரையும் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கவுரவப்படுத்த உள்ளார்.

=============

மேலுள்ள செய்தியில் முதலில் வரதட்சணைக்கொடுக்க பெண்வீட்டார் ஏன் ஒப்புக் கொண்டார்கள் என்ற கேள்வியே கேட்கப்படவில்லை. வரதட்சணை கொடுக்க முற்பட்டது சட்டப்படி ஒரு குற்றச் செயலாகும். முதலிலேயே மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்கும்போதே திருமணத்தை உதறியிருந்தால் இந்தப் பெண் புரட்சிப்பெண் என்று சொல்லலாம். ஆனால் இரண்டு கூட்டமும் சேர்ந்து ஒரு குற்றத்தை இழைத்திருக்கிறார்கள். பிறகு “டீல்” ஒத்து வரவில்லையென்றால் அடுத்த ஆள் மீது பழியைப் போட்டுவிடுகிறார்கள். இதுதான் இந்தியாவில் நடந்துவரும் வரதட்சணை சட்ட நடைமுறை. இதில் வரதட்சணைக்கொடுத்துத் திருமணம் செய்ய முயன்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ஏன் பரிந்துரைக்கவில்லை? வரதட்சணை தடுப்புச் சட்டத்தை முழுமையாக யார்தான் கடைபிடிப்பார்களோ?

நாட்டின் சட்டத்தை கடைபிடிக்கவேண்டிய முதல் பெண்மணியே வரதட்சணை கொடுத்துத் திருமணம் செய்ய முயன்றவர்களை பாராட்டி கௌரவம் செய்தால் நாட்டில் இதுபோன்ற சமுதாயக் குற்றங்களை களைவது யார்? பெண்களுக்கு உண்மையாகவே நன்மை செய்யப்போவது யார்?

சமீபத்தில் தில்லி நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி வரதட்சணை சட்டங்கள் ஒழுங்காக செயல்படுத்தப்படாமல் இருப்பதை கண்டித்திருக்கிறார். வரதட்சணை கொடுத்தவர்களும் தண்டிக்கப்படவேண்டியவர்களே என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறார். ஆனால் ஜனாதிபதியோ வரதட்சணை கொடுத்தவர்களை பாராட்டி மகிழ்கிறார். என்ன ஒரு சட்ட நடைமுறையோ! கடைசியில் பெண்களை வைத்து நன்றாக சட்ட, அரசியல் வியாபாரம் செய்துவிடுகிறார்கள் இந்த நாட்டில்.


Express News Service Mon Jun 28 2010

Observing that the anti-dowry law has been reduced to a ''paper tiger'' due to the bride's family giving away dowry in many cases, a court here said they also need to be prosecuted like the groom's family to eliminate the social evil.

New Delhi : While laws prohibiting dowry not only forbid receipt but also giving it, a city court, in a significant observation, held that the brides’ families are to be blamed for rendering the social welfare legislation largely ineffective.

“It is unfortunate that the legislation (Dowry Prohibition Act) has been reduced to a mere paper tiger. What is more unfortunate is that the family of the woman (involved in the marriage) is responsible for the non-accomplishment of this legislation,” Additional Sessions Judge (ASJ) Kamini Lau noted.

To meet the objectives of the law, not only the grooms’ families but also the brides’ must be booked for giving dowry in the name of social obligation, the court said.

“Dowry is a two-way traffic and unless there is a giver there can be no taker... In order to eliminate this evil both the giver and taker have been made liable under the Act. It is not possible to leave one and book the other,” ASJ Lau said.

“It is time this social welfare legislation is ruthlessly implemented and none is permitted to take the shield of social compulsion. This has become all the more necessary in order to check the misuse and abuse of special laws,” she added.

The court also said expensive gifts given by relatives to a couple before and after marriage must be brought to the notice of the authorities for levying of taxes.

The court made the observations while dismissing the plea of a woman seeking to quash criminal proceedings initiated against her family for giving of dowry following a complaint by her husband who faced dowry harassment charges. The woman had challenged the order by a Metropolitan Magistrate in October last year, who had directed the registration of an FIR against her family members for giving dowry for her marriage in April 2008.



Monday, June 28, 2010

வரதட்சணை கொடுப்பது தவறு என்று சொன்ன ஒரு உண்மையான பெண் நீதிபதி!

1961ல் இயற்றப்பட்ட வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்படி வரதட்சணை கொடுப்பதும் தவறு என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை அப்படி இந்த சட்டத்தின் மூலம் ஒருவர் கூட தண்டிக்கப்பட்டதில்லை. ஆனால் பெண்கள் அமைப்புகள் வரதட்சணைக் கொடுமை இன்னும் நாட்டில் இருக்கிறது என்று கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். சட்டத்தை மதிப்பதும் கிடையாது, ஒழுங்காக செயல்படுத்துவதும் கிடையாது. இதுதான் இந்திய நாட்டு சட்டங்களின் நடைமுறை. இதனால்தான் நாட்டில் பல அவலநிலை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

ஏதோ ஒரு சிலர் மட்டுமே நேர்மையாக நடந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் நாட்டில் இன்றும் எப்போதாவது மழை பொழிகிறது.
தில்லியில் உள்ள ஒரு பெண்நீதிபதி வரதட்சணைகொடுப்பவரும் தண்டிக்கப்படவேண்டும் என்று சட்டத்தில் உள்ளதை உள்ளபடி சொல்லி நீதிபதி என்ற பதவிக்கு உரிய மரியாதையை கொடுத்திருக்கிறார். இதுபோல அனைத்து காவல் மற்றும் நீதித்துறையை சேர்ந்தவர்கள் சட்டத்தை மதித்து ஒழுங்காக செயல்படுத்தினால்தான் நாட்டில் பெண்களின் நிலை உயரும்.

பெண்களை எப்போதும் இழிநிலையில் இருக்கவேண்டும் என்று நினைக்கின்ற கூட்டம் சட்டங்களை ஒருதலை பட்சமாக செயல்படுத்தி ஆண்களை குற்றவாளிகளாகக் காட்டி பெண்களை தவறு செய்ய தூண்டி அவர்களை எப்போதும் கீழ்நிலையில் வைத்திருக்கத்தான் விரும்புகிறார்கள். ஏனென்றால் பெண்களின் நிலை தரம்தாழ்ந்திருந்தால்தான் வெளிநாடுகளில் இவர்களைக் காட்டி பணம் கேட்கமுடியும். அவர்களும் ஐயோ பாவம் இந்தியாவில் பெண்களின் நிலை மோசமாக இருக்கிறதென்று அந்த பெண்ணுரிமை பேசும் அமைப்புகளுக்கு பணம் தருவார்கள். அதனால்தான் இன்றுவரை அந்த வரதட்சணை தடுப்புச் சட்டம் ஒருதலை பட்சமாக செயல்படுத்தப்படுகிறது.


Giving dowry an equal crime, says court

Express News Service Mon Jun 28 2010

Observing that the anti-dowry law has been reduced to a ''paper tiger'' due to the bride's family giving away dowry in many cases, a court here said they also need to be prosecuted like the groom's family to eliminate the social evil.

New Delhi : While laws prohibiting dowry not only forbid receipt but also giving it, a city court, in a significant observation, held that the brides’ families are to be blamed for rendering the social welfare legislation largely ineffective.

“It is unfortunate that the legislation (Dowry Prohibition Act) has been reduced to a mere paper tiger. What is more unfortunate is that the family of the woman (involved in the marriage) is responsible for the non-accomplishment of this legislation,” Additional Sessions Judge (ASJ) Kamini Lau noted.

To meet the objectives of the law, not only the grooms’ families but also the brides’ must be booked for giving dowry in the name of social obligation, the court said.

“Dowry is a two-way traffic and unless there is a giver there can be no taker... In order to eliminate this evil both the giver and taker have been made liable under the Act. It is not possible to leave one and book the other,” ASJ Lau said.

“It is time this social welfare legislation is ruthlessly implemented and none is permitted to take the shield of social compulsion. This has become all the more necessary in order to check the misuse and abuse of special laws,” she added.

The court also said expensive gifts given by relatives to a couple before and after marriage must be brought to the notice of the authorities for levying of taxes.

The court made the observations while dismissing the plea of a woman seeking to quash criminal proceedings initiated against her family for giving of dowry following a complaint by her husband who faced dowry harassment charges. The woman had challenged the order by a Metropolitan Magistrate in October last year, who had directed the registration of an FIR against her family members for giving dowry for her marriage in April 2008.




Sunday, February 21, 2010

ஜனாதிபதியை எதிர்க்கும் பெண்கள் சங்கத்தலைவிகள்

சென்ற ஆண்டு இந்திய ஜனாதிபதி பெணகள் பாதுகாப்பு சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு அப்பாவிகளை துன்புறுத்தும் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்று பெண் வழக்கறிஞர்கள் மாநாட்டில் உரையாற்றினார். ஆனால் அதற்கு பல மகளிர் சங்ககங்களும் மகளிர் வாரியங்களும் பலத்த எதிர்ப்பு தெரிவித்து செய்தி வெளியிட்டிருந்தார்கள். அதைப்பற்றிய செய்தியும் அதற்கு செய்தித்தாளில் ஒரு வாசகர் எழுதியிருந்த பதிலும் உங்களின் சிந்தனைக்காக தரப்பட்டிருக்கிறது. படித்துவிட்டு நன்கு யோசியுங்கள்.

வரதட்சணை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா? ஜனாதிபதி பிரதிபா கருத்துக்கு பெண்கள் எதிர்ப்பு
தினமலர் ஜனவரி 06,2009

புதுடில்லி : "வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான சட்டத்தை பெண்களில் சிலர், தவறாகப் பயன்படுத்தி கணவர்களைத் தண்டிக்கின்றனர் என்ற சர்வே தகவல் கூறுகிறது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்' என்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் யாவட்மால் பகுதியில், பெண்கள் மாநாடு நடந்தது. பெண்களுக்கு நீதி கிடைக்கிறதா? என்ற தலைப்பில் நடந்த இந்த மாநாட்டில், பெண் வக்கீல்களும், பள்ளி, கல்லூரி ஆசிரியைகளும் பங்கேற்றனர்.

மாநாட்டில் பேசிய ஜனாதிபதி பிரதிபா, "பெண்கள் பாதுகாப்பாக இருக்க, பல வகையில் சட்டங்கள் உள்ளன. ஆனால், வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி, கணவர்களை சில பெண் கள் தண்டிப்பதாக சர்வே தகவல்கள் கூறுகின்றன. இப்படி தவறு நேராவண்ணம் வக்கீல்கள் உஷாராக இருக்க வேண்டும்' என்று பேசினார்.

இந்த பேச்சு, இப்போது பெண்கள் அமைப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. "ஜனாதிபதி பிரதிபா அப்படி பேசியிருக்கக் கூடாது. ஏற்கனவே, பெண்களுக்கு சாதகமாக சட்டங்கள் உள்ளதாக கருத்து நிலவும் நிலையில் இப்படி பேசினால், இந்த சட்டங் களால் பெண் கள் பலன் அடைவதாக அர்த்தமாகி விடும்' என்று கூறியுள்ளனர்.

தேசிய குற்ற ஆவணங்களின் படி, கடந்த ஆண்டு இரண்டு லட்சத்து 16 ஆயிரம் வரதட்சணைக் கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன. அவற்றில், 85 - 95 சதவீதம் பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். "இதை சுட்டிக் காட்டிய பெண்கள் அமைப்பினர், "சட்டம் இருக்கும் போதே இப்படி நேரும் போது, பெண்களுக்கு இந்த சட்டங்களால் பெரிய அளவில் பாதுகாப்பு இல்லை' என்று வருத்தப்பட்டனர்.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவி சுதா சுந்தரம் கூறுகையில்,
"பெண்கள் சம்பந்தப்பட்ட பல சட்டங்கள் போதுமான அளவில் அமல்படுத்தப்படுவதில்லை. பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ள சட்டங்களை சரியாக அமல்படுத்தாத நிலையில், ஜனாதிபதியின் கருத்து வேதனையானது' என்று தெரிவித்தார்.

மகளிர் சங்கங்களும் வாரியங்களும் பெண்களுக்கு எந்தவகையான போதனைகள் செய்து கொண்டிருக்கின்றன என்பதை சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு சிறுமி அழகாக நடித்துக்காட்டியிருக்கிறார். இது தான் இந்த சங்கங்களின் இன்றைய நிலையா என்ற உண்மையை விஷயம் தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். இந்த புத்திசாலி சிறுமிக்குப் பாராட்டுக்கள்.





ஜனாதிபதிக்கு "ஜே':
பா.சி.ராமச்சந்திரன், திருவொற்றியூர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: "வரதட்சணைக் கொடுமை சட்டம், சில பெண்களால் தவறாகப் பயன்படுத்துவதாக ஒரு சர்வே கூறியிருக்கிறது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்' என்று, இந்தியாவின் முதல் பெண்மணியும், நமது ஜனாதிபதியுமான பிரதிபா பாட்டீல் கூறியது, நூற்றுக்கு நூறு உண்மை. மிகப் பெரிய பொறுப்பிலுள்ள ஓர் பெண்மணி கூறியதை, உடனே பெண்கள் அமைப்புகள் கண்டனம் செய்தது, கண்டனத்திற்கு உரியதாகும். அவர் அப்படிச் சொன்னது உண்மை தானா என்று ஆராயாமல், அவர் கருத்தை எதிர்ப்பது தவறானது. ஒரு ஆய்வுத் தகவல் இப்படிச் சொல்கிறதே என்று ஜனாதிபதி வருத்தப் பட்டதையே எதிர்க்கும் பெண்கள், வீட்டில் மாமியாரை எப்படி ஆதரிப்பர்? தங்களுடைய வீட்டில், தன்னைப் பெற்ற அன்னைக்கு ஆதரவாயிருக்கும் பெண்கள், தன்னுடைய கணவரைப் பெற்றதும் ஒரு அன்னையே என்பதை அறியாமல், அவர்களுக்கு எதிராக செயல்படும் பெண்கள் இன்று ஏராளம். கருத்து சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் என்ற பெயரில், பெண்கள் தங்களுடைய மாமியார், மாமனாருக்கு எதிராகப் போவதை சுப்ரீம் கோர்ட்டே கண்டித்திருக்கிறது. அது மட்டுமல்ல, வரதட்சணைக் கொடுமைச் சட்டம், பாலியல் பலாத்காரச் சட்டம் போன்றவைகளையும் சில பெண்கள் தவறாகப் பயன்படுத்தி, மாமனார், மாமியார், மேலதிகாரிகள், உடன் பணிபுரிவோர் போன்றவர்களையும் கம்பி எண்ண வைத்திருக்கின்றனர். அதனால் தான், காவல் துறை எந்த ஒரு சட்டத்தையும் பயன்படுத்தும் போது, தீர விசாரித்து கைது செய்ய வேண்டும். "சட்டத்தின் முன் அனைவரும் சமம்; ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம்' என்றெல்லாம் பேசிவிட்டு, செய்யாத தவறுக்காக பெண் உரிமையைப் பயன்படுத்தி ஆண்களையும், பெண்களையும் கைது செய்வது எந்தவிதத்தில் நியாயம்? பல குடும்பங்களில் மருமகள் செய்யும் கொடுமைகளை மாமனார், மாமியார் போன்றோர், காவல் துறைக்குத் தெரிவித்து, மருமகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்காததற்குக் காரணம், குடும்ப கவுரவம் பாழாகிவிடக் கூடாது என்பதால் தான். இதை இளம் பெண்கள் புரிந்து கொண்டு வாழ்வதே சிறந்த குடும்ப அமைப்பு. சரியான நேரத்தில் ஜனாதிபதி கூறியது முற்றிலும் சரியே!

Saturday, December 19, 2009

மனுநீதிச் சோழனும் பெண்கள் போடும் பொய் வழக்குகளும்

தினமலர் டிசம்பர் 20,2009

புதுடில்லி:
"காதலன் கற்பழித்ததாக பெற்றோர் தான், புகார் கொடுக்க சொல்லி என்னை வற்புறுத்தினர்" என, கோர்ட்டில் கல்லூரி மாணவி சாட்சியம் சொல்லியுள்ளார்.
டில்லி, படா ஹிந்துராவ் காலனியை சேர்ந்த கல்லூரி மாணவி, பக்கத்து வீட்டு சாப்ட்வேர் இன்ஜினியர் பவான் காஷ்யப்(22) என்பவர் தன்னை கற்பழித்து விட்டதாக போலீசில் புகார் கூறினார். இதையடுத்து பவான் காஷ்யப் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக கோர்ட்டில் நடந்த விசாரணையின் போது வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்ததில்," பவானும், நானும்
காதலித்தோம். நானே விரும்பி தான் அவனுடன் உடல் ரீதியாக தொடர்பு கொண்டேன். திடீரென காஷ்யப் அவருடன் பணிபுரியும் பெண்ணுடன் பழகினார். நான் சந்தேகப்பட்டு பவானுடன் சண்டை போட்டேன்; இதனால் எங்கள் காதல் முறிந்தது. பெற்றோர், பவானை எங்கள் வீட்டுக்கு அழைத்து பேசினர். ஆனால், அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். இதையடுத்து பவான் என்னை கற்பழித்து விட்டதாக புகார் கொடுக்கும் படி பெற்றோர் என்னை வற்புறுத்தினர். இதனால், பவான் மீது கற்பழிப்பு புகார் கொடுத்தேன்' என்றார்.

இந்த பெண்ணின் வாக்குமூலத்தையடுத்து, பவான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது கல்லூரி மாணவியின் பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
==================================

100 க்கு 99 கற்பழிப்பு கேசுகள் நாட்டில் இ
ப்படித்தான் இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. கடையில் ஏதோஅல்வா வாங்கி சாப்பிடுவது போல சுலபமாக பெண்கள் அப்பாவிகள் மீது பல அபாண்டமான பழிகளைப் போட்டு விட்டு ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போல இருக்கிறார்கள். இதை இங்கொன்றும் அங்கொன்றுமாக இந்திய நீதிமன்றமும் "கற்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது பெண்கள் பொறுப்பு தான் " என்றும், கொரியநாட்டு நீதிமன்றமும் "பெண்கள் குழந்தைகள் அல்ல, அவர்களுக்கும் பொறுப்பு உண்டு" என்றும் தோலுரித்துக்காட்டிவிட்டன .

ஆனால் அந்த உண்மையை ஏற்பதற்குத் தான் யாருக்கும் மனம் வரவில்லை. ஏனென்றால் உண்மைக்கும் இந்த நாட்டிற்கும் தான் வெகு தூரமாயிற்றே! எவ்வளவு தூரம் என்று தெரிந்து கொள்ள ஆவலகா இருந்தால் உண்மைக்காக கடைசி வரைப் போராடி அனைத்தையும் துறந்த அரிச்சந்திர மகாராஜா இன்று உங்கள் ஊரில் சிலையாக எங்கு நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறார் என்று யோசித்துப் பாருங்கள் புரியும். அதனால் தான் என்னவோ சென்னை உயர்நீதிமன்றத்தில் கூட நீதிநெறி வழுவாமல் இருக்க தன் மகனையே தேர்க்காலில் இட்டு தண்டனை அளித்த மனுநீதி சோழனும் நீதிமன்றத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படாமல் வெளியே நிற்கவைக்கப்பட்டிருக்கிறார் போலும்!

படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக்கிப் பாருங்கள் நீதிக்காக ஆராய்ச்சி மணியடிக்கும் பசுவும் அதற்கு நீதி வழங்கிய மன்னர் தன் மகனை தேர்ச்சக்கரத்தில் இட்டுக் கொன்ற காட்சியும் தெளிவாகத் தெரியும்.
விலங்குகளுக்குக் கூட சமமான நீதி வழங்கப்படவேண்டும், தவறு செய்தது தனது மகனாக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும் என்று எண்ணிய அந்த மாமன்னர் இப்போது இந்திய சட்டங்களும், நீதிமன்றங்களும் பெண்களுக்கு மட்டும் குறிப்பாக இளம் பெண்களுக்கு மட்டும் சாதகமாக ஒருதலைபட்சமாக செயல்பட்டு பல அப்பாவி ஆண்களுக்கும், தாய்மார்களுக்கும் அநீதி இழைக்கப்படுவதை தினம் தினம் கண்டு வேதனையடையாமல் இருக்கவே அவர் நீதிமன்றத்திற்குள் இல்லாமல் வெளியே வளாகத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார் என்பது புரிந்திருக்கும்.

பாதிக்கப்பட்டது ஒரு விலங்காக இருந்தாலும் குற்றம் செய்தவர் அதற்குச் சமமான தண்டனையை அனுபவித்து அந்த அப்பாவிகள் அனுபவித்த அந்த வலியையும் வேதனையையும் உணர வேண்டும் என்று அனைத்து உயிர்களுக்கும் சமநீதி வழங்கிய உன்னதமான நீதியரசர் வாழ்ந்த நாட்டில் இப்போது பெண்கள் அப்பாவிகள் மீது அபாண்டமான பழிகளைப் போட்டு சிறையில் அடைத்துத் துன்புறுத்தி, 6-7 ஆண்டுகள் நீதிமன்றங்களில் அலைந்து அதற்குப்
பிறகு கடைசியில் அந்த அப்பாவிகள் குற்றமற்றவர் என்று சொன்னால் அதுவரை அந்த அப்பாவிகள் அனுபவித்த அந்த வேதனைகள் மறைந்து விடுமா?

சட்டத்தைத்
தவறாகப் பயன்படுத்தி அப்பாவிகளைத் துன்புறுத்தும் பெண்களுக்கு அந்த அப்பாவிகள் அடைந்த வேதனையையும், துன்பத்தையும், இழப்புகளையும், அவமானங்களையும் இன்றைய சட்டங்களும், நீதிமன்றங்களும் என்றாவது உணர்த்தியிருக்கின்றனவா? அல்லது இனியாவது உணர்த்துமா?

ஒருவரை நிரபராதி என்று சொல்வதை விட அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குச் சரியான நீதி தரப்படவேண்டும். சட்டங்கள் குற்றவாளிகளை தண்டிப்பதை விட அப்பாவிகளைக் காப்பாற்றுவதிலும் அவர்களுக்கு நீதி வழங்குவதிலும் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று உணர்த்தியவர் தான் மனுநீதிச்சோழன்.

பல ஆண்டுகளுக்கு முன்பிருந்த மனுநீதிச் சோழனுக்கு இருந்த நடுநிலைதவறாத நீதி வழங்கும் அறிவும், அனைவரையும் சமமாக சீர்தூக்கிப் பார்த்து நேர்மையாக நீதி வழங்கிய திறமையும் இன்று நாகரீகத்திலும் (?), அறிவியல்
முன்னேற்றத்திலும், தொழில்நுட்பங்களிலும் பல மடங்கு முன்னேறியிருக்கும் அரசாங்கத்திற்கும், நீதித்துறைக்கும் இருக்கிறதா? வெளிநாட்டிலுள்ள சட்ட நடைமுறைகளைத் தெரிந்து கொள்ளப் பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் நீதித்துறை வல்லுனர்கள் தங்கள் நாட்டிலேயே ஒரு அற்புதமான நீதியரசர் நடுநிலை தவறாமல் நீதி வழங்கிய முறைகள் இருப்பது பற்றி யோசித்திருப்பார்களா? நீங்களாவது யோசித்துப்பாருங்கள்.

தினம் தினம் நீதிமன்றத்திற்கு செல்லும்போது இந்த மனுநீதி சோழனைப் பார்த்துவிட்டு யாராவது ஒரே ஒரு நீதிபதியோ அல்லது வழக்கறிஞரோ இந்தக் கேள்வியை ஒரு முறையாவது தங்கள் மனதுக்குள்ளாவது கேட்டுப் பார்த்திருப்பார்களா?

மாமன்னர் நீதியரசர் மனுநீதிச் சோழனின் மாண்புமிக்க வரலாறு தெரியாதவர்கள் தங்களது வீட்டிலிருக்கும் மூத்தோரைக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். ஆனால் பாவம், பெரும்பாலான வீடுகளில் இப்போதெல்லாம் பெரியவர்கள் இருப்பதில்லை. ஒன்று மருமகளால் முதியோர் இல்லத்திற்கு விரட்டப்பட்டிருப்பார்கள், அல்லது அவளின் பொய் வரதட்சணை கேசில் சிக்கி நீதிமன்றங்களால் சிதைக்கப்பட்டிருப்பார்கள். அப்படிப் பெரியவர்களை இழந்துகொண்டிருக்கும் குடும்பங்களுக்காக அந்த வரலாறு கீழே தரப்பட்டுள்ளது.

வரலாற்றைத் தெரிந்து கொண்ட பிறகு செய்தித்தாளில் வந்துள்ள மேலுள்ள கற்பழிப்பு வழக்கு செய்தியை ஒப்பிட்டுப் பாருங்கள். இது போலத்தான் நாட்டில் பல பொய் வரதட்சணை வழக்குகளும் நீதிமன்றங்களில் கையாளப்படுகின்றன.

மனுநீதி சோழன் காலத்தில் ஒரு பசுவிற்குக் கிடைத்த நீதிகூட இன்று பலகோடி அப்பாவி ஆண்களுக்கும், வயதான தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும், குழந்தைகளுக்கும் கிடைப்பதில்லை. ஆனால் மனிதர்களே இல்லாத நிலவிற்கு ராக்கெட் விட்டு மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறோம். இது எந்த வகை வளர்ச்சி? சிந்தியுங்கள்.

அன்று சூர்ப்பநகை என்னும் ஒரு பெண்ணின் தவறால் ராவணன் என்னும் ஒரு மகா பேரரசனே தன் பெருமையிழந்து, பெருஞ் சுற்றத்தையிழந்து, கடைசியில் தனது நாட்டையே இழந்தான். இன்று பல சூர்ப்பநகைகள் பொய் சொல்லி பொய் வழக்குகள் போட்டு எந்த ராஜ்ஜியத்தை வேரறுக்கப்போகிறார்களோ?

கூடுதல் செய்திகள் உங்கள் சிந்தனைக்காக


மனுநீதிச் சோழன்

சோழ நாட்டு மன்னர்களுள் மனுநீதிச் சோழன் சிறப்புக்குரிய ஓர் அரசன், அவனது மகன் வீதியில் தேர் ஓட்டிக் கொண்டு செல்லும் போது, தேரின் சக்கரத்திற்குள் அகப்பட்டு ஒரு கன்று இறந்து விட்டது. தாய்ப்பசு அரண்மனைக்குச் சென்று ஆராய்ச்சிமணியை அடித்தது. உடனே மன்னன் தன் மகனை அழைத்து வரச் சொன்னான். அவன் மீது தேரை ஏற்றி அவனையும் கொலை செய்ய ஆணையிட்டான். தன் மகனைத் தானே கொன்ற பழிக்கு அவன் அஞ்சவில்லை.


மகனை, இழந்த அந்தத் தாய்ப்பசுவின் மனநிலையை எண்ணினான்.அந்தத் தாய்ப்பசுவின் துயரத்திற்குக் காரணமாக இருந்தவன் யாராகஇருந்தாலும் தண்டனைக்கு உரியவன். எனவே அங்கு மன்னனுக்கு எப்பக்கமும் சாராமல் நீதி வழங்க வேண்டும் என்ற மனநிலையே இருந்தது. பின் விளைவுகளுக்கு அவன் அஞ்சவில்லை. எனவே,மனுநீதிச் சோழனின் பெருமை இன்றும் பேசப்படுகிறது.

17 ஆம் நூற்றாண்டில் ஒரு மனுநீதிச் சோழன்

தனது மகனின் தேர், ஒரு பசுங்கன்றின் மீது தற்செயலாக ஏறி, அதைக் கொன்றதற்காக மகன் என்று கூடப் பாராமல், மரண தண்டனை விதித்தான் மனுநீதிச் சோழன். இது புராண காலத்து நீதி. ஆனால் தவறுதலாக செய்த ஒரு கொலைக்காக மனைவி என்று கூடப் பாராது மரண தண்டனை விதித்தான் ஒரு முகலாய சக்ரவர்த்தி! யாரிவன்? ஜஹாங்கீர்தான்! அக்பரின் மகன்! ‘ஜஹாங்கீர்! என்றால் ‘உலகை வென்றவன்’ என்று பொருள்.

மக்களுக்கு உடனடி நீதி வழங்க ஆக்ரா கோட்டையில், மனுநீதி ஆராய்ச்சி மணியொன்றை கட்டி வைத்திருந்தான் இவன். ஒரு சமயம், இவனுடைய மனைவியான நூர்ஜஹான் தவறுதலாக, ஒரு பீரங்கியை இயக்கியபோது ஒரு சலவைத் தொழிலாளி, குண்டு பட்டு இறந்தார்.

தன் மனைவி என்றும் பாராது நூர்ஜஹானுக்கு மரண தண்டனை விதித்தார் ஜஹாங்கீர். பின்பு அந்தத் தொழிலாளியின் மனைவி, கெஞ்சிக் கேட்டுக் கொண்டதின் பேரில் நூர்ஜஹானை விடுதலை செய்தார். அந்த சலவைத் தொழிலாளியின் மனைவிக்கு நிறைய மானியம் தந்தார்.

19 ம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை........

நீதி வேண்டுமா? தற்கொலை தான் ஒரே வழி! நீதி வேண்டுமா? தற்கொலை தான் ஒரே வழி என்று கட்டாயப்படுத்துகின்றன இன்றைய சமுதாயமும், தவறான சட்டங்களும்.



Tuesday, December 15, 2009

நீதி வேண்டுமா? தற்கொலை தான் ஒரே வழி!

நீதி வேண்டுமா? தற்கொலை தான் ஒரே வழி என்று கட்டாயப்படுத்துகின்றன இன்றைய சமுதாயமும், தவறான சட்டங்களும்.

முந்தைய செய்தியில் மருமகளால் கொடுமைப்படுத்தப்பட்ட மாமியார் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்ட போது அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படாமல் அவர் கடைசியில் எங்கும் பாதுகாப்பு கிடைக்காது என்று முடிவு செய்து தன்னை மருமகளின் கொடுமையிலிருந்து காப்பாற்றிக்கொள்ள தீக்குளிக்க முயற்சித்தபோது தான் போலிஸ் வழக்கு பதிவு செய்ய முடிவுசெய்தனர். ஆனால் அதிலும் என்ன கொடுமையென்றால் வழக்கு பதிவு செய்து அந்த வயதான தாயாரை தான் விசாரிக்க ஆரம்பித்ததாக செய்தி வந்திருந்ததை பார்த்தோம்.


இதுவே மருகளின் புகார் என்றால் மருமகளை முதலில் விசாரணை செய்யமாட்டார்கள். புகாரில் எழுதப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து விடுவார்கள். அது தான் இந்த காட்டுமிராண்டி சட்டத்தின் கொடுந்தன்மை.


கொடுமைக்குள்ளாவது வயதான தாய்மார்கள் மட்டுமல்ல, அப்பாவி கணவர்களும் தான். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தாயாரை முதன்மைப்படுத்தி போற்றி வணங்கிய நாட்டில் இப்போது அந்தத் தாய்மார்களே அரசாங்கத்தின் சிறப்பு சட்டங்கள் மூலம் கீழ்த்தரமாக நடத்தப்படும்போது அப்பாவி கணவர்கள் எப்படி நடத்தப்படுவார்கள் என்று உங்களால் யூகிக்க முடியும் என்று நம்புகிறேன்.


அப்பாவி கணவர்கள் அனுபவிக்கும் கொடுமைக்கு அளவே இல்லை. எத்தனையோ கணவர்கள் தங்கள் மனைவியரால் தாங்கள் அனுபவிக்கும் கொடுமையை வெளியே சொல்லமுடியாமல் மனதுக்குள்ளேயே வைத்து சீழ் பிடித்த ரணம் போல் அழுகிப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.


ஏனென்றால் ஆண்கள் தாங்கள் அனுபவிக்கும் கொடுமையை வெளியே சொன்னால் அதை இந்த சமுதாயம் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால் இந்த சமுதாயத்திற்கும் சட்டத்திற்கும் பெண் என்பவள் எப்போதும் நல்லவள், ஆண் என்பவன் எப்போதுமே குற்றம் செய்பவன் என்ற ஒரு தவறான மனப்பான்மை இருப்பதால் பாதிக்கப்பட்ட ஆண்களைக் காப்பாற்ற யாரும் முன்வருவதில்லை. சமுதாயத்தின் இந்த தவறான மனப்பான்மையை பெரும்பாலான பெண்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அப்பாவி ஆண்களை கொடுமை செய்கிறார்கள்.


ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு துரோகம் என்னவென்றால் அனைத்து குடிமக்களையும் மதம், சாதி, பணக்காரன், ஏழை, ஆண், பெண் என்று வேறுபாடில்லாமல் சமமாக நடத்த வேண்டிய சட்டமும், நீதியும், அதை செயல்படுத்துபவர்களும் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு பாதிக்கப்படும் ஆண்களை காப்பாற்றாமல் ஏளனம் செய்து புறக்கணிக்கிறார்கள். இந்தக் கொடுமையை திரைப்படத்திலும் காட்டிவிட்டார்கள்.




இது காசுக்காக எடுக்கப்பட்ட காட்சியல்ல. இது நாட்டில் நடந்துகொண்டிருக்கும் அவலம் என்பதை பின்வரும் செய்தியைப் படித்தால் உங்களுக்குப் புரியும்.


மனைவியருக்காக அடுக்கடுக்காக IPC498A, வரதட்சணை தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என பலவிதமான சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த சட்டங்கள் எல்லாம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? கணவன் தனிக்குடித்தனத்திற்கு வர சம்மதிக்கவேண்டும், மாமியாரை வீட்டை விட்டு விரட்ட வேண்டும், கணவன் தன் சகோதர சகோதரிகளை கவனிக்காமல் மனைவியின் வீட்டிற்கு எல்லா சம்பளப் பணத்தையும் கொடுக்க வேண்டும், கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதை கணவன் ஏன் என்று கூட கேட்கக் கூடாது போன்ற சலுகைகளை மனைவியர் அரசாங்க உதவியுடன் பெறுவதற்குத்தான் இந்த சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் தவறான பெண்கள் தான் இந்த சட்டங்களைப் பயன்படுத்துகிறார்கள்.


இதை ஆதரித்து சில கிழக்கோட்டான்களும் தவறான பெண்கள் கூட்டத்திற்குப் பின்னால் வெட்கமில்லாமல் நாட்டியமாடிக்கொடிருக்கின்றன. இந்தக் கிழக்கோட்டான்களை ஒழித்துக்கட்டினாலே பெரும்பாலான அப்பாவிக் கணவர்களும், தாய்மார்களும், சகோதரிகளும் காப்பாற்றப்படுவார்கள்.


உண்மையாகவே மனைவியால் பாதிக்கப்படும் கணவரை பாதுகாக்க ஒரு சட்டமும் கிடையாது. இது உண்மை. கொடுமையில் சிக்கித் தவிக்கும் அப்பாவி கணவர்களைப் பாதுகாக்க அரசாங்கம் எந்த சட்டமும் இதுவரை இயற்றவில்லை. அவர்கள் தற்கொலை செய்து கொண்டு கடவுளின் நீதிமன்றத்திற்கு சென்று அங்கு தான் நீதிபெறமுடியும். இது சத்தியமான உண்மை.


அந்த முடிவைத்தான் ஒரு கணவர் எடுத்திருக்கிறார். கீழுள்ள செய்தியைப் படித்துப் பாருங்கள்.


===============================


Harassed husband downs poison in police station

Date: 2009-12-15

Place: Bangalore

Harassed husband downs poison in police station says cops would not take him seriously when he told them his wife had threatened to file false case against him.

A 32-year-old cab driver who claimed his wife was harassing him attempted suicide at the Vyalikaval police station by consuming poison and is said to be in a serious condition in hospital.

Krishna T, the cab driver, was rushed to KC General hospital after the attempt to take his own life.

Dowry case threat

In his statement, Krishna told the police that his wife Usha and her family were making him go through unbearable torture and threatening to file a false case against him.

He said he had consumed poison at the police station because even the police were not sympathetic towards his plight since the time his wife had begun repeatedly threatening him with a dowry harassment case.

He said Usha harassed him everyday and doubted his character.

Krishna's mother Eeramma (65), who later approached the police with a complaint, said Krishna had married Usha four years ago and that since then her daughter-in-law had been harassing the family.

"She wanted Krishna to live separately from us and said he should not talk to us," she said in her complaint.

Fed up with frequent fights in the houshold, Eeramma finally decided to send the couple to a separate house, but she said Usha and her family did not cease the harassment, demanding a share in Krishna's ancestral property.

She said Krishna finally approached the police, but was not taken seriously. Eeeramma said the police did not believe him and even misbehaved with them.

Money, mobile gone


Unable to bear this, Krishna went to the police station with a bottle of rat poison and consumed it before the police.

Eeramma said the police rushed him to the hospital -- and informed Usha, who came to the hospital and went away after taking Rs 6,000 and his mobile phone.

Krishna's mother said since then Usha had been missing, and demanded the police initiate strong action against Usha and her family.

Physical abuse

Eeeramma told MiD DAY said Krishna had been beaten by members of Usha's family.

"The harassment is not only on her part but also that of her sister, Indrani, who has separated from her husband. Some time ago she beat up Krishna in public," said Eeramma. "Krishna fears Usha and has to cook and clean everyday. In her four years of married life, she never once lit the stove; she likes to eat out."

She said Usha now wanted to separate from Krishna.

"She wants separation but she also wants a share of his ancestral property," said Eeramma. "We are frustrated with her character; along with the police she made our life hell."


The Vyalikaval police are investigating the case, but Usha is absconded since the day Krishna took poison.
=======================================





Saturday, December 12, 2009

மக்கள் சக்தியை உணரத் தொடங்கியுள்ள நீதித்துறை

தாமதமாக நீதி வழங்கினால் மக்கள் புரட்சியில் ஈடுபடுவர்: தலைமை நீதிபதி எச்சரிக்கை

தினமலர் டிசம்பர் 13,2009

பெங்களூரு:
"தாமதமாக நீதி வழங்கினால், மக்கள் புரட்சியில் ஈடுபடத் துவங்கி விடுவர். சட்ட முறைகள் செயலிழந்து விடும்,'' என, தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
பெங்களூரில் நேற்று நடந்த மாநாடு ஒன்றில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:இந்திய நீதித்துறையின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால், இன்றோ, நாளையோ அல்லது நாளை மறுநாளோ நீதி கிடைத்து விடும் என, நம்புகின்றனர். இப்படி எத்தனை நாட்களுக்கு அவர்கள் காத்திருப்பர்? நாம் நீதி வழங்குவதில் காலத்தைக் கடத்த முடியாது.


அப்படி நடந்தால் மக்கள் புரட்சியில் ஈடுபடுவர்; நீதித்துறை ஸ்தம்பித்து விடும்.வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதில் எக்காரணம் கொண்டும் தாமதம் ஏற்படக் கூடாது. தாமதத்துக்கு, கோர்ட்டுகள், நீதிபதிகள் பற்றாக்குறையும் ஒரு காரணம். வக்கீல்களும் தங்கள் பங்குக்கு வழக்குகளை இழுத்தடிக்கின்றனர்.நாட்டில் உள்ள கோர்ட்டுகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. மொத்தம் 16 ஆயிரம் கீழ் கோர்ட்டுகள் தான் இருக்கின்றன. இவற்றில் 2,000 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. 16 ஆயிரமாக உள்ள கீழ் கோர்ட்டுகளின் எண்ணிக்கையை 35 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும். நீதிபதிகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும். இதைச் செய்யவில்லை எனில், இந்திய நீதித்துறை, முன்னேற்றப் பாதையில் செல்ல முடியாது.கோர்ட்டுகளை அதிகரிக்க மாநில அரசுகள் முன்வருவதில்லை. 4,000 கிராம கோர்ட்டுகள் ஆரம்பிப்பதற்கு இதுவரை எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை. இந்தியா எல்லாவகையிலும் முன்னேறி இருந்தாலும், வழக்குகளை முடிப்பதில் அதிக காலம் எடுத்துக் கொள்கிறது.


வழக்குகளை விரைவில் முடிப்பதற்கு கோர்ட் தவிர சமரசம் மற்றும் மத்தியஸ்தம் என்ற இரண்டு சுலபமான வழிகள் இருக்கின்றன. சீனாவில் 20 சதவீத வழக்குகள் மட்டுமே கோர்ட் விசாரணைக்கு வருகின்றன. மீதி 80 சதவீத வழக்குகள் சமரசம் மற்றும் மத்தியஸ்தத்திலேயே முடிக்கப்பட்டு விடுகின்றன.அதுபோல நம்நாட்டிலும் சமரசம் மற்றும் மத்தியஸ்த வழிகளில் வழக்குகளை முடிப்பதை ஊக்கவிக்க வேண்டும். இங்கு கோர்ட்டில் வழக்கிடுவது என்பது மலிவான செலவாக இருப்பதால் சமரசம் மற்றும் மத்தியஸ்தத்தை மக்கள் நாடுவதில்லை. இவ்வாறு கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++

ஏற்கனவே பாதி சட்ட நடைமுறைகள் செயலிழந்து தான் இருக்கின்றன. இனி புதிதாக செயலிழக்க என்ன இருக்கிறது? இந்த நாட்டில் அப்பாவிப்பெண்களும், குழந்தைகளும், வயதானவர்களும் கேவலமான பொய் வரதட்சணை கேசுகளுக்காக தீவிரவாதிகளை விட மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்படுகிறார்கள். இதற்கு உதாரணம் இந்த வீடியோ செய்தி - "வரதட்சணை வழக்கில் இரண்டு மாதக் குழந்தையும் குற்றவாளி". செய்தியை எழுத்துவடிவில் காண: இரண்டு மாதக் குழந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதி.



இன்றும் தினம் தினம் இந்த கொடுமை நடந்துகொண்டுதான் இருக்கிறது. எந்தவொரு முறையான, நேர்மையான சட்ட நடைமுறையும் இல்லாமல் இந்த அப்பாவிகளுக்கு இழைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த கொடிய அநீதியை எந்த வகையில் யார் நியாயப்படுத்த முடியும்?


நீதிவழங்குவதில் ஏற்படும் தாமதங்களுக்கு பல காரணங்கள் கூறப்பட்டுள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் விட நாட்டிலுள்ள தவறான ஒருதலைபட்சமான பல சட்டங்களை அழித்தாலே நீதிமன்றங்களிலுள்ள முக்கால்வாசி வழக்குகள் ஒழிந்து விடும்.

தாமதமாக நீதி வழங்கினால் மட்டுமல்ல, அப்பாவிகளுக்கு எதிராக பொய்வழக்குகள் போட்டு அநீதி இழைக்கப்பட்டாலும் மக்கள் புரட்சியில் ஈடுபட ஆரம்பித்துவிடுவார்கள்.




Tuesday, October 06, 2009

தீபாவளி ஸ்பெஷல்!

வரதட்சணை கேட்டு கொடுமை: மாஜிஸ்திரேட் மீது வழக்கு

லூதியானா: பஞ்சாபில், வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய மாஜிஸ்திரேட் மற்றும் அவர் குடும்பத்தினர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம், அகாலி தளம் கட்சியைச் சேர்ந்தவர் பால் சிங் கிரேவல்.

இவர், தனது மகள் கரண்தீப் கவுரை, அமிர்தசரஸ் கோர்ட்டில் பணிபுரியும் மாஜிஸ்திரேட் பல்ஜிந்தர் சிங்கிற்கு, கடந்தாண்டு திருமணம் செய்து கொடுத்தார். இந்நிலையில், வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப் படுத்துவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும், பல்ஜிந்தர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக, கரண்தீப் கவுர் போலிசில் புகார் செய்தார். இதையடுத்து, மாஜிஸ்திரேட் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலை முயற்சி மற்றும் வரதட்சணை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், மாஜிஸ்திரேட்டின் தாயார், மாமா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

Dinamalar: அக்டோபர் 07,2009
==========================================

மாஜிஸ்திரேட் வரதட்சணை கேசில் மாட்டிக் கொண்டு தலைமறைவான செய்தியைப் படித்தவுடன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் ஒரு அரசியல் கட்சி குடும்பமும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது. தீபாவளியை சந்தோஷமாக கொண்டாட இதை விட வேறு என்ன செய்தி வேண்டும்?






Thursday, September 17, 2009

சராசரி இந்தியன்....

வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் பற்றிய விவாதம்
(நன்றி: http://tamil498a.blogspot.com/)

பகுதி 1


பகுதி 2


=========================
இது போன்று எத்தனை விவாதங்கள் நடந்தாலும் சராசரி இந்தியர்கள் பொம்பளை சொல்றத மட்டும் தான் கேட்பார்கள்....உண்மையைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்கள்.

சராசரி இந்தியன்



Saturday, September 05, 2009

இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம் கோவையில் கோலாகலத் தொடக்கம்

பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: வலைத்தளத்திற்கு நன்றி!

இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம் கோவையில் கோலாகலத் தொடக்கம்

Movement protecting men's rights launched

The Hindu

Tamilnadu - Coimbatore

Coimbatore: Save Indian Family Movement, an organisation focusing on abuse of women-centric laws against men, advocating gender-neutral laws and amendments to the existing laws, has launched its Coimbatore Chapter.

Convenors of the Save Indian Family Movement, Suresh Ram and M.P. Kalaiselvan (Chennai), Manoj David (Bangalore) and G. Prakash (Coimbatore) addressed journalists at Coimbatore on Friday.

They pointed out that laws aimed at protecting women, such as Sec 498 A of Indian Penal Code, Dowry Prohibition Act and Prevention of Domestic Violence Act, had been largely misused against men and this had affected the Indian family system.

Adverting to the suicide statistics of 2005 and 2006, they pointed out that in 2005, 52,483 husbands committed suicide while the number was 28,188 for wives and in 2006, 55,452 husbands committed suicide as against 29,869 suicides by wives.

In the event of the death of a married woman, the husband and his family members were subjected to prolonged legal trails. Such laws could never be a remedy for the sufferings of women and arming them with `terrorising legal weapons' only led to retribution.

They dubbed the cited legal provisions as `draconian women-centric laws'. More than 98 per cent of men faced domestic violence at the hands of their wives and in-laws in the form of verbal abuse, physical abuse, economic exploitation, cheating, infidelity and harassment, but there was no law to provide solace to them.

They said that laws needed to be gender neutral. Women-centric laws sought compensation for women in the event of a divorce even when the woman was a bread winner and saw fathers as incapable of bringing up children.

They demanded a separate Ministry for Men's Welfare, gender equal laws, besides amendments to legal provisions to tone down these legislations.

For help or more information call 98403-24551/99410-12958 or visit www.saveindianfamily.org or www.savefamily.org



Wednesday, September 02, 2009

சும்மா தமாசு!



செப்டம்பர் 03,2009

ஆமதாபாத்:போலீஸ் அதிகாரிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுவது வழக்கம் தான். ஆனால், போலீஸ் அதிகாரியின் அச்சுறுத்தலில் இருந்து அவர் மனைவியைக் காக்க, போலீஸ் பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ள சம்பவம், குஜராத்தில் நடந்துள்ளது.குஜராத் மாநில டி.ஐ.ஜி., கமல் குமார் ஓஜா; இவரது மனைவி அமிதா. "அடிக்கடி வரதட்சணை பணம் கேட்டு கணவர் என்னை அடித்து துன்புறுத்துகிறார்'என்று போலீஸ் நிலையத்தில் அமிதா புகார் அளித்தார்.

மேலும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், முதலில் வழக்கு பதிவு செய்ய மறுத்துள்ளனர். (ராமசாமி அல்லது குப்புசாமி மனைவி புகார் கொடுத்தால் கண்ணை மூடிக்கொண்டு பொய் 498A கேசு பதிவு செய்து கூண்டோடு கைது செய்துவிடுவார்கள்) பின்னர் இந்த விவகாரம், உயர் அதிகாரிகள் காதுக்கு போக, அமிதா புகாரை பரிசீலித்து, அவருக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டனர். இதனால், கடுப்பான கமல், வீட்டில் இருந்து வெளியேறி, போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். "என் மனைவி அடிக்கடி இரவு விருந்துக்கு செல்பவள்; "பார்ட்டி கல்ச்சர்க்கு' அடிமையாகிவிட்டதால் இப்படி என் மீது புகார் சொல்கிறாள் என்று குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், தனக்கு செலவுக்கு கூட கமல் பணம் தருவதில்லை என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் அமிதா. இதை தொடர்ந்து, மனைவிக்கு 10 ஆயிரமும், மகன் மற்றும் மகளுக்கு தலா ஐந்தாயிரமும் மாதம் தோறும் வழங்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.தீர்ப்பை எதிர்த்து குஜராத் கோர்ட்டை அணுகினார் கமல் குமார் ஓஜா. தன் மனைவி உயர் பதவியில் இருக்கிறார்; ஆண்டுக்கு இரண்டு லட்சத்து 70 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்' என்று பதில் மனுவில் கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி தேவானி, கீழ் நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை விதித்தார். மேலும், பதில் மனு தாக்கல் செய்யுமாறு அமிதாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.



Monday, August 31, 2009

கவலை மட்டும் தான் படமுடியுமோ?

மீண்டும் ஒரு முறை தலைமை நீதிபதி 498A விற்கு எதிராகவும் தவறhக தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளுக்கு எதிராகவும் கருத்துத் தெரிவித்துள்ளார். இதைப்படித்த பிறகு நீதித்துறையின் நடவடிக்கையைப் பார்த்து சிரிப்பதா அல்லது வருத்தப்படுவதா?

கட்டுக்குள் அடங்காத அநீதிகளைப் பார்த்து தலைமை நீதிபதி கவலைப்படுவது இது முதல் முறையல்ல.

தலைமை நீதிபதி இதற்கு முன்னர் வெளியிட்ட கவலையான கருத்துக்கள்:

1. USA, August - 2008
"Indian Courts are Helpless to Protect 498A Victims"

2. India, February - 2009
"CJI Balakrishnan admits to misuse of dowry laws"

கவலை மட்டும் தான் படமுடியுமோ?

அப்படியென்றhல் இந்தியாவில் அப்பாவிகளின் கதி???


3. India, September - 2009
CJI points to judges’ ignorance - India, September - 2009

Ranchi, Aug. 30: Chief Justice of India K.G. Balakrishnan today took a dig at high court as well as district court judges for delivering wrong verdicts because of their ignorance of criminal justice laws.

Balakrishnan warned that several people wanted to delay the conclusion of criminal cases. “(But) Judges are supposed to prevent the abuse of law by those who want to delay the delivery of judgment,” he added, alluding to the judiciary’s concern at the high number of pending cases.

The Chief Justice was delivering a valedictory address at the conclusion of the first east zone regional judicial conference aimed at equipping senior judicial officers, drawn from seven states — Jharkhand, Bengal, Orissa, Chhattisgarh, Assam, Sikkim and Bihar — to deliver speedy and quality justice.

The three-day programme was organised by National Judicial Academy (NJA), Bhopal, in association with Jharkhand High Court and State Judicial Academy.

Jharkhand High Court Chief Justice Gyan Sudha Misra, Patna High Court Chief Justice P.K. Mishra, State Judicial Academy in-charge Justice M.Y. Eqbal, NJA director G. Mohan Gopal were present among others.

Balakrishnan pointed out that Section 498 (A) (anti-dowry law) under CrPC was one of the most abused laws.

“Judges are simply issuing summons and even warrants without properly verifying who are the accused. I have come across such cases in which the accused, sitting in Australia and other countries, are made accused when the case is lodged for the alleged offence of dowry,” he added.

Balakrishnan added that the criminal procedure code was amended for the police to follow certain procedures before arrests. “We have come across cases in which even high court judges are ignorant of the legal value of statements recorded before the police under Section 161 of the Evidence Act for delivering judgments,” he said. Calling upon lower court judges to be socially sensitive, he asked them to have control over trial proceedings in order to deliver judgments easily. He also asked them to examine eyewitnesses first before examining other witnesses produced by the defence.

“Trial and defence lawyers should not terrorise witnesses. A judge should be alert and caring” he maintained.

Misra said the deteriorating law and order situation was a heavy burden on the criminal justice system.

“It was worrying that the state functionaries were not invoking the provisions of the National Security Act to keep hardened criminals in jail,” she added.

Stressing on the need for quality justice, Misra said she was receiving complaints that the fast-track court has turned into a “farce track court”. Judicial officers, she said, had to wipe out fear that fast-track courts would only convict a person.

“They have to strike a balance between expectation of the victims’ of crime and the accused,” she maintained.

Former Supreme Court judge S.B. Sinha pointed out that 70 per cent of all the pending criminal cases were petty offences. “Sociological studies suggest that it is the poor who suffer the most because of delay in the delivery of judgments,” he added.




Monday, August 17, 2009

மிக உன்னதமான உதவி

ஆகஸ்ட் 15, 2009 அன்று சென்னையில் இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் அப்பாவி குடும்பங்களை அழிக்கும் கொடிய சட்டங்களைப்பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விநியோகித்த விளக்கப் பிரசுரத்தின் நகல். டவுன் லோடு செய்து உங்களுக்குத் தெரிந்த இந்தியர்களுக்கு அனுப்புங்கள். இது நீங்கள் உங்களுடைய இந்திய சகோதர சகோதரிகளுக்கு செய்யக்கூடிய மிக உன்னதமான உதவி. இது பணமோ, உடலுழைப்போ இல்லாமல் உங்களால் செய்யக்கூடிய மிக மிக உன்னதமான உதவி. பல அப்பாவி குடும்பங்களின் உயிரையும், அதைவிட மேலான மானத்தையும் காக்கக்கூடிய உதவி.



செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. ( குறள் எண் : 101 )

ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.


காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. ( குறள் எண் : 102 )

உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.


வாழ்க "இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கத்" தலைவர்கள் !


“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.