இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, May 28, 2012

ஃபேஸ் புக்கை கலக்கும் இந்திய காதல் கதைகள்

ஃபேஸ் புக் எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ தெரியவில்லை. இப்போது அதை பயன்படுத்தி இளம் பெண்கள் ஆண்களை ஏமாற்றுவதும், ஆண்கள் இளம் பெண்களை ஏமாற்றுவதும், திருமணமான பெண்கள் கள்ளக் காதலனைத் தேடி குழந்தைகளையும், கணவனையும் விட்டு ஓடுவதும்தான் நடந்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற செயல்களுக்கு சட்டங்கள்தான் முன்பு ஒருதலைபட்சமாக உதவி செய்து கொண்டிருந்தது. இப்போது ஃபேஸ் புக் இதற்கு நல்ல தளமாக பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் வளர்ச்சிக்கு இணையாக கள்ளக்காதலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற குடும்பங்களில் பிறக்கும் அப்பாவிக் குழந்தைகள்தான் இந்த வளர்ச்சியில் பாதிக்கப்படுகிறார்கள்.

சில தினங்களுக்கு முன் செய்தித்தாளில் வந்த செய்தியில் இளம் பெண்கள் ஃபேஸ் புக்கில் அறிமுகமான நபர் கூப்பிட்ட போதெல்லாம் பல ஊர்களுக்கும் சென்று வந்தார்களாம். பிறகு திடீரென்று தனது கற்பு பற்றி நினைவு வந்து காவல் நிலையத்தில் புகார் செய்தார்களாம் என்று செய்தி வந்திருந்தது. அந்த வரிசையில் இப்போது ஒரு பெண் M.L.A. ஃபேஸ் புக்கில் புரட்சி செய்திருக்கிறார்.


வேலூர் : பேஸ் புக் மூலம் ஏமாந்தது குறித்து, பாதிக்கப்பட்ட பெண்கள், மேலும் பல தகவல்களை தெரிவித்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த கஜித்ரா, "பேஸ்புக்' மூலம், வேலூரைச் சேர்ந்த ஆனந்த்பாபு என்பவருடன், உல்லாசமாக இருந்து, கற்பை இழந்தார். பின், வேலூர் கூடுதல் எஸ்.பி., முருகேசனிடம் புகார் செய்தார். நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், பேஸ் புக் மூலம் கற்பை இழந்த, மேலும் சில பெண்கள், புகார் கொடுக்க வேலூர் வந்திருந்தனர்.


அவர்கள் கூறியதாவது: காயத்ரி, கஜித்ராவை ஏமாற்றிய சதீஷ் மற்றும் ஆனந்த் பாபு, வேறு சில பெண்களையும், அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளனர். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு நாள், கிழமை என முறை வைத்து, அழைத்து வந்துள்ளனர். இதற்கு ஏற்றவாறு பேஸ் புக்கில் தகவல் அனுப்புவர். ஒரு பெண்ணை அழைத்து வருவது, மற்ற பெண்ணுக்கு தெரியாது. இதற்கு ஏற்றபடி, ஊர், லாட்ஜ்களை மாற்றி, மாற்றி தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர். கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் உல்லாசமாக இருந்ததால், இவர்களுக்கு உல்லாசம் மட்டுமே குறிக்கோள் என்ற சந்தேகம், கஜித்ராவுக்கு வந்தது.

இதை காயத்ரி தேவியிடம் சொன்ன போது, அவர் நம்பவில்லை. இதனால், ஆனந்த்பாபுவின் தொடர்பை துண்டித்தபோது தான், வீடியோ பிரச்னை வெடித்து, வேறு வழியின்றி அவர் சொல்லும்படி கேட்க நேர்ந்துள்ளது.ஆனந்த்பாபுவின் நண்பர் திலீப். இவர், மரைன் இன்ஜினியரிங் படித்து விட்டு, சிங்கப்பூரில் உள்ள கப்பல் கம்பெனியில் பணிபுரிகிறார். ஆறு மாதம் விடுமுறையில், சொந்த ஊரான ராணிப்பேட்டைக்கு வந்தார்.

ஆனந்த்பாபு, பேஸ் புக் விஷயத்தை சொல்லவே, அவரும் சில பெண்களுக்கு தகவல் அனுப்பி, அவர்களை வேலூர், திருவண்ணாமலை, சேலம் என அழைத்துச் சென்று, உல்லாசமாக இருந்துள்ளார்.

பின் திலீப், நண்பர்கள் லூயிஸ், ஆனந்த்ராஜ் ஆகியோருக்கும், பேஸ் புக் மூலம் தகவல் தெரிய வர, அவர்களும் இதே முறையை பின்பற்றி, பல பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதில், இவர்கள் உல்லாசமாக இருக்க ஆன செலவுகள் அனைத்தும், அந்தந்த பெண்களே ஏற்றுக் கொண்டுள்ளனர்.

கஜித்ரா போல, 16 பெண்கள் சீரழிக்கப்பட்டதாக தெரிகிறது.பேஸ் புக் மோசடியில் சிக்கிய சதீஷ், ஆனந்த்பாபு ஆகியோர், சில மாதங்களுக்கு முன், ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில், நட்சத்திர ஓட்டலில் உல்லாசமாக இருந்தபோது, பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி கைதாகி, ஜாமினில் வந்துள்ளனர். தற்போது, சதீஷ், ஆனந்த்பாபு, திலீப், நித்தியானந்தம் கைது செய்யப்பட்டுள்ளனர். லூயிஸ், சிங்கப்பூருக்கும், ஆனந்த்ராஜ், பெங்களூருக்கும், சில பெண்களை அழைத்து கொண்டு, உல்லாசமாக இருக்கச் சென்றுள்ளனர். உல்லாசமாக இருக்கும்போது, அதை வீடியோவில் படம் எடுத்தவர் லூயிஸ். இவர் வேலூரைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவரையும் உல்லாசத்துக்கு அழைத்துச் சென்று, ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

======

திங்கள்கிழமை, மே 28 OneIndia Tamil


சில்சார்: அஸ்ஸாமைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ டாக்டர் ருமி நாத் என்பவர் பேஸ்புக் மூலம் தனக்குக் கிடைத்த காதலரை மணப்பதற்காக தனது கணவரையும் குழந்தையையும் பிரிந்து விட்டு காதலனுடன் ஓடிவிட்டார். மேலும் காதலர் சார்ந்த இஸ்லாம் மதத்திற்கும் அவர் மாறியுள்ளார். அவருக்கும், அவரது காதலருக்கும் திருமணமும் நடந்து விட்டது.

அஸ்ஸாமில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போர்க்கோலா தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏதான் ருமி. இவரது கணவர் பெயர் ராகேஷ் குமார் சிங். இவர்களுக்கு 2 வயதில் மகள் உள்ளாள்.

இந்த நிலையில், பேஸ்புக் மூலம் ஜாக்கி ஜாகிர் என்பவர் அறிமுகமானார். இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக பழகி வந்தனர். இந்த நிலையில் தனது கணவரையும் குழந்தையையும் விட்டுவிட்டு வீட்டை விட்டு ஓடிய ருமி, ஜாகிரையே மணந்து கொண்டு விட்டார்.

முன்னதாக இதுகுறித்து ராகேஷ் குமார் சிங் போலீஸில் புகார் கொடுத்திருந்தார். அதில், மருத்துவப் பரிசோதனைக்காக ருமி சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் போயிருந்தபோது அவரை கடத்தி விட்டதாக கூறியிருந்தார். ஆனால் விசாரணையில் இவரது மனைவி, பேஸ்புக் காதலரை மணந்து கொண்ட செய்தி தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதக் கலவரம் வெடித்து விடாமல் தடுப்பதற்காக சில்சார் பகுதியில் சிஆர்பிஎப் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

32 வயதான ருமி, தனது காதலருடன் வங்கதேசத்துக்குப் போய் விட்டார். ஒரு மாதத்திற்கு முன்பே ஜாகிரை அவர் மணந்து விட்டார். அவரது திருமண புகைப்படமும் கூட ஏற்கனவே உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. ஆனால் அதை அப்போது ருமி மறுத்திருந்தார். ஆனால் தற்போது காதலருடன் தலைமறைவாகி விட்ட நிலையில் தனக்கு காதலருடன் கல்யாணம் ஆகி விட்டதை சில நாட்களுக்கு முன்பு அவர் ஒத்துக் கொண்டார்.

இந்தக் கல்யாணத்தை நடத்தி வைத்தது மாநில அமைச்சர் சித்திக் அகமதுதான் என்றும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து முதல்வர் தருண் கோகாயிடம் முறையிட்டுள்ளார் ராகேஷ் சிங்

தனது இரண்டாவது கல்யாண் குறித்து ருமி கூறுகையில், ஜாகிர்தான் எனது சட்டப்பூர்வமான கணவர். எனக்கும், ராகேஷ் சிங்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விரைவில் நான் விவாகரத்து கோரவுள்ளேன்.

அரசியல் காரணங்களுக்காகத்தான் எனது 2வது கல்யாணத்தை நான் முன்பு மறுத்தேன். சுய விருப்பத்தின் பேரில்தான் நான் மதம் மாறினேன். எனவே இந்து திருமணச் சட்டம் எனக்குப் பொருந்தாது. விரைவில் எனது மகளை நான் எனது பொறுப்பில் சட்டப்படி எடுப்பேன் என்றார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ராஜ்யசபா தேர்தலின்போது பாஜக சார்பில் எம்.எல்.ஏவாக இருந்தவர் ருமி. அப்போது அவர் காங்கிரஸ் வேட்பாளருக்கு மாற்றி வாக்களித்தார். இதையடுத்து அவரை பாஜக கட்சியிலிருந்து நீக்கியது. இதையடுத்து அவர் காங்கிரஸில் இணைந்தார் என்பது நினைவிருக்கலாம்.

1 comment:

498ஏ அப்பாவி said...

Thanks to Cable Sankar

http://www.cablesankaronline.com/2012/05/280512.html

ஃபேஸ்புக் கில்மா
கடந்த வாரம் இணையத்தில் பிரபலமான விஷயம் ஃபேஸ்புக் இணையதளத்தினால் பழக்கம் ஏற்பட்டு கற்பை இழந்த பெண்கள் என்பதுதான். சென்னையை சேர்ந்த இரு பெண்களுக்கு வேலூரைச் சேர்ந்த் இரண்டு வாலிபர்களுக்கு பழக்கமாகியிருக்கிறது. அவர்களும் சென்னைக்கு வந்திருக்கின்றனர். வேலுரை சுற்றிக் காட்டுகிறேன் என்று கூட்டிப் போய், ராணிப்பேட்டையில் ரூம் போட்டு குண்டர்கள் கொண்டாடிவிட்டார்கள் என்றும், மீண்டும் ஒரு முறை அவர்கள் கூப்பிட்டு ராணிப்பேட்டைக்கு போயிருக்கிறார்கள் இந்த பெண்கள். மூன்றாவது முறையாய் கூப்பிட்ட போது போக மறுத்த அந்த பெண்கள். அவர்கள் தங்களை திருமணம் செய்வதாய் சொல்லி ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார்கள். என்னவோ வாயில கைய வச்சா கடிக்க தெரியாது என்பது போல இருக்கிறது அப்பெண்களின் புகார். ராணிப்பேட்டையில் ரூம் போடும் போதே எல்லாம் திருமணத்திற்கு பிறகுதான் என்று சொல்லி தட்டிக் கழித்திருந்தால் எதுவுமே நடந்திருக்காது. இரண்டு முறை அவர்களுடன் ராணிப்பேட்டையில் ரூம் எடுத்த போதே எதாவது கரக்கலாம் என்ற எண்ணத்திலோ, அல்லது வசதியான ஆட்களாய் இருந்தால் செட்டிலாகிவிடாலாம் என்ற ஐடியாவில் தான் படுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. கேட்டால் திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்கு கொடுத்து படுத்துவிட்டார்கள் என்று கம்ப்ளெயிண்ட் செய்கிறார்கள். சாதாரணமாய் இந்த கேஸ் நிற்காது என்பதால் உறவின் போது எடுத்த போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுகிறார்கள் என்று கேஸ் போடுகிறார்கள். ரூம் போடுவாங்களாம், படுப்பாங்களாம், போட்டோவுக்கு போஸெல்லாம் கொடுப்பாங்களாம். ஆனா ஏமாத்திட்டாங்கன்னு கேஸ் கொடுப்பாங்களாம். இதுக்கு போலீஸும் சேர்ந்து ஆக்‌ஷன் எடுக்கிறாய்ங்க. சட்டம் ஒழுங்கு

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.