இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, August 31, 2010

"அப்பாவிப் பெண்ணுக்கு" ஒரு அழகிய முகமூடி

ஆட்டுக்குத் தாடி இருப்பது போலத்தான் இந்தக் காலத்தில் மனைவிக்குக் கணவன். கள்ளக் காதலுக்குத் தடையாக இருந்தால் தாடியை மழிப்பதுபோல் கணவனின் உயிரை பறித்துவிடுகிறார்கள். இருந்தாலும் சட்டங்களும் சமுதாயமும் பெண் என்றால் “அப்பாவி” என்று வரையரை செய்து ஒரு படம் வரைந்து வைத்திருக்கிறார்கள்!

“அப்பாவி” என்ற இந்தப் படத்தைத்தான் முகமூடிபோல அணிந்துகொண்டு பல பெண்கள் நாட்டில் தங்களது இச்சைகளை பூர்த்தி செய்துகொள்கிறார்கள். பொய் வரதட்சணை வழக்கு முதல் கள்ளக்காதல் கொலை வரை எல்லாவற்றிற்கும் இந்த முகமூடிதான் மிகவும் வசதியாக இருக்கிறது. இந்த முகமூடி கொலைகாரர்களுக்கு அரசாங்கம் கொடுத்திருக்கும் ஆயுதங்கள்தான் IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act போன்ற ஒருதலைபட்சமான பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்.

இதுபோன்ற முகமூடி அணிந்து நடைபெற்ற ஒரு செயல்தான் கீழுள்ள செய்தி.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொலை: மனைவி கைது

ஆகஸ்ட் 30,2010 தினமலர்

ஆண்டிபட்டி : தேனி மாவட்டம் கொண்டமநாயக்கன்பட்டியில் கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலன் கோர்ட்டில் சரணடைந்துள்ளார்.

ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி தவசி(40). சில நாட்களுக்கு முன் வீட்டு திண்ணையில், கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். டி.எஸ்.பி., முகமதுஅன்வர்ஷா, இன்ஸ்பெக்டர்கள் இமானுவேல் ராஜசேகர், முத்துபிரேம்சந்த், எஸ்.ஐ.,ரவீந்திரன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விசாரித்தனர். இதற்கிடையில், கொலையில் தொடர்புடையதாக கூறி மினிபஸ் உரிமையாளர் சங்கிலி, பெரியகுளம் ஜே.எம்.கோர்ட்டில் சரணடைந்தார். இந்த பின்னணியில் போலீஸ் விசாரித்தபோது, கொலை செய்யப்பட்ட தவசி மனைவி சகுந்தலாவுக்கும், சங்கிலிக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. தவசிக்கு இந்த விபரம் தெரிய வரவே, கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய சகுந்தலா திட்டம் வகுத்துள்ளார்.

சம்பவத்தன்று இரவில் வேலை முடித்து வீட்டுக்கு திரும்பிய தவசியை, சங்கிலி அவரது கூட்டாளிகள் முத்துப்பாண்டி, பிச்சைமணி ஆகியோர் "இது தொடர்பாக பேசிக்கொள்ளலாம்' என்று ஊருக்கு ஒதுக்கு புறமான பகுதிக்கு அழைத்து சென்றனர். அனைவரும் மது குடித்தனர். பின் வேட்டியால் தவசி கழுத்தை இறுக்கினர். தவசி இறந்ததை உறுதி செய்த பின், இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து பிடித்துக்கொண்டு தவசி வீட்டிற்கு வந்தனர். வராண்டாவில் அனைவரும் கைகால் கழுவிய பின், தவசி உடலையும் தண்ணீரால் துடைத்து திண்ணையில் கிடத்தி வைத்தனர். இதற்கு சகுந்தலா உடந்தையாக இருந்துள்ளார். மறுநாள் அதிகாலையில், எதுவும் தெரியாதது போல சகுந்தலாவும், கணவன் படுக்கையில் இறந்து கிடந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் போலீசார் விசாரணையில் தவசி கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். ஆனால் சகுந்தலா சமாளித்து வந்த நிலையில், தற்போது கொலையாளிகளுடன் சிக்கிக் கொண்டுள்ளார். சகுந்தலா, சங்கிலி கூட்டாளிகள் முத்துப்பாண்டி, பிச்சைமணி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
/br>

Monday, August 30, 2010

குடும்ப வன்முறை செய்யத்தெரியாத பெண்கள்!

வெளிநாட்டுக்காரர்கள் கொடுக்கும் கூலிக்கு விசுவாசமுடன் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் என்ன சொல்கிறதென்றால் இந்தியாவில் ஆண்தான் எப்போதும் குடும்ப வன்முறையில் ஈடுபடுவதாகவும், பெண் எப்போதும் பாதிக்கப்படுவதாகவும் கூறுகிறது. இதை இந்தக் காலத்து மருமகள்கள் நன்றாகப் பயன்படுத்தி கணவனின் குடும்பத்தை பொய் வழக்குகள் மூலம் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Key Features of Protection of Women from Domestic Violence Act 2005


  • Definition of DV based on UN Framework for Model Legislation on Domestic Violence & UN Declaration on Elimination of Violence Against Women (GA Res. 48/104 of 1993)
  • Unambiguous recognition of the woman’s right to live free from violence.
  • Provides immediate relief to victims in cases of emergency
  • The right to reside in shared household – recognizes inequality within the home
  • Ensures effective access to justice – introduces new authorities & mechanisms (PO as the interface between the woman and the court)

Coverage – Who can Complain : "Aggrieved Person" [Section 2(a)]

  • Any woman who is or has been in a domestic relationship with the respondent (sisters, widows, mothers, daughters, women in relationships of cohabitation, victims of bigamous marriages, single women etc.) and Who has been subjected to acts of domestic violence

Against Whom Can A Complaint be Filed :“Respondent” [Section 2 (q)]

  • Any adult male member who has been in a domestic relationship with the woman who files a complaint of domestic violence.
  • Relatives of the husband or the male partner.
  • Includes both male and female relatives of husband or the male partner.

குடும்ப வன்முறையில் பெண்கள் ஈடுபடுவதே கிடையாதா? பெண்களால் ஆண்கள் பாதிக்கப்படுவதில்லையா? இந்தக் கேள்விகளுக்குப் பதில்தான் கீழுள்ள செய்தி. பல நாட்களாக நடந்துகொண்டிருக்கும் அட்டூழியங்களை இப்போதுதான் செய்தித்தாள்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றன. பாரபட்சமான சட்டங்கள் ஏன், எதற்காக இயற்றப்பட்டுள்ளன என்று எத்தனைபேர் யோசிக்கிறார்கள்?

மாமனாரை தாக்கிய மருமகள் கைது
ஆகஸ்ட் 31,2010 தினமலர்

கோவை : குடும்பத்தகராறில் மாமனாரை இரும்பு கம்பியால் தாக்கிய மருமகள் கைது செய்யப்பட்டார்.

பீளமேடு,உடையாம்பாளையம் நேதாஜி மெயின்ரோட்டில் வசிப்பவர் நாகராஜ்(73). இவருக்கும், மகன்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக குடும்பத்தகராறு உள்ளது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த இவரது மருமகள் உமா மகேஸ்வரி(40), இரும்புக் கம்பியால் மாமனாரின் தலையை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். பீளமேடு போலீசார் விசாரித்து உமா மகேஸ்வரியை கைது செய்தனர்.



Saturday, August 28, 2010

பெண்ணால் இ(எ)துவும் செய்யமுடியும்

ஒரு பெண் நினைத்தால் எதுவேண்டுமானாலும் எப்படிவேண்டுமானாலும் செய்யமுடியும் என்பதற்கு கீழுள்ள செய்தி நல்ல உதாரணம்.

ஆண் வேடமிட்டு கடையில் வேலை செய்து நான்கரை லட்ச ரூபாய் லபக்கிய பெண் கைது
தினமலர் ஆகஸ்ட் 28,2010

கொல்லம் : ஆண் வேடமிட்டு டைல்ஸ் கடையில் வேலைக்குச் சேர்ந்து கடை உரிமையாளரை நம்ப வைத்து நான்கரை லட்ச ரூபாய் லபக்கிய பெண் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் கொல்லம் கொட்டியம் பகுதியில், "ஆப்ஸ் டைல்ஸ்' என்ற கடையை நடத்தி வருபவர் சியாத். இவரது கடையில் பணியாற்ற ஆட்கள் தேவை என நாளிதழில் விளம்பரம் கொடுத்தார். அவ்விளம்பரத்தை பார்த்து விட்டு கொல்லம் அடுத்த அம்மச்சி வீடு சந்திப்பு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த்(26) என்பவர் விண்ணப்பித்தார்.

நேர்முகத் தேர்வுக்கு தனது பெற்றோருடன் சென்ற அவரை கடை உரிமையாளருக்கு பிடித்துப் போக, அவருக்கு அங்கு வேலை கிடைத்தது. கடுமையாக உழைத்து உரிமையாளரின் நன்மதிப்பை பெற்ற அவர், கடையில் கொடுக்கல், வாங்கலில் இருந்து பல முக்கிய பணிகளையும் செய்து வந்தார்.இந்நிலையில், சில தினங்களுக்கு முன், கடையில் இருந்து நான்கரை லட்ச ரூபாயுடன் ஸ்ரீகாந்த் மாயமாகி விட்டார். அவரை தேடி கடை உரிமையாளர் அவரது வீட்டுக்குச் சென்றார். அங்கு, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது பெற்றோருக்கு மகன்கள் இல்லை என்பதும் மூன்று மகள்கள் தான் என்பதும் முதல் அதிர்ச்சியாக இருந்தது.மேலும், அவரது கடையில் பணியாற்றி வந்த ஸ்ரீகாந்த் ஆண் அல்ல என்பதும், அவ்வீட்டில் ராணி என்ற பெயரில் வளர்ந்து வந்த பெண் என்பதும் தெரிந்தது. ஆண் வேடமிட்டு தனது கடையில் பணியாற்றி பண மோசடி செய்ததும் தெரிந்தது.அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். அப்புகாரின்படிபோலீசார் விசாரித்து, ராணியை கைது செய்தனர். அவரிடம் மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

================


இப்படித்தான் பல பெண்கள் அப்பாவி மருமகள் போல வேஷமிட்டு பொய் வரதட்சணை வழக்குகளைப் பதிவு செய்து பல அப்பாவிக் குடும்பங்களை நாசமாக்குகிறார்கள். அதனால் பெண்கள் பலகீனமானவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்று சொல்வதெல்லாம் வெறும் பணம் சம்பாதிப்பதற்கான வெற்றுப் பிரச்சாரங்கள்தான் என்று தெரிந்துகொள்ளுங்கள். பெண் நினைத்தால் எதையும், எப்படி வேண்டுமானாலும் செய்து தங்கள் காரியத்தை நிறைவேற்றிக்கொள்வார்கள். குறிப்பாக வரதட்சணை மற்றும் பெண்கள் தொடர்பான சட்டங்களை எப்படி தங்களுக்கேற்றவாறு கையாளவேண்டும் என்பதில் பல படித்த மேல்தட்டுவர்க்கப்பெண்கள் ரொம்ப கைதேர்ந்தவர்கள்.



Friday, August 27, 2010

பணத்திற்காக கணவனைக் கொலை செய்ய முயன்ற மனைவி

பெண்களின் நிலையை இந்த சமுதாயம் எப்படி மாற்றிவைத்திருக்கிறது! திருமணம் செய்துவிட்டால் கணவன்தான் மனைவிக்கு எல்லாமே செய்யவேண்டும். விவாகரத்து செய்து பிரிந்தாலும் கணவன்தான் பணம் கொடுக்கவேண்டும். இப்படித்தான் சட்டங்கள் சொல்கிறது.

பெண்களை இன்னும் எத்தனை ஆண்டுகள் இதுபோல் கணவனின் கையை எதிர்பார்த்து நிற்கும் பிச்சைக்காரிபோல இந்த சமுதாயம் நடத்துமோ. நன்கு படித்து பணியில் இருக்கும் பெண்கள் கூட கணவன் ஜீவனாம்சம் தரவேண்டும் என்று பிச்சைக்காரி போல் நீதிமன்றங்களில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். கணவனைப் பிடிக்கவில்லையென்றால் உதறித்தள்ளிவிட்டு தன் சொந்தக்காலில் நின்று தன் வாழ்க்கையை நடத்தும் அளவிற்கு இந்திய திருமணச் சட்டங்கள் பெண்களை முன்னேறவிடுவதில்லை.

இந்த மரபிலேயே ஊறி வளர்ந்துவிட்ட ஒரு பெண் கணவன் பணம் கொடுக்கவில்லை என்பதற்காக கொலை செய்யவும் துணிந்துவிட்டார். இந்தியத் திருமணச் சட்டங்கள் மனைவியை எப்போதும் கணவனின் கையை எதிர்பார்த்து நிற்கும் பிச்சைக்காரிகளாகவே மாற்றிவிட்டது. அதன் உச்சகட்டம்தான் கீழுள்ள செய்தி.

செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி

ஆகஸ்ட் 27,2010 தினமலர்

கோவை: பணம் தராத கணவரை சரமாரியாக அடித்து, கம்பியால் வயிற்றை கிழித்த மனைவி மீது, போலீசில் புகார் தரப்பட்டுள்ளது. கோவை ராமு வீதியைச் சேர்ந்தவர் சதீஷ்(35); நகைப்பட்டறை தொழிலாளி. இரண்டு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவரது மனைவி லதா(26). திருமணமானதில் இருந்தே இருவருக்கும் இடையே தகராறு நடந்தது. கணவரிடம் இருந்து பிரிந்த லதா, போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து, தினமும் மனைவிக்கு 60 ரூபாய் கொடுத்து விட வேண்டும் என உத்தரவிட்டனர்.

நாள் தவறாமல் மனைவிக்கு பணம் கொடுத்து வந்த நிலையில், சமீபத்தில் விபத்தில் சிக்கினார் சதீஷ். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், சில நாட்களுக்கு முன் வீடு திரும்பி ஓய்வெடுத்து வருகிறார். வேலைக்கு செல்ல இயலாத நிலையில், மனைவிக்கு பணம் தர முடியவில்லை. ஆத்திரமடைந்த மனைவி லதா, கோபத்தில் கணவரை சரமாரியாக தாக்கி, இரும்பு கம்பியால் வயிற்றில் கிழித்தார். இதில் காயமடைந்தவர் மீண்டும் மருத்துவனையில் சிகிச்சை பெற்றார். மனைவியின் சித்ரவதை பற்றி போலீஸ் கமிஷனரிடம் சதீஷ் புகார் கொடுத்துள்ளார்.



Wednesday, August 18, 2010

பெற்ற மகளுக்கு சக்களத்தியான தாய்!


வீரவநல்லூர்: வீரவநல்லூர் அருகே "கள்ளக்காதல்' பிரச்னையால் மாமியாருடன் விஷம் குடித்த மருமகன் இறந்தார். மனமுடைந்த மாமியார் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார். திருக்குறுங்குடி அருகேயுள்ள ராஜாபுதூரை சேர்ந்தவர் கிட்டு. இவர் மனைவி தமிழரசி(45). இவர்களின் மகள் செல்விக்கும், வள்ளியூர் அருகேயுள்ள சித்தூரை சேர்ந்த சமுத்திரம் மகன் முருகனுக்கும்(25) கடந்த 9 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. முருகன் செங்கல் சூளையில் வேலை பார்த்தார். திருமணத்திற்கு பின் முருகன் மாமனார் ஊரில் குடியேறினார். மாமனார் வீட்டுக்கு அருகே மற்றொரு வீட்டில் வசித்துவந்தார். இந்நிலையில் முருகனுக்கும், மாமியார் தமிழரசிக்கும் இடையே "கள்ளக்காதல்' ஏற்பட்டது. வீரவநல்லூர் அருகேயுள்ள வல்லத்துநம்பிக்குளத்தில் முருகனின் சித்தப்பா சுடலைமுத்து வசித்துவருகிறார். ஊரில் அம்மன் கோயில் கொடை விழாவிற்கு வரும்படி சுடலைமுத்து முருகனுக்கு அழைப்பு விடுத்தார். முருகன் தன் மாமியார் தமிழரசியுடன் கொடை விழாவிற்கு சென்றார். இதை உறவினர்கள் கிண்டலடித்து பேசியுள்ளனர். நேற்று ஊரில் உள்ள குளக்கரைக்கு மாமியாருடன் சென்ற முருகன் விஷம் குடித்தார். அதே இடத்தில் அவர் இறந்தார். முருகன் குடித்துவிட்டு கீழே போட்ட பாட்டிலில் இருந்த மீதி விஷத்தை குடித்த தமிழரசி உயிருக்கு போராடினார். அவர் அருகே இருந்த கிணற்றில் குதித்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர். தமிழரசி மேல் சிகிச்சைக்கு பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். முருகன் உடல் அம்பாசமுத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட்மார்ட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து வீரவநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் ரோஸ்லின்சாவியோ விசாரணை நடத்தினார். கள்ளக்காதல் பிரச்னையால் மனமுடைந்து முருகன் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் வீரவநல்லூர் பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

================

இதுபோன்ற கலியுக கற்புக்கரசிகளை பாதுகாக்கத்தான் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் அடுக்கடுக்காக அரசாங்கத்தால் இயற்றப்படுகிறது. கிராமம் முதல் நகரம் வரை இந்த சட்டங்கள்தான் கள்ளக்காதலை மறைப்பதற்காக நாகரீகமாக வரதட்சணைக்கொடுமை என்ற பெயரில் பல பெண்களால் பயன்படுத்தப்படுகிறது.

இந்த செய்தியோடு சேர்த்து சூடாக இந்திய உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கும் தீர்ப்பையும் படித்துவிடுங்கள்.

IN THE SUPREME COURT OF INDIA
CRIMINAL APPELLATE JURISDICTION
CRIMINAL APPEAL NO. 913 of 2010
[Arising out of SLP (Crl.) No. 4010 of 2008]

S. Khushboo ... Appellant
Versus
Kanniammal & Anr. ... Respondents

21. While it is true that the mainstream view in our society is that sexual contact should take place only between marital partners, there is no statutory offence that takes place when adults willingly engage in sexual relations outside the marital setting, with the exception of `adultery' as defined under Section 497 IPC. At this juncture, we may refer to the decision given by this Court in Lata Singh Vs. State of U.P. & Anr., AIR 2006 SC 2522, wherein it was observed that a live-in relationship between two consenting adults of heterogenic sex does not amount to any offence (with the obvious exception of `adultery'), even though it may be perceived as immoral. A major girl is free to marry anyone she likes or "live with anyone she likes". (பெண் விரும்பினால் யாருடனும் சேர்ந்து வாழலாம்)




Sunday, August 15, 2010

“ஆனந்த” சுதந்திரம் அடைந்துவிட்ட கள்ளக்காதல்!

கள்ளக்காதலுக்காக ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டதன் 64ம் ஆண்டு அடையாளம்? கள்ளக்காதல் சட்டங்களை திருத்த இன்னும் மனம் வரவில்லையே ஏன்?


IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

அன்று சுதந்திரத்தைப் பெறுவதற்காக உயிரை விட்டார்கள் தியாகிகள். கிடைத்த சுதந்திரத்தை வைத்து மனைவியின் கள்ளக்காதலுக்காக இன்று அப்பாவிக் கணவர்கள் கொல்லப்படுகிறார்கள். தனது மனைவியின் கள்ளக்காதலுக்காக உயிரைவிடும் இவர்களும் தியாகிகள்தான். கடைசியில் எல்லோரும் சொல்வதென்னவோ பெண்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை!


ஆகஸ்ட் 15,2010 தினமலர்

கீழக்கரை : ஒட்டன்சத்திரத்தில் கணவரை கொலை செய்து ஏழு மாதங்களாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த மனைவியையும், கள்ளக்காதலனையும் கீழக்கரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை தாலுகா குயவன்தரிசல் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்(37).இவரது மனைவி முத்து லட்சுமி(35).இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.அதே ஊரை சேர்ந்த மாரி ராமன் (23)என்பவருக்கும் முத்துலட்சுமிக் கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில் மாரிராமன் ஒட்டன்சத்திரத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார். கள்ளக் காதலனை தேடி முத்துலட்சுமியும் குழந்தைகளுடன் அங்கு சென்றார். இதையறிந்த செந்தில் கடந்த ஜனவரி 25ல் ஒட்டன்சத்திரம் சென்று மாரிராமனை கண்டித்துள்ளார்.இதை தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் செந்திலை இருவரும் சேர்ந்து அரிவாள் மனையால் கழுத்தை அறுத்து கொலை செய்து தப்பியோடினர். ஒட்டன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இருவரும் கீழக்கரை அருகே ஆமைக்கூட்டம் என்ற பகுதியில் உள்ள தோப்பில் காவலாளிகளாக வேலைக்கு சேர்ந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் நேற்று கீழக்கரை இன்ஸ்பெக்டர் சங்கு,தனிப்பிரிவு தலைமை காவலர் தென்கரை மகாராஜன் மற்றும் போலீசார் இருவரிடம் விசாரணை நடத்தியதில் கொலைக் குற்றவாளிகள் என தெரிய வந்தது. இருவரையும் இன்ஸ்பெக்டர் சங்கு ஒட்டன்சத்திரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.



Thursday, August 12, 2010

கலியுக மருமகளால் வரப்போகும் ஆபத்து!

போலியான பெண்ணியவாதிகள் கூட்டம் எப்போது பார்த்தாலும் பெண்களுக்கு கொடுமை நடக்கிறது, பெண்கள் அடிமையாக இருக்கிறார்கள், பெண்களுக்கு அங்கே அது நடக்கிறது, இது நடக்கிறது என்று கூப்பாடு போட்டு மோடி வித்தைக்காரர்கள் போல கூட்டம் சேர்த்து காசு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அற்பத்தனமான சுயநலத்திற்காக உருவாக்கப்பட்டவைதான் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் என்று சொல்லப்படும் (IPC498A, Domestic Violence Act) தவறான ஒருதலைபட்சமான சட்டங்கள். இந்த சட்டங்களால் பெண்களுக்கு நன்மை ஏற்பட்டதைவிட பல பெண்களின் வாழ்க்கை சீரழிந்து பல குடும்பங்கள் அழிந்ததுதான் மிச்சம். ஒரு கலியுக மருமகளின் பொய்யான வரதட்சணைப் புகாரால் ஒரு குடும்பத்திலுள்ள குறைந்தது 4 - 6 பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது.

இதுபோன்ற போலியான பெண்ணியவாதிகளின் முகத்திரையைக் கிழித்து ஒரு புதுமைப் பெண் கருத்தாழமிக்க ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அதன் ஒரு பகுதி கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. முழுக்கட்டுரையையும் பின்வரும் இணைப்பில் சென்று படியுங்கள்.

சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள்

இன்று பெண்கள் எந்தத் துறையில் இல்லை? ஆட்டோ ஓட்டுநராக, பேருந்து ஓட்டுநராக, மின்சார ரயில் ஓட்டுநராக, தபால் பட்டுவாடா செய்பவராக, பெட்ரோல் பங்குகளில், ரேஷன் கடைகளில் பொருள்களை அளந்துபோடுபவராக… இன்னும் உயர்ந்த நிலையில் சொல்லவேண்டுமானால் விமானம் ஓட்டுபவராக, விண்வெளிப் பயணியாக, விண்வெளி விஞ்ஞானியாக என்று பல துறைகளிலும் பரிமளிக்கிறார்கள் தானே? இதை விடவும் என்ன முன்னேற்றமும் உரிமையும் வேண்டும்? ஒரு சிலர் எல்லாப் பெண்களுக்கும் கிடைத்துவிட்டதா என்றும் கேட்கின்றனர். சரி, இல்லை என்றே வைத்துக்கொள்வோம். எல்லா ஆண்களுக்கும் இந்தச் சம உரிமை கிடைத்திருக்கிறதா? ஏன் எல்லா ஆண்களும் உயர்ந்த இடத்தில் இல்லை? ஏன் ஒரு சிலருக்கு மட்டும் நல்ல உயர்ந்த பதவிகளும், பட்டங்களும் கிடைக்கின்றன? இன்னும் சில ஆண்கள் மூட்டை தூக்கியும், வண்டி இழுத்தும், ரிக்ஷா ஓட்டியும் பிழைக்கின்றனர்? ஏன் இப்படி?? அவர்களுக்காகப் போராட யாருமே இல்லையா? ஆண்கள் முன்னேறவேண்டாமா? அவங்களுக்கும் இதில் எல்லாம் உரிமை இல்லையா?

பெண்களுக்கு இப்போது பணமும் ஆடம்பர வாழ்க்கையும் உல்லாசப் பொழுது போக்குகளும் மட்டுமே முக்கியமாய் இருக்கின்றன. எல்லாப் பெண்களையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டவில்லை. நானும் ஒரு பெண்தான். குடும்பத் தலைவிதான்.


மேலுள்ள கட்டுரையைப் படித்தபிறகு கலியுகப் பெண்கள் ஏன் மோசமான போலியான பெண்ணியவாதிகளால் தவறான பாதையில் இப்படி தவறான சட்டங்கள் மூலமாக வழிநடத்திச் செல்லப்படுகிறார்கள் என்று யோசித்தால் அதற்கான பதிலை பல ஆண்டுகளுக்கு முன்பே நீதி வெண்பா என்ற பழந்தமிழ் நூலில் ஒரு அறிஞர் பாடிச் சென்றிருக்கிறார்.

நீதிவெண்பா

32. ஈயுகத்தில் இல்லந்தோறும் கூற்றுவன்

என்னே கிரேதத் திரேணுகையே கூற்றுவனாம்
தன்னேர் திரேருதத்திற் சானகியே - பின்யுகத்தில்
கூடும் திரௌபதியே கூற்றாம் கலியுகத்தில்
வீடுதொறும் கூற்றுவனா மே.

அந்தப் பாடலில் என்ன சொல்லியிருக்கிறதென்றால் கிரேதாயுகத்தில் ரேணுகை என்ற பெண்ணால் உலகம் அழிந்தது. திரேதாயுகத்தில் சானகி என்ற சீதையால் இராமாயணப்போர் ஏற்பட்டு உலகம் அழிந்தது. அதன்பிறகான காலத்தில் திரௌபதி என்ற பெண்ணால் பாரதப்போர் ஏற்பட்டு உலகம் அழிந்தது.

இந்தக் கலியுகத்தில் வீட்டிற்கு வீடு இருக்கும் ஒரு பெண்ணால் இந்த உலகம் அழியும் என்று அந்த அறிஞர் பாடிவிட்டுச் சென்றிருக்கிறார். அந்தப் பெண் யாருமல்ல பொய்யான பெண்ணுரிமை பேசும் கூட்டத்தால் தவறாக வழிநடத்தப்பட்டு தவறான சட்டங்கள் என்ற ஆயுதங்களை கையில் எடுத்து சிறு குழந்தை முதல் முதியோர் வரை வயது வித்தியாசம் பார்க்காமல் வீட்டிலிருக்கும் அனைவரையும் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கவைக்கும் மருமகள்தான் அந்தப் பெண். புராண காலத்து யுகங்களில் இருந்த பெண்களால் அநீதிக்கு எதிராக போர் ஏற்பட்டது. ஆனால் இந்தக் கலியுகத்தில் ஏற்பட்டிருக்கிற போரில் நீதியை அழிக்க அநீதிகளலெல்லாம் ஒன்று கூடி தவறான சட்டங்கள் என்ற உருவில் வந்திருக்கிறது. இதுதான் வித்தியாசம்.

அதனால் இந்தக் காலத்துப் பெண்களுக்கு நல்வழிகாட்டி அவர்களை பண்புடன் வளர்த்து நல்ல மகளாகவும், நல்ல மருமகளாகவும் மாற்றுவது பெற்றவர்களின் கடமை. இல்லையெனில் நீதிவெண்பாவில் சொன்னது உண்மையாகிவிடும். இப்போதே நாட்டின் நிலைமை அந்தப் பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது என்று அன்றாடம் செய்தித்தாள்களில் வரும் செய்தியிலேயே நீங்கள் உணரமுடியும். அதற்கான சிறு உதாரணம் கீழே தரப்பட்டுள்ளது.


சென்னை, ஜூலை 29:கள்ளக்காதல் காரணமாக மின்வாரிய ஊழியரை ஆட்களை வைத்து கொலை செய்ததாக பெண் போலீஸ் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

மனைவி, கள்ளக்காதலன் உட்பட மூவர் கைது
ஆகஸ்ட் 10,2010 தினமலர்

பூந்தமல்லி: கள்ளத்தொடர்பு விவகாரம் தெரிந்துவிடும் என்று கருதிய மனைவி, தனது கள்ளக்காதலன் மற்றும் அவரது சகோதரரை ஏவி, கணவனை கொலை செய்த சம்பவம் பூந்தமல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உதவி தொகை வழங்க லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது
ஆகஸ்ட் 10,2010 தினமலர்

கள்ளக்காதல் மோகம்: கணவனை உதறிய ராஜபாளையம் பெண்

தினமலர் ஆகஸ்ட் 08,2010

இரும்பு சுத்தியால் அடித்து கணவனை கொலை செய்த மனைவி
ஆகஸ்ட் 05,2010 தினமலர்

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய பெண் சார்பதிவாளர்
04 Aug 2010 தினமணி

லைசென்ஸ் புதுப்பிக்க 1,000 ரூபாய் லஞ்சம்:கலெக்டரின் நேர்முக பெண் உதவியாளர் கைது

ஆகஸ்ட் 03,2010 தினமலர்


ஜூலை 29,2010 தினமலர்

குடும்பத் தகராறில் பெற்ற குழந்தைகளைக் கொன்ற பெண்
ஜூலை 24, 2010 தினமலர்

கர்ப்பவதி குற்றம் செய்யலாமா?
லஞ்சம் வாங்கி சிக்கிய பெண் போலீஸ் எஸ்.ஐ.

ஜூலை 19,2010 தினமலர்

சூட்கேசில் சிறுவன் பிணம் : கள்ளக்காதலியின் வெறிச்செயல் அம்பலம்

தினமலர் ஜூலை 20, 2010

கள்ளக்காதலுக்கு இடையூறு கணவனை கொன்ற மனைவி

தினமலர் 20 ஜூலை 2010
சட்டம் படித்த பெண் செய்த சுவாரஸ்யமான கொலை

கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: கணவன் தற்கொலை
ஜூலை 16,2010 தினமலர்
Woman ASI caught taking Rs 500 bribe
தாயுடன் கணவனுக்கு கள்ளக்காதல்: நடவடிக்கை கோரி இளம் பெண் புகார்
தினமலர் மார்ச் 05, 2010
கள்ளக்காதலுடன் ஓடிய தாயை பார்த்ததும் அழுத குழந்தைகள்
அக்டோபர் 29,2009 தினமலர்
கலியுக கண்ணகி: (கள்ளக்)கணவனுக்காக தீக்குளிக்க முயற்சி!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி

தினமலர் ஜூன் 12,2010
மாமியாரை குடும்பத்தோடு தீர்த்துக் கட்டிய பலே மருமகள்
Net India123.com Warangal | Tuesday, Jun 8 2010
மாமியாருக்கு “குத்து”விளக்கு ஏற்றிய குல விலக்கு மருமகள்
தினமலர் 18 மே 2010
மாமியார் கொலை : மருமகளுக்கு ஆயுள்
தினமலர் 18 மே 2010
பணம், காதலுக்காக பாகிஸ்தானுக்கு 'போட்டுக் கொடுத்த' இந்திய பெண் அதிகாரி
தினமலர் மே 02,2010
கும்மிடிப்பூண்டி : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனாரை கொலை செய்ய திட்டம் தீட்டிய மருமகள், கள்ளகாதலன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
எத்துறையிலும் முன்னேறுவோம்! இடஒதுக்கீடே தேவையில்லை!!

அதனால் அவரவர் வீட்டுப் பெண்களை நல்வழிப்படுத்தி வீட்டையும், நாட்டையும் உலகையும் காப்பாற்றவேண்டியது பெற்றவர்களின் கடமை. பெற்றோர்களே, போலியான பெண்ணியவாதிகளின் தவறான வழிகாட்டுதலில் “பெண் விடுதலை” என்பதற்கு தவறான அர்த்தத்தை உங்களின் மகள்களுக்கு காட்டி அவர்களின் வாழ்வை சீரழித்துவிடாதீர்கள்.





Wednesday, August 11, 2010

காதலுக்காக “நுண்ணறிவைப்” பயன்படுத்திய பெண் போலிஸ்

இந்தக் காதல் கதையைப் புரிந்துகொள்ள உங்களுக்கு நுண்ணறிவு அதிகமாக இருக்கவேண்டும். ஏனென்றால் திட்டம்போட்டு காதல் செய்திருப்பது ஒரு பெண் போலிஸ்.



பெண் போலீஸ்

.

Thursday, 29 July, 2010 மாலைச்சுடர்
.
சென்னை, ஜூலை 29:கள்ளக்காதல் காரணமாக மின்வாரிய ஊழியரை ஆட்களை வைத்து கொலை செய்ததாக பெண் போலீஸ் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

வேளச்சேரி நேரு நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 35). இவர் துரைப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டாளராக வேலை பார்த்தார். கடந்த மார்ச் மாதம் முதல் இவரை காணவில்லை என்று கூறப்படுகிறது.இது தொடர்பாக ராஜேந்திரனின் தாயார் செல்லம்மாள் வேளச்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் துணை கமிஷனர் செந்தில்குமரன் தலைமையில் அவரை தேடி வந்தனர்.

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சில தகவல்கள் வெளியானது. கடந்த 2007 ஆம் ஆண்டு ராஜேந்திரனுக்கு அனிதா என்ற பெண்ணுடன் திருமணமானது. பத்தே நாட்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ராஜேந்திரனை விட்டு அனிதா பிரிந்து சென்று விட்டார்.

ராஜேந்திரன் அதே பகுதியை சேர்ந்த சாஸ்திரக்கனி என்ற பெண் போலீசுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் என்று கூறப்படுகிறது. போலீசார் சாஸ்திரக்கனியை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் வாக்குமூலமாக அளித்ததாக கூறப்படுகிறது.

அந்த வாக்குமூலத்தில் சாஸ்திரக்கனி கூறியதாக வெளியான தகவல்கள் வருமாறு:சாஸ்திரக்கனியின் குடும்பத்தினர் அவரது சிறு வயதிலேயே திருநெல்வேலியிலிருந்து வேளச்சேரி செக் போஸ்ட் அருகே உள்ள ஒண்டியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தனர்.

சாஸ்திரக்கனி கிண்டியில் படித்து வந்தபோது அதே பள்ளியில் படித்த ராஜேந்திரனுடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் உயிருக்கு உயிராக பழகியதாக சொல்லப்படுகிறதுது.ராமநாதபுரம் அருகே உள்ள நொச்சிக்குளத்தை சேர்ந்த ராஜேந்திரனும் சிறு வயதிலிருந்தே சென்னையில் குடியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 1993 ஆம் ஆண்டு சாஸ்திரக்கனிக்கும், செல்வராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் விடுதியில் தங்கி +1 மற்றும் 4வது வகுப்பு படித்து வருகின்றனர்.திருமணத்தின் போது பள்ளி நண்பர் என்று செல்வராஜிடம் ராஜேந்திரனை சாஸ்திரக்கனி அறிமுகப்படுத்தி இருந்தார். அவர்கள் இருவருக்கும் இருந்த தொடர்பை ஆரம்பத்தில் நட்பு என்று கருதிய செல்வராஜுக்கு பின்னர் அது தகாத உறவு என்பது தெரிய வந்தது.

இதற்கிடையே 1997 ஆம் ஆண்டு சாஸ்திரக்கனிக்கு போலீஸ் வேலை கிடைத்தது. அதன் பிறகும் ராஜேந்திரனுடன் தொடர்ந்து தகாத உறவு வைத்திருந்ததை கணவர் செல்வராஜ் தட்டிக் கேட்டதை அடுத்து இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு ராஜேந்திரனும், சாஸ்திரக்கனியும் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே 2007 ஆம் ஆண்டு ராஜேந்திரனுக்கும், அனிதா என்ற பெண்ணுக்கும் திருமணமானது. ஆனால் திருமணமான பத்தே நாளில் ராஜேந்திரனின் கள்ளத் தொடர்பு தெரிய வந்ததை அடுத்து அனிதா அவரை விட்டு பிரிந்து தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.

பெண்ணின் வாழ்க்கை பாழானதை பொறுக்க முடியாத ராஜேந்திரனின் மாமியார் பாக்கியலட்சுமி, சாஸ்திரக்கனியின் வீட்டுக்கு வந்து அவரிடம் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. தங்களது இன்ப வாழ்க்கைக்கு பாக்கியலட்சுமி இடையூறாக இருப்பதாக கருதிய சாஸ்திரக்கனி சாலிக்கிராமத்தைச் சேர்ந்த போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த வீரராஜன் (வயது 27) என்பவரிடம் ராஜேந்திரனின் மாமியாரை தீர்த்துக்கட்ட திட்டம் வகுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சாஸ்திரக்கனிக்கும், வீரராஜனுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வீரராஜன் ஐபிஎஸ் தேர்வு எழுதியிருப்பதாகவும் அதில் தேர்வாகி போலீஸ் அதிகாரியாகி விடுவேன் என்றும் கூறியதை அடுத்து சாஸ்திரக்கனி அவரிடம் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த ரகசிய உறவு ராஜேந்திரனுக்கு தெரிய வந்ததும் அவர் சாஸ்திரக்கனியிடம் உன்னால்தானே என்னுடைய வாழ்க்கை வீணாகி விட்டது. இப்போது நீ வேறொருவருடன் குலாவுவதா என்று கேட்டதாக கூறப்படுகிறது.இதை சாஸ்திரக்கனி வீரராஜனிடம் தெரிவிக்க அவர்கள் இருவரும் சேர்ந்து ராஜேந்திரனை கொல்ல திட்டமிட்டனர். கடந்த மார்ச் மாதம் 25ந் தேதி ராஜேந்திரனை வீரராஜன் சந்தித்தார்.

ராஜேந்திரனின் மாமியாரை கொல்ல முடிவாகி விட்டது என்றும் அந்த சமயத்தில் ராஜேந்திரன் சென்னையில் இருந்தால் போலீசாருக்கு வீணான சந்தேகம் ஏற்படும் என்று கூறி அவரை திருத்தணிக்கு வீரராஜன் ஒரு காரில் அழைத்துச் சென்றார்.

வீரராஜனுடன் தஞ்சாவூரை சேர்ந்த பசுபதி (வயது 24), விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வேணுகோபால் (வயது 26), பள்ளிக்கரணையை சேர்ந்த முருகன் (வயது 24) ஆகியோர் அந்த காரில் சென்றனர். சதீஷ் (வயது 25) என்ற டிரைவர் காரை ஓட்டிச் சென்றார்.

கனகம்மா சத்திரம் அருகே சென்றபோது ராஜேந்திரனுக்கு மது வாங்கிக் கொடுத்து அவரை அடித்து வீரராஜனும் அவரது கூட்டாளிகளும் கொன்றனர். பின்னர் அவரது உடலை ஒரு இடத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு சென்னைக்கு திரும்பி விட்டனர்.

அதற்கு அடுத்த நாள் பாதி எரிந்த நிலையில் ராஜேந்திரனின் உடலை போலீசார் கைப்பற்றி திருத்தணி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்து விட்டனர். ராஜேந்திரனின் உடலில் எரியாமல் இருந்த துணி, ரத்த மாதிரிகள் சென்னையில் உள்ள தடயவியல் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.

இந்த திடுக்கிடும் தகவல்கள் சாஸ்திரக்கனியின் வாக்குமூலத்தின் மூலம் அறிந்து கொண்ட போலீசார் சாஸ்திரக்கனி, வீரராஜன், முருகன், வேணுகோபால் ஆகியோரை கைது செய்தனர். இந்த கொலையில் தொடர்புடைய பசுபதி, சதீஷ் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் இந்த கொலையில் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், கொலை நடந்ததை நடித்து காட்டுவதற்காக கைது செய்யப்பட்டவர்களை கனகம்மாசத்திரத்திற்கு அழைத்துச் செல்ல உள்ளனர். மேலும் புதைக்கப்பட்ட ராஜேந்திரனின் பிணத்தை தோண்டி எடுத்து விசாரணை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Tuesday, August 10, 2010

ரொம்ப சிக்கலான காதல்

இந்த காதல் கதையைப் படித்தால் தலை சுற்றுகிறது. படித்து நீங்களே புரிந்துகொள்ளுங்கள். தாயும் மகளும் சேர்ந்து உருவாக்கிய காதல் சித்திரம்.

மனைவி, கள்ளக்காதலன் உட்பட மூவர் கைது
ஆகஸ்ட் 10,2010 தினமலர்

பூந்தமல்லி: கள்ளத்தொடர்பு விவகாரம் தெரிந்துவிடும் என்று கருதிய மனைவி, தனது கள்ளக்காதலன் மற்றும் அவரது சகோதரரை ஏவி, கணவனை கொலை செய்த சம்பவம் பூந்தமல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காட்டுப்பாக்கம், ஸ்டாலின் நகர், 3வது தெருவைச் சேர்ந்தவர் பிரேம்ராஜ் (55). பிஸ்கட் வியாபாரி. இவரது மனைவி அனிதா (42). இவர்களது மகள்கள் அர்ச்சனா (22), அஸ்வினா (21). இருவருக்கும் திருமணமாகிவிட்டது. கருத்து வேறுபாடு காரணமாக, பிரேம்ராஜ் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இளைய மகள் அஸ்வினா கணவனுடன் கேரளாவில் வசிக்கிறார்.

மூத்த மகள் அர்ச்சனா, கணவர் லாரன்சிடம் விவாகரத்து பெற்றுக் கொண்டு, தாயுடன் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் மதன் (18). கடந்த சில மாதங்களுக்கு முன் இவருக்கும், அர்ச்சனாவிற்கும் தொடர்பு ஏற்பட்டது. மதன் தனது சகோதரர் பிரபாகரன் (20) என்பவருடன், அர்ச்சனா வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது பிரபாகரனுக்கும், அனிதாவிற்கும் தொடர்பு ஏற்பட்டது. சகோதரர்கள் இருவரும் அடிக்கடி அர்ச்சனா வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தனர்.

இந்நிலையில், அர்ச்சனாவுடன் மதன் தொடர்பு வைத்திருப்பது, சமீபத்தில் பிரேம்ராஜிக்கு தெரிந்தது. அவர் கண்டுகொள்ளவில்லை. ஆனால், மகளின் கள்ளக்காதல் விவகாரம் தெரிந்ததை போல, தனது கள்ளக்காதல் விவகாரமும் தெரிந்தால் பிரேம்ராஜ் நிச்சயம் பிரச்னை செய்வார் என்று அனிதா கருதினார். இதனால் கணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். தனது கள்ளக்காதலன் பிரபாகரன், மகளின் கள்ளக்காதலன் மதன் ஆகியோருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினார். பிரேம்ராஜிக்கு, ஏற்கெனவே பிரபாகரனை நன்கு தெரியும் என்பதால், அவர் மூலமாக கொலையை அரங்கேற்ற முடிவு செய்தனர். நேற்று முன்தினம் மாலை பிரபாகரன், பிரேம்ராஜை சந்தித்து பேசினார். இருவரும் பூந்தமல்லியில் உள்ள பாரில் மது அருந்தினர். போதை தலைக்கேறியதும், பிரேம்ராஜை வீட்டில் படுக்க வைத்துவிட்டு பிரபாகரன் சென்றார். இரவு தனது சகோதரர் மதனுடன் அவர் பிரேம்ராஜ் வீட்டிற்கு மீண்டும் வந்தார். அங்கு போதையில் உறங்கிக் கொண்டிருந்த பிரேம்ராஜின், கழுத்தை எலக்ட்ரிக்கல் ஒயரால் இருவரும் சேர்ந்து நெரித்தனர். மூக்கு, வாயில் ரத்தம் வழிந்த நிலையில், பிரேம்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின், பிரபாகரனும், மதனும், அனிதா வீட்டிற்கு சென்று, திட்டம் முடிந்துவிட்டதை கூறினர்.

சிறிது நேரம் கழித்து அனிதா பூந்தமல்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து, "ஸ்டாலின் நகரில் வசிக்கும் எனது கணவர் மூக்கு, வாயில் ரத்தம் வழிந்த நிலையில் பிணமாக கிடப்பதாக அங்கிருந்தவர்கள் எனக்கு தகவல் தெரிவித்தனர்,' என்று கூறியுள்ளார். போலீசார் பிரேம்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து அனிதாவிடம் விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் அவர் போலீசாரிடம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

அர்ச்சனாவின் மாஜி கணவர் லாரன்சிடம் போலீசார் விசாரித்தனர். அனிதா, அர்ச்சனா இருவருக்கும் பிரபாகரன், மதன் ஆகியோருடன் தொடர்பு இருப்பதை அவர் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, மதன், பிரபாகரன் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், பிரேம்ராஜை கொலை செய்ததும், அதற்கு அனிதா திட்டம் வகுத்துக் கொடுத்ததும் தெரிந்தது. இதையடுத்து, அனிதா, பிரபாகரன், மதன் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.

===================

கதையில் பாருங்கள் பெண்கள் தங்களின் கள்ளக்காதலுக்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல போலிஸில் புகார் கொடுத்திருக்கிறார்கள். இதுபோலத்தான் மாமியாரையும் கணவனையும் கொடுமை செய்துவிட்டு பல மருமகள்கள் போலிஸில் தாங்கள் எதுவும் செய்யாததுபோல கணவன் மீது வரதட்சணைப் புகார் கொடுத்துவிட்டு அப்பாவிபோல நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற உண்மை பலபேருக்குத் தெரியாது.



Monday, August 09, 2010

33% ஒதுக்கீடு இல்லாமலேயே சாதனை செய்யும் பெண் அலுவலர்கள்

33% இடஒதுக்கீடு கொடுத்தால்தான் பெண்களால் எத்துறையிலும் முன்னேற முடியும் என்று நினைப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு எதுவும் இல்லாமலேயே எத்துறையிலும் சாதனை செய்யலாம் என்று இந்த கிராமப்புற பெண் அதிகாரி நிரூபித்துக் காட்டியுள்ளார்.

உதவி தொகை வழங்க லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது
ஆகஸ்ட் 10,2010 தினமலர்

காரைக்குடி: திருமண நிதி உதவி தொகை வழங்க, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, சாக்கோட்டை ஒன்றிய ஊர்நல அலுவலர் லலிதா (54), கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணாநகரைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது உறவினர் அமிர்தத்திற்கு (22), வரும் 27ல் திருமணம் நடக்கவுள்ளது. அரசு வழங்கும் திருமண உதவி திட்டத்தில், 25 ஆயிரம் ரூபாய் பெற, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அவரது வீட்டுக்கு சென்று விசாரித்த ஊர் நல அலுவலர் லலிதா, மனுவை சமூகநலத்துறைக்கு பரிந்துரைக்க, 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில், சுப்பையா புகார் செய்தார். நேற்று மாலை அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற லலிதாவை, டி.எஸ்.பி., அருளானந்தன், இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பாண்டியராஜன், ஏட்டு மைக்கேல், சிவக்குமார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

================

இப்படித்தான் பெண் மற்றொரு பெண்ணுக்கு உதவி செய்து ஆணாதிக்கத்திற்கு எதிராக சாதனை படைத்துக்கொண்டிருக்கிறார்கள்! இப்படி சுயநல நோக்கில் உருவானவைதான் பெண்களுக்கு பாதுகாப்பு தருகிறோம் என்ற பெயரில் பெண்கள் அமைப்புகளால் ஆதரிக்கப்படும் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் எனப்படும் வரதட்சணை சட்டங்கள்.



Sunday, August 08, 2010

(கள்ளக்)காதலுக்கு மரியாதை

பெண் நினைத்துவிட்டால் சட்டங்களால் என்ன செய்யமுடியும்? ஆனால் பெண் நினைப்பதை அடைவதற்காக சட்டங்கள் ஆண்களை தவறாக தண்டிக்கவும் தயங்குவதில்லை. என்ன ஒரு வினோதம் இந்த நாட்டில்!

கள்ளக்காதல் மோகம்: கணவனை உதறிய ராஜபாளையம் பெண்

தினமலர் ஆகஸ்ட் 08,2010

நாகர்கோவில்: கள்ளக்காதல் மோகத்தில், கட்டிய கணவனை உதறிவிட்டு ராஜபாளையம் பெண், கள்ளக்காதலனுடன் சென்றார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே திருவேங்கடநாதபுரத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி(33); விவசாயி. இவரது மனைவி அம்சவேணி என்ற அனிதா(25). இவர்களுக்கு சரவணன்(7) என்ற மகன் உள்ளான். குமாரசாமியின் சகோதரி கணவரின் அண்ணன் தாமோதரன்(34). இவர் மீசலூர் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கும், அனிதாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

கடந்த 28ம் தேதி தனது மகனுடன் மருத்துவமனைக்குச் சென்ற அனிதா மாயமாகிவிட்டார். அவர், கள்ளக்காதலன் தாமோதரனுடன் கன்னியாகுமரி சுசீந்திரம் அருகே அக்கரையில் வீடு எடுத்து தங்கியிருந்தார். மனைவியை காணாத குமாரசாமி, கீழராஜகுலராமன்புதூர் போலீசில் புகார் செய்தார். தாமோதரனுடன் அனிதாவை பார்த்த குமாரசாமி நண்பர்கள், அவருக்கு தகவல் கொடுத்தனர். குமாரசாமி, சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் கள்ளக்காதலர்களை பிடித்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அங்கு கணவன் குமாரசாமி, "நமது மகனுக்காக என்னுடன் வந்து விடு' என்றும், "என்னை கைவிட்டு விடாதே' என்று கள்ளக்காதலன் தாமோதரனும், அனிதாவிடம் கெஞ்சினர். அப்போது, கள்ளக்காதலனை அணைத்து அனிதா ஆறுதல் கூறினார்.போலீசார், சிறுவன் சரவணனை அழைத்து தந்தை யார் என்று கேட்டபோது குமாரசாமியை அடையாளம் காட்ட, அவனை அனிதா பிடித்து இழுத்து வைத்துக் கொண்டார். போலீசார் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அனிதா, கள்ளக்காதலன் தாமோதரனுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். இதைத் தொடர்ந்து இருவரும் கீழராஜகுலராமன்புதூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.


IN THE SUPREME COURT OF INDIA
CRIMINAL APPELLATE JURISDICTION
CRIMINAL APPEAL NO. 913 of 2010
[Arising out of SLP (Crl.) No. 4010 of 2008]

S. Khushboo ... Appellant
Versus
Kanniammal & Anr. ... Respondents

21. While it is true that the mainstream view in our society is that sexual contact should take place only between marital partners, there is no statutory offence that takes place when adults willingly engage in sexual relations outside the marital setting, with the exception of `adultery' as defined under Section 497 IPC. At this juncture, we may refer to the decision given by this Court in Lata Singh Vs. State of U.P. & Anr., AIR 2006 SC 2522, wherein it was observed that a live-in relationship between two consenting adults of heterogenic sex does not amount to any offence (with the obvious exception of `adultery'), even though it may be perceived as immoral. A major girl is free to marry anyone she likes or "live with anyone she likes". (பெண் விரும்பினால் யாருடனும் சேர்ந்து வாழலாம்)



Thursday, August 05, 2010

சொத்துக்காக கணவனைக் கொன்ற மனைவி


பெரம்பலூர்: சொத்தை எழுதித்தர மறுத்த கணவனை, இரும்பு சுத்தியால் அடித்து கொன்ற மனைவி மற்றும் மாமியாருக்கு, ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.

பெரம்பலூர் அருகே பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்த சிதம்பரத்தின் (50) மனைவி பெரியம்மாள் (43). பெரியம்மாளுக்கு சிதம்பரம், இரண்டாவது கணவராவார். இவர்களுக்கு, இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கடந்த 2007ம் ஆண்டு, சிதம்பரம் பெயரில் உள்ள சொத்தை, குழந்தைகள் பெயருக்கு எழுதி தருமாறு, பெரியம்மாள் கணவரிடம் கேட்டுள்ளார். "மூன்று பிள்ளையும் எனக்கு பிறக்காததால், நிலத்தை எழுதித்தர முடியாது' என, சிதம்பரம் மறுத்தார். இதை, தன் தாய் செல்லம்மாளிடம் தெரிவித்தார் பெரியம்மாள். இதைக்கேட்ட அவர், "சிதம்பரம் உயிருடன் இருக்கும் வரை, சொத்து கிடைக்காது. இருவரும் சேர்ந்து அவரை கொலை செய்து விடலாம்' என, கூறியுள்ளார். ஏப்., 23, 2007ம் ஆண்டு, இரவு 9 மணிக்கு, வீட்டுக்கு அருகே மாட்டுக் கொட்டகையில் உள்ள கட்டிலில், தூங்கிக் கொண்டிருந்த சிதம்பரத்தை, இருவரும் சேர்ந்து இரும்பு சுத்தியால், தலையில் அடித்தனர். ரத்த வெள்ளத்தில் துடித்த சிதம்பரத்தை, அக்கம்பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி இறந்தார். பிரம்மதேசம் வி.ஏ.ஓ., பெருமாள்சாமி, மங்கலமேடு போலீசில் அளித்த புகாரின்படி, இருவரையும் கைது செய்து போலீசார், சிறையில் அடைத்தனர். பிறகு, இருவரும் ஜாமீனில் வெளி வந்தனர். பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கு, பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நேற்று, இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, "சிதம்பரத்தை கொலை செய்த பெரியம்மாள் மற்றும் இவரது தாய் செல்லம்மாள் ஆகிய இருவருக்கும், தலா ஆயுள் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால், மேலும் மூன்று மாதம் சிறை தண்டனை வழங்கப்படும்' என்றார்.
=================

பணத்திற்காக எதுவும் செய்பவள்தான் கலிகாலத்துப் பெண்ணா? ஆனால் அதையும் நன்றாகத் திட்டமிட்டுத்தான் செய்கிறார்கள்.

Tuesday, August 03, 2010

விவசாயிக்கு உதவிய பெண் சார்பதிவாளர்!

இந்திய விவசாயி நிலத்தை அடமானம் வைக்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் ஒரு பெண் அதிகாரி விவசாயியிடம் லஞ்சம் கேட்டிருக்கிறார் போலிருக்கிறது. இதுபோன்ற கண்மணிகள்தான் நாட்டிற்குத் தேவையோ?

பெண்கள் இன்னும் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் என்று பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நல்ல கல்வியும் பதவியும் கிடைத்தபிறகு என்ன செய்கிறார்கள்? சட்டங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக இல்லாதவரை பெண்கள் தங்களுக்குக் கிடைக்கும் வசதிகளைத் தவறாகத்தான் பயன்படுத்த நினைப்பார்கள். ஏனென்றால் அதுதான் ஆணுக்குச் சமமாக உரிமை கிடைத்ததன் அடையாளம் என்று பெண்ணுரிமை பேசும் கூட்டம் பெண்களுக்குத் தவறான பாடத்தை சொல்லிக்கொண்டிருக்கிறது.

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய பெண் சார்பதிவாளர்

04 Aug 2010 தினமணி

நில அடமானப் பத்திரத்தை பதிவு செய்ய ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக நீடாமங்கலம் சார்பதிவாளரையும், அவருக்கு உதவியவரையும் ஊழல் தடுப்புத் துறை போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், புள்ளவராயன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பூவண்ணன் (40), விவசாயி.தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்குவதற்காக தனது நிலத்தின் ஆவணங்களை நீடாமங்கலம் சார்பதிவாளர் தேவகியிடம் தாக்கல் செய்து, நில அடமானப்பத்திரம் பதிவு செய்துதர விண்ணப்பித்தார் பூவண்ணன். ஆனால், தேவகி பத்திரப்பதிவு செய்து தராமல் தாமதம் செய்து வந்தாராம்.இந்த நிலையில் பத்திரத்தை பதிவு செய்து தருமாறு தனது நண்பர் நீடாமங்கலம் சோணாப்பேட்டை ஜெயகாந்தனின் உதவியை பூவண்ணன் நாடினாராம். ஜெயகாந்தன் நீடாமங்கலம் சார்பதிவாளர் தேவகியிடம் பேசியதில், பத்திரத்தை பதிவு செய்து தர ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தரவேண்டுமென்று சார்பதிவாளர் தரப்பில் கேட்கப்பட்டதாம். இந்த நிலையில் பூவண்ணன் நாகப்பட்டினம் ஊழல் தடுப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் மாணிக்கவாசகத்திடம் புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை ஜெயகாந்தன் லஞ்சப் பணத்தை சார்பதிவாளர் தேவகியிடம் கொடுத்தபோது மறைந்திருந்த ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் தேவகியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். உடந்தையாக இருந்த சோணாப்பேட்டை ஜெயகாந்தனும் கைது செய்யப்பட்டார்.





ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்கு செய்த அரிய உதவி!

சிறுசேமிப்புத் துறை அதிகாரி பணத்தை எப்படி பெரிய அளவில் சேமிப்பது என்று செயல்முறை விளக்கம் கொடுத்திருக்கிறார்!

சிறுசேமிப்பு பிரதிநிதியாக இருந்து சுயமாக உழைத்து சம்பாதிக்க நினைத்த ஒரு பெண்ணுக்கு, அதிகாரியாக இருக்கும் மற்றொரு பெண் வழிகாட்டியாக இல்லாமல் எப்படி நடந்திருக்கிறார் என்று பாருங்கள். பெண்ணால்தான் மற்றொரு பெண்ணுக்கு ஆபத்து. ஆனால் இந்திய சட்டங்கள் ஆண்கள்தான் எப்போதும் பெண்களை துன்புறுத்துவதாக சொல்கிறது.

எங்கும் பெண்கள்! எதிலும் பெண்கள்!! ஆணுக்குப் பெண் சளைத்தவர் அல்லர். எத்துறையிலும் நன்றாகவே முன்னேறிவிட்டார்களே!

லைசென்ஸ் புதுப்பிக்க 1,000 ரூபாய் லஞ்சம்:கலெக்டரின் நேர்முக பெண் உதவியாளர் கைது

ஆகஸ்ட் 03,2010 தினமலர்

திருச்சியில் சிறுசேமிப்பு ஏஜன்ட் லைசன்ஸ் புதுப்பிக்க 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சிறுசேமிப்புத்துறை உதவி இயக்குனரும், கலெக்டர் நேர்முக உதவியாளருமான திலகமணியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி:திருச்சியில் சிறுசேமிப்பு ஏஜன்ட் லைசென்ஸ் புதுப்பிக்க, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சிறுசேமிப்புத்துறை உதவி இயக்குனர், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த ரவி என்பவரின் மனைவி கனகா, அரசின் சிறுசேமிப்புத்துறை ஏஜன்டாக பணிபுரிகிறார். மூன்றாண்டுக்கு ஒருமுறை, லைசென்சை புதுப்பிக்க வேண்டும்.கடந்த 31ம் தேதியோடு லைசென்ஸ் முடிய உள்ளதால், ஒரு மாதத்துக்கு முன்பே, ஏஜன்ட் லைசென்சை புதுப்பிக்க கனகா, துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.அங்கிருந்து அவரது விண்ணப்பம், திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறுசேமிப்புத்துறை உதவி இயக்குனரின் ஒப்புதலுக்கு வந்துள்ளது.

இதையடுத்து கனகா, நேற்று முன்தினம், திருச்சியில் உள்ள சிறுசேமிப்புத் துறை உதவி இயக்குனர் திலகமணியிடம்(46) விவரம் கேட்டார்.அதற்கு அவர், "500 ரூபாய்க்கான தேசிய சேமிப்பு பத்திரம் ஒன்றும், 1,000 ரூபாயும் லஞ்சம் கொடுத்தால் தான், லைசென்சை புதுப்பிக்க முடியும்' என கூறினார். 500 ரூபாய்க்கான தேசிய சேமிப்பு பத்திரம் வாங்கிக் கொடுத்த கனகா, நாளை வந்து 1,000 ரூபாய் தருவதாகக் கூறி, திருச்சி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி கனகா, நேற்று காலை, சிறுசேமிப்பு உதவி இயக்குனர் திலகமணியிடம் 1,000 ரூபாய் கொடுத்தார். அதை வாங்கும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்தனர்.அவரை கைது செய்ததோடு, பொன்னகரில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தி, பல லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணம், பணம், நகை கைப்பற்றப்பட்டது.திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திலகமணி, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இவர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) என்பது குறிப்பிடத்தக்கது.






பாலியல் வன்கொடுமையை ஆண்கள் ஆதரிக்கிறார்களா?

செய்தியைப் மேலோட்டமாகப் படித்ததும் ஏதோ ஆண்கள் அனைவரும் பெண்களுக்கு எதிரானவர்கள் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் ஏற்படும். அப்படித்தான் பல ஆண்டுகளாக ஒரு மாயை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் உண்மையை யாரும் இதுவரை அறிந்திருக்கமாட்டார்கள். இந்தப் பதிவை முழுதுமாக கடைசிவரை படித்துப்பாருங்கள். பிறகு இதுபோல செய்தித்தாள்களில் வரும் செய்தி எப்படி மேலோட்டமாக எழுதப்பட்டு மக்களை திசைதிருப்பிக்கொண்டிருக்கிறது என்று உங்களுக்கே புரியும்.



புதுடில்லி : "குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டு வரப்படவுள்ள பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதா, பெண்களுக்கு சாதகமாகவும், ஆண்களுக்கு பாதகமாகவும் உள்ளது. அதில் திருத்தம் கொண்டு வர வேண்டும்' என, ஆண்களுக்கான அமைப்பு ஒன்று கோரியுள்ளது.

குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில், "பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதா' இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இம்மசோதா, "அலுவலகங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை விசாரிக்க, அவற்றின் தலைமையாதிகாரி உட்பட பெண்கள் பெரும்பான்மை உறுப்பினர்களாக கொண்ட விசாரணை கமிட்டி அமைக்கப்பட வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பரிந்துரைக்கிறது. இந்நிலையில் டில்லியை சேர்ந்த "தி சேவ் இந்தியன் பேமிலி பவுண்டேஷன்' என்ற ஆண்களுக்கான அரசு சாரா அமைப்பு ஒன்று, இம்மசோதா தற்போதைய நிலையில் நிறைவேற்றப்பட கூடாதென, எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இது குறித்து அவ்வமைப்பின் பொதுச்செயலர் நீலாத்ரி சேகர் தாஸ் கூறியதாவது: பெண்கள் எப்போதும் பொய்யே பேச மாட்டார்கள் என்றும், ஆண்கள் பிறக்கும் போதே "கிரிமினல்'களாக தான் பிறக்கின்றனர் என்றும் அம்மசோதா கருதுகிறது. ஆனால், பெண்களால் ஆண்களும் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இம்மசோதா, பெண்களுக்கே சாதகமாக அமைந்துள்ளது. அதனால், இருபாலினத்தவரையும் சமமாக மதிக்கும் முறையில் மசோதா திருத்தப்பட வேண்டும். இதன் தற்போதைய வடிவம், இந்திய அரசியல் சாசனத்தின் 15வது பிரிவின், மத அல்லது பாலின ரீதியில் பாகுபாடு காட்டப்படக் கூடாதென்ற உரிமைக்கு எதிராக அமைந்துள்ளது. பெண்களுக்கு தேவையில்லாமல் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.

மசோதா கூறியுள்ள இத்தகைய கமிட்டிகள், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஏற்கனவே உள்ளன. அந்த கமிட்டியில் இடம் பெறுபவர்களுக்கான அடிப்படை தகுதியாக, ஒருவர் பெண்கள் நலம் குறித்து கவலை கொள்பவராக இருந்தால் போதும் என்று மசோதா கூறுகிறது. பெண்களே பெரும்பான்மையாக உள்ள கமிட்டியில் எப்படி ஆண்களுக்கான நீதி கிடைக்கும்? ஆண்கள் குற்றம் செய்யக் கூடாதென கூறும் மசோதா, பெண்களிலும் அப்படிப்பட்டவர்கள் இருக்கின்றனர், அவர்களையும் விசாரிக்க வேண்டுமென்பதை ஏன் கண்டு கொள்ளாமல் விட்டது? பெண்களால், பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கற்பனை செய்திகளின் அடிப்படையில் சட்டம் இயற்றுவது, அபாயகரமான சமூக விளைவுகளை ஏற்படுத்தி விடும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளையும், ஆண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளையும் நடவடிக்கை ரீதியாகவோ, சம்பவ ரீதியாகவோ சம நோக்கில் பார்க்க கூடாதென, அமைச்சகம் கருதுகிறது. இது தவறு. இவ்வாறு நீலாத்ரி சேகர் தாஸ் தெரிவித்தார்.


ஒருதலைபட்சமான முடிவுகள் ஏன் ஆபத்தானது என்று கீழுள்ள வீடியோவில் பாருங்கள் புரியும்.


மேலுள்ள செய்தியில் இந்தியக் குடும்பப் பாதுகாப்பு இயக்கம் ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கிறது என்பதற்கான உண்மையையும் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த உண்மை எந்த செய்தித்தாளிலும் வெளிவராது. இந்தியப் பெண்களுக்கும் தெரியாது. ஒட்டுமொத்தமாக இந்திய மக்களுக்குத் தெரியாமல் உண்மை வேறுவிதமாக திசைதிருப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இதுபோன்ற பெண்கள் தொடர்பான சட்டங்களை இயற்றுவதற்கு முன்பு உண்மை நிலவரத்தை ஆராய்ந்து அதற்கேற்ப சட்டங்களை இயற்றவேண்டும். பெண்கள் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பெண்கள் நல வாரியத்திற்கு இதுபோன்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சரியான ஆலோசனை வழங்குவதுதான் வேலை. ஆனால், பெண்கள் வாரியத்தில் நடக்கும் விஷயங்களோ மிகவும் நம்பமுடியாதவையாக இருக்கின்றன.

இதுபோன்ற பெண்கள் தொடர்பான ஆய்வுக்கு நிதிவேண்டி விண்ணப்பம் செய்பவர்களுக்கு லட்சக்கணக்கில் பணத்தை கணக்கில்லாமல் கொடுக்கிறார்கள். ஆனால் அப்படி ஒதுக்கப்படும் நிதியில் ஆராய்ச்சி உண்மையாகவே நடத்தப்படுகிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

இது போன்று பல ஆண்டுகளாக நடக்கின்ற இந்த அரிய உண்மையை 2008 - 2009 ஆண்டிற்கான தேசிய மகளிர் வாரியத்தின் வரவு செலவிற்கான தணிக்கை அறிக்கையில் இந்திய தணிக்கை வாரியம் கண்டுபிடித்திருக்கிறது. அந்த உண்மையை கீழே படித்து உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள். கடந்த 5 ஆண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் இயங்கும் அமைப்புகளுக்கு பெண்கள் தொடர்பான ஆராய்சி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட பல லட்சக்கணக்கான ரூபாய்க்கு எந்தவித வரவு செலவு கணக்கும் காட்டப்படவில்லை என்றும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எந்த ஆராய்ச்சி முடிவுகளையும் மகளிர் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கவில்லை என்றும் தணிக்கை அதிகாரி கண்டுபிடித்திருக்கிறார். கொடுத்த பணத்தைப் பற்றி மகளிர் வாரியமும் கண்டுகொள்ளவில்லை என்றும் தணிக்கை அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

படத்தின் மீது ‘கிளிக்’ செய்து பெரிதாக்கிப் படிக்கலாம்




உண்மை நிலவரம் இப்படி இருக்கும்போது பெண்கள் தொடர்பான பல சட்டங்கள் அடுக்கடுக்காக எப்படி, ஏன் இயற்றப்படுகிறது என்பது இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும். இதுபோன்ற பல வெளிவராத உண்மைகள் நிறைய இருக்கின்றன. அவை ஒவ்வொன்றாக இனிவரும் பதிவுகளில் வெளிவரும். இந்தியாவில் பெண்களை வைத்து நடக்கும் வியாபாரம் மிகவும் அமோகமாக நடந்துகொண்டிருக்கிறது. அதற்கு பலியாக்கப்படுவது அப்பாவி ஆண்கள்.

பெண்களே விழித்துக்கொள்ளுங்கள். உங்களுக்காக இயற்றப்படும் ஒவ்வொரு சட்டத்திற்குப் பின்னாலும் பலகோடி வருமானம் யாருக்கோ கிடைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் கடைசியில் அழியப்போவது உங்களது குடும்பங்கள்தான். இப்படி உருவானவைதான் IPC498A, Domestic Violence Act போன்றவை.

தேசிய மகளிர் வாரியத்தில் எந்தவிதமான செயல்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்று மகளிர் வாரிய முன்னாள் உறுப்பினர் ஒருவரால் வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதை கீழுள்ள வீடியோவில் பாருங்கள்.



Nirmala Venkatesh,EX MLC & Ex Member NCW,addressing a press confrence to demand the resignation of Girija Viyas,chairperson of National Commission for Women,at Press Club, in New Delhi.





Sunday, August 01, 2010

இந்திய மனைவியும் பிச்சைக்காரியும் சமம்?

ஆகஸ்ட் 01,2010, தினமலர்

புதுடில்லி : "கடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது இல்லத்தரசிகள் பொருளாதார ரீதியில் எவ்வித வருமானமும் ஈட்டாதவர்கள் என்ற வகையில் அவர்களை பிச்சைக்காரர்களோடும், சிறைவாசிகளோடும் ஒப்பிட்டு கணக்கெடுப்புத் துறை மதிப்பிட்டுள்ளது. வருந்தத்தக்க இல்லத்தரசிகளின் மதிப்பை மறுநிர்ணயம் செய்யும் நேரம் இப்போது வந்துள்ளது. பார்லிமென்ட் இதுகுறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும்' என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன், அருண் அகர்வாலும் அவரது 39 வயது மனைவி ரெனுவும் தங்கள் காரில் சென்று கொண்டிருந்த போது, உ.பி., மாநிலம் ஹர்தோய் என்ற இடத்தில் லாரி மோதி விபத்து நேரிட்டு, ரெனு இறந்து போனார்.அருண், தன் மனைவியின் உயிரிழப்புக்கு , 19 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக இன்சூரன்ஸ் நிறுவனம் தர வேண்டும் என்று கோரி, வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாணையமும், அலகாபாத் ஐகோர்ட்டும் அவரது மனுவை நிராகரித்து விட்டன.அவை தமது தீர்ப்பில்,"ரெனு ஓர் இல்லத்தரசி. அவருக்கு மாதந்தோறும் வருமானம் எதுவும் வரவில்லை. மேலும், அவரது குடும்பம் அவரைச் சார்ந்தும் இல்லை. அதனால் அவரது மதிப்பு மாதத்துக்கு 1, 250 ரூபாய்தான் பெறும்' என்று கூறிவிட்டன.

மோட்டார் வாகன சட்டம் 1988ன்படி, ஓர் இல்லத்தரசியின் மதிப்பு, அவரது வருமானம் ஈட்டும் கணவரின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்குதான் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதை அவை சுட்டிக் காட்டியிருந்தன.இதனால் அருண், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அவரது வழக்கை ஏற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், ரெனுவின் குடும்பத்தாருக்கு இழப்பீடாக ஆறு லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டது.மேலும், இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே. கங்குலி ஆகியோர் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:கடந்த 2001ல் நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறை, இந்தியாவின் 36 கோடி பெண்களை, வருமானம் ஈட்டாதவர்கள் என்ற பிரிவின் கீழ் சேர்த்துள்ளது.

பிச்சைக்காரர்கள், சிறைவாசிகள், பாலியல் தொழிலாளர்கள் ஆகியோரை பொருளாதார ரீதியில் எவ்வித வருமானமும் ஈட்டாதவர்கள் என்ற வகையில் சேர்த்ததைப் போலவே அவர்களோடு இல்லத்தரசிகளையும் சேர்த்தது, உணர்ச்சியற்ற செயல். இது தொழிலாளர்களையும், பெண்களையும் அவமானப்படுத்துவதாகும்.அதேநேரம், இதேபோல் நடக்கும் பாலியல் ரீதியிலான பாகுபாடு நம்மைக் கவலை கொள்ளச் செய்கிறது. ஓர் இல்லத்தரசியின் வீட்டுவேலைகளை மதிப்பிட்டு அதன் அடிப்படையில் அவரது பொருளாதார மதிப்பை, மோட்டார் வாகனச் சட்டங்கள் மற்றும் இதர சட்டங்கள் வழங்குவதற்கான வழிவகையைக் கொண்டு வர வேண்டிய தருணம் இது. இதுகுறித்து பார்லிமென்ட் சிந்திக்க வேண்டும்.

சட்டங்கள், இல்லத்தரசிகளின் வேலைகளான சமையல், பாத்திரங்கள் கழுவுதல், குழந்தைகளைக் கவனித்தல், தண்ணீர் எடுத்து வைத்தல் போன்றவற்றை ஒரு வேலையாகவே கருதவில்லை என்பதை ரெனு தொடர்பான வழக்கு நமக்கு காட்டுகிறது. இல்லத்தரசிகள் வீட்டு வேலைகளில் செலவிடும் நேரத்தை ஒரு பணியிலோ அல்லது அவர்களது கல்வியிலோ செலவிட முடியும் என்பதை நாம் வசதியாக மறந்து விடுகிறோம். அவர்களது வீட்டு வேலைகளை அங்கீகரிப்பதில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள்தான், பெண்கள் மத்தியில் வறுமை அதிகரிக்கவும் சமுதாயத்தில் அவர்களின் துயரம் தொடரவும் காரணமாகின்றன.ஒரு மூன்றாம் நபரை சம்பளத்துக்கு அமர்த்தி வீட்டு வேலைகளை செய்யச் சொல்வதை விட, இல்லத்தரசிகளின் பணி மிகவும் உயர்ந்தது. ஒரு சமையல்காரருக்கு தரும் சம்பளம் அல்லது கடையில் வாங்கும் உணவுக்குக் கொடுக்கப்படும் பணம் அல்லது ஒரு குடும்பத்துக்கு வேண்டிய உணவை வாங்க செலவிடப்படும் பணம் என்ற அடிப்படையில் இல்லத்தரசிகளின் சமையல் பணி மதிப்பிடப்பட வேண்டும்.இல்லத்தரசிகளிடமிருந்து பெறப்படும் பரிசுப் பொருள் கூட, ஓர் இல்லத்தரசி அல்லது பெற்றோர் என்ற அடிப்படையில்தான் மதிப்பிடப்பட வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

=============

பெண்களுக்கு உரிமை கொடுக்கிறோம் என்று வெளியே பேசிக்கொண்டிருக்கும் கூட்டம் இத்தனை ஆண்டுகள் பெண்களை எப்படி நடத்திவருகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். பெண்களுக்கு இயற்றப்படும் சட்டங்களும் இப்படித்தான். பெண்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அவர்களின் வாழ்க்கையைத்தான் அழிந்துக்கொண்டிருக்கின்றன.

இதுவரை இந்த இழிநிலை தேசிய பெண்கள் வாரியத்திற்கோ, பெண்கள் அமைச்சகத்திற்கோ ஏன் தெரியவில்லை. பொய் வழக்குப் போடும் மருமகள்களை ஊக்குவிக்கும் விதமாக அடுக்கடுக்காக சட்டம் இயற்றும் இந்தக் கூட்டத்திற்கு ஒட்டுமொத்த இந்தியப் பெண்களின் இழிநிலை ஏன் கண்ணுக்குத் தெரியவில்லை? இந்த உண்மை பெண்களின் உரிமைக்காகப் போராடுகிறோம் என்று சொல்லும் கூட்டத்திற்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் தங்களின் சுயநலம் காரணமாக அதை மூடிமறைத்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இனியாவது அப்பாவிப் பெண்கள் தெரிந்துகொள்ளுங்கள் - உங்களை வைத்து எல்லோரும் வியாபாரம்தான் செய்வார்களே தவிர எந்தவிதத்திலும் உங்கள் மரியாதையைக் காப்பாற்றமாட்டார்கள்.

பெண்களுக்குச் சிறப்புப் பாதுகாப்புச் சட்டம் இயற்றுகிறேன் என்பதும், 33% ஒதுக்கீடு கேட்கிறேன் என்பதும் இதுபோன்றதொரு பிரித்தாலும் வியாபார தந்திரமே. உண்மையாகவே உதவி தேவைப்படும் அப்பாவிப் பெண்களையும், தவறாக சட்டங்களைப் பயன்படுத்தத் துடிக்கும் மேல்தட்டுவர்க்கப் பெண்களையும் பிரித்தாலும் சூழ்ச்சிதான் இன்றைய பெண்சுதந்திர முழக்கங்கள். கடைசியில் அரசியல் தந்திரங்களால்
கேட்பாரற்று சீரழிக்கப்படுவது என்னவோ அப்பாவிப் பெண்களின் வாழ்க்கைதான்.




“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.